Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

துலாம் : 2012 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

| Dec 2, 2011
சித்திரை - 3 , 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் முதல் மூன்று பாதங்களில் பிறந்த துலாம் ராசி நேயர்களே : 

ஜனவரி

இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்தே காணப்படும். மாமியார்- மருமகள்சச்சரவுக்கிடையே நீங்கள் மாட்டிக்கொண்டு விழிப்பீர்கள். தாய் சொல்வதைக்கேட்பதா அல்லது மனைவி சொல் வதைக் கேட்பதா என்ற குழப்ப நிலை நிலவும்.இருவரது பேச்சிலும் நியாயம் தெரிந்தாலும் யார் பக்கம் பேசுவது என்றுநீங்கள் குழம்பு வீர்கள். வீட்டில் உள்ள பிரச்சினையால் வெளியில்தொழிலையும் சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். கூட்டுக் குடித்தனம்இருப்பதா? அல்லது தனிக் குடித்தனம் போவதா என்ற கேள்விக்குறி யான நிலைஉருவாகும். தனியாகப் போவதற்கு வசதி வாய்ப்புகள் பற்றாத சூழ்நிலை.மொத்தத்தில் மௌனத்தை அதிகம் கடைப்பிடிப் பது நல்லது.

பிப்ரவரி

கடந்த மாத அனுபவம் ஒரு நல்ல திருப்பமாக இருக்கும். புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கலாம். அதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் உருவாகும்.தொழிலுக்கான வெளியூர் பயணங்களும் நன்மை தரும். பொருளாதாரப்பற்றாக்குறையும் நீங்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, அந்நியோன்யம் அதிகரிக்கும். மாமியார்-மருமகள் இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறி ஒருமித்த கருத்துகள்தோன்றும். சேர்ந்து இருப்பதா அல்லது தனியாகச் செல்வதா என்ற குழப்பத்திற்குஒரு முடிவு பிறக்கும். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பதைக்கருத்தில் கொள்ளவும்.

மார்ச்

திருமணமாகியும் நல்லதொரு நிலையான வருமானம் இல்லையே என்றுபுலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நல்ல காலம் தொடங்கும். தந்தையின்பொருளாதாரத்தையும் வருமானத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தஇளைஞர்களுக்கு, தனியாகத் தன் சொந்தக்காலில் நிற்கும் வாய்ப்புகள்உருவாகும். தனது சம்பாத்தியத்தில் இனி தாய்- தந்தையரை நல்ல முறையில்கவனித்துக் கொள்ளலாம். பூமி, வீடு, வாகன யோகம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் புதிய நண்பர் களின் கூட்டணி வெற்றியைத் தரும். பங்குதாரர்களைஅனுசரித்து நடந்துகொண்டால் கூட்டு முயற்சி நல்ல முறையில் முன்னேற்றம்தரும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். மனமகிழ்ச்சி உண்டாகும்.

ஏப்ரல்

இளைய சகோதரர் வகையில் நல்லதொரு தகவல் கிடைக்கும். சகாய உதவிகளும்உண்டாகும். திருமணமாகாத இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் திருமண வாய்ப்புகூடிவரும். திருமணமான வர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.உடல்நலனில் ஆரோக்கியம் தென்படும். இதுவரை இருந்து வந்த இடைஞ்சல்களும்இன்னல்களும் மாறி மகிழ்ச்சியும் குதூகலமும் பிறக்கும். விக்ருதிவருடப்பிறப்பு நல்ல ஒரு இனிய புத்தாண்டாக அமையும். பிள்ளைகள் வகையில்நன்மையும் நன்மதிப்பும் உருவாகும். நின்றுபோன கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தேறும்.

மே

அதிக செலவினங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். எது அவசியம் மற்றும்அநாவசியம் என்று பிரித்து செலவு செய்வது நலம் மற்றவர்களின்முன்பகட்டுக்காகச் செய்யும் செலவுகளைத் தவிர்த்தல் நலம். ஒரு சிலர் தொலைதூரப்பயணங்களை மேற்கொள்வர். மற்றும் சிலர் அயல்நாடுகளுக்குப் போகவும்சந்தர்ப்பம் கிடைக்கும். எது நடப்பினும் சற்று திடச்சித்தத்துடன்பிரச்சினைகளை எதிர்நோக்கிச் செய்வது நல்லது. பணவரவு நல்ல முறையில்அமையும். கொடுக்கல்- வாங்கல் சற்று சுமாரான முறையில் இயங்கும்.உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ஜூன்

வீடு, நிலம் போன்றவை நல்ல முறையில் அமையும். சில பிரச்சி னைகளின் பொருட்டுஅலைச்சலும் அநாவசிய தொந்தரவுகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றிவாய்ப்பு உண்டு. வழக்கு, விவகாரங்களில் சற்று நிதானம் தேவை. விவகாரங்கள்கட்டுக்கடங்கிக் காணப்படுவதுபோல் இருந்தாலும் அது உண்மை அல்ல. வண்டி,வாகனம் வைத்திருப்போருக்கு அதன் பழுது பார்க்கும் செலவுகள் அதிகமாகவேகாணப்படும். புதிய வாகன முயற்சிகளை சற்று தள்ளிப் போட்டு, இருப்பதை வைத்துநிறைவு செய்வதே நலம். ஏஜென்ட் மற்றும் காண்ட்ராக்டர்களுக்கு முக்கியஒப்பந்தம் கையெழுத்தாகும்.

