Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மயக்கமா , கலக்கமா - மனதிலே குழப்பமா...?

| Nov 18, 2011


"வர வர உங்க பதிவுகள் எல்லாம் , உபதேச மழையாத் தான் வருது. ஆனா, அதனாலே என்ன பிரயோஜனம் , உங்க பதிவு எல்லாம் பார்த்திட்டு யாராவது மாறுவாங்கன்னு நினைக்கிறீங்களா?"..ன்னு , என்னோட நெருங்கிய நண்பர் ஒருவர் கேட்டார்.

உண்மையிலேயே நியாயமான கேள்வி. அவருக்கு நான் ஒன்னுமே பதில் சொல்லலை. வழக்கம் போல ஒரு புன்முறுவல்.
எனக்கு மட்டும் தெரியாதா என்ன?  " விதைகளை தூவுகிறேன் .... .. விருட்சங்கள் வளரலாம் என்கிற நம்பிக்கையில்..... " உபதேசம்னு இதை ஏன் எடுத்துக்கணும்? கற்றதும் , கேட்டதும்,  என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். எடுத்துக் கொள்வதும் , உதாசீனப் படுத்துவதும் - அவரவர் கைகளில்தான் இருக்கிறது. திருந்தவே மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களை , யாரும் ஒன்றும் செய்ய இயலாது.  மனித மனம் ரொம்ப விசித்திரமானது. தெரிஞ்சவங்க யாராவது சொன்னா , முதல்ல வர்ற எண்ணம் "நீ சொல்லி நான் என்ன கேட்கிறது?"... இதுதான் .

இதுவே , ஏதாவது புத்தகத்திலேயோ, இல்லை ஏதாவது பொது நிகழ்ச்சியிலோ, டி.வி யிலோ  - பொதுவாக , ஒருத்தரைப் பற்றி மட்டும் குறிப்பிடாத சில நல்ல விஷயங்களை , மனது கேட்டுக் கொள்கிறது... இது  கூட ஒரு சிலருக்குத்தான்.   முகத்தைப் பார்த்து , நேருக்கு நேர் சொல்லும்போது , உள்ளுக்குள்ளே இருக்கிற ஈகோ , ரொம்ப காயப் படுவதா , நாம உணர்றோம்...

சரி, சொல்லித் திருந்த வேண்டாம்.. சுயமா சிந்திச்சு திருந்த முடியுதா...? ம்ஹூம்.. தப்பு செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் , அதில் முழுக்க ஊறி , இன்பம் என்று நினைத்து திளைத்து , அப்புறம் அடி வாங்கி, அலறி , அதுக்கு அப்புறம் தான் புத்திக்கு உறைக்கும்... சரி, அதுக்கு அப்புறமாவது ஒழுங்கா இருப்போமா..? ...

நீங்க வேற.. அது எல்லாம் கொஞ்சம் நாளைக்குத் தான்... இது எல்லாம் விழுப்புண்னு பெருமைப் படுற ரேஞ்சுக்கு , மனம் அடுத்த அனுபவத்துக்கு , அதாவது தப்பு செய்றதுக்கு , உங்களை தயார் செய்யும்.
முன்னே கிடைச்ச அனுபவம், இந்த தடவை - இன்னும் கொஞ்சம் கெத்தா , இன்னும் கவனமா , அதே தப்பை செஞ்சுக்கிட்டு இருக்க வைக்கும்... திரும்ப இன்னும் பலமான அடி... திரும்ப கொஞ்ச நாளைக்கு ஞானோதயம் ....


"விஜய் மல்லையா பாருய்யா... என்னமா அனுபவிக்கிறார் .. மச்சம் டா மாப்ளே.. எப்பப் பாரு , லட்டு லட்டா பொண்ணுங்க கூட இருக்கிறாங்க... உலகத்திலேயே பெஸ்ட் ஷாம்பெய்ன் எப்போவும் கையிலேயே வைச்சு இருக்காரு, முகத்திலே பார்த்தா எப்போவுமே சிரிப்பு.... அவர் பையனைப் பாரு.... அவன் மூஞ்சியைப் பார்த்தா , எங்க ஊர்ல இருக்கிற கேவலமான அட்டு பிகருகூட , ரிஜெக்ட் பண்ணிடும்... ஆனா பாரு, தீபிகாவே அவன் கூட சுத்துது.. எல்லாம் காசு மாப்ளே.. ...காசுதான் முக்கியம்...".

