Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென சங்கே முழங்கு.!

| Nov 30, 2011

சமயங்களில் நம்மில் பலருக்கும், சில கேள்விகள் எழலாம். எனக்கு தோன்றிய சில எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். உங்களுக்கு அவற்றுள் சில உபயோகப்படலாம்.

சின்ன வயசுல இருந்தே , என்னோட நட்பு வட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லா சேட்டையும் செய்வோம். அதே நேரம், ஒரு குழுவா திரட்டி கோவில் குளம் சுத்தம் செய்யறது, மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் போய் அங்கு பஜன் பாடுறது, அவங்க கிட்ட ஆதரவா பேசுறது  மாதிரி  கொஞ்சம் நல்ல காரியமும் செய்வோம். வித்தியாசமா சிந்திக்கவும் செய்வோம். அந்த குழுவில் மூன்று நல்ல , நெருங்கிய நண்பர்கள் எனக்கு உண்டு - இருபது வருடங்களை கடந்தும் ஆழமாக வேர் விட்டு ஓடும் நட்பு அது. பேர் ராசியோ , என்னவோ - ஆரம்பத்தில இருந்தே நம்மளை குரு ஸ்தானத்துல வைச்சிட்டாங்க.


இன்று பார்க்க விருப்பவை , என் நட்பு வட்டாரத்தில் இருந்து என்னிடம் கேட்கப் பட்ட கேள்விகள். பகுத்தறிவு சிந்தனை தூண்டுவது போல இருந்தாலும், வெட்டிப் பேச்சாக இல்லாமல் , விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகள் ஆதலால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை , அவர்களுக்கு நான் பதில் கூறி இருக்கிறேன். 

நம் வாசகர்கள் பலருக்கும் இதைப் போன்ற சிந்தனைகள் எழுந்து இருக்கக் கூடும். நான் ஒரு கத்துக் குட்டி. உங்களில் சிலருக்கு இன்னும் தெளிவான சிந்தனைகள் எழலாம். இந்த கட்டுரை படிக்கும் ஒவ்வொருவரும், சிரமம் பார்க்காது - உங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் , நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.நமது வாசகர்களுக்கும் பயன் கிடைக்கும். சரி, இனி சப்ஜெக்ட்க்கு வருவோம்..

கடவுள் நம்பிக்கை என்கிற எண்ணம், நம் மனதில் வித்திட்டது யார்? நம் தந்தை, தாய், முன்னோர்கள் என்று வைத்துக் கொண்டால், முதன் முதலில் அந்த எண்ணம் நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கு எப்படி வந்து இருக்க கூடும்? 

காலம் காலமாக , விஷ்ணு இப்படித் தான் இருப்பார், சிவலிங்கம் இப்படித் தான் இருக்க வேண்டும், சிவபெருமான் இப்படித் தான் இருப்பார். முருகர், விநாயகர் , அம்மன் , சரஸ்வதி எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று - புராணங்கள் , வேதங்கள் கூறிய அடிப்படையில் நாம் அப்படியே படங்களிலும், கோவில் சிலைகளிலும் உள்ளவற்றை பார்க்கிறோம். நம்புகிறோம். இதை இப்படியே நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமா? 

இறைவன் எங்கும் இருப்பான் எனில் , அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ளவர்களுக்கு சிவனைப் பற்றி தெரிந்து இருக்க நியாயமில்லையே. அவர்கள் வேறு தெய்வத்தை அல்லவா வணங்குகிறார்கள். அப்படியானால் சிவன் அவர்களை கவனிப்பது இல்லையா? நாங்கள் வணங்கும் முனியாண்டியைப் பற்றி , எங்கள் பக்கத்து வீட்டுக் காரனுக்கு கூட தெரியாது...... யாரு அவரு? அவரை ஏன் நாங்க கும்பிடனும்? நம்ம மதத்தில மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்..? 

கோவிலுக்கு போனா , ஏன் வலம் வர்றோம்..? நீ கிரிவலம் இத்தனை தடவை போறயே..? அது எதுக்கு..? சாமி மட்டும் கும்பிட்டு வந்தா போதாதா? ஏன், இங்கே இருந்தே கும்பிட்டுக் கிட்டா போதாதா? 

நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா?

ஜோதிடம் - மேல் நாட்டில் பிறந்த யார் ஜாதகத்தை ஆராய்கிறார்கள்? அவர்களுக்கு யார் , இந்த பரிகாரத்தை செய் என்று அறிவுறுத்துகிறார்கள்? அவர்கள் நன்றாகத் தானே இருக்கிறார்கள்....

இது மாதிரி இன்னும் பல கேள்விகள் இருக்கு... இப்போதைக்கு இந்த கேள்விகளை மட்டும் பார்க்கலாம்... 


