Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Sri Rudram - ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் with complete download option

| Aug 30, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பு சதுரகிரி  பற்றி எழுதிய கட்டுரையில் , அமைதியாக ஸ்ரீருத்ரம் படியுங்கள் என்று கூறியிருந்தேன். நம் வாசகர் ஒருவர் , இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள், ருத்ரம் எப்படி வாசிப்பது, புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு இருந்தார்.

ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு - இன்று அந்த பணி நிறைவேறுகிறது.  கண்டிப்பாக நம் வாசர்களிடம் இதை சேர்க்கவேண்டும் என்று மனதில் இருந்த ஆசை பூர்த்தியாகிறது.

பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு  இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை ,  தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை செய்து முடித்தேன்...

 கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு  விழா எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ - அவங்களோட தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது - அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா ! அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. !

இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல - மகத்தான மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்..


ஸ்ரீருத்ரம் கேட்டால் மட்டும் போதுமா , அதை பாராயணம் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியதுதான் , இந்த வரி வடிவ புத்தகம். இதில் , ஸ்ரீ ருத்ரம் தவிர , புருஷ சூக்தம் , வேத , சாந்தி மந்திரங்கள் ஆகியவையும் உள்ளன.

என்னை பொறுத்தவரை , என்னை போல ஒரு ஆன்மீக தேடுதல் இருக்கும் அனைவருக்கும், இது ஒரு பெரிய பொக்கிஷம்.  ஆடியோவும், புத்தகமும் இருக்கும்பொழுது நல்ல முறையில் சாதகம் பண்ணினால் ,  விரைவில் முழு ருத்ரமும் பாராயணம் செய்ய இயலும்.

 ஒரு இரண்டு மாதம் , சின்சியரா - ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் vibration துல்லியமாக உணர முடியும்..

சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை  அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க - சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது - ஸ்ரீ ருத்ரமும் ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அமாவாசையா பௌர்ணமியோ - நள்ளிரவில் சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி முன்பு நீங்கள் , அமர்ந்து இருக்கிறீர்கள் . உங்களுக்கு அந்த சூழ்நிலையில் ஸ்ரீருத்ரம் ஜெபிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

 அண்ணாமலையில் அமைதி தவழும் ஒரு நன்னாளில்  - கிரிவலம் வருகிறீர்கள். உங்களால் ஸ்ரீருத்ரம் ஜெபித்தவாறே வர முடிந்தால் - அது ஜென்ம ஜென்மமாக - நீங்கள்  சேர்த்து வைத்த புண்ணியம் அல்லவா ? 
...................................
ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும்.

முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்....

 ஸ்ரீ ருத்ரம் - வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய

http://www.ziddu.com/download/16232335/Sri_Rudram.pdf.html

 ஆடியோ பதிவிறக்கம் செய்ய   : 

 http://www.ziddu.com/download/16232325/rudram.wma.html

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் கைகொடுங்கள்..!
 சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்...!


உதவின்னு கேட்டா , உபதேசம்னு ஏன்தான் காதில் விழுது..? மச்சி....கேளேன்.. . நீ கேளேன்..!

| Aug 29, 2011

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQlAwzO8UcO3OrlSMzfpv20YWOo2v21ktuGaD2xIvuF4CbqqmSA

ஒரு ஓவியக் கண்காட்சி. மாடர்ன் ஆர்ட். ஓவியம் வரைஞ்சவர் ஒரு இடத்திலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தார். படங்கள் எல்லாம் பார்த்துட்டு , வந்த ஒருத்தர் - அவரை பார்த்து,  "சார் , பிரமாதம் சார்.. அப்படியே தத்ரூபமா வரைஞ்சு இருக்கிறீங்க.. பார்த்ததுமே அப்படியே நாக்குலே தண்ணி ஊறிடுச்சு.. கிரேட் சார்..." னு கைகொடுத்து இருக்கார்.. இவருக்கு ஒண்ணுமே புரியலை..ரொம்ப சந்தோசம் சார்.. எப்படி பீல் பண்ணுறீங்க? விட்டா அப்படியே பிச்சு தின்னுடுவேன்.. ஆம்லெட்டை இப்படி ஒருத்தர் வரைஞ்சு நான் பார்த்ததே இல்லை. நம்ம ஓவியரு , மனுஷன் நொந்து நூலாகிட்டார்.. அவர் வரைஞ்சு இருந்தது, சூரிய உதய காட்சி.. 

 இந்த மாதிரி , வாழ்க்கையை நம்ம கண்ணோட்டத்திலே பார்க்கும்போது - ஒரு ஆங்கிள் லே தெரியுது. ஆனா, அடிப்படை வேற ஒன்னா இருந்து தொலையிது..
கல்யாணம் முடியாம கஷ்டப்படுறவங்களுக்கு , கடவுள் ஏன்தான் இப்படி சோதிக்கிறாரோனு கவலை. முடிஞ்சவங்களுக்கு , ச்சே , கடவுள்  நம்மளை இப்படி சோதிச்சுப்புட்டாரேனு  கவலை.

குடும்ப தலைவன், திறமையா , நல்லா சம்பாதிக்க தெரிஞ்சவனா , ஆரோக்கியமா , குடும்பத்து மேல அக்கறையா இருந்தா - போதும் அவன் தலைவனா இருக்கலாம். இல்லை, டப்பா டான்ஸ் ஆடிடும் வீட்டுல. ஆனா எத்தனை பேரால அப்படி இருக்க முடியுது?

இன்னைக்கு நாம பார்க்கப் போறது , ஆரோக்கியம் பத்தி கொஞ்சம்....

 எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். வாழ்க்கையில நீங்க கொஞ்சம் தாமதமாக தெரிஞ்சு கிட்ட விஷயம் எதுன்னு சொல்ல முடியுமா சார்னு கேள்வி. ஆயில் புல்லிங் னு ஒரு
 விஷயம் சார். நல்லெண்ணெய் கொஞ்சம் வாயில் விட்டு , சிறிது நிமிடம் வைச்சு , வாய் கொப்பளிக்கிறது. காலைலேயும், இரவு தூங்கும் முன்பும். அற்புதமான ஒரு அனுபவம் சார். கண்ணுக்கு அவ்வளவு நல்லது. ஒரு மாசம் பண்ணினதுக்கே , அவ்வளவு திருப்தியா இருக்கு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலே ஆரம்பிச்சு இருந்தா எவ்வளவோ , நல்லா இருந்து இருக்கும்ங்கிறார்.

 இதயம் கம்பெனி, ஜோதிகா படம் போட்டு வருஷக் கணக்கா இதை சொல்லிக் கிட்டு இருக்கு... நாமளும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்ப்போமா?

 ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி, நேரம் தூங்கினா முட்டாள் என்று சொல்வாங்க, கேள்விப்பட்டு இருக்கீங்களா..?  அதெல்லாம் , நமக்கு கொஞ்சமாவது ரோஷம் வரட்டும் , சீக்கிரம் தூங்கி எழுந்துக்கட்டும்னு நம்ம வீட்ல, எங்க கிராமத்துல சொல்ற விஷயங்கள். எஹே.. ஹே , தூக்கம்ங்கிறது பெரிய வரம். உனக்கு கிடைக்கலைனா, பெருசு,, என்ன ஏன் பாடா படுத்துறேனு நெனைச்சு இருப்போம்..  இல்லையா, மேலே படிங்க...
 
இன்னைக்கு நாம எல்லாம், பயங்கரமான ஒரு காஸ்மோ பாலிட்டன் கல்ச்சர்ல இருக்கோம். நகரம் / மாநகரம் என்று பெரிய , பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கும், மெத்தப் படித்தவர்கள் , கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள் என்று இருப்பவர்கள் அனைவரும், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான். தன் உடல் நலம், குடும்ப நலம் என்று எதிலும் அக்கறை இல்லை. பனிரெண்டு மணிநேரம் , கம்பெனியில் வேலை - வொர்க் ஆல்ககாலிக் என்ற ஒரு போர்வை - வரும் வழியில் அல்லது வீட்டிலேயே என்று ஒரு உற்சாக பானம் அருந்தி , மிதமான ஒரு போதையில் தான் தூங்குகிறார்கள். இது கொஞ்சம் நல்ல நிலையில், சம்பாதிப்பவர்களுக்கு. (வீட்டுல சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டா , அது ஹை கிளாஸ் பேமிலியாம்ல ... ஆமாவா? ) . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு இதை வைச்சுத்தான் ரொம்ப பேரு சொல்றாங்க..