இது தமிழ் நாட்டுலே போன IPL சீசனப்போ , பஸ்சுலே வர்றப்போ, பள்ளிக் கூடப் பசங்க பேசிக்கிட்டு வந்த வார்த்தை...  மெட்ராஸ் சிட்டி பசங்கனு நினைச்சிக்கிடப் போறீங்க ...


குப்பத்தாம்பட்டி கிராமத்துப் பசங்க... தம்பி , என்ன படிக்கிறேன்னு கேட்டேன். எட்டாவது அங்கிள் ... " தீபிகா"   தெரியுமா ..?  அவங்க தான் தமிழ்ல இன்னும் நடிக்கலையே.. எங்கே தெரியப் போகுதுன்னு நினைச்சா...  பசங்க அவங்க அப்பா ஷட்டில் சாம்பியன் படுகோனே  பத்தி எல்லாம் தெரிஞ்சு வைச்சு இருக்கிறாங்க... எல்லாம் நெட் உபயம்..!

ஆனா, இந்த மாதிரி ரெண்டுங் கெட்டான் வயசுல - பசங்க நெட்ல நல்ல விஷயம் மட்டும் தான் தெரிஞ்சுக்குவாங்கன்னு நினைக்கிறீங்களா ....

நீங்களே , தனியா யோசிச்சுப் பாருங்க... நல்ல விஷயம்னு நமக்கு தெரிஞ்ச எந்த விஷயத்தை , நாம ஒத்துக்கிட்டு இருந்து இருக்கோம்... அதே கெட்ட விஷயங்கள்.... தம் அடிக்கிறது, தண்ணி அடிக்கிறது, பலான படங்கள் பார்க்கிறது , இன்டர்நெட்டே  கதின்னு கிடக்கிறது ,  .... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உடனுக்குடனே , பழகிடுவோம்... இதை எல்லாம் விட்டு வெளியே வர்றதுக்குத் தான் , பகீரதப் பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்கும்...

இதுவே நல்ல விஷயங்கள் னு எடுத்துக் கிட்டா --- அதை நடைமுறைப் படுத்திறதுக்கு , பகீரதப் பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்கும்... உடற் பயிற்சி , மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா..... ம்ம்ம்ம் , மூச்சு விடக் கூடாது , நல்லா சம்பாதிச்சோமா, நல்லா அனுபவிக்கனும்.... இது தான் உங்க மனசு , உங்களுக்கு கொடுக்கிற கமான்ட்.. அப்படியே அதுக்கு சரண்டர் ஆகிடுவோம்...

நம்மளை சுத்தி , யாராவது வாழ்க்கையா நல்ல அனுபவிக்கிறான்யா ன்னு , நம்ம மனசுக்கு தோணுச்சுன்னா.. அவர் புட்டி , குட்டின்னு ஜாலியா இருக்கிறார்னு அர்த்தம். தானுண்டு , தன் வேலையுண்டுன்னு இருந்தா அவரு பொழைக்கத் தெரியாத மனுஷன்..  இது தான் ஒரு அளவுகோல்...

ஒரு பேச்சுக்கு , இல்லைன்னு நீங்க சொன்னாலும், அடிமனசுல  சின்ன வயசுல இருந்தே, செய்யாதேன்னு சொன்ன விஷயங்கள் எல்லாமே , எப்போவாவது வாழ்க்கையில ஒரு தடவையாவது என்னன்னு பார்க்கனும்னு தோணுது.

இப்போ எல்லாம், ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாவித கெட்டப் பழக்கங்களையும் சில பசங்க செய்ய ஆரம்பிக்கிறாங்க. பெற்றவர்கள் பணத்தை அள்ளி இறைக்கிறதும், பாசம் மட்டுமே வைச்சு, அவங்க நல்ல விஷயங்களில் அக்கறை காட்டாததும் இதற்கு முக்கிய காரணம்.