இந்து மதத்தை யார் தோற்றுவித்தார்கள் என்றே நமக்கு இன்னும் தெரியாது. மார் தட்டிக் கொள்ளலாம். உலகின் பழமையான ஒரு மதம். அவ்வளவு புராதனம். பல பல ஆயிரம் வருடங்களாக , சில நம்பிக்கை - பரம்பரை பரம்பரையாக நமக்கு சொல்லப் பட்டு வந்து இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இன்னும் போகிறோம். புராணங்கள் வெறும் கதைகள் என்று நினைத்தால் அது கதை தான். ஆனால், அவை உண்மை என்று நினைத்தால்..... (அட.. சூப்பரா இருக்குமே ?


சொர்க்கம் , நரகம் என்று இருப்பது உண்மை என்று நம்மில் சிலர் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் நம்புவதே இல்லை. நம்பினால் , நாம் தவறு செய்யத் துணிய மாட்டோமே...


தேவர்கள் சொர்க்கத்தில் இருக்கின்றனர். தேவர்களும் தொழும் மும்மூர்த்திகள்  இருக்கின்றனர். ரிஷிகள், சித்தர்கள் அவர்களை எல்லாம் , தரிசித்து இருப்பதாக புராணங்கள், செவி வழிச் செய்திகள் , காலம் காலமாக நமக்கு போதிக்கப் பட்டு வரும் நம்பிக்கைகள் கூறுகின்றன...


அவை எல்லாம் , உண்மையாக இருக்குமா? என்கிற கேள்வி , இந்த விஞ்ஞான உலகில் வருவது இயல்பு தான். நமக்கு இவை எல்லாம் , ஒரு பக்காவான டுபாக்கூர் மேட்டராத்தான் தெரியும். நாம் தான் இதை எல்லாம் நம்புவதே இல்லையே... 


அடி மனதில், ஆழ் மனதில் நமக்கு இந்த எண்ணம் தான் வருகிறது. எதையும் நாம் அனுபவித்து உணர்ந்து கொண்டால் ஒழிய, நம் மனது நம்புவதே இல்லை.


சிகரெட் பிடிப்பதால் புற்று நோய் வரும். குடித்தால் - லிவர் , கிட்னி போயிடும் என்று படித்து படித்து கூறினாலும், அதை நாம் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை. (நம்புவதில்லையோ?)


எவ்வளவு பிரார்த்தனை பண்ணினாலும் நமக்கு கடவுள் கண் திறப்பது இல்லை என்று ஒரே ஒரு முறை தோன்றினாலும், உடனே கடவுளை நம்புவதை நிறுத்தி விடுகிறோம்..... இது நியாயமா?   


நம் தமிழ் மொழி எவ்வளவு புராதனமானது என்று , இதுவரை உறுதியாக கூற முடியவில்லை. எத்தனை மகான்கள், புண்ணிய புருஷர்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எத்தனையோ பேர் இறைவனை தரிசித்து, அந்த ஆவணங்கள் நமக்கு கிடைத்தும், இன்னும் இறைவன் இருக்கிறானா என்கிற ஊசல் ஆட்டத்தில் தான் நமது மனது இருக்கிறது.


பாம்பன் சுவாமிகளோ, ராமலிங்க அடிகளாரோ , ராமகிருஷ்ண பரமஹம்சரோ - முருக தரிசனம் பெற்றதோ, காளி தரிசனம் பெற்றதையோ   பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. நம் முன்னோர்களில் யாரோ ஒருவருக்கு, அந்த கால கட்டத்தில் பலருக்கு இறைவன் சிவனாகவோ, விஷ்ணுவாகவோ , முருகனாகவோ, விநாயகராகவோ - பல ரூபங்களில் காட்சி அளித்து இருக்க கூடும். அந்த நம்பிக்கை வாழையடி வாழையாக  அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து இருக்க கூடும்.


(இந்த கட்டுரையின் முடிவில் - கீழே ஒரு சுவாரஸ்யமான உண்மை தகவல் ஒன்றை இணைத்துள்ளேன்.... ஒரு முறை அதையும் படித்து விட்டு , மனதில் அசை போடுங்கள்.... என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்....)


எத்தனையோ வருடங்களாக , கோடிக் கணக்கில் மகான்களின் மந்திர அதிர்வுகளை உள்ளடக்கிய - ஆலயங்கள் நம் தமிழ் நாட்டிலும் , இந்தியாவிலும் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயமும், ஒவ்வொரு சூட்சுமத்தை உள்ளடக்கி , பலன்களை உள்ளடக்கியது. நமக்கு ஆனால், இன்னும் 50 :50  நம்பிக்கையும், ஒரு வித க்யூரியாசிட்டியும் தான் இருக்கிறது.நான் சொல்வது தீவிர நம்பிக்கை உள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்களுக்கே.


நம்மில் உள்ள ஒரே குறை என்ன தெரியுமா? பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராதனமும், பெருமையும் இருப்பதால் - மிகுந்த மெத்தனமும், அஜாக்கிரதையுமாக இருந்து விடுகிறோம்....    


