Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எமன்டா... எமனுக்கு எமன்டா...!

| Dec 17, 2011
 
ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் நான்  எழுதுவது எதற்காக? என்னோட மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளவா? இல்லை பணம் , புகழ் அடையவா? நான் இதைப் போல கட்டுரைகள் எழுதி எந்த அளவு புகழ் பெறப் போகிறேன்? என்னை விட அறிவாளிகள் கோடி பேர் இருக்கலாம். புகழின் உச்சியில் ஆயிரம் பேர் இருக்கலாம்... இருந்தும் நான் எழுதுவது எதற்க்காக?  வாழ்க்கை என்கிற இந்த புதிர் விளையாட்டில் , எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை , அதன் மூலம் கிடைத்த சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான், இந்த வலைத்தளம். இங்கே கூறப்படும் ஏதோ ஒரு கருத்து ,  உங்கள் சிந்தனைகளை சரியான திசையில் திருப்பிவிட முடிந்தால் , அது போதும் - ஒரு எழுத்தாளனாய் எனக்கு பெரிய மகிழ்ச்சி தரும். 
அந்த வகையில் - இந்த கட்டுரை என்னைப் பொறுத்த வரையில் ஒரு பொக்கிஷம். படித்து முடித்த பிறகு, உங்கள் கருத்துக்களையும் கூறினால் , மிக்க மகிச்சி அடைவேன்.... தேடுவோம், அந்த புதிருக்கான விடையை, ஒன்றாய் கரம் கோர்த்து....


ஐரோப்பாவில் GOD particle என்பதைப் பற்றிய ஒரு பெரிய ஆய்வு நடந்து கொண்டு இருக்கிறது. நம் பூமி, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம், அதைப்போல கண்ணுக்கு தெரியாத ஏராளமான பால்வெளி மண்டலங்கள் என்று இருக்கின்ற எல்லாமே , ஒரு பெரு வெடிப்பு ( BIG BANG ) மூலம் சிதறிய துகள்கள் என்கிற கணிப்பில் , நம் விஞ்ஞானம் ஆய்ந்து கொண்டு இருக்கிறது... அந்த பொருள் எப்படி இருக்கும்? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று ஒரு சிமுலேஷன் வெடிப்பு நிகழ்த்தி ஆய்வு நடந்து கொண்டு இருக்கிறது.... வரட்டும், வெகு விரைவில் பல உண்மைகள் நிரூபணமாகலாம்.


சாமி, கோவில் , மந்திரம் , ஜாதக கட்டம்னு இருக்கிற ஆளு - ஹிக்ஸ் போசோன்  பற்றி எல்லாம் பேசுறேனேன்னு, பார்க்கிறீங்களா? நாலு விஷயம் தெரிஞ்சுக்கிடறதுல , கொஞ்சம் ஆர்வம் ஜாஸ்தி. படக்குன்னு படிச்சா புரியாத அளவுக்கு விஞ்ஞான அறிக்கைகள் இருக்கிறதால, நம் வாசகர்கள் விரும்பினால், சமயம் கிடைக்கும்போது - புரியும்படி , இந்த ஆய்வைப் பற்றி தனிப் பதிவு ஒன்று இட முயற்சிக்கிறேன்.


நம் சித்தர் பெருமக்கள் , முனிவர்கள் - பரம்பொருள் ஒன்று இருப்பது உண்மை என்று படிச்சுப் படிச்சு சொன்னாலும், நாம் அதை உணரும்வரை நம்பப் போவது இல்லை...


தோ, இந்த மேஜை இருக்கிறதே - அதை ஒரு ஆசாரி பண்ணி இருக்கிறாரு. சரியா? இந்த உலகம், இவ்வளவு பொருட்கள் இருக்கிறதே, அப்படியானால் இதை படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டுமே , என்று ஊகிக்க சொல்கிறார்கள்.... 


நடராஜனின் நடனத்தால் இந்த உலகம் இயங்குகிறது என்று கூறினால், அடக்கமுடியாமல் சிரித்தே விடுவோம்... 
என்னடா மாப்ளே , இதோ வந்து கிட்டே இருக்கேன்... என்று , யாரும் அழைக்காமலே , மொபைல் போனில் பேசிக்கொண்டே அந்த இடத்தை காலி பண்ணிவிடுவோம் இல்லையா?   