சம்பளம் கம்மியாக சம்பாதிப்பவர்களுக்கு , அதுவே ஒரு காரணமாகி விடுகிறது. கடன் தொல்லை, கடனை அடைக்க கடன் இப்படி நிறைய காரணங்கள். இளைஞர்களுக்கு, காலேஜ் பசங்களுக்கு இருக்கவே இருக்கு - மச்சி , அவ என்னை ஏமாத்திட்டாடா.. டயலாக்கு. தினமும் இவர்களுக்கு இது பழக்கம் ஆகி விடுகிறது. காலம் எவ்வளவு வேகமாக மாறிவிடுகிறது பாருங்கள்.

 நான் சின்னப் பையனாக இருந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் குடிப்பவர்கள் வெறுமனே அஞ்சு / ஆறு பேர்தான். ஏதாவது விசேஷம் , கடா வெட்டுன்னு இருந்தா , ஊரு பெருசுங்க , வாத்தியாரு எல்லாம் - ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி, ஒரு ஆறு பேர் சாப்பிடுவாங்க. ஒரு பெக்குக்கு ஆட்டம் போட்ட வாத்தியார், இன்னைக்கு தினம் ஒரு ஹாப் சாப்பிடுறாராம். காலையில் கடை திறக்குறதுக்கு முன்னே, ஏக்கத்தோட ஒரு பத்து பேராவது அங்கே நிக்கிறாங்க. 


இன்னைக்கு ஊரில் பாதிப் பேரு தினமும் குடிக்கிறவங்க தான். எதுக்கு குடிக்கிறோம்னு இப்போ இவங்களுக்கு காரணம் கூட தெரியாது. இதுல மாப்ள , நான் ரொம்ப ஸ்டெடி னு  சொல்லிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க.


 என் கிளாஸ்மேட் பொண்ணு ஒருத்தி , கலயாணமான மூன்றே வருஷத்தில் கைம்பெண் ஆகிவிட்டார். நல்லா வசதியான வீட்டில் தான் கட்டிக் கொடுத்தார்கள். சென்னையில் சிவில் இன்ஜினியரிங் முடித்த மாப்பிள்ளை . சந்தோஷ மிகுதியில் ஒரு இரவு வேளை - பைக்கில் ரோட்டுக்குப் பதில் , ரோடு டிவைடர் மேல் பயணிக்க , ஸ்பாட்டிலேயே மரணம். இருபத்தி இரண்டு வயதில் இன்பமயமாக தொடங்கிய தாம்பத்யம், ஒரே நாள் சூறாவளியில் சின்னா பின்னமாகி விட்டது. ஒரு வயது கைக்குழந்தை. அது என்ன பாவம் செய்தது?  இவர்கள் இருவரின் எதிர் காலத்திற்கு யார் பதில் சொல்ல ? குடி குடியைக் கெடுக்கும் என்று சொன்னவன் மடையன்தான் , அது உங்கள் சொந்த வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தும்வரை. இதே மாதிரி நிதானம் இழந்து , நம் வாழ்வில் எத்தனை முடிவுகள்... இன்னும் இது தொடரணுமா?

விதி என்று சொன்னாலும், மரணம் யாருக்கும் எந்த நொடியிலும் ஏற்படும் என்றாலும்,  கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை பண்ணிக் கொள்ளும் இது போன்ற பழக்கங்களுக்கு மெத்தப் படித்த மேதாவிகளும் பலிகடா ஆவதுதான் கொடுமை.

அது போக , எல்லா தமிழ் படத்துலேயும்,   இப்போ ஹீரோ - தண்ணி யடிக்காம இருக்கிறதே இல்லை. குழந்தைகளுக்கு அந்த காட்சிகள் எல்லாம் , ஒரு சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. அவங்க தலைமுறையிலே இன்னும் எப்படி இருக்குமோ.. தெரியாது .

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதான் நமக்கு கைவந்த கலையாயிற்றே.

 எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயது (70) பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம். குடிக்கிறவங்களுக்கு இன்னும் ஒரு பத்து வருஷம் அதிகமாகும்.

ஆனால் தூக்கத்தை விஞ்ஞான கண் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம். தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா?
நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.
ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை அமர்த்திவிட்டு  புரண்டு படுத்து தூங்குகிறோம்?
இரண்டு காரணங்கள்.
ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுகின்றன.
இரண்டாவது, நமது தேசிய பறவை கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம்.
விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.  விடிகாலை எழுந்து , வேர்க்க விறுவிறுக்க உடற் பயிற்சி செய்பவர்கள் , நமக்கு மட்டும் தெரிவதே இல்லை ..

சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா?
அவசியமில்லை.
தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.
பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் வரும். ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்.
பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,
 “அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நபர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை, நமது இணைய தளத்தில் இதைப் பற்றி எழுதுவதால், ஆமான்னு அடிச்சு சொல்லிடுவாங்களோ..?

இந்தக் கட்டுரையை படிச்சுட்டு , யாராவது ஒருத்தர் தன்னோட லைப் ஸ்டைல் ஐ மாத்திக்கிட்டாக் கூட , ஒரு கட்டுரை ஆசிரியரா எனக்கு பரம திருப்தி கிடைக்கும். செய்ய முடியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்...

தேப்பெருமாநல்லூர் மீண்டும் ஒரு அதிசயம் : அம்மன் சந்நிதியில் அணைந்து , அணைந்து எரிந்த தீபம்

| Aug 26, 2011
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRYoaEfuoQvySkAXch-67zaQAOnwiIqjOnBKFTLBh-Qb7CxNpUG


கும்பகோணம்: திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில் நல்லபாம்பு அர்ச்சனை செய்த விஸ்வநாதசுவாமி கோவிலில் அம்பாள் சன்னதியில் அணைந்து, அணைந்து தானாக மீண்டும் எரிந்த தீபத்தை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு விஸ்வநாதசுவாமிக்கு ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு.

விசுவநாதசுவாமியை வழிபடுவதால் மறுபிறவி கிடையாது என புராணம் கூறுகிறது.கடந்தாண்டு ஜனவரி 15ம் தேதி சூரிய கங்கண கிரகணம் நடக்கும் முன் காலை 10.30 மணிக்கு நல்லபாம்பு விசுவநாதசுவாமியின் மேல் இருப்பதை கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு சுவாமியின் மேலிருந்து இறங்கி நேராக தலவிருட்சம் வில்வமரத்துக்கு சென்றது. அங்கு மரத்தில் ஏறி வில்வஇலையை பறித்துக்கொண்டு மீண்டும் சுவாமி சன்னதிக்குள் வந்தது. பின்னால் வந்தவர்களை பார்த்து சீறியது. பின் நேராக சுவாமியின் மேல் ஏறி தலையில் அமர்ந்து படம் எடுத்தவாறு சுவாமியின் மீது வில்வ இலையை இட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.இதுபோல் இரண்டு, மூன்று முறை இவ்வாறாக செய்தது. இத்தகவல் பரவியதும் கிராமமக்கள் முழுவதும் கோவிலுக்கு வந்து நல்லபாம்பை பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதுபற்றி கோவில் சிவாச்சாரியார் சதீஷ்குருக்கள் மற்றும் பிரகாஷ் குருக்கள் அப்போது கூறுகையில், ""ஒவ்வொரு கிரகணத்தின் போதும் தன் சாபத்தை போக்கிக்கொள்ள பாம்பு வந்து வில்வத்தால் விசுவநாதசுவாமியை அர்ச்சித்து வருகிறது. இதுவரை நம் கண்ணில் படவில்லை. இன்று தான் நேரில் கண்டுள்ளோம்,'' என்றனர்.

இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இக்கோவிலின் திருப்பணி உபயதாரர் கனடாவை சேர்ந்த ஜெனித்தா, அம்பாள் சன்னதியில் 11 சுமங்கலிகள், ஏழு கன்னிப்பெண்களை வரவழைத்து வேதாந்தநாயகி அம்பாள் சன்னதியில் சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை செய்தார். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பலங்காரம் நடந்தது.பின், சுமங்கலிகள், கன்னிப்பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். மதியம் உணவு வழங்கப்பட்டது. நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர் அம்பாள் வேதாந்தநாயகி சன்னதியில் தீபம் அணைவதும், பின் தானாக எரிவதுமான நிகழ்வை கண்டு ஆச்சர்யமடைந்தார். கோவில் அர்ச்சகர் சதீஷ் சிவாச்சாரியாரை அழைத்து வந்து, ""எனக்கு தான் பார்வை சரியாக தெரியவில்லையா. நீங்கள் பாருங்கள்,'' என்றார்.

அப்போது தீபம் அணைவதும், மீண்டும் தானாக எரிவதுமாக இருந்துள்ளது.அதற்குள் அக்கம்பக்கம் தகவல் பரவியதும் தேப்பெருமாநல்லூர் மக்கள் திரளானோர் கோவிலுக்கு படை எடுத்தனர். அவர்களும் தீபம் அணைந்து எரிவதை பார்த்து அம்பாளை தரிசித்தனர். இந்நிகழ்வு காலை ஏழு முதல் ஒன்பது மணி வரை நடந்தது. இந்த அதிசயம் நடந்த கோவிலுக்கு அம்பாளை காண சுற்றுப்புற மக்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆதாரம் : தினமலர் , தேதி : 21 .04 .2011
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=228669

இந்த  கோவிலுக்கு  செல்ல  விரும்பும்  பக்தர்கள்  -  கும்பகோணம் சென்று அங்கு இருந்து செல்லலாம். ராகுவின் ஸ்தலமாக கருதப்படும் திருநாகேஸ்வரம் கோவிலிலிருந்து சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது.

நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. !

| Aug 25, 2011


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR5d0QpF7unkduc1BAn0BKpv5rukTa6mYJkkkxAHjGLA1tf9_H3E2_eD3fc

வாசக அன்பர்களுக்கு வணக்கம். இன்னைக்கு நாம கொஞ்சம் உருப்படியான விஷயத்தைப் பார்க்கப் போறோம். நம்மில் எல்லோருக்குமே ஒரு பழக்கம் இருக்கிறது. எதையுமே நாம உணர்ந்து , அனுபவிக்காதவரை - எந்த ஒரு விஷயத்தையும், நம்புறது கிடையாது. ரொம்ப நல்ல விஷயம்தான். சந்தேகமே இல்லை. கடவுள் விஷயத்திலும், நமக்கு இந்த எண்ணம் இருக்கு.


இந்த உலகத்திலே இன்னைக்கு இருக்கிற இரண்டு மாபெரும் கேள்விகள் என்ன தெரியுமா? உயிர் பிரிந்த பின் என்ன ஆகிறது? கடவுள் உண்மையா இல்லை பொய்யா? இந்த இரண்டு விஷயங்களையும் உறுதியாக கூற , எந்த விஞ்ஞானிகளும்  தயாராக இல்லை. அதனால் நாமும் , ஒரு பெரிய , குழப்பத்திலேயே இருந்து உழண்டு கிட்டு வர்றோம். அதே நேரத்தில் , இதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், நிம்மதியாக அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு , வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்களும் உண்டு. நல்ல விதமாக போறவரைக்கும் பிரச்னை இல்லை. எப்போ, நாம் நம்மோட வாழ்க்கையை முழுசா கண்ட்ரோல் பண்ண முடியும்னு தோணுதோ , அப்போ கடவுள் இருந்தா என்ன.. இல்லைனா என்ன..? நாம பாட்டுக்கு , நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதானே...


ஆனால், அப்படி இருக்க முடியுதா? முடியலை.. ! ஏன் ? நாம ஆசைப்படுறோம்.. நம்மாலே முடிஞ்சதுக்கும் தாண்டி, முடியாததுக்கும் சேர்த்து ஆசைப்படுறோம்.. ! அடுத்தவங்களைப் பார்த்து அவங்க கூட நம்ம நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்குறோம்.. அவங்க மாதிரி நாம ஆகணும்னு ஆசைப்படுறோம். நமக்கு இருக்கிற தகுதிக்கு , இன்னும் கொஞ்சம் பெட்டரா , நமக்கு கிடைச்சு இருக்கலாம்னு, எல்லா விஷயத்துலேயும் - பீல் பண்றோம். பொன், பொருள் கூட ஒரு பெரிய விஷயமா தெரியலைனா கூட, பெண் விஷயத்தில் அப்படியே கிளீன் போல்ட் ஆகிடுறோம். நல்லவன்கிற முக மூடி போட்டுக்கிட்டு ,  தப்பான விசயங்களுக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு ஏங்குறதே வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.  இதிலே ஆன்மீக போர்வைலே உலவுற ஆளுங்கதான் அதிகம். எங்கேயுமே போலித்தனம் !
பெரிய, பெரிய யோகி , துறவி, மடாதிபதிகளே இதுலே ஒன்னும் கிடையாது. நமக்கு வேற பாவம், விஸ்வாமித்திரர் பற்றி வேற அறிமுகப் படுத்தி விட்டாங்க. காமத்தைக் கட்டுபடுத்திட்டா அதை விட பெரிய விஷயம் எதுவுமே இல்லை.  ஆனா, ரொம்ப கஷ்டமான விஷயம்தான். முயற்சி பண்ணுவோம். மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இருக்கணும்னு நெனைச்சா, தனி மனித ஒழுக்கம் முக்கியம் தான். கடைசி , ஒரு நிமிட சபலம் கட்டுப் படுத்திட்டா கூட போதும். பின்னாலே வரக் கூடிய கேவலத்தை , அவமானத்தை வர விடாம பண்ணிடலாம். 


இதுக்கு , நீங்க என்ன பண்ணனும்? கடவுள் இருக்கிறாரா , இல்லையா னு ஒரு  நாம யோசிக்கும்போது - இரண்டு விஷயங்கள் யோசிக்க வேண்டியிருக்கு.  ஒன்னு , கடவுள் ஒருத்தர் இல்லைன்னு இருந்தா, தப்பு செய்யறவங்க எந்த காலத்துலேயும் அதை நிறுத்த வேண்டியதே இல்லை . அவங்க பாட்டுக்கு அதை தொடர்ந்து செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க. இல்லையா, கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார்னு வைச்சுப்போம். நாம செய்யற தப்புக்கு எல்லாம், தண்டனை உண்டுன்னு நெனைச்சா, மறுஜென்மம் உண்டுன்னு நம்புனா - தப்பு செய்யாமலாவது இருப்போம்.  இல்லை குறைச்சுப்போம்.. அதனாலே , இந்த இரண்டும் இருந்தா நல்லது. இருக்கிறதா நம்பிட்டுத்தான் போகலாமே.. அதனாலே உங்களுக்கு என்ன பெரிசா நஷ்டம்? ஒருவேளை , இருந்தா - நாம பண்ற புண்ணியத்துக்கு , பெரிய அளவுலே லாபம் தானே..!
சரி, இப்போ - இந்த ஜென்மத்துலே, நாம் பண்ணின பாவ புண்ணியத்துக்கு ஏற்ப , நமக்கு ஒரு சில விஷயங்கள் நடக்குது. இல்லை தவறுது. போன ஜென்மத்துலே நாம என்ன செஞ்சோம்னு தெரியாது, இல்லையா? ஐயா, சரி - நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேன் , அதை எப்படி சரி செய்றது? எப்படி தெரிஞ்சுக்கிறது..