சரி, வெளி நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் எப்படி? அவர்களுக்கு ஜோதிடம், ஜாதகம் - கடவுள் நம்பிக்கை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே...


அங்கும் பல வருடங்களுக்கு முன்பு , பல கலாச்சாரங்களுக்கு முன்பு - நம் வழிபாடு முறை போன்றே இருந்து இருக்க கூடும்... ஜப்பானிலும், இந்தோனேசியா விலும், இந்தோ சீனா பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான புராதன சிலைகள் நம் இந்து மத கடவுள்களின் உருவத்தை ஒத்து இருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.


நமது மதம் பெரியதா, உலக முழுவதும் பரவி இருந்த ஒன்றா என்பது இங்கு கேள்வி இல்லை. நமக்கு தேவை இல்லாத விஷயம். ஏதோ ஒரு காரணத்தால், நான் எத்தியோப்பியாவில் பிறந்து இருந்தால், இஸ்லாமையோ அல்லது வேறு எதோ ஒரு மதத்தையோ தழுவி இருந்து இருப்பேன். இந்து மதம் என்ற ஒன்று இருப்பது கூட தெரிந்து இருக்காது.


உலகத்தில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், அவர்கள் வெளி நாட்டவராக இருந்தாலும், அவர்களும் கிரக பலன்களால் ஆட்படுவர் என்பது ஜோதிட விதி. யார் , யாருக்கு என்ன தலை எழுத்து என்பது பிறக்கும்போதே விதிக்கப் பட்டு விட்ட ஒன்று தான். நமது உடலில் உள்ள நவ சக்கரங்களின் மூலம் நவ கிரகங்களும் நம்மை இயக்கி - நம் பூர்வ புண்ணிய பலன்களை கிடைக்க செய்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரம்.


அதது அப்போதே அளக்கப்பட்டு விட்டது என்று இருக்கும்போது , வழிபாடும், பரிகாரமும் - இயற்கைக்கு முரணா என்று நினைக்கவும் தோன்றுகிறது. வழிபாடும் , பரிகாரங்களும் - நமக்கு பாதகமான நேரங்களில் தீய பலன்களால் நமக்கு பாதிப்பு குறைவாக ஏற்படவும், நல்ல நேரங்களில் நமக்கு கிடைக்க விருக்கும் நற்பலன்களை உரிய நேரத்தில் கிடைக்க செய்யவும் தான். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் கூறியபடி - ஜாதகம் மூன்றில் ஒரு பங்கு, நம் சுய எண்ணம் செயல்கள் ஒரு பங்கு , வாழும் வீடு, சூழல் - ஒரு பங்கு - இவை மூன்றும் தான் ஒருவரின் வாழ்க்கையின் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கின்றன.


நம் பூர்வ புண்ணிய கர்மாக்கள் நம் பிறப்பை தீர்மானித்தாலும், நாம் இப்போது செய்யும் நற்செயல்கள் - நமக்கும், நம் சந்ததிக்கும் நல் வழி காட்டும்.
அயல் நாடுகளில் பிறப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். கஷ்டப்பட்டு உழைச்சு , IIT  , IIM னு நல்ல படிப்பு படிச்சு - கை நிறைய சம்பளம் வாங்கி , இல்லை நல்ல பிசினஸ் பண்ணி - நல்ல நிலைக்கு , சொத்து , தோட்டம் தொறவுனு - நீங்கபண்ற எல்லாமே  - கிரகங்களாவது , கட்டமாவது.... உங்க சுய முயற்ச்சின்னு வைச்சுப்போமே, ஒரு பேச்சுக்கு...  

அந்த மாதிரி ஒரு நல்ல படிப்பு, வசதி , நற்பண்பு உள்ள ஒருவருக்கு - ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைச்சுப்போம்..... இவர் அடிச்ச குட்டிக் கரணம் எதுவும் இல்லாம straight ஆ - அதுக்கு எல்லா வசதியும் கிடைக்குதா, அது பூர்வ ஜென்ம புண்ணியம்...

நம்மளை விடுங்க, நம்ம புள்ளைகளுக்கு - பூர்வ ஜென்ம புண்ணியம் நிறைய இருக்கணுமா? வேண்டாமா? நாமளும் நம்ம திறமைய வளர்க்கணும் இல்லையா? நல்ல செயல்கள் செய்ய, நல்ல சம்பாதிக்கணும் இல்லையா? நம்ம பசங்களுக்கு பெஸ்ட் எஜுகேசன் , வசதிகள் செஞ்சு கொடுக்கணும் இல்லையா? முயற்சி செய்வோம்... நம்ம கர்ம வினை இடம் கொடுத்தா, நம்ம புள்ளைய ஒழுங்கா வளர்த்தா...  அவனுக்கே புள்ளையா , நாம கூட திரும்ப பொறக்கலாம்... நாமே திரும்ப , நம்ம வசதிகளை அனுபவிக்கலாம்... நம்மை குழந்தைகளாக வளர்த்த , நம் பெற்றோர்களை நாம் குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம்... எந்த அளவுக்கு நம்மை அவர்கள் கவனித்து இருக்க கூடும்...