பரம்பொருள்னு ஒன்னு இருக்கிறதா ? ஏதோ  மந்திரம் , கிந்திரம்னு துராங்களே அது, எங்கிருந்தோ சக்தியை வரவழைச்சு - அவங்க கேட்டது கொடுக்குமா..? இதெல்லாம் , நிஜமா?   


இதுக்கு ஒரே பதில்.... நீங்க பாதிப்பு அடையாதவரை , வெறுமனே பார்வையாளராக இருக்கும் வரை - கடவுள் நம்பிக்கை என்பது செம காமெடியான ஒரு விஷயம் , கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய விஷயம்... 


ஒருவேளை பாதிப்புக்குள்ளாகிவிட்டால் ......? அத்துணை வழிகளும் அடைக்கப்பட்டு - மனித  முயற்சி அனைத்தும் மண்ணைக் கவ்வ , நம்பித்தான் பார்ப்போமே , கெஞ்சித்தான் பார்ப்போமே என்று கடைசியில் கை கூப்பி நிற்பது - கடவுளை , அல்லது கடவுள் போன்று நாம் நினைக்கும் பெரிய மனிதர்களை. 


ஒரு பேச்சுக்கு - நம்ம முதல் அமைச்சர் மாதிரி ஒரு பெரிய , பவர்புல் ஆளுன்னு வைச்சுப்போம்.. அவரை சுத்தி, ஜால்ரா அடிக்க , அவர்  சந்தோசம் அடையும்படி எப்போவுமே இருக்க, என்னமா துதி பாடுறாங்க..!


அந்த மாதிரி, சர்வ சாதாரணமா துதியில் மயங்க கூடியவனா அந்த இறைவன்? பொய்யில்லாத ஆத்ம சுத்தி வேணும் இல்லையா..? 


இந்த மந்திரங்கள் எல்லாம் , எங்கே இருந்தோ சக்தி கொண்டு வருதோ , இல்லை என்ன மாயமோ... நம்மளை முதல்ல திருத்துது.. மனசை தயார்படுத்தி , சில சக்திகளை பெற வைக்கிறது , விரும்பிய அந்த பாதையில் செல்ல , மனம் உங்களை வழி நடத்துகிறது...... நாம் நம்மை அடையாளம் காணும்வரை ,இந்த ஆகமம், கோவில், பூஜை வழிபாடுகள் எல்லாம், அதன் பிறகு - இந்த நியமங்கள் எதுவும் நமக்கு தேவை இல்லை...


நான் என்பது யார் என்பதை உணர்ந்த பிறகு, பரம்பொருள் ஒன்று இருப்பதையும், நாம் அதில் இருந்து தோன்றிய ஆத்மா என்பதையும் உணரலாம்.... அதுவரை, நம் உயிர் தங்கி இருக்கும் இந்த உடலை - கட்டுக்கோப்பாக வைத்து இருப்பது ரொம்ப அவசியம். யோகிகள் ஹட யோகத்தில் ஏன் ஈடுபட்டனர் என்று தெரிகிறதா?


உடலிலிருந்து உயிர் பிறந்த பிறகு... எத்தனை காலம் கழித்து நமக்கு இறை சிந்தனை கிடைக்குமோ? அதற்குள் மாயை - ஆசை , பாசம் என்று சுழட்டி விட்டால்? அதனால் , உடல் ரொம்ப முக்கியம் என்று அவர்களுக்கு தெரிந்து , அதை பத்திரமாக பாதுகாத்து , தவ வலிமையை பெற்று இருக்கிறார்கள்.....


நாம் இதை புரிந்து கொண்டோமா? ஏதோ இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கை வாழறோம். ஆத்மா - பரமாத்மாவா? அப்படின்னா? நமக்கு - உடம்பும் முக்கியம் இல்லை.... ஒன்னும் முக்கியம் இல்லை.மாயை - சும்மா , ஆவூன்னா - இப்படி சொல்லிடுங்கப்பா... நமக்கு பிடிச்சதை செஞ்சா .... அது மாயையா ? 