அதுக்குத் தான் உங்களுக்கு - கடவுள் தேவைப்படுகிறார். அல்லது ஒரு குரு தேவைப்படுகிறார். ஆனா, நல்ல குரு கிடைக்கணும். இப்போ குரு ஸ்தானத்துலே இருக்கிற பெரிய, பெரிய மடாதிபதிகள் எல்லோருமே நல்லவங்களா  இருக்கிறது இல்லை. எதோ ஒரு சில சித்து வேலைகள் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு , நம்மளை ஆச்சரியப் படுத்தினாலும்,  அவங்களோட இன்னொரு முகம் பார்க்கிறப்போ - நாம அவங்களை விட எத்தனையோ மடங்கு மேல்னு தான் தோணுது இல்லையா?  நம்மளோட சொந்த அனுபவங்கள்னு பார்க்கிறப்போ - பெரிய பெரிய ஜோதிட மேதைகள், பிரசன்னம், ஆரூடம், நாடி ஜோதிடம், ஜீவ நாடி எல்லாமே ஒரு கட்டத்துலே - நம்பகத்தன்மை இல்லாமே,  சலிப்பு ஏற்படுத்தி விடுகிறது.  பல பேருக்கு அது பொருந்தி வந்தாக் கூட , நமக்குன்னு வர்றப்போ.. ??


அப்போ வேற வழி.. ஒரு வழி இருக்கு... முயற்சி பண்ணுங்க..


ஐயா , மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா... !


சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில்  மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க  இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
 
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .

 

பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.  ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். 


ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு,


ஓம் சிங் ரங் அங் சிங்


என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். 


நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை.  இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை  உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ,  உங்களுக்குமனபலம் கூடும்.


கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும்.

எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?

ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.  நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...


எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....!  
மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

இதைப் போன்ற , பல அபூர்வமான தகவல்களை அவ்வப்போது  முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறேன்.. ஆனால், வெறுமனே தெரிந்து கொள்வதில் அர்த்தமில்லை.  சின்சியரா , இந்த ஒரே ஒரு பயிற்சி பண்ணிப் பார்த்துடலாம்.. என்ன சொல்றீங்க.. இப்போ இருந்தே தயாராகுங்கள்...  யார் யார் எல்லாம்  ஆரம்பிக்கவிருக்கிறீர்களோ,  கொஞ்சம் நமக்கும் தெரியப்படுத்துங்க.   மின்னஞ்சலிலோ , பின்னூட்டத்திலோ தெரியப்படுத்தவும்.


இந்த கட்டுரை  சம்பந்தமாக மேற்கொண்டு தகவல்கள் வேண்டுவோர், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 


குருவருள் நம் அனைவருக்கும் துணை நிற்கட்டும்.. ! இந்த அமாவாசையிலிருந்தே ஒரு நல்ல முயற்சியை ஆரம்பிப்போம்.. இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை எழுதினால் , மேற்கொண்டு புதிதாக படிக்கும் அனைவருக்கும் , ஒரு புது உத்வேகம் பிறக்கும். உங்கள் , சொந்தம் , சுற்றம்,  நண்பர்களில் தகுதி உள்ளோருக்கு இதை தெரியப்படுத்துங்கள்.. !  ஒரு நிம்மதியான, பரிபூரண ஆனந்தம் எல்லோருக்கும் கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்... ! 


அடுத்த மூன்று நாட்கள் , கொஞ்சம் பிஸி.. மீண்டும் திங்கள் கிழமை சந்திப்போம் !  விஷிங் யு ஆல் தி பெஸ்ட் !

பிரதமருக்கு ஒரு நெத்தியடி கடிதம் !

| Aug 24, 2011
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR4xrJf1NG4-wBIR0tq6ySiP1Ll2L9kSSH2NLBqjIbT9k2h9EyMrQ

 இது எனக்கு மின்னஞ்சலில் வந்த கடிதம். ஒரு சாதாரண குடிமகனா , நாம எவ்வளவு பாதிப்படைகிறோம்னு , ஓரளவுக்காவது நாம  எல்லோரும் புரிஞ்சிக்கிட்டு இருப்போம்னு நெனைக்கறேன்..

 இது டைம்ஸ் ஆப் இந்தியா வின் ஆசிரியர் எழுதினதாம். நச்சுனு இருக்கு.. ஆனா, இதுனாலே ஒன்னும் பெருசா , ஊழல் பெருச்சாளிகள் திருந்தப் போறது இல்லே. ஆனா , படிச்சுப் பாருங்க. சொல்லி இருக்கிற விஷயம் எவ்வளவு நிதர்சனம்னு புரியும். எனக்கு நல்லாவே தெரியும். நானும் ஒரு மூணு வருஷம் , பாம்பேலே இருந்தவன்...

 உயிர் வாழ ஒரே தகுதி, நீங்க குறைந்த பட்சம் ஒரு கட்சிலே வட்டத் தலைவராவாது, நகர செயலாளரா இருக்கணும்.. அதுக்கே போன தடவை .. முப்பது, முப்பத்தஞ்சு னு ஏலம்.. ஒரே வருஷத்துலே , போட்டதைவிட மூணு  மடங்கு எடுத்திடுவாங்களாம்.  இவங்க யாருமே ஒழுக்க சீலர்கள் இல்லை.. கூட இருக்கிற அள்ளக் கைகளே இதுக்கு சாட்சி.. இதுலே, நாம தேர்ந்து எடுக்கிற MLA , MP .. மாண்புமிகு அமைச்சர்கள்.இவங்க.எல்லாம்... முதல் வைக்கிறது கோடிகள்லே தான் .   சீட் வாங்கி,  நமக்கு சேவை செய்ய . எம்புட்டு அக்கறை..?

நாமல்லாம், எந்த மூலைலே இருக்கிறோம்னு புரியுதா.. புள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவே வெளியிலே கை ஏந்திக்கிட்டு..காலம் முழுக்க இப்படியே.. லோன், கந்து வட்டினே இருக்கப் போறோமோ..?எனக்கு என்ன இம்புட்டு அக்கறைன்னு கேட்கிறீங்களா?  இவ்வளவு கஷ்ட்டத் திலேயும் , வருஷத்துக்கு மூணு லட்சத்துக்கு வருமான வரி கட்டிப் பாருங்க.. உங்களுக்கும் ஒரு வெறி வரும்.. !


LETTER OF THE EDITOR OF "THE TIMES OF INDIA " TO THE PRIME MINISTER OF INDIA

I am born and brought up in Mumbai for last fifty eight years. Believe me, corruption in Maharashtra is worse than that in Bihar . Look at all the politicians, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh all are rolling in money. Vilasrao Deshmukh is one of the worst Chief ministers I have seen. His only business is to increase the FSI every other day, make money and send it to Delhi , so Congress can fight next election. Now the clown has found new way and will increase FSI for fishermen, so they can build concrete houses right on sea shore. Next time terrorists can comfortably live in those houses, enjoy the beauty of the sea and then attack our Mumbai at their will.

Recently, I had to purchase a house in Mumbai. I met about two dozen builders. Everybody wanted about 30% in black. A common person like me knows this and with all your intelligence agency & CBI, you and your finance ministers are not aware of it. Where all the black money goes? To the underworld, isn't it? Our politicians take help of these goondas to vacate people by force. I myself was victim of it. If you have time please come to me, I will tell you everything.

If this has been a land of fools, idiots, then I would not have ever cared to write to you this letter. Just see the tragedy. On one side we are reaching moon, people are so intelligent; and on the other side, you politicians have converted nectar into deadly poison.I am everything  - Hindu, Muslim, Christian, Scheduled Caste, OBC, Muslim OBC, Christian Scheduled Caste, and Creamy Scheduled Caste; only what I am not is INDIAN. You politicians have raped every part of Mother India by your policy of divide and rule.