நெஞ்சைக் கீறும் இளைய ராஜாவின் இந்த பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன...
பொன்னைப் போல ஆத்தா , என்னைப் பெத்துப் போட்டா...
என்னைப் பெத்தா ஆத்தா , கண்ணீரைத் தான் பார்த்தா.....!

ஒரு குழந்தையாய் நம் கடமையை , குடும்பத் தலைவனாய் நம் கடமையையும் செய்தால் போதும்... குடும்பம் என்கிற அமைப்பு கட்டுக் கோப்பாக இருக்கும்...

சரி, வெளிநாட்டுக் காரங்க - நம்ம அளவுக்கு கடவுள் என்னும் நம்பிக்கை இல்லாதவங்க, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்...?

இது எனக்கு கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது.
நம்மில் பக்குவமடைந்த யாரையேனும் கேட்டுப் பாருங்கள். அவருக்கு எது முக்கியம்? மனசாட்சியுள்ள எவரும் சொல்வது, என் குழந்தைகள்... என் குடும்பம்... அவங்க நலனுக்கு அப்புறம் என் நலம். அதன் பிறகு சமூகம்.


மேலை நாடுகளில் அப்படியா? குடும்பம் என்கிற அமைப்பு சீர் குலைந்து இருக்கிறது.

நன்றாக இருப்பது என்றால்.... நினைத்த நேரத்தில் குடி, புகை, கறி, மீன்.... நினைத்த பெண்களோடு சுற்றுவது,நோ பாமிலி பாண்டிங் ,  கை நிறைய கிரெடிட் கார்ட் .... இது தான் அவர்கள் வாழ்க்கை. அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் குடும்ப அமைப்பை பார்த்து பொறாமைப் படுகிறார்கள். ஒரு சாதாரண குடும்பம் (என நம் பார்வையில் உள்ள)  சேமிக்கும் திறனை பார்த்து வியந்து நிற்கிறார்கள். நமது கோவில்களையும், யோகா தியான முறைகளையும் பார்த்து , நாம் இங்கு பிறக்க வில்லையே என ஏங்குகிறார்கள். 


மிக கேவலமான சுகாதார வசதிகள் இருந்தும், நம் உடம்புக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பார்த்து மிரள்கிறார்கள்.
இரண்டு விஷயங்களில் தான் நாம் பின் தங்கி இருக்கிறோம். ஒன்று சுத்தம், சுகாதாரம். இரண்டு - அரசியல் ஊழல். பெயருக்கு மட்டுமே ஜனநாயகம். சரி, அதை விடுங்கள்...


ஆனால் , நாம் அவர்களை பார்த்து அவர்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். மியாமி பீச்ல பொண்ணுங்க எல்லாம் துணியே இல்லாம இருக்கிறதை, ஆட்டம் போடுறதை, பார்க்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். நம்ம தங்கச்சி, வீட்டுக்கார அம்மணி அந்த மாதிரி ஆட்டம் போட்டு , மத்தவங்க பார்த்தா - தாங்க முடியும்னு நினைக்கிறீங்க..?

அவர்கள் பெண்களுடன் சல்லாபிப்பது நமக்கு உள்ளூர அவர்கள் மேல் பொறாமைப் பட வைக்கிறது. சரி, நாமளும் பண்ணுவோம்... நாம நல்ல இருக்கிறதா ஆகிடுமா? வெளியில் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் நமக்கு வீட்டுல மனைவி, அம்மா, குழந்தைகளும் இருக்கணும்.. நாம அதிகாரம் பண்ணனும் இல்லை. அவங்க பாசம் நமக்கு வேணும் இல்லை? ஐயா.. சரி... ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமானு வீட்டுக்கார அம்மணியும் நினைச்சுட்டா.. நினைக்கவே சகிக்கலை இல்லையா... இது தான் அங்கே நடக்குது... சர்வ சாதாரணமா .... மூணு , நாலு டிவோர்ஸ் .  


Honey, See there.... How Sweet....!
My children and your children are playing with our children....


அர்த்தம் புரியுதா... " ஏ கண்ணு அங்கே பாரேன் .. உன் புள்ளைகளும், என் புள்ளைகளும் நம்ம புள்ளைகளோட விளையாடுராக...ஒரே மஜாவா கீது இல்லே? " அவரோட இப்போதைய மனைவி கூட பேசுறாரு..


உருகி உருகி அன்பு பொழிஞ்சு குடும்பம் நடத்திப் புட்டு - பிரிஞ்சுடுவோம்னு சொன்னா , நல்லாவா இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நமக்கும் இந்த தொற்று வியாதி வந்து தொலைச்சு இருக்கு. 