இது எல்லாம் , செம கேலியான ஒரு விஷயமாத்தான் இருக்கும். தெனாவட்டா நாம செஞ்ச ஒரு விஷயத்துல, எசகு பிசகா சிக்கி - மாட்டி , முழி பிதுங்கும்போது தான் தெரியும்... அட, இதுதான் மாயை யா? இதைத் தான் ஜெயிக்கணும்னு சொல்றாங்களோ..? 


நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே - வயசு ஆகி , அப்படியே கதை முடிஞ்சு போகும்... கண்ணை மூடுற காலத்துல , நாம வாழ்ந்த அதே வாழ்க்கையை , நம்ம குழந்தைகளும் செய்யும்போது - அது வேண்டாம்னு சொல்ல நினைச்சும், பேச முடியாம, கண்ணாலேயே பேச முயற்சி செஞ்சு - கடவுள்னு ஒருத்தர் இருக்கிறாருப்பான்னு அந்த கடைசி நிமிஷம் தோணுறதை , நமக்குள்ளேயே அனுபவிப்பது தெரியாமல் பரவசத்தில் , நமக்கு நாமே பேசிக்கொண்டு - (பெருசு , பாவம் , நினைவு தப்பிடுச்சு - யே, இல்லைப்பா... இப்போ தான் எல்லாம் புரியுது... நீங்களாவது . நல்லா இருங்க ...... நான் தான் புரிஞ்சுக்கலை... என் புள்ளையாவது வாழ்க்கையை புரிஞ்சுக்க முயற்சி செய்ய மாட்டானா.. சாமி, அந்த புள்ளை நல்லா இருக்கணும்னு ..பசங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கிட்டு கையை உயர்த்தி , ஆசி கொடுத்து ) ....... ஒரு வாழ்க்கை முடிகிறது. 


அதன் பிறகு என்ன நடக்கிறது? தெரியலை. உணர தெரியலை. உணர நம் மனம் தயாராகவில்லை. ஜென்ம ஜென்ம நினைவுகளும், நம் ஆத்மாவிடம் உறைந்து இருக்கின்றன. உசுப்பிவிட, நீங்கள் மனது வைத்தால் தான் ஆகும். ஆத்மாவே , ஆத்மாவை அறிய முயல்கிறது. அதற்க்கு , பரமாத்மாவும் துணை செய்ய வேண்டாமா?


ஆத்மா தங்கி இருக்கும், இந்த உடல்.....எந்த வியாதிக்கும் அகப்படாமல், காப்பதும் - மிக மிக அவசியமான ஒன்று . நாம் இப்போது நினைத்துக் கொண்டு இருக்கும் வாழ்க்கை என்ன? ஒரு நல்ல குடும்பம் , நல்ல மனைவி - குழந்தை. அந்த குழந்தையை நல்ல படியா , வளர்த்து - அவன் நல்லா படிச்சு , வேலை கிடைச்சு , சொந்த கால்ல நிக்கிறானா? அது போதும்... அப்பாடா ... ன்னு ஒரு ஆயாசம் வரும், அதுக்கு பிறகு உங்க ஓட்டம் நிக்கும்.... உடம்பு கொஞ்சம் தளரும்... போதுமப்பா ... இந்த வாழ்க்கை என்று ஒரு எண்ணம் வரும். ....... திரும்ப மறுபிறவி என்று இருந்தால்... திரும்ப இதே வாழ்க்கை... அவ்வளவு தானா? திரும்ப , திரும்ப இதே வாழ்க்கை மட்டும் தான் வாழப் போகிறோமா? 

ஐயா, அந்த அளவு வர்றதுக்கும், நாம் நம்மை , நம் உடம்பை , எந்த பெரிய வியாதியும் வராமல் , காக்க வேண்டும் அல்லவா?


இதற்க்கு முழுமுதல் தீர்வு உண்டா? வேத மந்திரங்களில் - நோய் தீர்க்க சக்தி வாய்ந்த மந்திரம் உண்டா என்று தேடினேன். விளைவு இந்த பதிவு.