ஜூலை

கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்கும். கருத்து ஒற்றுமை காணப்படும்.மனைவியின் பொருட்டு உங்களின் பணம் செலவு ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது முன்னேற்றமான மாதமாக அமையும். இதுவரைவராத பதவி உயர்வு இப்போது வருவதற்கு வழியுண்டு. மேலதிகாரிகளிடம் சற்றுநல்ல விதமாக நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு மந்தமான நிலையும்வியாபாரத்தில் தேக்கமும் காணப்படுகிறது. சில நாட்களுக்கு இது நீடிக்கும்;நிரந்தரமல்ல. உறவினர் வகையில் சிறிது ஏமாற்றமும் செலவும் ஏற்படவாய்ப்புண்டு.

ஆகஸ்ட்

எதிர்காலத் திட்டங்கள் இனிமையாக ஆரம்பம் ஆகும் நேரமிது. கடின உழைப்புதேவை. நிச்சய வெற்றி உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது. குடும்பத்தில் அதிகசெலவினங்கள் ஏற்பட்டாலும் அது சமாளிக்கும் வகையில் அமையும். ஒரு சிலருக்குஅந்தச் செலவு மருத் துவச் செலவாக அமையும். சிலருக்குத் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளின் செலவாக அமையும். யாருக்கு எந்தச் செலவு என்பதுஅவரவர் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து நடைபெறும். வண்டி வாகன வகையில் சற்றுதிருப்திகரமான நிலை உள்ளது.

செப்டம்பர்

சுயமரியாதையும் கௌரவமும் நன்றாக உள்ளது. உங்களை இகழ்ந்தவர்கள்கூட உங்களைஇப்போது புகழ ஆரம்பிப்பார்கள். உங்கள் சொல்லுக்கு அதிக மதிப்பும்மரியாதையும் உண்டாகும். உங்க ளின் நீண்டகாலத் திட்டங்களும் வாழ்க்கைக்குத்தேவையான வசதி வாய்ப்புகளும் உருவாகத் தொடங்கும். உங்கள் கூடவே இருந்துஉங்க ளுக்கு ஜால்ரா அடித்தவர்களும், உங்களை குழியில் தள்ளப்பார்த்தவர்களும் இனி தானாகப் பிரிந்து சென்றுவிடுவர். பணவரவும் நல்லமுறையில் அமையும். கொடுக்கல்- வாங்கல், ஸ்பெகுலேஷன்துறை ஆகியவை சிறப்புடன்நடைபெறும்.

அக்டோபர்

மணமகிழ்ச்சியான வாரம். சிறு பயணங்களும் கேளிக்கை, பொழுதுபோக்குபோன்றவையும் மலிந்து கிடக்கும் மாதம். பெண் களிடத்தில் உங்களுக்கு அதிகமதிப்பு உண்டாகும். இருப்பினும் அவர் களிடத்தில் சற்று கவனமுடன் இருக்கவேண்டும். கடன் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும். நண்பர்களுக்காக சிலபிரச்சினைகளில் தலையிட்டு சிரமத்தின் பேரில் சமாளிக்கப்படும். நீங்கள்எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் தக்க சமயத்தில் உங்கள் கைக்கு வந்துசேரும். உறவினர்களின் மூலம் மனக்கஷ்டம் வரும். வீடு, நிலம் போன்றவற்றில்எந்தக் குறையும் வராது.

நவம்பர்

சகோதர சகோதரிகளால் நன்மையும் ஆதாயமும் உண்டு. அலுவல் நிமித்தமாக தொலைதூரப்பயண அலைச்சல்கள் உருவாகும். ஆயினும் அவை நல்ல பலன்களைத் தரும். வீடு,நிலம் போன்றவை நலனைத் தரும். வண்டி வாகனம் வைத்திருப்போர் பழைய வாகனத்தைமாற்றி புதிய வாகனத்தை வாங்கலாம். சிலர் கார் அல்லது வேனை வாங்கி டூரிஸ்ட்இயக்கத்திற்கு செயல்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்குமத்திமமான பலனைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அதிக பொறுப்புகளும்வேலை பளுவும் காணப்படும். மேலதிகாரிகளிடம் சற்று ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவும்.

டிசம்பர்

இந்த மாதம் பணவரவு நன்றாக இருப்பதால், அதன் மூலம் ஏற்கெனவே இருந்து வந்தசிறுசிறு தொந்தரவுகளை நீக்கி விடலாம். போதுமான பணவசதியும் பெரியோர்களின்ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் உண்டு. சுயகௌரவமும் மரியாதையும்காப்பாற்றப்படும். பெண்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பணவிஷயமாகயாருக்கும் வாக்குறுதி ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம். குடும்பத்தில்செலவுகள் காணப்பட்டாலும் அது அவசியமான செலவுகளாகத்தான் அமையும். பிள்ளைகள்வகையில் நன்மையும் ஏற்படும். அவர்களின் கல்வி நல்ல முறையில் அமையும்

 

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com