கடைசியா இளநீர், பதநீர், பனை நுங்கு  எப்ப சாப்பிட்டு இருப்போம்? குடும்பத்தோட ஒரு ரெண்டு நாள் ஒரு பிக்னிக் - கடற்கரை, கன்னியாகுமரி , குற்றாலம் எப்போ போயிருப்போம்..  யோசிச்சுப் பாருங்க..! ஆனா, ஒரு நாள் கையில காசு கம்மி,  சரக்கு அடிக்கலைன்னா... ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிக்கும் மனசு...! மறுநாள் எப்படியாவது காசு ரெடி பண்ணி, ஒரு கட்டிங் உள்ளே போனாத்தான் நிம்மதி அடையும்...  


ஆனா, "இந்த மாசம் சீட்டுக்கு காசு கட்டவே என்ன பாடு பட்டோம்னு தெரியும்ல ... இந்த லீவுக்கு நாம எங்கேயும் போகப் போறது இல்லை.. சும்மா கிடங்கடா" ன்னு பசங்களுக்கு , ஊட்டு அம்மணிக்கு  ஈசியா சமாதானம் சொல்ல மனசு உடனே தயாராகுது.. ...

சரி, நான் வுட்டா பேசிக்கிட்டேத் தான் போவேன்...  மேட்டருக்கு  வாரேன்..
உலகத்துல உள்ள எல்லாரையும் விட, நிம்மதியா - உயிர் பயம் இல்லாம , தலை தலைமுறையா , சோத்தோட  பாசத்தையும் தின்னு வளர்ற நம்மளை விட --- வேற எல்லாப் பயலுகளும் ஏழைகள் தான்...பாவம் தான்...!

அடுத்து....


குரு, கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான்.  


நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்..  அவனுக்கு சிரிப்பு அடக்க முடியலை.. என்னடா? எப்படி பீல் பண்றேன்னு கேட்டேன்.. இப்போ தெரியுதா.. நான் உன்னை சுத்துறப்போ , நீ வேற எல்லாத்தையும் விட்டுட்டு , எந்த நினைப்பும் இல்லாம , என்னை மட்டும் தானே பார்த்தே...  அந்த மாதிரி, அந்த இறைவனோட கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சி, அவரை வலம் வருவது. அவர் நம்மளை பார்த்தாப் போதுமே, அடுத்து நாம பேசுறது எல்லாம் அவருக்கு கேட்கும். நமக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்... இல்லையா? 


நாம் இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை கும்பிடலாம், தவறில்லை. கோவிலுக்கு போகணுமா அவசியம்? அண்ணாமலை கிரிவலம் , குல தெய்வம் -  ஆகியவை பற்றி நான் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன். பழைய கட்டுரைகளை ரெபர் செய்து கொண்டால் தன்யனாவேன். கட்டுரையும் ஏற்கனவே நீண்டுக் கிட்டே  போகுது.. திரும்பவும் பிளேடு போடணுமா? 


கதிர்களை ஈர்த்து , கும்பம் வழியாக கருவறை சேர்த்து , நீங்கள் மூலவரை  வணங்கும்போது உங்கள் நாடி சக்கரங்களின் சுழற்சியை சரி செய்ய ஆலயங்கள் நம் முன்னோர்கள் அளித்த பெரிய வரப் பிரசாதம்.. 


உங்க வீட்டுக்கு பால்காரர் பால் கொண்டு வர்றாருன்னு வைச்சுப்போம். அவர் வர்ற நேரத்தில தான் வருவாரு. எனக்கு உடனே வேணும் கொஞ்சம் அவசரம் ... ஐயா, வீட்டுல திடீர்னு கொஞ்சம் விருந்தாளிக வந்துட்டாக, பால் காரர் கம்மியாத் தான் தருவாரு, வழக்கம்போல தான் எடுத்து வருவாரு... என்ன பண்றோம்..? உடனே ஓடுறோம்ல பால் பூத்துக்கு... இல்லை பால் பண்ணைக்கு...  


அந்த மாதிரி , நமக்கு சில விஷயங்கள் சீக்கிரம் வேணும்னா, நாம கோவில்களுக்கு போய் தான் ஆகணும்.. உங்களோட மன பாரம் இறங்க , மன நிம்மதி கிடைக்க ஆலயங்கள் , நமக்கு கிடைத்து இருக்கும் அருட் கொடைகள்..


சரி, இன்னைக்கு இவ்வளோ போதும்... நிச்சயமா குட்டையை குழப்பி விட்டு இருப்பேன் என நம்புகிறேன். தெளிவான விளக்கங்கள் இல்லை எனினும் , உங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்து இருக்கும்.. நான் சொன்னா கேட்கவா போறீக..  நீங்களே யோசிச்சு உங்க மனசு என்ன சொல்லுதுன்னு கேட்டு பாருங்க... அது சொல்றதை , நீங்க நிச்சயம் நம்புவீங்க...! அப்புறம் கீழே ஒரு குட்டிக் கட்டுரை, படிச்சுப் பாருங்க... 
அவசியம் மறக்காமல் , உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் இடுங்கள்....
போதும் முடிச்சுக்கலாம்... என்னது ... இன்னொரு கேள்வி இருக்கா? அட ஆமா இல்லை... ரொம்ப உஷாரா இருக்கிறீங்க....