மனிதனுக்கு வரவேகூடாத வியாதிகளில் ஒன்று புற்றுநோய். ஒரு குடும்பத்தின் தலைவிதியையே மாற்றி எழுதிவிடும். ஓரளவு சிகிச்சைமுறை பலனளித்தாலும், முற்றிலும் குணப்படுத்துவது கடினம். குடும்பத்தில் உள்ள மொத்த செல்வத்தையும் கரைத்து, உடல் உருக்குலைந்து - அவர்கள் படும் வேதனை, கல்லையும் கரைய வைக்கும் உருக்கமானது. 


ஒரு சில வேளைகளில் டாக்டர்கள் முடிந்தவரை முயற்சி எடுத்தாலும், இறுதியில் அவர்களும் , கண்ணுக்கு தெரியாத அந்த கடவுளின் கையில் தான் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். Trust  in  God .  எனக்குத் தெரிந்து ஒரு சீனியர் இருந்தார். பெரிய கம்பெனியில் ஜெனரல் மானேஜராக பணியில் இருந்தார். அப்போ அவருக்கு 45 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். பிராமண சமூகத்தை சேர்ந்தவர். தினமும் காலை சந்தியா செய்பவர். தான் உண்டு , தான் உண்டு வேலை என்று நிம்மதியாக இருந்தவர். அசைவம், குடிப்பழக்கம், புகை என்று தொட்டே பார்த்திடாதவர்.அளவுக்கு அதிகமான தெய்வ பக்தி உடையவர். பழகுவதற்கு இனிமையானவர். மொத்தத்தில் ரொம்ப நல்லவர். அவருக்கு வந்தது இந்த வியாதி. மனிதர் ஆடிப்போய்விட்டார். 


நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்...? ஐயோ, கடவுளே இப்படி ஆயிடுச்சேன்னு சாமியை திட்டி தீர்த்து இருப்போம்... கோவிலுக்கு போறதையே பைத்தியகாரத் தனமா நினைச்சு இருப்போம்.. கையிலே காசு இருக்கிறவரை வைத்தியம் பார்த்துட்டு , விதி விட்ட வழின்னு கிடந்தது இருப்போம்... இவர் அப்படி பண்ணலை...


ரேடியோதெரபி எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு அவர் வந்ததும், ஒருநாள் நான் அவரைப் போய் பார்க்கப் போனேன்.  வீட்டுலே டேப் ரிகார்டர் ல ஒரு மந்திரம் ஓடிக்கிட்டு இருந்தது. ( டேப் ரிகார்டர் - கேசட் எல்லாம் இப்போ இருக்கா? ) அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன். சுத்தமா குரல் அவுட் அவருக்கு. சைகைலே தான் பேசுனார். கண்களால் பேச முடியாத அளவுக்கு கண்ணீர் ததும்பி இருந்தது. கையைப் பிடிச்சு ஆறுதல் அளிச்சு, நான் மட்டும் பேசிக்கிட்டு இருந்தேன். அவர் சைகைலே சொல்ல , நானும் சைகைலே சொல்ல , அவர் ஹாஹான்னு  சிரிச்சார். காது நல்லா கேட்குதுப்பா. நீ வாய்விட்டே பேசலாம்னு சொன்னார். ரொம்ப அவசியமா பேசணும்னா, கையிலே ஒரு மைக் மாதிரி வைச்சுக்கிட்டு , தொண்டையிலே அழுத்திக்கிட்டு பேசணும்.. அது ஒரு ரோபோ பேசுறமாதிரி, கம்பியூட்டர் குரல்ல வரும். கொடுமை என்னன்னா, அவர் அப்படிப் பேசுறப்போ, கேட்குறவங்க, வெளியில் வந்து அவரை கேலி பண்ணினதுதான். 