பசங்களை விடுங்க... பெரியவங்க..? ஒவ்வொரு நாளும் பேப்பரைப் பார்த்தா , கள்ளத் தொடர்பு - வெட்டிக் கொலை, ஆயுள் தண்டனை... இப்படித் தான் பாதிப் பக்கங்கள். இது எல்லாம் தெரிஞ்சும் இந்த நிலைமை மாறுதா..... நாளுக்கு நாள் இந்த நிலைமை பெருகத்தானே செய்யுது.

ஏன்.. இந்த நிலைமை? பொறுமையின்மை. குடும்பத்தில சின்ன சின்ன சச்சரவு வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியாத பக்குவமின்மை, இயல்பாகவே தப்பு செய்யத் தூண்டுகிற நம் உள் மன எண்ணம் இப்படிப் பல காரணங்கள்...
ஒரு பொண்ணு கண்ணுக்கு அழகா இருந்தா , அதுவும் கண்ணீர் விட்டுக் கிட்டு  ஒரு உதவி கேட்டா.. உயிரையே கொடுக்க தயாராகி விட ஒரு கூட்டமே இருக்குது.

அமைதி, திருப்தி இல்லாமல் சஞ்சலத்தோடு இருக்கும் ஆண் / பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மேற்கத்திய கலாச்சாரம் , லிவிங் டுகெதர் , டைவர்ஸ் எல்லாம் சாதாரணமாகிக் கொண்டு வருகிறது.
பொறி வைத்து , திட்டம் போட்டு காலி செய்து விட ஒரு பெரிய குரூப்பே இருக்கிறது. சிக்கிக் கொண்டால் , அனுபவிப்பது  - நீங்கள் செய்த புண்ணியம் என்று தொடக்கத்தில் தோன்றலாம். ஆனால், உங்களின் பூர்வ ஜென்ம ஒட்டு மொத்த பாவத்திற்கு தண்டனையை அளிக்க  இறைவன் தயாராகி விட்டான் என்று அர்த்தம்.

அது ஐஸ்வர்யா ராயாகவே இருந்தாலும், அடுத்தவர் மனைவி எனில் - ஏக்கப் பெரு மூச்சு , ஓரப் பார்வை , கள்ளத் தனமான எண்ணங்கள் வேண்டாம்.  கல்யாணம் ஆகாதவரா, இன்னும் கவனமுடன் இருங்கள்.. உங்கள் குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் கட்டிக் காத்த நல்ல பெயரை காப்பாற்றி ஆக வேண்டும். இறைவன் உங்களுக்கு பொருத்தமான துணையை ஏற்கனவே அனுப்பி இருக்கிறான். முடிந்தவரை , உங்கள் பெற்றோர் மனம் கோணாது, அவர்கள் ஆசியுடன் மணம் புரியுங்கள்..  


கொஞ்ச, நஞ்ச சபலம் இருந்தாலும், விழித்துக் கொண்டு உஷாராகுங்கள்.

எப்பேர்ப் பட்ட மனிதனும், பெண்ணாசை , பொன்னாசையை கடந்து வருவது - சர்வ சாதாரணம் அல்ல..! ஜென்ம ஜென்மத்திற்கும் நிம்மதியான வாழ்வு வேண்டுமெனில் , உங்கள் மனதை பலமுடன் வைத்து இருங்கள்...

அதற்க்கு என்ன செய்யலாம்...?
 
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்?

கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது.

அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து பாவங்களால் பெறும் துன்பத்தின் அளவைக் குறைத்துக் கொள்வது தான் இப்பிறவியின் குறிக்கோள். அதனால், இனி பாவம் செய்யாமலும், இதுவரை செய்ததற்கு தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொள்வதுமே துன்பம் தொடராமல் இருக்க ஒரே வழி.

எந்த தெய்வத்தை வணங்கலாம் , என்று மனம் அடுத்து கேள்வி கேட்கும்...