நீ கடவுளை பார்த்து இருக்கிறாயா? அந்த கேள்வி தானே....!


'அன்பே சிவம்' கமல் மாதிரி சொல்லப் போறது இல்லை.. ரொம்ப கிரிஸ்டல் கிளியரா சொல்றேன் ...... YES . ஆனா, இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.. நீங்களே தரிசிக்கும் வரை , நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை... ஆனாலும், உண்மையான தேடல் ஒரு நாள் உங்களை பக்குவப் படுத்தும்...அதனால் தான் அப்பழுக்கற்ற நம்பிக்கையில் சொல்கிறேன்... உங்கள் அனைவரின் துக்கங்களும் கரைய, லட்சியங்கள் நிறைவேற , இறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்... அவனைப் பற்றிக் கொள்ளுங்கள்...  


இன்னும் சிந்திப்போம்.....!


வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்...!

===============================================
முனைவர் S .ஜெயபாரதி  ஐயா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை கீழே தந்து இருக்கிறேன். வேடிக்கையான அதே சமயம் சுவாரஸ்யமான கட்டுரை.தென் பஸி·பிக் மாக்கடலிலுள்ள தீவொன்றின் ஆதிவாசிகள்
ஜான்·ப்ரம் தேவனின் படத்துடன்
 

தெற்கு பசிபிக் மாக்கடலின் ஒரு கோடியில் ஒரு சிறிய தீவு இருக்கிறது.     அந்தத் தீவு எந்தவொரு கப்பல்பாதையையும் விட்டு விலகியே இருக்கிறது. விமானங்கள் அந்தப் பக்கத்தில்கூட பறப்பது கிடையாது. அங்கு அந்தத் தீவின் ஆதிவாசிகளான மெலனீசியர்கள் இருக்கின்றனர்.1930-ஆம் ஆண்டு அந்தத் தீவுக்கு ஒரு அமெரிக்கர்  தனியாக விமானமொன்றை இயக்கிக்கொண்டு வந்தார்.

அவருடைய பெயர் ஜான் ·ப்ரம். அந்தத் தீவின் பழங்குடியினரை ஆராய்வதற்காகத்தான் அவர் அங்கு வர நேரிட்டது.சில காலம் அவர்களோடு இருந்தார். மிகவும் அன்பாக இருந்தார்; மருந்துகள்கொடுத்து பிணிகளைப் போக்கினார்; புதியவகைத் தின்பண்டங்களைக் கொடுத்தார்.திரும்பிச் செல்லும்போது அவருடைய புகைப் படத்தையும் கொடுத்து பல பொருள்களைஅவர்களுடன் அங்கேயே விட்டுச் சென்றார்.

அவரை ஒரு தேவனாக அந்த ஆதிவாசிகள் கருதினர்.1942 ஆண்டில் இரண்டாம் உலக யுத்தத்தின் உச்ச கட்டத்தில் ஜப்பானிய சாம்ராஜ்யம் பசிபிக் தீவுகளிலும் பரவியது. அங்கிருந்து ஜப்பானியர் அமெரிக்காவை எட்டிப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக பசிபிக் மாக்கடலின் பல தீவுகளில் இராணுவத் தளங்களை அமெரிக்கர்கள் ஏற்படுத்தினர்.அந்தக் குட்டித்தீவுக்கும் இராணுவம் வந்திறங்கியது. அந்தப் போர்வீரர்களிடமிருந்த பலவகையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் ரேடியோவையும் ஜீப்பு வண்டியையும் கண்டு ஆதிவாசிகள் வியந்தனர்.

விமானங்கள் ஆகாயத்திலிருந்து  இறங்கிவந்தன. பெரும்பெரும் கப்பல்கள்  வந்து அணைந்தன. அவற்றின் உள்ளிருந்து உணவும், மருந்தும், மனிதர்களும்,  ஜீப்புகளும்,   ஆயுதங்களும் வருவதைக் கண்டார்கள். இவற்றையெல்லாம் தேவலோகத்திலிருந்து  ஜான் ·ப்ரம் தேவனே  அனுப்பியிருப்பதாக அவர்கள் மனப்பூர்வமாக நம்பினர்.

அமெரிக்காவை தேவலோகமென்று எண்ணினர். அந்தத் தீவினரின் ஆதரவைப் பெறவேண்டி, அமெரிக்க இராணுவத்தினர்  அவர்களின் அந்த நம்பிக்கைகளை ஆழமாக வலுப்படுத்தினர்.விரைவில் யுத்தம் முடிந்தது.  "வாராது வந்த தேவன் விண்ணிலிருந்து வந்தான் காண்; வந்ததுபோல் போயினான் காண்", என்று எங்கோ எப்போதோ புதுமைப் பித்தன் எழுதியதுபோல இராணுவம் அந்தத் தீவை விட்டு நீங்கிச் சென்றது.

