Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தனுசு : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

| Dec 2, 2011
மூலம், பூராடம், உத்திராடம் - முதல் பாதம் பிறந்த , தனுசு ராசி நேயர்களே :

ஜனவரி

மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கக்கூடிய காலகட்டமாகும். எடுத்தகாரியங்கள் யாவும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என முடிவடையும். எதிலும்வீறு நடை போடு வீர்கள். இந்த மாதம் பொருளாதாரத்திலும் பண விஷயத்திலும்உங்களைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை. பழைய கடன் களில் சில அடைபடும்.உங்களுக்கு வர வேண்டிய பாக்கி சாக்கி கள் வசூலாகும். உறவினர்களின்விஷயங்களில் நீங்கள் முக்கிய நபராகக் கருதப்படுவீர்கள். விசேஷ வீட்டுமொய்ச் செலவு உங்க ளுக்கு இருக்கத்தான் செய்யும். மகிழ்ச்சிகரமான சிறுபயணங்களை மேற்கொள்வீர்கள்.

பிப்ரவரி

இல்லற இனிமைக்குக் குறைவில்லை. இதுவரை எதிர்பார்க் காத தொகை ஒன்றுஉங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு உங்களுக்கு அரசாங்கஆதரவு உண்டு. அரசாங்க உதவியின் மூலம் ஏதாவது நடைபெற வேண்டுமானால் அதற்குஇது நல்ல தருணம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாற்றங்கள் நிகழும்.மேலதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். பதவி உயர்வு பற்றிக் கேட்கஇது நல்ல தருணம். வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைத்தரும். வியாபாரிகளுக்கு சுமாரான முறையில் வியாபாரம் இயங்கிக்கொண்டிருக்கும்.

மார்ச்

எதிர்பாராத திருப்பங்களையும் முடிவுகளையும் கொண்ட மாதமாகத் திகழும். சிலமுக்கியமான நிகழ்ச்சிகளில், பிரச்சினை களில் பங்கெடுத்துக் கொள்வதைமுடிந்தவரை தவிர்ப்பது நல்லது. பணவரவு என்பது பேச்சளவில்தான்எதிர்பார்க்கலாமே தவிர நடைமுறையில்- செயலில் இல்லை. கொடுக்கல்- வாங்கலில்கொடுக்கல் குறைந்து கடன் வாங்கலே அதிகமாக இருக்கும். வெளியூர் வாசம்அல்லது அயல்நாட்டு வேலைவாய்ப்பு அமையும். வீடு, நிலம் போன்றவற்றில்திருப்தியான சூழ்நிலை தென்பட வில்லை. மனைவி மற்றும் குழந்தையின்உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களுக்குத் தேர்வு நேரத்தில்மந்தத் தன்மையும் அஜாக்கிரதையான சூழ்நிலையும் உருவாகும். கவன முடன்இருத்தல் நலம்.

ஏப்ரல்

வியாபாரிகளுக்குப் போட்டியுடன் கூடிய கடுமையான சூழ் நிலை. குறைந்த அளவுலாபமே வியாபாரத்தில் தெரிகிறது. வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்தொழிலில் இருப்பவர்கள் சற்று யோசித்துச் செயல்படுவது உத்தமம். வாசனைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு சுமாராக இருக்கும். இயந்திர பாகங் கள்தயாரிப்பவர்கள் அல்லது விற்பவர்களுக்கு இது சற்று லாப கரமான நேரம்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாகவே காணப்படும்.மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டு. நண்பர்களால் தொல்லை இல்லை. அவர்கள் மூலம்உதவியும் கிடைக்கும்.

மே

அதிக தைரியமும் அசையா நம்பிக்கையும் உங்களை வழிநடத்தும். அதை பரீட்சைசெய்து பார்க்க நேரம் வந்து விட்டது. நீங்கள் எதைக் கண்டும் பயப்படத்தேவையில்லை. போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். அதிக வெற்றிவாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவி உறவு பலங் கொண்டு சிறப்பாக இருக்கும்.இருந்தாலும் பெண்களிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். பணவரவுசுமாராக இருக்கிறது. கொடுக்கல்- வாங்கல் சுமாராக இருக்கும். ஆனாலும்குடும்பச் செலவு ஓரளவு அதிகமாகவே தெரிகிறது. வெளியூரிலிருந்து வரும்தகவல்கள் மனதிற்குத் திருப்தி அளிக்கும். உறவினர் களிடையே சகஜமான நிலையும்நட்பும் உறவும் உண்டாகும்.

ஜூன்

குடும்பத்தில் சகோதரரின் வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.அதிலும் வெளியூர் வேலைக்கான முயற்சிகளே வெற்றி பெறும். அதற்கான உதவிகளும்கிடைக்கும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதாரணமாக இருக்கும்.பிரச்சினை கள் குறைந்து லாபம் கிடைக்கும். அதற்கான பொருட் செலவுகளும்காணப்படும். மேலும் வழக்கு விவகாரங்களிலும் வெற்றி கிடைக்கும். சிலர்புதிய நிலம் வாங்கும் யோகம் அமையும். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள்சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும்புகழும் கிடைக்கும்.