பள்ளிக் குழந்தைகள் ஆரம்பநிலையில் எல்லாப் பாடங்களையும் படிப்பர். மேல்நிலைக்குச் செல்லும்போது அவரவர் விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதைப் போலவே, ஆன்மிக வாழ்வின் ஆரம்பத்தில் ஒரு பக்தர் பல தெய்வங்களையும் வழிபடுகிறார். காலம் செல்லச்செல்ல ஒரு இஷ்டதெய்வத்தை வணங்க ஆரம்பித்து விடுகிறார். இவ்வாறு ஒரே தெய்வத்தை வழிபடுவதால், இறைவழிபாட்டில் மனம் எளிதில் லயித்து விடும். தியானம் கைகூடும். இஷ்ட தெய்வ மூலமந்திரத்தை ஜெபித்து வந்தால் எண்ணிய செயல்கள் விரைவில் நிறைவேறும். விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், திருமால், காளி என்று எந்த தெய்வத்தை வேண்டு மானாலும் தேர்ந்தெடுத்து பூஜித்து வாழ்வில் வளம் பெறுங்கள்.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS7u2SoRQsnELF-GqXWSwV5lZa6eNiyj4ICx4U4dHWAGOxvp4E8xA
இறைவழிபாடு எல்லாமே அடிப்படை பாடங்கள் தான். எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள், நம் உள்ளும் உறைந்து இருப்பதை உணரும் வரை தான். இறைவனை அடைய , அவனை தரிசிக்க பல வழிகள் இருந்தாலும், தியானம் அவற்றில் முக்கியமான ஒரு வழி.

சுவாமி சின்மயானந்தா அவர்கள் தியானம் ஏன் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே என்ன கூறுகிறார் பாருங்கள்  :  

ஒரு மனிதனின் கவுரவம், புத்திப்பூர்வமான நம்பிக்கைகளுக்கு ஏற்ப எப்போதும் வாழ்வதில் தான் இருக்கிறது. நம்முடைய நூல்களின் புனித விஷயங்களை புரிந்து கொண்டு, அதனை முதலில் பின்பற்றி நடந்து கொள்வதுடன், அதன் தத்துவத்தை பிறருக்கு எடுத்துரைக்க அர்ப்பணித்துக் கொள்வதே ஒவ்வொருவரின் தலையாய கடமை. மனித மனத்தினால் உருவமற்ற கடவுளை நினைக்க முடியாது, அதனால் தான் அவருக்கு ஓர் உருவம் கொடுத்து நாம் அந்தக் கடவுளை வழிபடுகிறோம். கடவுள் புத்தியினால் அறியப்படுகிற பொருளல்ல, கடவுள் அனைவரிடத்திலும் இருக்கின்ற உயிர்த் தத்துவமாகும். எண்ணங்கள் உற்பத்தியாகும் வேகத்தை நமது பிடிக்குள் கொண்டு வந்து, அவை செல்லும் திசையை விரும்பியபடி திருப்பும் ஆற்றல் பெற்றால் தான் நாம் முழுமையான மனிதனாகி விட்டதாகப் பெருமை கொள்ளலாம்.

மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்கும் மனிதரிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் பிரகாசமாய் இருக்கும். இந்த உணர்வு எவருக்கு உச்சத்தை அடைகிறதோ, அவர்களே மகானாகவும், தீர்க்கதரிசியாவும் மாறுகின்றனர். தினமும் சிறிது நேரம் காலையிலும், மாலையிலும் அமர்ந்து தியானம் செய்தால், அது படிப்பில் அக்கறை செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தும். பணம் கிடைக்கும் போது சேமித்து வைத்தால் தான், தேவைப்படும் போது எடுக்க முடியும். அதுபோல், நம் அன்றாடக் கணக்கில் தியானத்தையும் சேர்த்து வைத்தால், மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமென்று நினைக்கும் சமயத்தில் அது சேமிப்பு பணம் போல் உதவும், வாழ்க்கையும் சீர்படும்.