அவர் வீட்டுல இருந்தப்போ - அங்கே ஒரு மந்திரம் ஓடிக்கிட்டு இருந்ததுன்னு சொன்னேனே, அந்த மந்திரத்துக்கு பெயர் மிருத்யுன்ஜெய மந்திரம். இவருக்கு சிகிச்சை ஆரம்பிச்ச உடனே, மனசுக்குள்ளே இதை ஜெபிக்க ஆரம்பிச்சு இருந்து இருக்கார். விடாம , முக்கியமா - நம்பிக்கையோட....! இந்த மந்திரத்தை ஜெபிச்சு சுக்கிராச்சார்யர் இறந்து போன அசுரர்களைக் கூட , சிவ  பெருமான் கிட்ட வரம் கேட்டு , திரும்ப உயிர் பெற வைச்சாராம். சிவம் மகிழும் , உங்களை உற்று நோக்க வைக்கும் சக்தி இந்த மந்திரத்துக்கு உண்டு. கேட்பதை தெளிவாக, முழு நம்பிக்கையுடன் கேளுங்கள்...  


மிருத்யு என்றால் எமனாம். அவரையே ஜெயிக்க வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.  


அவர் கதையை முடிக்கலையே. அவரு வொர்க் பண்ணது MNC கம்பெனி. இதையே காரணம் காட்டி , அவரை வேலைல இருந்து அனுப்பிச்சிட்டாங்க. கூட இருக்கிறவங்க, வாய்ப்பு கிடைக்கிறப்போ , காலை வாரி விடுறது ஒன்னும் புதுசு இல்லையே. அவருக்கு சிகிச்சை நடந்துக் கிட்டு இருக்கிறப்போவே -வேலையும் போயிடுச்சு...  


நல்லவங்களுக்கு சோதனை கொஞ்சம், நஞ்சமா வரும் ? நம்பிக்கையோடு, அவன் திருவடி பணிய, அவன் கரமே நம்மை தூக்கி நிறுத்தும் என்பதற்கு உதாரணம் அவர் வாழ்க்கை. 

சில மாதங்கள் ஆயிற்று. மருத்துவர் சொன்ன பயிற்சி , ரெகுலரா செக் அப் எல்லாம் செஞ்சு , மனுஷன் இன்னைக்கு - முழுக்க குணமாகி , நார்மலா இருக்கிறார். என் கண் முன்னே நடந்த அதிசயம், அவர் முற்றிலும் மீண்டு வந்த விஷயம். அவர் வேலை பார்த்த கம்பெனியை விட, பெரிய கம்பெனிகள் நாலு கம்பெனிக்கு , இன்னைக்கு அவர் தான் ஸ்பெஷல் கன்ல்டன்ட்.   முன்னே சம்பாதிச்சதை விட , மூணு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். நிறைய ஓய்வு நேரம். பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி என்று நல்ல நாட்களை தவறாமல் பயன்படுத்துகிறார். 

உடல் நலம் இன்னும் நன்றாக பேணுகிறார். உலகத்தை அதிகமாக நேசிக்கிறார். ஒரு குழந்தையின் உற்சாகம் நிரம்பி வழிகிறது. எமனை பார்த்து விட்டு , அல்வா கொடுத்து விட்டு திரும்ப வந்த சந்தோசத்தை , இறைவனுக்கு தொண்டு செய்து , முடியாத ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு - ஒரு மிக பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 


நாம இன்னைக்கு பார்க்க விருப்பது , அந்த மாதிரி மாபெரும் சக்தி அளிக்கும், அற்புதமான மந்திரங்கள் பற்றி. 

நம் வாசகர்கள் , உங்கள் நெருகிய நண்பர்களுக்கு , சுற்றத்துக்கு இதை பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும், சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை. திக்கு தெரியாமல் தவிப்பவர்களுக்கு தெய்வம் தான் துணை நிற்க வேண்டியது உள்ளது. அவர்களுக்கு சமய சந்தர்ப்பத்தில் , இந்த மந்திரங்கள் கைகொடுக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர் ஜெபம் பண்ணுவது கடினம் தான். அவர் சார்பாக, யார் வேண்டுமானாலும் ஜெபம் செய்யலாம். நாம் ஒவ்வொருவரும், நம் அன்றாட பூஜையில் இவற்றையும் சேர்ந்து ஜெபிப்போம்.... கோடி கோடியா பணம் இருந்தாலும் அதை நாம அனுபவிக்க, நம்ம உடம்பு நல்லா இருந்தாதான் ஆச்சு.... உடற்பயிற்சியுடன்   அந்த பரம்பொருளின் ஆசியையும் சேர்த்து பெறுவோம்...!