ஜூலை

உடல்நலம் நன்றாக இருக்கும். உற்சாகம், சுறுசுறுப்பு குறை வின்றிக்காணப்படும். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்துஅன்புடன் கூடிய பிணைப்பு உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். தொலைதூரக்கடிதங் களால் நன்மையும் ஆதாயமும் உண்டு. உறவினர்களின் போக்கு வரத்து நல்லமுறையில் அமையும். மன சந்தோஷத்தைத் தரும் தகவல்கள் வந்து சேரும். உங்கள்சகோதரரின் சூழ்நிலையில் திருப்திகரமான நிலை காணப்படும். நண்பர்களால்நன்மையும் உதவியும் உண்டு.

ஆகஸ்ட்

பெண்கள் சம்பந்தமாக அதிக அளவில் செலவு ஏற்படலாம். வீடு, நிலம்சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுமாராக இருக்கும். சிறு சிறு பிரச்சனைகளில்நீங்கள் தலையிட்டு சிரமமின்றி சமாளிக்க முடியும். பழைய வாகனத்தைப் பழுதுபார்க்கவோ அல்லது புதிய வாகனம் வாங்கவோ நல்ல தருணமாக அமையும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழாது.இயல்பு வாழ்க்கை பாதிக்காது. அதிக வேலைப்பளு காணப்படும். வியாபாரிகளுக்குஎதிர்பார்த்த இனங்கள் அனுகூலமாக அமையும். ஓரளவு முயற்சிகள் லாபகரமாகவேமுடியும். தொழில் போட்டி கள் அதிகமாக இருந்தாலும் அவற்றைச் சமாளித்துவிடலாம்.

செப்டம்பர்

மதிப்பும் மரியாதையும் பெருகும். சொல்லுக்கு மதிப்பு உண்டு. செயலுக்குஊக்கம் உண்டு. மனம் சந்தோஷமாக இருக்கும். சிற்றின்பக் கேளிக்கைகள்குறைவின்றி இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆண்-பெண்களுக்கு திருமணம் கைகூடும் காலம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள்நடைபெறும். பணவரவு நல்லமுறையில் செயல்படும். கொடுக்கல்- வாங்கலை சற்றுத்தள்ளிப் போடுவது நல்லது. மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள்கிடைக்கும். மற்றும் சிலருக்கு வேலைவாய்ப்புக்கான தபால்களும் கிடைக்கும்.

அக்டோபர்

வீடு, நிலம் போன்றவற்றில் இருந்த பிரச்சினைகள் மாறி சுமூகமான தீர்வுகிடைக்கும். புதிய நிலம் வாங்கும் யோசனையும் செயல்படும். வண்டி வாகனம்வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை யுடன் செயல்படுவது நல்லது. வாகன விபத்துபோன்றவற்றை சந்திக்க நேரலாம். உத்தியோகஸ்தர்கள் நல்ல திருப்பங்களைச்சந்திக்கலாம். மேலதிகாரியின் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்ல முறையில்காணப்படும். மேலும் நல்ல முயற்சி செய்து பதவி உயர்வு அல்லது இடமாற்றம்ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்ல முறையில்செயல்படும்.

நவம்பர்

உள்ளத்தில் மகிழ்ச்சியும் உதட்டில் புன்னகையும் உற்சாகமும் நிறைந்துகாணப்படுவீர்கள். சண்டை சச்சரவு எல்லா வீடு களிலும்தான் உள்ளது. அதற்காகஎல்லா நேரங்களிலும் அப்படி இருக்க முடியுமா? நீங்கள் சமர்த்தர்தான்.நேரத்திற்கு ஏற்றபடி தக்கபடி மாறிக் கொள்ளுவீர்கள். வழக்கு விவகாரங்களில்சற்று சாதகமான தீர்ப்புகள்தான் வழங்கப்படும் என்றாலும் முடிவு தாமதமாகும்.போட்டி பந்தயங்களிலும் வெற்றியையும் லாபத் தையும் அடையலாம். நண்பர்கள்வகையில் சிறு மனச் சங்க டங்களும் மனஸ்தாபங்களும் ஏற்படும்; கவனம்.

டிசம்பர்

கடந்த கால அனுபவங்களாக இருந்து வந்த நண்பர்களின் மனக்கசப்பும்மனச்சங்கடங்களும் மாறி நட்புறவு மீண்டும் மலரும். நண்பர்களால் ஆதாயமும்உதவியும் கிட்டும். நண்பர் களின் மூலமாக ஒரு சில முக்கிய பிரமுகர்களின்தொடர்பு ஏற்படுவ தோடு அதனால் நல்ல மாற்றமும் ஏற்படும். தொழிலாளர்களுக்குஎதிர்பார்த்த ஊதியம் கிடைக்கும். எனினும் வேலைப்பளு அதிக மாக இருக்கும்காரணத்தால், உடல் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். சரியான தூக்கமின்மைகாரணமாக அஜீரணக் கோளாறு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை கொண்டு மருத்துவரைநாடுவது நல்லது. 

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com