Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒரு குட்டி யோசனை...

| Dec 8, 2011

என்னையா... அவசரமா பஞ்சாயத்து கூட்டி இருக்கீங்க.. என்ன சமாச்சாரம்... ?
ஐயா... இந்த ஹோரை சம்பந்தமா.... கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா...
ஏற்கனவே சொல்லி இருக்கிறோமேயா .... திரும்ப திரும்ப கேட்குறே.. நீ.. திரும்ப திரும்ப கேட்குறே நீ ......

"ஏ... ராசு...இன்னுமா தூங்குறே.... வேலைக்கு இன்னைக்கு போகலையா?"
"அய்யய்யே... எல்லாம் கனவா!"  
"யம்மா... இந்தா ரெடி ஆகணும்மா"...  கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்...  ஆமா... ஹோரைனா என்ன? நாம ஏற்கனவே எழுதி இருக்கிறோம்ல.... அப்புறம் என்ன? சரி, திரும்ப படிச்சுப் பார்ப்போம்ன்னு உட்கார்ந்தேன்யா... ஒரு விஷயம் சொன்னா , நல்ல இருக்கும்னு தோணுச்சு... அதுக்குத் தான் இந்த பதிவு..... வாங்க பார்ப்போம்...!
====================================================

ஹோரை : நமது ஜோதிட பாடங்கள் படித்தவர்கள் - இதை நன்றாக அறிவீர்கள்... ஹோரை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று..!
படிக்காதவன் படத்தில - மலேசியா வாசுதேவன் சார் குரல்ல - ரஜினி பாடுவாரே.. "சொல்லி அடிப்பேனடி ... அடிச்சேனுன்னா நெத்தி அடிதானடி"ன்னு ... அந்த பாட்டு மாதிரி....

ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :


மணி-முதல்  
ஞாயிறு  
திங்கள்  
செவ்வாய்  
புதன்  
வியாழன்  
வெள்ளி  
சனி  
  6.00 - 7.00
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
     குரு  
 சுக்ரன் 
சனி  
  7.00 - 8.00
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
  8.00 - 9.00
 புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
  9.00 -10.00
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
10.00 -11.00 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
11.00 -12.00 
குரு  
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
12.00 -01.00
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
01.00 -02.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
02.00- 03.00 
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
 குரு 
03.00-04.00 
புதன்  
 குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
04.00-05.00 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
05.00-06.00
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
06.00 -07.00
குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
07.00 -08.00
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
08.00 -09.00
சூரியன் 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
09.00 -10.00
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
10.00 -11.00 
புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
11.00 -12.00 
சந்திரன் 
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
12.00 -01.00
சனி 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
01.00 -02.00 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
02.00- 03.00 
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
 03.00-04.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
 04.00-05.00 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
 05.00-06.00
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  


சரி, அட்டவணையை கையில வைச்சுக்கிட்டே இருக்கவும் முடியாது... சுலபமா ஞாபகம் வைச்சுக்க என்ன வழி ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டு இருந்தார்...

அந்த நாளைக்கு உரிய ஹோரை முதல்ல வரும், காலை 6  மணிக்கு. ஒரு மணி நேரத்துக்கு பிறகு அடுத்த ஹோரை ஆரம்பிக்கும். செவ்வாய் கிழமைன்னு வைச்சுக்கோங்க... முதல் ஹோரை செவ்வாய் ஹோரை - காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரைக்கும் வரும்..

மதியம் ஒரு மணிக்கு திரும்ப செவ்வாய் ஹோரை வரும். அதே மாதிரி இரவு எட்டு மணிக்கு வரும்.

Cycle time : 6  - 1  - 8  - 3   

சரி, முதல் ஹோரை தெரிய வந்திடுச்சு , இரண்டாவது எப்படி கண்டு பிடிக்க?

நிஜமா, நாம் இப்போ சொல்லப் போறது, எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலை.. நானா கண்டு பிடிச்சது , சுலபமா எப்படி ஞாபகம் வைச்சுக்கிடாம்னு ... எப்படின்னு பாருங்க..... ( உனக்கு வேற வேலையே இல்லையா... இப்படியா லூசு மாதிரி இருப்பேன்னு , நீங்க அக்கறையோட கேட்குறது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாஸூ...) 

ஞாயிறு  - சூரியன்
திங்கள்  - சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
சனி

வரிசைப்படுத்திக்கிட்டோமா ?  

இப்போ , reverse  ல  - ஒன்னு விட்டு ஒன்னு போகணும்....

செவ்வாய் ஹோரைக்கு அடுத்து , சூரியன், அடுத்து சுக்கிரன், அடுத்து புதன், அடுத்து சந்திரன் , அடுத்து சனி , அடுத்து குரு , அடுத்து திரும்ப செவ்வாய்....

சொல்ல வந்த விஷயம் தெளிவா புரியுதா?
ஏன்யா .. நான் கரெக்டா பேசுறனா.. ன்னு  சங்கிலி முருகன் மாதிரி புலம்ப வைச்சுடாதீங்க.... (கையைப் பிடிச்சு இழுத்தியா... கையைப் பிடிச்சு இழுத்தியாடா......)