வாழ்க அறமுடன், வளர்க அருளுடன்..!
===============================================புற்று நோய் மாதிரி கொடிய வியாதிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன் ,  காலை, மாலை இரு வேளைகளிலும், தொடர்ந்து ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரமும், ஸ்ரீ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரமும் சொல்லி வர வேண்டும். 
உங்கள் வீட்டுப் பூஜையறையில் வழக்கமாக ஏற்றி வைக்கும் தீபத்துடன் பரிகார தீபமாக கூடுதலாக ஒரு நெய் தீபம் ஏற்றி வரவும். மாலையில் இந்தக் கூடுதல் தீபத்தை ஏற்றி வந்தால் போதும். ஆறு மாதங்களுக்கு இதுபோல் ஏற்றி வரவும். இது மிகவும் சக்தியுள்ள பரிகாரமாகும்.


மந்திர உச்சரிப்புக்களை சரி பார்க்க ஒலி / ஒளி வடிவ கோப்புக்களை பார்வையிட - இங்கே க்ளிக் செய்யவும்......


ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்
அருள்மாரிப் பொழியும் ஸ்ரீநரசிம்மர், தம் அடியவர் இம்மையில் சிறக்க, வரம்வாரி வழங்குவதிலும் நிகரற்றவர். வேதத்தில் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் என்று பெயர். ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது. இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் என்பது ஆன்றோர் அறிவுரை.
  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:
   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:
 ஸ்ரீ ஈச்வர உவாச:-
   வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
    விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
   நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
    விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
   ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
    ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
   நகாக்ரை: சகலீசக்ரே
    யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
   பதா வஷ்டப்த பாதாளம்
    மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
   புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
    மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
   ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
    ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
   ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
    தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
   ஸர்வேந்த்ரியை ரபி விநா
    ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
   யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
    தமஹம் ஸர்வதோமுகம்!
   நரவத் ஸிம்ஹவச்சைவ
    யஸ்ய ரூபம் மஹாத்மன:!
   மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
    தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
   யந்நாம ஸ்மரணாத் பீதா:
    பூத வேதாள ராக்ஷஸா:!
   ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
    பீஷணம் தம் நமாம்யஹம்!!
   ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
    ஸகலம் பத்ர மச்னுதே!
   ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
    யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

   ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
    ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
   பக்தாநாம் நாசயேத் யஸ்து
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
   நமஸ்காராத்மகம் யஸ்மை
    விதாய ஆத்ம நிவேதனம்!
   த்யக்தது: கோகிலாந் காமாந்
    அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
   தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
    ஹ்யாத்மான: பரமாத்மன:!
   அதோஹமபி தே தாஸ:
    இதிமத்வா நமாம்யஹம்!!
   சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
    பதாநாம் தத்வ நிர்ணயம்!
   த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
    ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
**********
மஹா நாராயண உபநிஷத்:
        அகோர மந்த்ரம்:
   அகோரேப்ப்மோஸத
   கோரேப்ப்யோ கோர கோர
   தரேப்ப்ய : | சர்வேப்ப்யஸ்
   சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே
   அஸ்து ருத்ர ரூபேப்ப்ய: || 
இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.


மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ  மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)
இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.

ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
 
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

==============================================

26 comments:

ஸ்ரீகாந்த் said...

Dear Friend

Sure this post will help to gain confidence in those families who was seriously affected with life threatened diseases.....for rest as usual it is just a post.....but i share this in my facebook....may lord shiva will give more energy to write like this.OM NAMCHIVAYA NAMAHA!

ஸ்ரீகாந்த் said...

sure

Arunsiva said...

