Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...!

| Dec 2, 2011வாசக அன்பர்களுக்கு வணக்கம். ரொம்ப ஷார்ட்  அண்ட் ஸ்வீட்டா ஒரு ரெண்டு விஷயம் மட்டும் இன்னைக்கு பார்க்கப் போறோம். எனக்கு மின்னஞ்சலில் வந்த தகவல்கள் இவை. உங்களுக்கு ரொம்பவே உபயோகப்படும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

வாழ்க்கையில ரொம்ப நல்ல நிலை வர்ற வரைக்கும், ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒண்ணுதான். ஆனா, அதுக்காக ரொம்ப அல்பத்தனமாகவும் போக கூடாது. கடன் வாங்கி, லோன் வாங்கி கார் வாங்க வேண்டியதில்லை தான். அது உங்களுக்கு அவசியமில்லாமல் பகட்டுக்காக இருக்கும் பட்சத்தில் . உங்கள் வியாபாரத்துக்கு அது முக்கியம் எனில் , தவறு இல்லை.

சில விஷயங்கள் , மிக தரமானதை உங்களுக்கு சொந்தமாக்கும்போது - மனது அதீத உற்சாகம் அடைகிறது. இரண்டு ஆயிரத்துக்கு ஷர்ட் வாங்கி போடுறது, திடீர்னு எப்போவாவது I  கிளாஸ் AC ல பிரயாணம் பண்றது. வருஷத்துக்கு ஒரு தடவை நல்ல 5  ஸ்டார் ஹோட்டல்ல ரெண்டு நாள் தங்கிட்டு வர்றது , இந்த மாதிரி விஷயங்கள் - யோசிச்சுப் பார்த்தா - அட்டர் பணம் வேஸ்ட் என்று தான் தோன்றும்.  ஆனால், மனதளவில் ரொம்ப புத்துணர்ச்சியாக உணர முடியும்.
என்னுடைய நண்பர் ஒருவர் இதே மாதிரி செய்யக் கூடியவர். என்ன காரணம் என்று கேட்டேன். "மாமூ , உலகத்துல பெஸ்ட் னு இருக்கிற விஷயங்கள் எல்லாம் நானும் அனுபவிக்கிறேன்... நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு , நமக்கு அறுபது வயசுக்கு அப்புறம் தான் வசதி வரும். ஆனா, அனுபவிக்க வயசு கிடைக்காது.. சம்பாதிக்கிறதுல , ஒரு பகுதி எனக்கே எனக்குன்னு செலவழிக்கிறேன்...

அதுக்காக , எண்பது ரூபாய் பியரை ... 1500  ரூபாய் கொடுத்து , அங்கே போய் குடிக்கிறேயேடா....இது கொஞ்சம் ஓவர் இல்லையா?
கஜல் பாட்டு கச்சேரி கேட்டுக்கிட்டு அங்கே வர்ற ஆளுங்களை பாத்துக்கிட்டு குடிக்கிறது ஒரு தனி சுகம். காலைல Buffet பிரேக் பாஸ்ட் , உலகத்துலேயே பெஸ்ட் பூட் எல்லாம் கிடைக்கும். இப்படி வருஷத்துல ஒருதடவை போயிக்கிட்டு இருக்கார். "நாளைக்கு நான் பெரிய ஆளு ஆயிட்டேன்னா, எனக்கு வர்ற கெஸ்ட் டுக்கு இந்த மாதிரி செலவழிக்கும்போது ஒரு பொருட்டா இருக்காது பாரு" ங்கிறார்.  

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான் இருக்கிறாங்க. படிப்பு சாதாரண படிப்புத் தான். நல்ல வேலை. நல்லா சம்பாதிக்கிறாங்க. ECR  ரோட்ல நிலம் வாங்கிப் போட்டு இருக்காரு. நமக்கு ?? ஹௌசிங் லோன் அப்ரூவ் பண்ணவே, நூறு தாரம் பேங்க் யோசிக்குது.....

வாய்ப்பு இருந்தா, நாமளும் எப்போவாவது இந்த மாதிரி அனுபவிக்கலாம். ஏன்னுக்   கேட்டா,   கீழே ஒரு சம்பவம் கொடுத்து இருக்கிறேன் பாருங்க.. இந்த மாதிரி சூழ்நிலைல , கேவலமா அல்பத்தனமா நாம நடந்துக்கிட மாட்டோம்.. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க...

================================================================
பாக்யாவில் பாக்கியராஜ் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதில்..

கேள்வி- சாத்தானின் சேஷ்டை என்பது..?

பதில்- ஒரு மனிதனை அற்பத் தனமா யோசிக்க வச்சு, கைக்கெட்டியது வாய்க்கெட்டாது செய்யறதுதான் சாத்தானின் மிக முக்கியமான சேஷ்டை.இதில பலரும் ஸ்லிப் ஆகறதுண்டு.

உதாரணத்திற்கு ...ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான்.

அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,"இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்" என்றான்.

பிச்சைக்காரன், 'அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்' என்றான்.

அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,'ஒரு ரூபாய் அதிகம்.நான் உனக்கு 50 பைசா தருகிறேன்.இல்லையென்றால் வேண்டாம்' என்று அற்ப புத்தியுடன் சொல்ல,

பிச்சைக்காரன் 'அப்படியானால் பரவாயில்லை! அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்'னு சொல்லிட்டு நடந்தான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 காசிற்கு தந்து விடுவான்ற எண்ணத்தோட பின் தொடர்ந்து வந்துகிட்டிருந்தாரு.

அப்ப எதிர்ல வந்த இன்னொரு வியாபாரி கழுதை காதுல வைரத்தைப் பார்த்துட்டு அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத வைர வியாபாரி அதிர்ச்சியுடன் 'அட..அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்திற்கு கொடுத்துட்டு இவ்வளவு சந்தோசமா செல்கிறாயே! நன்றாக ஏமாந்து விட்டாய்'னு சிரிச்சு கிண்டலடிச்சாரு.

அதைக்கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்போடு..'யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது..அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்.மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை.எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன்.அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 காசிற்காக கோடி ரூபாய் வைரத்தை இழந்து விட்டாயே? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்"னு நடந்தானாம்...

==================================================================

எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
 
நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க  இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும்  பிராண சக்தியை  உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.
ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை  இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்  குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே  ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு  அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
 ஒரு ஜவ்வு இதயத்தின் Shock  absorber   இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது  விழித்திருந்தால்
 பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை  கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

====================================================================

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

NAHARANI said...

thankyou sir, much useful and from today onwards me too try to follow BioClock

NAHARANI CHENNAI

NAHARANI said...

Thnaks sir, much useful and let me too try to follow from today onwards
NAHARANI

ISMAIL said...

மன நலத்துக்கு ஒரு சிறுகதை மூலம் கருத்து. உடல் நலத்திற்கு நேர வாரியாக (அக்குபஞ்சர் முறையில்) உடலை பராமரிக்கும் முறை. வாழ்க உங்களின் சேவை.

sekar said...

அய்யா வணக்கம் , உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு அருமையான நல்ல தகவல் .நன்றி

sekar said...

அய்யா வணக்கம் , உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு அருமையான நல்ல தகவல் .நன்றி

arul said...

miga payanulla thagaval

www.astrologicalscience.blogspot.com

Anonymous said...

Vary nice

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com