ஜான் ·ப்ரம் தேவன் மீண்டும் வருவார் என்று பழங்குடியினர் முழுமையாக நம்பினர்.அதன் பின்னர் தோன்றிய இரண்டு தலைமுறைகளில் அவர்களின் அந்த நம்பிக்கை மேலும் ஆழமாகியது.ஜான் ·ப்ரமைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டார்கள். 

ஒவ்வொருஆண்டும் திருவிழாக்களைக் கொண்டாடினர். அப்போது விமானத்தைப் போன்றும் கப்பலைப் போன்றும் மூங்கிலாலும் இலை தழைகளாலும் செய்து வைத்துக் கொண்டு பூஜை செய்து சாமியாடுவார்கள். ஜான் ·ப்ரம் மீண்டும் வரும்போது மலைகளெல்லாம் இடிந்து, பொடிப்பொடியாகி நதிகளில் வீழ்ந்துவிடுமாம். நிலமெல்லாம் பசுமையாகிவிடுமாம். மக்களெல்லாம் சுபிட்சமாகயிருப்பார்களாம். இப்படியாக அந்தப் பழங்குடி மக்கள் நம்பி வருகின்றனர்.

இவ்வாறு  வேறு சில இடங்களிலும் நடந்திருக்கிறது. பாப்புவா/நியூ கினீ தீவின் சில  ஆதிவாசிகளிடையேயும் இதே போன்ற காரணங்களால் இதே போன்ற நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன. இந்த மாதிரியான நம்பிக்கை/வழிபாட்டை "Cargo Cults" என்று கூறுவார்கள். ஜான் ·ப்ரமின் புகைப்படத்தை அந்தத் தீவின் ஆதிவாசிகள் பயபக்தியுடனும் அன்புடனும் பார்த்துக்கொண்டிருப்பதை மேலே காணும் படம் காட்டுகிறது.'கார்கோ கல்ட்' பற்றிய சித்தாந்தம் ஒன்று இருக்கிறது.

இவற்றின் அடிப்படையில் நம் சிந்தனையைத் திருப்பிப்பார்க்க வேண்டும்.நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கிற சில வர்ணனைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது நமக்கே பல விஷயங்களை "ஏன் அப்படியெல்லாம் இருக்க கூடாது?" என்று ஆய்ந்து பார்க்கத்தோன்றும்.

நன்றி. டாக்டர். ஜெய பாரதி 

20 comments:

arul said...

thanks for a nice post that gives some belief to people. if there is any temple for curing dyslexia and kidney problems please publish it.

KANNAN said...

Excellent sir. You are differentiate foreigners family with our indian family. Story about the god believe really superb.

நாதன் said...

தங்களின் இப்பதிவு பலரையும் சிந்திக்க வைத்திருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கடைசியாக நீங்கள் கொடுத்துள்ள கதை பலரையும் குழப்பிவிடும் என்று நம்புகிறேன். கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம். நான் இங்கு மீன் என்று கூறுவது ஆன்மீகத்தை.

redfort said...

Vannakkam sir,

very good for your question and anwsers.

Enna seyya manasu onna nambuthu athe samayam putthi kurukku kelvi kekkuthu? Putthi ya suruttikittu sarvamum avan sittham appadinnu iruthalum palapona putthi kekka mattangithe sir?
YES Kadavulai thedum pothu than manasukkum putthikkum ore thagararaga irukke ? Ithai eppadi kattuppadutthuvathu?

Regards,Sengo,tirupur.

redfort said...

Ayya,

28/nov Post innru than vasiyhen.
Athenna athirshi seithi matturum arasiyal koothu?

Sengo

murugan said...

Did you know ...? hello saint vallalar already told our puranam is imagine.

ponga poooi vallalar pattri fullaaa
padinga. vallalar is a real saint

Elavarasu said...

ulagathil ulla ellaraiyum vida nimathiya uier payam illama thalai murai thalaimuraiya sothoda pasathaiyum thinu valarntha nammalai vida vera ella payalugalum ealaikalthan pavamthan arumaiyana pathivu mikka nantrikal

Rishi said...

