Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்

| Dec 21, 2011


வாசக அன்பர்களுக்கு வணக்கம். கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரை தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளிவந்துள்ளது. நம் வாசகர்களின் நலம் கருதி இங்கே பகிரப்படுகிறது. 

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும். 

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே  

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

Source : தினமலர் ஆன்மிகம் பகுதி 

6 comments:

arul said...

thanks for sharing

www.astrologicalscience.blogspot.com

தவமணிப் புதல்வன் said...

http://siththarkal.blogspot.com/2011/03/300.html

சித்தர்கள் இராச்சியத்தில் இருந்து தினமலர் காப்பி அடிச்சி இருக்காங்க:))

தவமணிப் புதல்வன் said...

உங்களுக்கும் இருக்கும் நேர்மை தினமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைக்கு இல்லையே:) 

Rishi said...

நண்பரே, தினமலர் என்று இல்லை - பெரும்பாலான வெகுஜன பத்திரிகைகள் , இப்போதெல்லாம் இணையத்திலிருந்து தான் Supplementary issue போடுகின்றனர். யாருடைய சொந்த சரக்கு என்பது இவர்களுக்கு முக்கியம் இல்லை. ஜனங்களைப் படிக்க வைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழில் ஒரு கட்டுரை. அச்சு அசலாக , வார்த்தை எதுவும் மாற்றம் இல்லாமல், வேறு ஒருவர் எழுதியதாக போடப்பட்டு வந்தது. ஆனால் அதை உண்மையிலேயே எழுதியவர் இணையத்தில் பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தார். இது ரொம்ப சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகிவிட்டது. அவர்களாகவே முன்வந்து லிங்க் . source கொடுத்தால்தான் உண்டு. I don't know, they may consider it as advertising... Without charges, they won't do ... right? விடுங்கள்... விஷயம் நாலு பேரை சென்றடைந்தால் சரிதான்... என்ன செய்ய?

நாதன் said...

ஆச்சர்யம்! ஆனால் இதை செய்ய ஆண்டவன் கருணை வேண்டுமே ... நன்றி,
தங்களிடம் ஒரு வேண்டுகோள்...
"அரசு வேலை கிடைக்க எந்த மாதிரி ஜாதக அமைப்பு வேண்டும் என்று தங்கள் கட்டுரையில் தெரிவிக்கவும்" முன்னரே கூறி இருந்தால் அதற்கான லிங்க்கை அடுத்த கட்டுரையில் கொடுத்து உதவவும்.

NAHARANI said...

After reading this article may month i forced myself to visit Lord Pamban at Thiruvanmiyur after 1998.. Really the visit this time with kids for nearly 3 hours, effectively made a change in my attitude of approaching them..It gives me a clam transformation.. Again an unplanned visit i got by His Almighty power by last week end too..Its true again the vibration therein made slow calm change within us.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com