Take example of our Former President Abdul Kalam. Such an intelligent person; such a fine human being. But you politician didn't even spare him and instead choose a worthless lady who had corruption charges and insignificant local polititian of Jalgaon WHO'S NAME ENTIRE COUNTRY HAD NOT HEARD BEFORE. Its simple logic your party just wanted a rubber stamp in the name of president. Imagine SHE IS SUPREME COMMANDER OF INDIA 'S THREE DEFENCE FORCES. What morale you will expect from our defence forces? Your party along with opposition joined hands, because politicians feel they are supreme and there is no place for a good person.

Dear Mr. Prime minister, you are one of the most intelligent person, a most learned person. Just wake up, be a real SARDAR. First and foremost, expose all selfish politicians. Ask Swiss banks to give names of all Indian account holders. Give reins of CBI to independent agency. Let them find wolves among us. There will be political upheaval, but that will be better than dance of death which we are witnessing every day. Just give us ambience where we can work honestly and without fear. Let there be rule of law. Everything else will be taken care of.

Choice is yours Mr. Prime Minister. Do you want to be lead by one person, or you want to lead the nation of more than 100 Crore people?

Prakash B. Bajaj
Editor Mumbai-Times of India

PLEASE READ N FORWARD TO AS MANY PEOPLE IN YOUR CONTACT LIST...............

 IF EVERYONE IS FORWARDING THIS MESSAGE EVERYDAY, ATLEAST 10 NEW PEOPLE, THEN IT WILL REACH 1.21 BILLION OF INDIA INCLUDING THE PRIME MINISTER.   
 
  
1ST DAY                                  10.00
  
  
2ND DAY                                100.00
  
  
3RD DAY                             1,000.00
  
  
4TH DAY                           10,000.00
  
  
5TH DAY                         100,000.00
  
  
6TH DAY                      1,000,000.00
  
  
7TH DAY                    10,000,000.00
  
  
8TH DAY                  100,000,000.00
  
  
9TH DAY               1,000,000,000.00
  
  
10TH DAY             1,210,193,422.00 
   

THANKS & REGARDS

கூகுளையே செதைச்சுப்புட்டாங்கப்பா.. ! Superb fun .. Dont miss it ..

|

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRy3WtAfDbjzT5ei-4nB4Qvd9Kym9Y9K7bJbTuKEAc9JER90ZqO

... நீங்க கூகுல் சேர்ச் பாக்ஸ் லே ---  GOOGLE GRAVITY னு டைப் பண்ணுங்க.  வழக்கம் போலே லட்சம்  லிங்க் காட்டும். அதுலே முதல் லே வர்ற லிங்கை க்ளிக் பண்ணுங்க...

( mrdoob .com னு ஒன்னு வருதா..? )
...அதுலே ஒரு செர்ச் பாக்ஸ் வருது இல்லே..? ஏதோ ஒன்னு  டைப்  பண்ணுங்க..
என்ன காட்டுது...?

எப்பூடி...?

 என்னமா யோசிக்கிறாங்க!  என்ஜாய்..!!


குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

|
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSLWtRllQ0yqfD_aZScWO3vVXjmrWDSjnUR5YtzAZptpLoMXWWIog ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். 
 
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குலதெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக , எது குல தெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. இதில் வருந்தத் தக்க விஷயம் யாதெனில், குலதெய்வம் எது என்று தெரிந்தும், அதை முறைப்படி வழிபடாதவர்கள், அதன் மகிமைகள் தெரியாதவர்கள் தான் நம்மில் அநேகம் பேர். வருடத்திற்கு ஒரு முறை கூட செல்ல முடியாத சூழ்நிலை. என்ன பண்றது , அவ்ளோ பிஸி . உங்கள் பெற்ற , தாய் - தந்தையர் , சகல வலிமையும் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருப்பவர் தான்  உங்கள் குல தெய்வம். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் சொன்ன விஷயம் தான். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே. 


சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?


உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்கினத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் - சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.  


 ஐந்தில் - ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் -  உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம். உங்கள் தாத்தா , அப்பா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையா சொல்லனும்னா, பெத்த புள்ளைகளை அப்பனும் மதிக்கலை. புள்ளையும் அப்பனை பெரிசா கண்டுக்கலை. எதுவும் நல்ல உதவி ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்க முடியலைன்னு வைச்சுக்கோங்களேன்.


நீங்கள் உரிய , முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெற வில்லை என்றால் - உங்களுக்கு வாழ் நாள் முழுக்க , தடைகள் , முட்டுக் கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான். உங்கள் பரம்பரையின் , ஒட்டு மொத்த பாவ கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து , அதன் பிறகு - உங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்.


குல தெய்வம் - உங்கள் வம்சா வழியில்  பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க - தன் உடல் , பொருள் , ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம். உங்க தாத்தாவுக்கு, தாத்தாவுக்கு தாத்தா னு ஒரு பேச்சுக்கு வைச்சுக்கோங்களேன்.. இதில் ஒரு சூட்சுமம் பாருங்க.


ஐந்தாம் வீடு வைச்சுத்தான் , உங்கள் குழந்தைகளை பற்றி நீங்க தெரிஞ்சுக்க முடியும். அதுவே குல தெய்வம் ஸ்தானம் . உங்க பூர்வ புண்ணிய ஸ்தானம்.  எப்படி? உங்க அப்பாவை பற்றி தெரிஞ்சுக்க - ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? அந்த அப்பாவுக்கு அப்பா.. ஒன்பதாம் வீட்டுக்கு , ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? எங்கே வருது தெரியுதா..? இதே ஐந்தாம் வீடுதான். இந்த ஐந்தாம் வீட்டுக்கு , ஐந்தாம் வீடு - ஒன்பதாம் வீடு. அதாவது , உங்க பையனுக்கு பூர்வ புண்ணியம், உங்க அப்பா.


அதுக்கு தான் சொல்றேன்.. தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. நீங்க செய்யும் நல்லது, கெட்டது அனைத்தும் -  உங்க சந்ததியை ஆட்டிப் படைக்கவிருக்கும் விஷயங்கள். இதுவரை , பாவங்கள் நீங்கள் அறிந்தும் ,அறியாமலும் செய்து இருந்தாலும், வர விருக்கும் காலத்தில் -  அவை தொடராது , உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள்.  ஒரு சுபிட்சமான தேசம் வளரும். மனிதம் மலரும்.


சரி, குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?


இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின்மேல் ஈடுபாடு என்று பாருங்கள். 
பரம்பரையாக , ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவா இல்லை.


இல்லையா , அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். 
சதுரகிரி அருகில் இருப்பவர்கள் - மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.


 இல்லையா ,  திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது. இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.


திருச்செந்தூர் - குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம்.


 இது ஒரு கால ரகசிய நுட்பம். நம் வாசகர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் , உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி , ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை நம்மில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!


 வாழ்க வளமுடன் !

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..!

| Aug 23, 2011
 எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின் , என்று வீர முழக்கமிட்ட விவேகானந்தர் பிறந்த மண்ணில் தான் நாமும் பிறந்து இருக்கிறோம். ஆனால், நமக்கும் தான் எத்தனை குளறுபடி, குழப்பங்கள்...


 அர்ஜுனன் அம்பு எய்யும்போது , தூரத்தில் இருந்த மரத்திலே உட்கார்ந்து இருந்த கிளியோட கண்ணுதான் தெரிஞ்சதாம். அது , உண்மையோ , பொய்யோ தெரியலை.. ஆனா, சொல்லி குறி வைச்சு அடிக்கிற , ஜெயிக்கிற ஆளுங்க இன்னும் நம்ம கூட இருக்கிறாங்க தானே... 


நமக்கு ஏன் அது புரியவே , இல்லை கைவசப்படவே மாட்டேங்குது.. கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரையை படிச்சுப் பாருங்க.. பல உண்மைகளை உங்களுக்கு அது புலப்படுத்தலாம்...   
====================================================
ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSLfK5wg-wPdqHajebtPrfZZP4MeLyVJbKXOfdhcpy4Us56DAJR
நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?
பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?