வேதம் நம்மைப் பற்றிய அறிவை நமக்கே தருவதாகும். நாம் இருக்கும் வரையில் வேதமும் இருக்கும், இந்த அறிவு அழிவில்லாததாகும். நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு செலுத்தி பழகலாம். ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுப்பது மட்டும் தானம் இல்லை. ஆண்டவன் நமக்கு எந்த செல்வத்தைக் கொடுக்கிறாரோ, அதை நல்ல முறையில் பயன்படுத்தி நல்லவராய் வாழ்ந்து நன்மைகளைப் பெற வேண்டும்.இறைவன் நம் மனமாகிய வீட்டிலிருந்து இயங்குகிறான். அவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவனது அருள் நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.

எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கங்களை நடுநிலையினின்று மதிப்பிடும் பழக்கம் தெய்வீக வாழ்க்கையின் முதல்படி. உண்மை பேசுபவனாக, நல்லவனாக, அனைவரையும் நேசிப்பவனாக, தன்னலமற்றவனாக, பெருந்தன்மையுள்ளவனாக, விட்டுக் கொடுப்பவனாக, இனிமையுள்ளவனாக, உற்சாகமுள்ளவனாக இருப்பதே ஒரு மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும். கடந்த பல பிறவிகளில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு தான் இந்தப்பிறவி. அதை வைத்துக் கொண்டு இதற்கு மேல் முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும். வந்த வழியையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.

அந்தரங்க குழப்பங்கள் மீது ஒருவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டை கொண்டு தான், ஒருவரின் வாழ்க்கை வெற்றியும், சந்தோஷமும் நிர்ணயிக்கப் படுகிறது. குளிர்காலத்தில் மனத்தைத் தண்டிக்க ஒரு கடுமையான முறை உள்ளது. விடியற்காலையில் தண்ணீரில் குளிப்பதே அந்த முறை. அறிவின் நம்பிக்கையிலும் உணர்ச்சியின் தரத்திலும் குணத்திலும் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு தான் மனித இனத்தின் பாகுபாடுகள் உருவாக்கப்படுகிறது.  ஒரு மனிதனின் எண்ணத்திற்கேற்ப உலக வாழ்க்கை அமையும்.

கறை படாத  , நிர்மலமான மனது நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். வாழ்க்கை போராட்டத்தில் , இறைவனையும் உங்கள் துணைக்கு வைத்துக் கொண்டு, அவன் அருளுடன் போராடத் தொடங்குங்கள்....

சந்தோசமும், நிம்மதியும் - நம் அனைவரின் குடும்பத்திலும் நிலவட்டும்...

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

13 comments:

viswanathan said...

I am visiting recently to your blog
It is nice and very informative. I will try to follow.
I feel there should be some person to steer our life in a correct path. Any advise in this behalf is to be observed.
S.Viswanathan

Kumar said...

God is present in all of our inner soul. How to realise this divine power. Yes, your blog is very precious to me and is reflecting what I gathered from some Gurus.

ரிஷி said...

அன்புள்ள நண்பரே,
இறைநம்பிக்கை என்பது ஒரு நம்பிக்கை மாத்திரமே! அதுவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக முடியாது. வீட்டில் டாய்லெட்டில் வாடை அதிகமாக வந்தால், அதை சுத்தம் செய்ய வேண்டும். குழாய்களில் உடைப்பு ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். செப்டிக் டேங்க் கிளீனிங் செய்ய வேண்டுமா எனப் பார்க்க வேண்டும். அதை விடுத்து, வீடு முழுவதும் செண்ட் அடித்துக் கொண்டு... ஆஹா! இப்போ வாடையே இல்லை என்று பெருமிதம் கொள்ளக் கூடாது.

இறை வழிபாடு என்பது வீட்டுக்கு செண்ட் அடிப்பது போல!

Rishi said...

இது நான் இல்லை. வாசகர் ஒருவர் , அவர் பெயரும் ரிஷி - அளித்திருக்கும் பின்னூட்டம். அவரோட நம்பிக்கையை சொல்லி இருக்காரு. வெறுமனே கடவுள் நம்பிக்கை பலன் அளிக்காது என்று கூறி இருக்கிறார். நான் இதற்க்கு என்னோட பல பதிவுகளில் என்னோட கருத்தை தெளிவாக கூறி இருக்கிறேன். அதனால் தனியாக விளக்கம் தர தேவை இல்லை என நினைக்கிறேன்...