எனக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த என்னோட குருநாதர் - குரு ஹோரை வர்றப்போ.. கரெக்டா ஆரம்பிப்பார்.... செவ்வாய் ஹோரை வரும்போது படக்குன்னு நிறுத்திடுவார்  ...  செவ்வாய் ஹோரை தேவையில்லாத வாக்கு வாதம், சண்டைன்னு கொண்டு போகும்....
 திரும்ப திரும்ப பேசுற நீ...
ஒரு பெரிய பிரச்னை வர்ற மாதிரி இருக்கும்னா, செவ்வாய் ஹோரை அந்த நேரத்துல வந்தா... தயவு செஞ்சு வாயை மூடிக்கிட்டு , கம்முன்னு இருங்க...

வீட்டுக்கார அம்மணி கூட, ஏதாவது சண்டை வந்து , கொஞ்சம் நேரம் கழிச்சு சமாதானம் ஆகும் பாருங்க.. அதுல கூட ஹோரை யோட கைங்கர்யம் இருக்கலாம்...

காலம் அறிந்து நடவாதவன் , கோலம் அழிந்து குரங்காவான் னு பழமொழி இருக்கு தெரியும் இல்லை...

ரொம்ப பெரிய காரியம் ஒன்னு தொடங்கணுமா, நல்ல சுப ஹோரைகள் ல தொடங்குங்க.... சூப்பரா வரும்...

கோவில்ல சாமி கும்பிடனுமா... குரு ஹோரைல செய்யுங்க... நல்ல பலன் கிடைக்கும்....

இது மாதிரி என்ன ஹோரை ல என்னென்ன செய்யலாம்னு , நாம பழைய கட்டுரைல தெளிவா போட்டு இருக்கோம்....
நம்ம பழைய கட்டுரை படிக்காதவங்க , கீழே உள்ள லிங்கை படிச்சுப் பாருங்க...



என்ன... சாமி.... ! இதுக்கு அப்புறம் கலக்குவோமா...!

9 comments:

redfort said...

Ayya Vanakkan,

Inru Karthigai Deepam virathamiruthu Esanai tholuthu veetil Deepam eattri Nimmathiyaka ungal pathivai partthal nengal HORAI pattri eluthi irukkirigal. Inru kalai 7.45am kku oru phone panninen athanal veetil appo arampicha vaakkuvatham mudiya mani 9 am anathu. Ippo nenga horai sonnigalannu check pannina Appo sevai horai enpathu ippo than theriyuthu.

Any way we will becareful from that horai.

OM SIVA SIVA OM,
OM SIVA SIVA OM,
OM SIVA SIVA OM.

selvinsathyaa said...

ayya many thanks for this valuable information.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க வளமுடன்.

திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

dowsarpaandian said...

வணக்கம்!

நல்ல ஒரை எது கெட்ட ஓரை என்பதற்க்கு பழைய‌ பதிவா? அதெல்லாம் கிளிக் பன்ன நேரம் இல்லை சாமி!

அது சரி வீர சைவம் பற்றி தெரிஞ்சத எழுதுங்கோ தெரியலைன்னா தெரிஞ்சுகிட்டு எழுதுங்கோ!

ஓம் சிவசிவ ஓம்

Anonymous said...

How we can calculate Horai from foreign countries?

Rishi said...

For the foreign countries - or anywhere from the world - The first hora starts from the sunrise - for the first one hour.....

Balasingam said...

ஜயா வணக்கம் அருமையான பதிவு அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய விடையம் மிக துல்லியமான விடையம் பற்றி பதியவில்லை. அதாவது இன்னும் துல்லியமாகவும்,முழுமையாகவும் பலன் பெற விரும்புவோர் முதல் 12 நிமிட ஹோரையை பயன்படுத்தலாம் மந்திர ஜபங்களில் ஈடுவோர் இந்த 12 நிமிடங்களை பயன்படுத்தி ஜபித்தால் பல நூறு மடங்கு புண்ணியமும் பெறலாம். வாழ்க வளமுடன்.

பாலசிங்கம்
ஓம் சிவசிவ ஓம்

Oracle FAQ - Interview QA said...

நிஜமாகவே ... ஒரு ஓரையும் அடுத்த ஓரையும் நியாபகம் வச்சிக்கிற ரொம்பவே கஷ்டம்தான் இருந்தது..உங்களோட ... சுலபமான கண்டுபிடிப்பு..அற்புதம் ... நீங்க ஒரு... வில்லேஜ் விஞ்ஞானி அய்யா..... !
ஒரு விண்ணப்பம் விரும்ப்பத்தகாத... குறைகூறும் பின்னூட்டங்களை... தயவு செய்து...அகற்றி விடுங்கள்...அது.. உங்களை எழுதும் ஆர்வத்தையும் வேகத்தையும்..தடைபடுத்தும்..!
வாழ்த்துக்கள் .. நிறைய எழுதுங்கள்..!

rmsp said...

Pls let me know which horai is there best to wear gold jewel

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com