பிரச்சினையே நாம் நம் 'காரை' மற்ற 'காரோடு' ஒப்பிட்டுப் பார்ப்பதே. அந்த கார் அப்படி போகிறதே, நாமும் போவோம். அந்த வழி நமக்கேற்ற வழியா என்று பார்க்காமல் செய்வது தவறு.  


(நன்றி . திரு . என் . கணேசன்  - பழைய ஆனந்த விகடனில் )

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2012 முதல் 2014 வரை ( 12 ராசிகளுக்கும் - நட்சத்திர வாரியாக )

|
 சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதோ நாள் நெருங்கி விட்டது. வாக்கியப் பஞ்சாங்கப்படி 21 -12 -2011 அன்று சனிப் பெயர்ச்சி. சார், இன்னும் அவ்வளவு நாள் இருக்குதான்னு புலம்ப ஆரம்பிச்சுடாதீங்க. திருக்கணிதப் படி 15 -11 -2011 அன்று காலை 10 .15
 மணிக்கு துலாம் ராசிக்குள் , பிரவேசிக்கிறார். ஆனால், ஏற்கனவே அவர் பெயர்ச்சி ஆனாற்போல எல்லோருக்குமே தோன்றும். பொதுவாக , மூன்று மாதங்களுக்கு முன்பே , அதற்குரிய பலன்களை தர ஆரம்பித்து விடுவார்.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcShphrxLhyIUkPPqeRVcJJbMEmTvdJF2kR_QsMusECUiHnIJv01
 துலாம் ராசிக்காரர்களைப்  பார்த்தால் இது புரியும். நல்லாத்தானேயா போய்க்கிட்டு இருந்துச்சு. இடையிலே யார்யா புகுந்து ஆட்டையை கலைக்கிறதுன்னு பீல் பண்ண ஆரம்பிச்சு இருப்பாங்க..

 சிம்ம ராசி, கும்ப ராசிக்காரங்கல்லாம்  உடனே சந்தோசத்துலே குதிக்க ஆரம்பிச்சுடாதீங்க... இன்னும் முழுசா முடியலை.. கொஞ்சம் பொறுமை.. இன்னும் ஒரு நாலு மாசத்துக்கு எச்சரிக்கையாவே இருங்க.. அவசரம் வேண்டாம்..

 மீனம், துலாம், விருச்சிகம், கடகம், மேஷம், தனுசு - இந்த ஆறு ராசிக்காரர்களும் - கொஞ்சம் அளவு கடந்த பொறுமையுடன் செயல்படுதல் நலம்.

இந்த சனி பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்கள் வாரியாக - மிக முக்கிய பலன்களையும், பரிகாரங்களையும் தெரிந்து கொள்ள , கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் பண்ணுங்க.

மிக முக்கியமான , துல்லியமான - ரத்தின சுருக்கமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பால ஜோதிடம் இதழில் வந்த பலன்கள்

http://www.ziddu.com/download/16147170/Sanipeyarchipalangal2011-2014.pdf.pdf.html

பொறுமையா உட்கார்ந்து , நானும் 12  ராசிகளுக்கும் - தனித்தனியே பலன்கள் எழுதப்போறேன்,. கொஞ்சம் நாளாகும்.. ஆனால் சனி கன்னி இலிருந்து துலாம் வர்றதுக்குள்ளே - எழுதிடுறேன்..!!


நமது சனி பகவான் - மந்திரம், காயத்ரி - சிறப்பு பரிகாரங்கள் பற்றிய ஸ்பெஷல் கட்டுரையை படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்....

அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)

|
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நமது வாசகர் திரு. பிரவீன் ராம் அவர்கள், சில அபூர்வமான  , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்களை அனுப்பியிருந்தார். நமது வாசகர்களிடம் அவற்றை பகிர்ந்து கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நமது வாசகர்களுக்காக அனுப்பி வைத்த திரு. பிரவீன் ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 


 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத  பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும்  மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல். திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்  நம் வாசகர்கள் அனைவருக்கும், மிக உபயோகமாக இருக்கும் - மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
  தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம். தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம். 
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். 


 சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய  துதிகள் :

 மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )
இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள  , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
 - யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை


 பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


 போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :


கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக்  கட்டுரை:நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற -  மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை : மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை


 மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை


 - சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர்  சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை மகிமை மிக்க மகான்கள் வரிசையில் -  பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :

 
 ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :

 ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :

புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :

http://www.ziddu.com/download/16138324/50017043-Buthar.pdf.html 


உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.

 இதைப் போல - வேறு ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் , உங்களில் யாரேனும் வைத்து இருந்தால், நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே !

 

கவலையை மறந்து சிரிப்போம் கொஞ்சம் .வாங்க பாஸூ..!

| Aug 22, 2011

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR6FmuxpdLURCWQg5GRp-gUqVC0ENAxCDgcXT-6dZihNIauLgvlbw

 காலையில  ரொம்ப சீரியசான விஷயமா எழுதிட்டோமா.. நம்ம வாசகர்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பாங்களேன்னு .... கொஞ்சம் இந்த ரிலாக்ஸ் போஸ்ட்...எதையும் கவலைப் படாம , வாய் விட்டு சிரிங்க... 

இதையெல்லாம் அனுப்பிச்சு வைச்ச நண்பருக்கு ரெம்ப நன்றி.. அனேகமா , நெட்லே ஏற்கனவே யாரோ , எழுதி இருக்கலாம் னு நெனைக்கிறேன்.. நல்லா இருக்குதான்னு நீங்களே பாருங்க...  எனக்கு புடிச்சு இருக்குப்பா .....
==========================================================
“மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”
“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”
“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”
 ==================================================================
...  டி வி யில எங்கே பார்த்தாலும்,   ஒரே அழுகை , அழுகை... ஏன்..? இம்புட்டு வெறி? எவன் ஆரம்பிச்சு வைச்சான்..?
முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.
அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.
தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.
அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.
அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது.  டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கூட  அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.
“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.
அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக
“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக ஜெயஸ்ரீ .
“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

Kind courtesy : Kglawarlal.wordpress.com
 ===================================================================
பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.
“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.
“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”
“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”
“அதிலே என்ன ரிஸ்க்கு?”
“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”
“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”
“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”
“ஏன்?”
“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
என்னடா இது!
மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.
ஆறாவது ஆளும்
“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.
நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.
“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.
என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.
“தெரியலையே?”
“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி சொன்னது.
 ============================================================
 ஏன்யா. நெஜமாவே ரூம் போட்டுத் தான் யோசிக்கிறீங்களோ..? 

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

=============================================================

இன்னைக்கு போதும்பா... !!

கடக ராசி , பூச நட்சத்திரம்.. ஐ லவ் யூ....!!

|

 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRXJL0GcMvbyK7nqnQ-dJE-8pHdrntHG6UbLwxxO2WHS6LZ49Cp

 ஏன் நமக்கு இந்த பிறவி என்பதை தேடி உணர்வது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை. அதே சமயத்தில் , கடவுளை தேடுகிறேன் , தன்னைத் தேடுகிறேன் பேர்வழி என்று வாழும் கால கட்டத்தில் , சக உறவுகளை மதிக்க தவறி விடாதீர்கள். உறவுகளை நேசியுங்கள்.
உங்கள் வீட்டில் , ஒரு சின்னத் தொட்டியிலாவது - ஒரு சிறிய பூஞ் செடியோ, துளசி செடியோ வளர்த்து வாருங்கள். உங்கள் கையால் தண்ணீர் ஊற்றி வாருங்கள். அந்த செடி வளர , வளர உங்கள் மனதிலும் ஒரு மகிழ்ச்சி , நிம்மதி பரவும். எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் ஊற்ற முடியாத நிலை வரும்போது , அந்த செடி வாடி நிற்கும்போது - உங்கள் மனதில் ஒரு சின்ன வலி , வேதனை வரும் பாருங்கள் !

ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது.. உங்களை வளர்த்தவர்களை , அல்லது நீங்கள் வளர்த்தவர்களை - காயப்படுத்தும்போது, கோபத்தில் குதிக்கும்போது  , வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்போது, அவர்களை குத்திக் கிழிப்பதை நாம்  உணர்வதில்லை.நாம சொல்றதுதான் எப்பவுமே சரியாம். அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..!

 கல்யாணம் செய்து ஆரம்ப காலத்தில் இருக்கும் நேசம், சில வருடங்கள் கழித்து - அதே அளவு (?)  இருந்த போதும், அதை வெளிப்படுத்த முடியாமல் , எதோ ஈகோ தடுக்கிறது. முதல் இரண்டு வருடங்களில் நீங்கள் பாசத்துடன் எத்தனை முத்தம் கொதித்து இருப்பீர்கள் , மீதி இருக்கும் அம்பது வருடங்களில் அதில் பாதி கூட கொடுப்பீர்களோ ? என்னவோ ? ஏன்..? அது ஒரு முக்கியமான விஷயமா , நமக்குத் தோணுவதில்லை. அவங்களுக்கும் தோணாதுன்னு  நாமளே , அவங்க சார்பாகவும், முடிவெடுத்து விடுவதுதான் இதில் கொடுமை.
எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்க பாஸ். கல்யாணம் ஆகியிருந்தா , உங்க குடும்பத்தோட.. இன்னும் கல்யாணம் ஆகலையா, அப்பா அம்மாவோட -. ஒரு  ரெண்டு நாள் ... சந்தோசமா , பொழுதைக் கழிச்சிட்டு வாங்க. உங்கள் பார்வையிலும், சொல்லிலும் செயலிலும் அன்பு பொங்கி வழியட்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த சந்தோசத்தை அனுபவியுங்கள். மாதம் அல்லது   இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது இது இருக்கட்டும்.

 அடுத்த நொடி என்ன நடக்கும்னு , யாருக்குமே தெரியாது . கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் சந்தோசமா இருக்க ட்ரை பண்ணுவோம்..

 திரு. ராம் சுரேஷ் அவர்கள் எழுதியுள்ள கல்யாணச் சாவு கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். வளைகுடா நாடுகளில் பணியில் இருப்பவர். படித்து முடித்ததும், மனதளவில் உங்களில் ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன், பகிர்ந்து கொள்கிறேன்...
====================================================


சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..
எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..
வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை (Sugar level)  மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.
ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..
7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..
எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..
தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..
வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..
சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..
நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..
எல்லா நாட்களும் மறந்து..
பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..
பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?
===========================================================

B .Com / Diploma / BE - முடித்தவர்களுக்கு - BHEL / IOC நிறுவனங்களில் வேலை வாய்ப்பு - உடனடியாக விண்ணப்பிக்கவும் !!

| Aug 18, 2011
Please pass this message to all your known freinds.... It will be helpful for a needy person...!

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் சக்தி தொடர்புடைய நிறுவனங்களில் பி.எச்.இ.எல்., எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்தான் மிகவும் பெரியது. 1971 முதலே தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி, சூபர்வைசர் (இன்ஜினியரிங்) டிரெய்னி மற்றும் நிதி சூபர்வைசர் பிரிவுகளில் மொத்தம் 1207 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்: இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் மெக்கானிகலில் 700, எலக்ட்ரிகலில் 200, எலக்ட்ரானிக்ஸில் 100 காலி இடங்கள் உள்ளன. சூபர்வைசர் டிரெய்னி (இன்ஜினியரிங்) பிரிவில் மெக்கானிகலில் 740, எலக்ட்ரிகலில் 160, எலக்ட்ரானிக்ஸில் 60 மற்றும் சிவில் பிரிவில் 40 காலி இடங்கள் உள்ளன. நிதிப் பிரிவு சூபர்வைசர் டிரெய்னி பிரிவில் 207 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: இன்ஜினியரிங் பிரிவு டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சூபர்வைசர் டிரெய்னி (இன்ஜினியரிங்) பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
நிதிப் பிரிவு சூபர்வைசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை மற்றும் திருச்சியிலும், நமக்கு அருகிலுள்ள மையங்களான பெங்களூரு, கொச்சியிலும் எழுதலாம்.
இதர தகவல்கள்: பி.எச்.இ.எல்.,லின் இன்ஜினியரிங் டிரெய்னி பதவிக்கு ரூ.500/-ம், சூபர்வைசர் டிரெய்னி பதவிகளுக்கு ரூ.300/-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் "Power Jyothi A/C 31170378124"லும், சூபர்வைசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் "Power Jyothi A/C 31325460299"லும் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளைக்கு சென்று இந்த விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு இந்தக் கட்டணத்திலிருந்து சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் ஆன்-லைனில் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் அக்னாலெட்ஜ்மென்ட் சிலிப்பை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 20.08.2011
பதிவு செய்த ஸ்லிப்களை பெற இறுதி நாள் : 24.08.2011
இணையதள முகவரி : http://careers.bhel.in/etrlive/static/et_advt_eng.pdf

VACANCY AT INDIAN OIL CORPORATION
இந்தியாவின் இயற்கை எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்வது, மார்க்கெட்டிங் செய்வது, இயற்கை எரிவாயு உற்பத்தி, பெட்ரோகெமிக்கல் விற்பனை ஆகியவற்றிற்காக நாடெங்கும் அறியப்படும் இந்த நிறுவனம் பார்சூன் குளோபல் 500 வரிசையில் 125ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டன்ட் (புரொடக்சன்)/டிரெய்னி பிரிவில் 10 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேவை: ஐ.ஓ.சி.எல்.,லின் காலி இடத்திற்கு விண்ணப்பிக்க 31.07.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளது. ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் பட்டப் படிப்பு அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

இதர விபரங்கள்: ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ Accounts Officer, Indian Oil Corporation Ltd., Baruny Refinery என்ற பெயரில் பெகுசராயில் (Begusarai) மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை ஏ4 அளவு தாளில் டைப் செய்து, டி.டி., மற்றும் வயது, சாதி, கல்வி சான்றுகளின் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு 30.08.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.

முகவரி:
Sr. Human Resource Manager,
Barauni Refinery,
Indian Oil Corporation Ltd.,
PO:Barauni Oil Refinery,
Distt. Begusarai,
Pin Code : 851 114.
இணையதள முகவரி : www.iocl.com

மரணத்தைவிட கொடியது எது தெரியுமா?

|


 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTSYms0vcawV0nkW22Zr9rbe4Zm40jkIDDIheAaRSVb_4dVQsKsBQ


ஓகோனு ஒரு பிசினெஸ் ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு சரிய ஆரம்பிக்கும். புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நெனைச்சு, குட்டிக்கரணம் அடிச்சுப் பார்ப்பீங்க. இதோ, இதோன்னு தா காட்டிக்கிட்டே இருக்கும்.  இப்படி இருந்தா, உங்களுக்கு கேது  தசை நடக்குதானு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.


வாழ்க்கைங்கிறது ஒரு கட்டுமர கடல் பயணம்தான். அலைகளுக்கு ஏற்ற ஆட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், எத்தனை பேர் மீன் பிடிச்சுட்டு வர்ராங்க. விழிப்புணர்வு, திறமை இரண்டும் இருந்தாத்தான் ஜெயிக்க முடியும்.  


 நான் அடிக்கடி சொல்ற விஷயங்களில் ஒன்று, நவகிரகங்களில் பெரும் வலிமை வாய்ந்த கிரகம் கேது. என்னடா இப்படி சொல்றாரேன்னு நீங்க நினைக்கலாம். மேலே படிங்க. அப்புறம் நீங்களே சொல்வீங்க எப்படினு? 