தங்களின் மேலான கருத்துக்களை தெரிவித்த, ஒவ்வொரு நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றி...

siva said...

realy nice topic..

i follow your blog. most of time your advice show to me a good way

thank you/

im from srilanka.

geethalakshmisuresh said...

this topic is an excellent one but how many youngster will read this

ரிஷி said...

உங்கள் பெயரும் ரிஷி தானா!! நல்லது. நான் என் கருத்தைத்தான், உணர்வைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன். எல்லோரிடமும் விஷயங்களை அவதானிப்பதும், உணர்வதிலும் வேறுபாடு உண்டு. மைக்ரோ அளவிலான வேறுபாடும் வேறுபாடே!!

யாருக்கு எவ்வழி பிடிக்கிறதோ - அது பிறருக்கு தீங்கு இழைக்காதபட்சத்தில் - அவ்வழியில் சென்று கொண்டே இருக்கலாம். அவ்வளவுதான்! நன்றி.

ரிஷி said...

பின்வரும் கட்டுரையை வடித்ததும் அடியேன்தான்! ஒரு எட்டு வந்துவிட்டுச் செல்லுங்களேன் :-)

http://www.nilacharal.com/ocms/log/08170907.asp

Rishi said...

அடடா ... நிலாச்சாரலில் எழுதிவரும் ரிஷி தாங்கள் தானா? உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் பல பதிவுகளை நான் படித்து இருக்கிறேன்.. அவற்றில் ஒரு சில கருத்துக்களில் எனக்கு உடன் பாடு இல்லைதான். எனினும், இன்னும் நிறைய அனுபவங்களைப் பெறும் வரை, உங்களுக்கு அதில் உடன்பாடு வருவது இயலாத காரியம் தான். ஏன், தெளிவாக சிந்திக்கும் அனைவருக்கும் , அது அப்படியே.... உங்களின் சில படைப்புகளை, எனது நண்பர்கள் ஏற்கனவே , இந்த வலைப் பூவிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்....

சதுரகிரி யாத்திரை தொடர் நன்றாக வந்து இருந்தது.. வாழ்த்துக்கள்.. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்....நேரம் கிடைக்கும்போது , உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

மேலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திரு. சிவா , குமார், கீதா மேடம், விஸ்வநாதன் - ஆகிய அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றி...!

ரிஷி said...

சதுரகிரி யாத்திரைத் தொடர் மூலம் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பலரது மனம் திறந்த பின்னூட்டங்களும் என்னை வெகுவாக நெகிழ்வித்தன. எனது எழுத்தினால் எனக்குக் கிடைத்த ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம் கை நழுவியதால் ஏற்பட்ட மனத்தாங்கலினால் தற்போதைக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு, எழுதும் பலரை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் எழுத்தைத் தொடர்கிறேன்.

Rishi said...

Ok.. I will pray for your peace and better health. I will be one among eagerly expecting for your articles... Wish you a good luck...

kathirvelu said...

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் சமய மதம் சாதி,சாத்திரங்கள் மற்றும் பொய்யான தெய்வங்களின் பின்னணியில் தான் பின்பற்றி அவைகளின் வழிகாட்டுதலின் படி தான் வாழ்ந்து வருகிறோம் அதனால் அனைத்திலும் தோல்வியே அடைந்து வருகிறோம் அன்பு காதல் நட்பு அப்பா அம்மா சுற்றம் மக்கள்அரசியல் ஆன்மீகம் அணைத்தும் துன்பம் துயரம் அச்சம் பயம் நிறைந்ததாகவே உள்ளது இதற்கு என்ன காரணம் .

