Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஒரு நல்ல காரியத்திற்கு உதவ விருப்பமா?

| Dec 7, 2011
சங்கு -  இதைப் பற்றி யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? 
நாம் பிறந்ததும் - பால் கொடுக்க இந்த சங்கு தான். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு சில்வர் , வெள்ளி என்று கொடுக்கிறோம்.. ஆனால் , கடல் சங்குகளுக்கு துர் தேவதைகள் , ஆவிகள் கிட்டவே வராதாம்...
கிராமங்களில் வாசப்படி தாண்டியதும் தரையில் பதித்துப் வைத்து இருப்பார்கள் . அல்லது நிலையில் கட்டித் தொங்கவிட்டு இருப்பார்கள்.. ஆவிகள் அந்த வீட்டுக்குள் வரகூடாது என்பதற்காக... இப்போது இந்த பழக்கம் எல்லாம் , கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது...

கடைசியில் நம் மூச்சு நின்றபிறகு,  நம்மை வழியனுப்பும்போது - ஒலிப்பதற்கும் சங்குதான்... சங்கு ஓசை அங்கும் முக்கியம்..

போர்முழக்கம் செய்வதற்கும், நிறுத்துவதற்கும் சங்கு ஓசை - காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து இருக்கிறார்கள். மகா விஷ்ணுவே , பஞ்ச சைன்யம் வைத்து இருந்தார்.

சிவன் ஒரு சங்கு பிரியர். சிவ ஆலயங்களில் சங்கு ஒலிக்கும் ஓசை, முதலில் நமக்கு ஒரு வேடிக்கையாக , கேலியாகத் தோன்றினாலும், சில நொடிகளிலேயே உங்கள் மனது , உங்களை அறியாமலே ஒடுங்குவதை உணர முடியும்..என்ன நினைவுகள் இருந்தாலும் , அதை முற்றிலும் அழித்து - தன் பக்கம் கவனத்தை ஈர்க்க முடியும் அந்த சங்கு ஒலியால்....

இன்னைக்கு சங்கு பற்றிய ஒரு அபூர்வ தகவலும், நமக்கு எல்லாம் கடைச்சங்கு கிடைக்கும் முன் , நாமும் சில நல்ல காரியம் செய்ய வேண்டும்  என்று இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு சந்தர்ப்பம் பற்றியும் பார்க்க விருக்கிறோம்...!

திருக்கழுக்குன்றம் - பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல?  பல அபூர்வ விஷயங்களுக்காக பெயர் பெற்ற ஸ்தலம். இறைவன் மாணிக்க வாசகருக்கு குருவாக காட்சி அளித்த ஸ்தலம். மார்கண்டேயரால் வணங்கப்பெற்ற ஸ்தலம். மேலும் பல ரிஷிகளும் , மகான்களும் வந்து வணங்கிய ஸ்தலம்.

கழுகு - சோறு சாப்பிடுமா? இங்கே சாப்பிட்டு இருக்கு.  
பல வருடங்களாக இரண்டு கழுகுகள் மலை மேல் உள்ள கோவிலுக்கு வந்து பிரசாதம் உண்டு சென்ற ஸ்தலம். இரண்டு ரிஷிகள் தான் அந்த கழுகுகள் - இப்போது அவை முக்தி அடைந்துவிட்டன என்று கூறுகின்றனர்.

இன்னொரு அதிசயம். சங்கு கடல்ல தானே கிடைக்கும். ஆனா, இங்கே உள்ள கோயில் குளத்தில , சங்கு தீர்த்தத்தில் - பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அபூர்வமாக தோன்றுகிறது. அப்படித் தோன்றும் சங்கினால், இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இந்த வருடம் அப்படித் தோன்றியிருக்கிறது. இதைப் போல இதற்கு முன்பு தோன்றிய சங்குகளையும் நாம் கோவிலுக்குப் போகும்போது பார்க்கலாம்.

