Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2012 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

| Dec 2, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். இதோ புது வருடம் பிறக்கவிருக்கிறது. பிறக்கும் புது வருடம் எப்படி இருக்கும் என்று தெரிவதில் நம் அனைவருக்குமே ஒரு எதிர் பார்ப்பு ஏற்படுவது நியாயம்.  எங்களுக்கு வந்த பல நண்பர்களின்  கோரிக்கையை ஏற்று - இந்த வருடம் எப்படி இருக்கும் என்பதை ராசி வாரியாக தனிக் கட்டுரைகளாக கொடுக்க விருக்கிறோம்...

வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். நமது கட்டுரைகள் என்று இல்லை, நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் பிரபல் ஜோதிடர்கள் கணிக்கும் அனைத்து ராசி பலன்களுமே , பொதுப் பலன்கள் தான். அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்ப , பலன்கள் , முன்னே பின்னே மாறுபடும்....

இப்படியே , எல்லா பேரும் ஒரு சால்ஜாப்பு சொல்லிட்டு , நழுவிடுறாங்கன்னு தோணுதா... இல்லைங்க , அது தான் உண்மை....

இது எல்லாம் நமக்கும் தெரிந்து இருந்தும்... நாமும் கண்ணில் படும் ராசி பலன்களை எல்லாம் , படிக்காமலும் ஒதுக்குவது இல்லை. மனித மனத்துக்கு , அப்படி ஒரு இயல்பு. எப்போதாவது ஒன்றிரண்டு பலன்கள் , நமக்கு நடந்து விட்டால், அதன் பிறகு - நாம் அந்த இதழை தவறாது பார்க்க தொடக்கி விடுகிறோம். இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த மாதிரி தான்.

என்னுடைய வேண்டுகோள், நீங்கள் ராசி பலன்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு நல்ல ஜோதிடரிடம் - உங்கள் ஜாதகத்தை கொண்டு சென்று , உங்கள் ஜாதக நிலைக்கேற்ப என்னென்ன பலா பலன்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுதல் நலம்...


உங்கள் தாய் , தந்தையரை வணங்கி, குல தெய்வத்தை நித்தம் தவறாது நினைத்து , உங்கள் செயல்களை செய்து வாருங்கள். தினமும் ஆலயம் செல்ல முடியாவிட்டாலும், வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். மாதம் ஒருமுறை - உங்கள் நடப்பு தசா , புக்தி நாதனுக்கு உரிய தெய்வத்தை வணங்கி வாருங்கள்..

நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாளும் தெரிந்த தலைவனடா - என்கின்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப , முறையான தெய்வ வழிபாடும், தகுந்த சில பரிகாரங்களும் - உங்களுக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை , விரைவாகவும் - உரிய நேரத்திலும் கிடைக்க செய்யும்.

கிடைக்க விருக்கும் தீய பலன்களை , அதன் வீரியத்தைக் குறைத்து நீங்கள் தாங்கும் அளவுக்கு , உங்களை உருவாக்கும்....... நமது முந்தைய சில கட்டுரைகளில் நான் தெளிவாக இவற்றை விளக்கி இருக்கிறேன்...

வாய்ப்பு கிடைக்கும்போது - அண்ணாமலை கிரிவலம், சதுரகிரி மகாலிங்க தரிசனம்  , அருகில் இருக்கும்  ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை- பத்திரகாளி தரிசனம் - போன்ற தெய்வங்களின் அபரிமித ஆற்றல்கள் வெளிப்படும் ஆலயங்களுக்கு - உங்களால் முடிந்த வரை சென்று , உங்கள் நலன்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்க தொடங்குங்கள்.

மொத்தத்தில் - இந்த வருடம் - நம் ஒவ்வொருவருக்குமே , நலமாக , வளமாக அமைய - இறைவனை பிரார்த்திக்கிறேன்...

இந்த வருட பொதுப் பலன்களை ராசி வாரியாக, தனி தனிக் கட்டுரைகளாக இணைத்துள்ளோம் .... திரும்பவும் நினைவுறுத்துகிறேன்... இவை யாவும் பொதுப் பலன்களே....

இறைவருள் நம் அனைவரையும் என்றும் துணை புரிந்து காக்கட்டும்.. !


வாழ்க அறமுடன், வளர்க அருளுடன் !

2 comments:

arul said...

nice

siva said...

ஓம் சிவ சிவ ஓம்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com