 கேது , ராகு, செவ்வாய் , சனி , சூரியன் - இந்த வரிசையிலேதான் , கெடுதல் பலன்கள் அதிகமா நடக்குது. இன்னைக்கு நடைமுறையிலே சனி பற்றி ஓரளவுக்கு எல்லோருக்குமே தெரிஞ்சு இருக்கு. ஆனா, அவருக்கும் மேலே ஒரு மூன்று தாதாக்கள் இருக்கிறாங்க. 


நம்ம இணையதளத்துலே ஏற்கனவே, ராகு தசை , செவ்வாய் தசை பற்றி கொஞ்சம் விரிவா பார்த்து இருக்கோம். இன்னைக்கு  கேது தசை பற்றி கொஞ்சம்  சுருக்கமா பார்க்கலாம்.


 கேது பகவான் ஞான காரகன். அதாவது ஞானமார்க்க ஈடுபாட்டை வளர்ப்பவர். அதாவது கோவில், குளம் ,ஆன்மிகம் இப்படி ஈடுபாட்டை வளர்க்கும். நல்லது தானே சார், இது எதுக்கு கெடுதல்னு நெனைக்கனும்னு நீங்க கேட்கிறது புரியுது.


உங்களை அப்படியே தோள்லே கைபோட்டு , ஈடுபாடு வர வைக்கிறது இல்லை . அடி, அடி, செமத்தியான அடி. விரக்தி. வேதனை, அவமானம் எல்லாம் கொடுத்திட்டு , அடத் தூ, இப்படி ஒரு பொழைப்பு பொழைக்கனுமானு உங்களை நினைக்க வைச்சுட்டு , அதுக்கு அப்புறம் வாழ்க்கைனா என்னனு உங்களுக்கு ஞானம் புகட்டுகிறார். (வெளங்கின மாதிரி தான் )
நீங்க எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தாலும், கேது தசை வர்றப்போ , கொஞ்சம் உஷாரா இருந்துக்கிடுவது நல்லது.


மரணத்தைவிட கொடியது என்ன தெரியுமா? நம்மளை உயிருக்கு உயிரா நேசிச்ச ஜீவன்கள் கூட மறந்து போற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழுறது.
யாரை நீங்க நேசித்தீர்களோ , அவர்கள் உங்களை வெறுக்கும்படி ஒரு மட்டமான வாழ்க்கை வாழும் சூழ்நிலை ஏற்படுவது. 


கணவன் - மனைவி உறவு விரிசல், இந்த கேது தசையில் சர்வ சாதாரணம். சின்ன , சின்ன சண்டை இல்லை , விவாக ரத்து வரை , கோர்ட் , கேஸ் என்று  அலைய வைக்கும். நேசித்த ஒரு நெஞ்சம் வஞ்சிக்குமா என்று எண்ணி, எண்ணி மாய்ந்து போக வேண்டி வரும்.
அஸ்வினி, மகம், மூலம் என்று மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , பிறக்கும்போதே கேது தசை நடக்கப் பிறந்து இருப்பர். நல்ல, செழிப்பா நீங்க பிறக்குறதுக்கு முன்னாலே வரை அந்த குடும்பம் இருந்து இருக்கும். கேது தசை முடியறதுக்குள்ளே ஒரு சின்ன விபத்து. அப்படியே கேது முடிஞ்சிடும். அப்பாடா.. ! பெரிய நிம்மதி. பிறக்கும்போது குரு, சனி , புதன் தசை நடக்கப் பெற்றவர்கள் - மத்திம வயதில் கேது தசையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு தான் முழுமையா , இதோட பாதிப்பு தெரிய வரும். 


ஏழு வருஷம் . கேது தசை நடக்குது. யாருக்குமே நல்லது நடக்காதா ? நடக்கும். எப்படி?
நீங்களும் நல்லவனா மாறுனாதான் உண்டு. வேற வழியில்லை பாஸ் ! உங்க மனசு அறிஞ்சு , நீங்க தப்பு னு தெரிஞ்சு பண்ணுற தப்பான விஷயங்களை விட்டாலே போதும். 


 பெரிய பெரிய கோவில் கட்டுற விஷயம் கூட நீங்க கேது தசையில் செய்ய முடியும். கேது உங்களுக்கு நடந்தால் , ஆலய புனருத்தாரணம், கும்பாபிசேகம் செய்யும் விஷயங்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். அது மிகப் பெரிய புண்ணியம். உங்களுக்கு வர விருக்கும் கெடுதல்கள் அனைத்தும் ஓடிவிடும். கேது தசையில் , இறைவனையே நேரில் தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் கூட கிடைக்கும்.


கேது உங்கள் லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ, தசை நடத்தும்போது - அந்த வீட்டிற்குரிய பலன்களை கொடுக்கிறார்.
லக்கினத்தில் இருந்து இரண்டு எனில் , தனம் ,குடும்பம் , கல்வி , வாக்கு - இப்படி. அதாவது , வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம , ஊரெல்லாம் வம்பு சண்டை போட்டுக்கிட்டு , குடும்பத்துக்குள்ளே நிம்மதி இல்லாம , குடும்பத்தையே பிரிஞ்சு ... இப்படி...
கேதுவுக்கு உரிய தெய்வம் - விநாயகப் பெருமான். விநாயகரை முறைப்படி வழிபாடு செய்தாலே , உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.


நம் ஜோதிட பாடங்களை , பழைய பதிவுகளை திரும்ப ஒரு தடவை பார்த்தீங்கன்னா, கேதுவோட இயல்புகள், காயத்ரி மந்திரம் , ஸ்தலங்கள் எல்லாம் ஏற்கனவே கொடுத்து இருக்கிறோம். கேது தசையில் , விநாயகரை கும்பிடுவதன் மூலம் - நீங்கள் எவரையும் வெல்லும் ஆற்றல் பெற முடியும். அந்த இறைவனையே தரிசிக்க முடியும்.
விநாயகரை எப்போ, எப்படி கும்பிடுவது என்ன துதிகள் என்று பார்ப்போம். நமது சர்வ காரிய சித்தி மாலை கட்டுரையில் உள்ள மந்திரங்கள் தவிர்த்து மேலும் சில powerful துதிகளை , சங்கடகர சதுர்த்தி பற்றி சில சிறப்பு தகவல்களை இன்று பார்ப்போம். 


விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக்  கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம்.
 இதுமட்டுன்று  ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.

 மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

 விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.

 ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய  தனிப்பட்ட மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.

 சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

 சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு  பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.

 சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.
 விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை'  என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு. 

 சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.

இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இரண்டில் ஒன்றைப் படிக்கலாம்.

 முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம்.
 விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று.

  இளஞ்சூரியனைப்  போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.
                'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.


விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம்  இங்கு விளக்கப்படுகிறது.   "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
        காரியசித்தி மாலை

1.

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ

எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.

2.


உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்

உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

3.


இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்

தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.

4.


மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான

தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

5.


செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்

ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

6.


வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய

வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

7.


மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்

நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

8.


பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்

பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்


இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்

சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்

தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.        சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் 


இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில் 
காணப்படுவது.  பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும் எண்ணற்ற ஸ்தல
புராணங்களும்  உண்டு. 

   
இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை
நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில்  ஒரு விசேஷ வழிபட்டு
மூர்த்தி  இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி'  என்பது அவருடைய பெயர்.சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம்
'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து
வழிபடலாம்.     
             
 இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் 
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய  பலனைப்
பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு  நாமங்கள் இருக்கின்றன.

 இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு  தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம்  வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.
 

தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின்  சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு  சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில்  'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா? 
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல்  செய்து
படிக்கவேண்டும்.

        நாரத உவாச -

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே


          தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்


            வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை
முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்


            சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!

நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்


            நெற்றியில் சந்திரனை உடையவரே!  கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ


            இந்தப் பன்னிரண்டு  பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.   

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்

           
 கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:


 இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள்  சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:


 எட்டு கணேச பக்தர்களுக்கு  இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக 
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

        இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com