உண்மைக்கு புறம்பான பேசாத தெய்வங்களும் ,அதனை மக்களுக்கு அறிமுகப் படுத்திய,, வழிகாட்டிய, பொய்யான கற்பனை கதைகளானஆன்மீக நூல்க்களும்தான் என்பதை நாம் அறியாமல் இருந்தாலும்,இந்த உலகத்தை உண்டாக்கிய,உருவாக்கிய அருட்பெரும்ஜோதி என்னும் இயற்கை உண்மையான கடவுள் ஒரு மாபெரும் மாற்றத்தை 1874 ,ஆம் ஆண்டு ,திரு அருட் பிரகாச வள்ளலார் மூலமாகஅறிவித்து உள்ளார்

அந்த அறிவிப்பை அறிவின் மூலமாக சிந்தியுங்கள்!

இனிமேல் எல்லா உலகத்தும் சமரச சுத்த சன்மார்க்கம் ஒன்றே வழங்கும் .இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க உண்மை நெறியான பெருநெறி விரைவில் வழங்கும் அதன் மென்மேலும் வழங்கும்

பலவகைப் பட்ட மத பேதங்களும் .சமய பேதங்களும் சாத்திரப் பேதங்களும் ,சாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் .போய் சமரச சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் ஒன்றே விளங்கும் இது கடவுள் சம்மதம் .

இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய மத சாத்திரங்களில் வந்த்தாகச சொல்லுகின்ற பல வகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுள்,தேவர்,அடியார்,யோகி ,ஞானி,முதலானவர்களில் ஒருவரும் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லா தேவர்களும் ,எல்லா கடவுள்களும் .எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் எல்லா ஜோதிட வல்லுனர்களும் .எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் இருந்து ஒரு சிறிய அருளைப் பெற்று வாழ்ந்தவர்களாகும்.அவர்களை உண்மையான கடவுள்கள் என்று நம்பிக்கை வைத்து உலக மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் இனிமேலும் உங்களை அழிய விட மாட்டேன் என்று எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியிட்டு உள்ளார் .

மேலே கண்ட அறிவிப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வெளியிட்டு உள்ளார் .இப்போது நாம் வழிபட வேண்டிய உண்மைக கடவுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .அவர்தான் நேரடியாக உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து கொண்டு உண்மை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நாம் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் நேரடியாக கிடைக்கும் .

1874 ,ஆம் ஆண்டுக்கு பிறகு உலகம் எந்த எந்த மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் உண்மை விளங்கும்

ஜோதிடம் !

மாயா காலண்டர் மற்றும் ஜோதிடங்களில் ௨௦௧௨ ,ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடுவதாக மக்களை குழப்பி வருகிறார்கள் ,அந்த பொய்யான தகவல்களை உண்மை என்று நம்பி யாரும் கவலையோ ,குழப்போமோ அடைய வேண்டாம் .உலகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது .

மனிதனாக பிறந்த நாம் உண்மையை நம்ப வேண்டும் எந்த பொய்யான தகவல்களையும் நம்பக் கூடாது.

ஆதலால் பொய்யான சாத்திரங்களையும் . பேசாத பொய்யான உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை வழிபடாமல் ,எல்லா உயிர்களிலும் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் உண்மை தெய்வமான அருட்பெரும்ஜோதியை வழிபாடு செய்யுங்கள் அதுவே மனித வாழ்க்கையின் முக்கிய கடமையும் கட்டாயமுமாகும் .

உண்மைக கடவுள் பற்றி ஒருபாடல் !

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட் சாறும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்த்த் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தேயுய்வம் !

உண்மையை அறிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

ஆன்மீக உலகம் said...

உண்மையில் இந்த பதிவு ஒரு பொக்கிசம் சகோதரரே!.... விடிகாலையில் பணி வேலையில் குளிக்கும் பழக்கம் மாலை அணிந்த பின் தான் கிடைத்தது... கட்டுபாடாக இருக்க சரியான மாதத்தை தேர்ந்தெடுத்ததற்காக முன்னோர்களை பாராட்டியே ஆக வேண்டும்...
//கடந்த பல பிறவிகளில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு தான் இந்தப்பிறவி. அதை வைத்துக் கொண்டு இதற்கு மேல் முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும். வந்த வழியையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் செவிகொடுத்துக் கேட்டால், இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.//
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com