அதென்ன சார்.... சங்கு - அதுவும் குளத்திலே ! அது ஒரு பூச்சி. கடல்ல தான் இருக்கும். அதுவும் பன்னிரண்டு வருஷம் ஒருதடவை , அப்படி என்ன கணக்கு?
இதெல்லாம் டூ மச். ஏதோ பிளான் பண்ணி ஊரை ஏமாத்துறாங்கப்பானு நினைச்சா ,  தாராளமா நினைச்சிட்டுப் போங்க... அதுனாலே யாருக்கும் ஒன்னும் குறை இல்லை... நீங்க பாட்டுக்கு , உங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கலாம்.

இல்லை, இது உண்மை என்று நம்பினால், நிச்சயமாக இது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.... நான் எப்போதோ கேள்விப்பட்ட ஒரு தகவல் படி, முக்தி அடைய நினைத்து தவம் இயற்றும் ரிஷிகள், சிலர் இறைவனிடம் கோவில்களில் உள்ள விருட்சங்களாக மாற வரம் கேட்பார்களாம். தேவர்கள் பலர் சொர்க்கலோகத்தில் இருப்பதைவிட, "குமரா! உன்னை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்" என்று செந்தூரில் விருட்சங்களாக இருக்கின்றனராம்..! 

அதேபோல, இங்கு உள்ள குளத்தில் தோன்றி உனக்கு அபிஷேகம் செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தாலே அது எனக்கு கிடைக்கும் பெரிய வரம் , என்று மாபெரும் ரிஷிகள் தான் இவ்வாறு தோன்றுகிறார்கள் என்று  நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி அவர்கள் தோன்றினால் , நாம் வெறும் கல் என்று உள்மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் இங்கு உள்ள இறைவன் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்...

அப்படி 1008  மகா சங்காபிசேகம் - ஒவ்வொரு வருடமும் , கார்த்திகை மாதம் 4  ஆவது திங்கள்கிழமை நடைபெறும்...

இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த கோவிலில் கோபுர திருப்பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. நண்பர் முரளிதரன் அவர்கள் இந்த தகவலை , நமது வாசகர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கில் எனக்கு அனுப்பி இருந்தார். உதவ விருப்பம் உள்ள அன்பர்கள் திரு. அன்புச் செழியன் அவர்களை ( மொபைல் : 98941 09686  ) தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்..

கோவில் பணிக்கு நிறைய தேவைப்படுமே என்று மலைக்காதீர்கள்..! உங்களால் முடிந்த அளவு , அது மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் - மனமுவந்து கொடுத்து உதவுங்கள்.. ஐயா , ரொம்ப சின்ன தொகை என்று தோன்றினால், வாய்ப்பு கிடைக்கும்போது கோவிலுக்கு ஒரு நடை நடந்து , நேரிலேயே திருப்பணிக்கு என்று கூறி, பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்.. 

இது நம் வாசகர்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்றே கருதுவேன்..... இறை காரியங்களுக்கு உதவுவது ஒரு மிகப் பெரிய புண்ணிய காரியம்.. ஆக்குபவனும், காப்பவனும், அழிப்பவனும் அவனே. அவனது ஆலயத்தை, அவன் நிச்சயம் புதிப்பித்துக் கொள்வான்.. அதற்க்கு உங்களை ஒரு கருவியாக்குகிறான்... அதற்கே நாம் நிறைய புண்ணியம் செய்த இருக்கவேண்டும்.. அதை விட்டு , நமக்கு பெரும் , புகழும் கிடைக்க வேண்டியதற்காக செய்வது நன்கொடை அல்ல... 

யாரோ ஒரு கோடீஸ்வரருக்கு இந்த தகவல் கிடைத்தால், ஒரே நாளில் மொத்த பணத்தையும் கொடுத்து விட இயலும். இருந்தாலும், நம்மைப் போன்ற சாமானியர்களும் இதில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது , அந்த ஈசன் கருணை என்று நினையுங்கள்... நம்மை அறியாமல் நாம் செய்துள்ள பாவங்களும், அறிந்தே வேறு வழியில்லாமல் செய்த பாவங்களும் ஒரு மூட்டை போல இருக்கும், அந்த சுமை குறைய , இதைப் போன்ற சில நல்ல காரியங்கள் நமக்கு நல்லது.