வணக்கம்,
ஸ்ரீ ராஜபத ஸ்தோத்ரம் ஆடியோ வடிவில் இருந்தால் அனைவரும் பயன் பெற அதை தங்கள் வலை மூலம் பெற விரும்புகிறோம். நன்றி இந்த ஒரு வார்த்தை போதாது உங்கள் உழைப்புக்கு, ஆதி சிவன் எல்லா நலமும் உங்களுக்கு வழங்க வேண்டுகிறேன்.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள். அருமை!
பகிர்விற்கு நன்றி சார்!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

vivek said...

sir,intha manthirangal audio vadivil kidaiththal pathividungalen nanri-r.v.anandan covai,

arul said...

it will be so helpful if you post
mantra for curing paralysis

muralichem02 said...

Sivayanamaha,

Thanks for this posting, I am following your writing as much as possible,this post is valuable than anything in this world, rightly said during pain only we have hold Him tightly with lot of trust..

Long live your sivathondu...

Sai Ram

Murali

Anonymous said...

intha manthiram and slogam cd format ill kidaikkuma. arul koornthu sollungal.

kathir said...

மிக அற்புதமான பதிவு அன்பரே .....சில சமயங்களில் லிவிங் எக்ஸ்ட்ரா (நலமுடன் வாழ்வோம் ) பதிவுகலை படிக்கும் பொழுது வாழ்வில் நம்பிக்கை , நிம்மதி
எற்படுகின்றது ...கதிர் ,ஆக்ஸ்போர்டு ,ஐக்கிய ராஜ்ஜியம்

redfort said...

Dear Sir,

super pathivirkku nanrigal pala.
Arun siva sonnathu pola audio vadivil iruthal innum vasathiyaga irukkum.

Thanks/Sengo.

Rishi said...

கருத்துக்கள் தெரிவித்த அத்துணை அன்பு உள்ளங்களுக்கும், என் மனமார்ந்த நன்றி. ஸ்ரீகாந்த் சார், அருண் சிவா சார், தனபாலன் சார், அருள் சார், விவேக் சார், முரளி சார், கதிர் சார் எல்லோருக்கும் என் நன்றி. பத்ம ப்ரியா மேடம், உங்கள் கருத்து , சரியாக படிக்க முடியவில்லை. தமிழ் எழுத்துக்கள் ,கட்டமும் சதுரமுமாக சீனா எழுத்து போல் வந்து இருக்கிறது , என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை ஒதுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. நாம எழுதுறது எல்லாம் படிப்பாங்களான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கும்போது , இவ்வளவு உற்சாகம் அளிக்க நீங்கள் இருப்பது எனக்கு மிகப் பெரிய உத்வேகம் அளிக்கிறது. கூடிய சீக்கிரம், இந்த மந்திரங்களின் ஒலி வடிவம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்..

Siva said...

its really usefuel, thanks a lot guruji

siva/tirupur

Siva said...

its really useful. thanks a lot

bhuvan said...

sir your articles are very impresive and useful to us thankyou for your work.

Waradan said...

Hi Guruji,

Very useful information in the correct to time all of us.

With Regards
Nagesh

Anonymous said...

Ungal pani thodara ellam valla andha sivam ungalukku theerkkayulai thara vendukiren. ungal eluththukkalai padithu nan miga payan petrirukkiren. Ungalukku miga nanrikadan pattirukkiren. Viraivil ungalai neril sandhikka iraivan arul kootivaikkattum.

Sakthivel
Tiruppur

gayathri said...

மிக அருமையான பதிவு .நன்றி.

rajagopal said...

Excellent article.

murugan said...

rishi sir Avar entha hospitalla treatment edutthar....? Pls tell me that hospital Name Pls Or Send my email id murugan1333@gmail.com

thanks

perumal shivan said...