நன்றி ... பின்னூட்டம் இட்ட நமது நண்பர்கள் அனைவருக்கும்.. அருள் சார், நாதன் சார் , செங்கோ சார்., கண்ணன் சார், முருகன் சார்...எல்லோருக்கும்... செங்கோ சார் , உங்களை அண்ணாமலையில் சந்திக்க முடிஞ்சது ரொம்ப சந்தோசம். நல்லதொரு நட்புக்கு அடித்தளம்.. முருகன் சார் , ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு... வள்ளலார் புராணம் எல்லாம் உண்மைன்னு சொன்னதா நான் சொல்லலை.. கடவுளை கண்டவர்களில் ஒருவர் என்றே சொல்லி இருக்கிறேன். அவர் கண்ணாடியில் கந்த பெருமானைக் கண்டு இருக்கிறார்.. ஜோதி ரூப இறைவனைக் கண்டு , ஜோதி மயமாகிய மகான் அவர். நான்லாம் பச்சப் புள்ளை சார், நீங்களா நான் பெரிய ஆளு நினைச்சுக் கிட்டு இருக்காதீங்க... வள்ளலாரை இன்னும் தெரிந்து கொள்ள , நானும் ஆவலாகத் தான் இருக்கிறேன்...சிரமம் பாராது, நீங்கள் தெரிவித்த உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

redfort said...

Ayya,

Ethu eppadiyo nan vanthathu muthal KIRI VALAM is very special. Because Kubera kiri valam mattrum GURU Vudan kiri valam. ELLAM ESAN ARUL.


Nanri nanri.Sengo.

Rishi said...

நன்றி இளவரசு சார்..!
நன்றி செங்கோ சார்..! நிஜமாக ஒரு இனிய அனுபவம். உலகமே குளிர்ந்து கொண்டு இருந்த வேளையில் , அருணாச்சலத்தின் தகதகப்பை கிரகித்துக் கொண்டு , கொஞ்சம் கூட குளிர் தெரியாமல் , மினு மினுக்கும் நட்சத்திரங்களோடும், நல்லதொரு நண்பர்கள் குழுவோடும், மனம் முழுக்க ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்துக் கொண்டு , பரவசமான ஒரு அனுபவத்தை அளித்தது , அண்ணாமலையாரின் அருள்...

Anonymous said...

Thank you sir, its a very nice essay, but question about your friends and your answer is different, am not understand, you differentiate the foreign culture and Indian culture its very nice.

purple said...

Thanks sir u have answered many questions which i have in myself for many years. Iam following u r blog for the past 2yrs. waiting for ur new post is being mear pleasure to me. Iam an devotee to agasthiar. I have felt him being with me in many of the circumfrances in my life.Though I don't know u in person I like u r views and thougths. Icouldn't come to girivalam but i was praying from my home. I do pray to God that I should get a chance to meet u in future. May the divine blessings shower on us.

vivek said...

sir,nanri.

vivek said...

naan alaiththu sellappatukiren,

vivek said...

naanum kadavulai parththirukkiren,

murugan said...

soory rishi i never hurt you neenga vallalar.org poi vallalar perupathesam padichi paarunga. naanum atharkku piraguthaan kadavulai patri oru thelivukku vanthen. pls perupathesam padinga thelivu perunga. Ungal aaanmeega thedal sariyana vazhiyil sella padinga.
regards
your......?

murugan said...

hello innum oru ragasiyam. namma bhagavad geetha oru kadavul thiyanathin muzhu vilakkam. thirutharastirar enbathu yaar theriyuma....? yosithu paarungal. thuriyothanan namathu udalil yaar theriyumaaa...? arjunan namathu udalil yaar theriyumaaa...? krishnan namathu udalil yaaar theriyumaaa...? yosiyungal rishi......?

M. Padmapriya said...

வணக்கம்
தங்களது பதிவுகளை படித்து வருகின்றேன். அனைத்தும் பயனுள்ள விஷயங்கள் . அந்த இறை சக்தி முக்கியமான தருணங்களில் நம்மை நமது தந்தையைப் போல காப்பாற்றுவதை உணர்ந்திருக்கின்றேன்.
ஆதி சித்தர் அந்த சிவனும், முருகன், கணபதி ஆகியோரும் மக்களுடன் கலந்து வாழ்ந்த சித்தர்கள் தான் என ஒரு கருத்தும் உள்ளது . ஆனால் நீங்கள் இணைத்துள்ள அந்த கட்டுரையை - அமெரிக்கரை வணங்கும் பழங்குடியினர் - நமது தொன்மையான இந்து மதத்திற்கு, நமது கடவுளர்க்கு இணையாக கருத முடியுமா?
M. Padmapriya

Rishi said...

நன்றி திரு விவேக். நன்றி பத்மப்ரியா மேடம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

பிரியா மேடம், நான் கொடுத்துள்ள கட்டுரை, நம்பிக்கை அந்த பழங்குடி மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை சுட்டிக் காட்ட மட்டுமே. நமக்கும் அது போல நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. இங்கே மனிதன். நமக்கு கடவுள். கடவுளை தரிசித்து, அவரை நேரில் கண்டவர்கள் சொல்லக் கேட்டு, அதன் மூலம் வழி வழியாக வந்து இருக்க கூடும் என்கிற என் ஊகத்திற்காக. இவ்வளவு வெளிப்படையாக கூறாதது, வாசகர்கள் இதைப் படித்து அவர்கள் மனது என்ன கூறுகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக..

rasican said...

very powerfully talk

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com