சிறுதுளி பெருவெள்ளம்.. இணையத்தில் இதை பார்வையிடும் அன்பர்கள், மற்றும் சிலருக்கு தெரியப் படுத்துவதும் ஒரு புண்ணிய காரியமே. மின்னஞ்சலிலோ , சமூக வலைத் தளங்களிலோ தயவுசெய்து , உங்கள் நண்பர்களிடமும், சுற்றத்திடமும் பகிர்ந்துகொள்ளவும்.. 

உதவி செய்ய மனம் இருந்தாலே , ஒரு நல்ல வழி நமக்கு கிடைக்கும்... நாம் செய்யும் உதவி, பல ரூபங்களில் , பல மடங்கு நமக்கு , தக்க நேரத்தில் கிடைக்கும்... நம்புங்கள்...!

உங்கள் பார்வைக்காக :திருப்பணிக்குழு - தகவல் ....:3 comments:

redfort said...

Ayya Vanakkam,

Athisiya thagavalgalai koduppathil ungalukku nigar neengale!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக செய்கிறேன் நண்பரே! அருமையான தகவலுக்கு நன்றி.

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

YourFriend said...

சங்கு பிறப்பது பற்றி இதில் உள்ள பிற இடுகையில் படித்தேன். பகுத்தறிவால் விளக்க முடியாத மிகப் பெரிய அதிசயம் தான் இது. ஆசிரியருக்கு நன்றி.

திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு நான் ஏற்கனவே ஒரு முறை சென்றிருக்கிறேன். இந்த சங்கு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பிற விபரங்கள் தெரியாது. நமது தளம் மூலம் தெரிந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இருப்பவர்கள் அவசியம் ஒரு முறை திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு சென்று வாருங்கள். தாம்பரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கல்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திருக்கழுக்குன்றம் சென்றுவிடலாம்.

அடிவாரத்தில் ஹோட்டல்கள் உண்டு. காலை உணவை முடித்துவிட்டு மலையேறினால் சரியாக இருக்கும்.

கோவிலுக்கு கீழே சங்கு தீர்த்தம் உள்ளது. அதில் குளித்து விட்டு செல்வது விஷேஷம். திருமண வரம் வேண்டி நான் சென்ற ஆண்டு சென்றிருந்தேன். (ஈசன் சீக்கிரம் கருணை கட்டுவான் என்று நம்புகிறேன்). அப்போது அந்த குளத்தில் குளிக்க நேர்ந்தது.

துணி துவைப்பது, உள்ளிட்ட பல காரிங்கள் குளக்கரையில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கோழி இறைக்கைகள் உள்ளிட்ட அசுத்தங்கள் குளமெங்கும் சிதறிக்கிடந்தன. முறையான பரமாரிப்பு இன்றி, குளம் மிகவும் அசுத்தமாக காணப்பட்டது மிகவும் வருத்தத்தை தந்தது.

கோவில் ஒரு சிறிய மலை உச்சியின் மீது காணப்பட்டது. திருக்கழுக்குன்றம் ஒரு சைவத் திருத்தலமாகும். சிலர் இதை கருடன் வருவதால், வைணவத் திருத்தலம் என்று நினைக்கின்றனர்.

இந்திரன் இந்த கோவிலுக்கு இடி ரூபத்தில் வந்து இறங்கி, மூலவரை வலம் வந்து கீழே இறங்கி செல்வானாம்.

கோவிலுக்கான படிகள் செங்குத்தாக காணப்பட்டது. படியேறும்போது மூச்சிறைத்தது. அப்படியே செய்த பாபங்களும் நினைக்க்வுக்கு வந்தது. ஒரு முறை படியேறி இறங்கியதர்க்கே ஏதோ பெரிய சாதனை செய்தது போல தோன்றியது. (தினமும் இருவேளை படியேறி மேலே சென்று சிவனுக்கு சேவை செய்யும் அந்த அர்ச்சகர்களை நினைக்கும்போது ஒரு பக்கம் வியப்பாக இருந்தது.)

பயணத்தின் போது நான் எடுத்த படங்களை கீழே உள்ள லின்க்கில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/113224035328885309297/ThirukkazhukunramTemple

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com