..........................................................................................................vaarthai illai nanbare ! oruvelai neethan kadavulaa eruppiyonukooda thonuthu boss ! sila nerangalil umathu valai maaya valaiyilirunthu meetkuthu enai .
nanri sir

Rishi said...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. செங்கோ சார், சிவா, புவன், வரதன், சக்திவேல் , காயத்ரி மேடம்.. , ராஜகோபால், முருகன் சார்... எல்லோருக்கும் உங்கள் பாசம் என்னை நெகிழவைக்கிறது... பெருமாள் சிவன் சார்... என்ன இப்படி ஒரேயடியா தூக்கீட்டீங்க ...... ஒரு சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பாராட்டா..? நானும் உங்களை மாதிரி தான் சார்... தேடுதலை தீவிரமாக்கி இருக்கும் , ofcourse அவன் ஆட்டுவிக்கும் ஒரு சின்ன குழந்தை.

ARUL said...

பகிர்விற்கு நன்றி சார்

Anonymous said...

thank you so much sir.........

Kumaran said...

இந்த பின்னூட்டத்தை தாங்கள் படிப்பீர்கள் எனில், அதுவே நான் செய்த புண்ணியம்..
நான் மலேசியாவில் பிறந்த அங்கேயே வாழும் 19 வயதானவன்..
தங்களது வலையை கடந்த சில மாதங்களாகவே உலா வருகிறேன்...பல பயன்களும், நல்ல சிந்தனை, தெய்வீக நம்பிக்கையும் ஒரு சேர அடைந்திட தங்களது எழுத்துக்கள் பேருதவியாக இருக்கின்றது என்பதில் மிகையில்லை/
தங்களது உதவியுடன் இறை வழிப்பாடுகளின் தத்துவங்கள், முறைகளையும் அதோடு ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி என்ற தொடரில் தாங்கள் எழுதிய பதிவுகள் அனைத்தையும் வாசித்து பயன் பெற்று வருகிறேன் ஐயா..

நீங்கள் தரும் மந்திரங்கள், என் நாவு இனிக்கும் புண்ணியங்கள்.முடிந்த அளவில் எல்லாவற்றையும் படிக்க தினமும் முயற்சி செய்கிறேன்..ஆனால், நான் ஒரு போதும் தங்களது வலையில் இதைப்பற்றிய பின்னூட்டங்கள், கருத்துக்கள் இட்டதில்லை.தவற்றை நினைத்து வருந்தவே இங்கணம் இதை எழுதுகிறேன்..

சில சோகங்கள், பிரச்சனைகளுக்கு நடுவில் எனக்குள் தைரியத்தையும், இறை நம்பிக்கையும் ஏற்ப்பட அதிலிருந்து வெளிப்பட தாங்கள் கொடுக்கும் ஊக்கமும், பரிகாரங்களுமே எனது இந்த தெளிவுக்கு மிக முக்கியமான காரணம்...வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் எனக்கு வயதும் அனுபவமும் இல்லை..தாங்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திட கடவுளை வேண்டிக்கொள்கிறேன்// எல்லாவற்றுக்கும் நன்றி..வணக்கம் ஐயா..

தங்களை இமெயில் தொடர்பு கொள்ளலாமா....இது எனது நீண்ட நாள் ஆசை..

Suresh kumar.k said...

Rishi Sir,
Aacharyam vegu sila naatkaluku piraghu intha padhipai paarthaen..... appadiyae ennudaiya enna voatangal... ennavendru solvadhaendrae theriyavillai.... Naanum pala kodiya nilaigalil irunthu meela muyarchithu kondu irukiraen.... "jodhidam" patri arinthu kollum theera kadhalinaal ungal valaidhala pakkam vandhaen, Periyavarghal solliyapadi.... "Than maghan saandroan ena solla kaeta thaaiyin mana mahilchi adaiyum" thangalin Thaaiyuku en mudhal vanakam..... manam thalaraamal eludhunghal, Nalla ullanghalin vaalthu unghalai vaala vaikum.... Naanum adharku mudhalil nirpaen

Regards
K.Sureshkumar

Suresh kumar.k said...

Rishi Sir,
Joshidargaluku... aerpadum innalgalil irundhu vidupada!!! or adharku parigharam illaiya? en natpil jodhidathai kaiyil edutha nanbhargal palar innal uttru kavalaiyil ullanar... idharkaana unghalin aaraindha bhadhil palarai thaetri urchagha padhum enbhadhil iyam irukaadhu endrae karudhughiraen

Regards
K.Sureshkumar

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com