Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

" பூத் கபூத் ஹை த்தோ க்யூ தன் சஞ் ஹை ; பூத் சபூத் ஹை த்தோ பி க்யூ தன் சஞ் ஹை "

| Oct 29, 2011
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ61IQJQwpsEFawaQoBa_6BXJEifLXoiuPuKosm6nND-lbTYuP3
வாசக அன்பர்களுக்கு வணக்கம். ஒரு வாரமா , எந்த கட்டுரையும் எழுதாம இருந்ததுனால , கொஞ்சம் நிம்மதியா இருந்து இருப்பீங்க.... நிம்மதியை கலைக்கிறதுக்கு திரும்ப களத்துல இறங்குறோம்... வழக்கம்போல பொறுத்துக்கோங்க.. 

இன்னைக்கு ஒரு முக்கியமான சிவ ஆலயம் பற்றி பார்க்க விருக்கிறோம். நம் முன்னோர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, பெரிய பெரிய ஆலயங்களை ஏன் கட்டி இருக்கிறார்கள் என்கிற கேள்வி , நம் எல்லோருக்கும் எழும். மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு கல் சிலை, அதற்க்கு ஏன் இவ்வளவு அபிஷேகம், ஆராதனை.... எல்லோருமே கொஞ்சம் ஓவராக அலட்டிக் கொள்கிறோமோ, அந்த சிலை அவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், நம் கண் முன்னே வெறுமனே அநியாயம் மட்டுமே செய்து கொண்டு இருக்கிற, மகா கேவலமான ஆட்களை எல்லாம், இந்த தெய்வம் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது..?

இதோ, நம்ம ஊர் ( எந்த ஊருன்னு கேட்குறீங்களா.. அட எல்லா ஊர்லயும் தாங்க..) நகரசபை தலைவரைப் பாருங்க... கொஞ்ச வருஷம் முன்னாலே வரைக்கும் எப்படி இருந்த ஆளு...! அடுத்த வேளை சாப்பாடுக்கே காசு இல்லாம , கூச்சப் படாம நம்ம கிட்டேயே கை நீட்டுன ஆளு. அப்புறம் , அடிதடி , கட்டப் பஞ்சாயத்துன்னு பெரிய ஆளா ஆகிட்டாரு. அவரு வீட்டுக் காரி,  பாவம் ... கையெழுத்து கூட போடத் தெரியாது அந்த அம்மாக்கு. இன்னைக்குப் பார்த்தா, அந்த அம்மா கையிலே ஒரு ஹான்ட் பாக். அதுக்கு உள்ளே வெறும் ஆயிரம் ரூபாய் நோட்டு தான்.  அட என்ன தான்பா நடக்குது... !  புத்தம் புதுசா ஒரு டொயோட்டா போர்சூனா கார் தலைவரு வாங்கி இருக்காரு.... (இருபது லட்சமாமுல...!) அடுத்த தடவை , எவ்வளவு அமௌன்ட் சொன்னாலும் பரவா இல்லை, எம். எல். ஏ. சீட்டு வாங்கிடுவாராம்.

நம்ம பர்ஸைப் பாருங்க...ஒரு நூறு ரூபாய் அதுல எங்கேயாவது , நம்ம கண்ணுக்கு தெரியாம , தவறிப் போய் இருக்குமான்னு எத்தனை தடவை தேடி இருப்போம்..? என்னதுங்க.. பர்ஸ் வைச்சுக்கிடுறது இல்லையா, அட நீங்க நம்ம கேஸு.. எம்புட்டு அடி வாங்கினாலும் , உருப்படாத ஆளுங்க. நாம எல்லாம் ..!

பணத்தை பார்க்காதீங்க நண்பா! நம்ம மனசைப் பாருங்க..னு சொல்றீங்களா..! மனசை எல்லாம் யாரும் பார்க்கிறது இல்லை பாஸூ.. ! ஒரு உண்மையை தெரிஞ்சுக்கோங்க,... எல்லோரும் நம்மளை மாதிரி ஆசைப் படாம எல்லாம் இருக்க முடியாது. (ஆசைப் படாமலா ... நம்மளோட கையாலாகாத் தனம் அதுன்னு சொல்லுங்க). உங்க, அம்மாவாகட்டும், இல்லை உங்க மனைவி ஆகட்டும்.... இந்த கவுன்சிலர் , அல்லக் கைங்க மாதிரி எல்லாம் நீங்க ஆகணும்னு எதிர் பார்க்கிறது இல்லை. ஆனா, கிட்டத் தட்ட , உங்களை மாதிரியே இருக்கிற உங்க நண்பர்களோட கொஞ்சம் ஒப்பிட்டுத் தான் பார்க்கிறாங்க.. ! உங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு, உங்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி பேசலாம். ஆனா, ரொம்ப பகட்டுத் தனம் இல்லைனா கூட, சில விஷயங்கள் எல்லாம் அடிப்படை னு நினைக்கிற வரை தான் இருக்கிறாங்க....  

சொந்தமா, சின்னதா ஒரு வீடு, ஒரு நாலு அஞ்சு சவரன் நகை, கார் கூட வேண்டாம்.. குறைந்த பட்சம்  ஒரு டூ வீலர்... அது போக மளிகை சாமானை , மாசத்துக்கு ஒரு தடவை மொத்தமா வாங்குறமோ, இல்லையோ - வாரத்துக்கு ஒரு தடவையாவது வாங்குற சக்தி... இது போதும்...! த்ஸ்.. அப்பா ... இப்போவே கண்ணை கட்டுதேன்னு நெனைக்கிறீங்களா... !    அப்படி நினைச்சீங்கன்னா , ஐயோ பாவம் நீங்க தான். முதல்லே இதுக்கு என்ன பண்ணனும்னு யோசிங்க. சம்பாதிக்கிற வழியைப் பாருங்க.... சும்மா ,சும்மா சாமி சாமின்னு கும்பிட்டுக் கிட்டே இருந்தா, கடவுள் கூட உங்களை மதிக்க மாட்டாரு.

நாட்டில காதல் தோல்வி, வாழ்க்கைத் துணை பிரிவு மாதிரி விஷயங்களுக்கு - பணம் இல்லாம இருக்கிறது தான் , மிக பெரிய காரணி. உங்களை விட வேற ஒருத்தர் நல்ல சம்பாதிக்க முடியும், இல்லை ஏற்கனவே சொத்து நிறைய இருக்குதுன்னு நினைச்சா, பொண்ணை பெத்தவங்க , நீங்க உருகி உருகி காதலிச்சாலும் , உங்களை கண்டுக்கவே மாட்டாங்க.. இதுல கொடுமை என்னன்னா , அந்த பொண்ணே காதலாவது, கத்திரிக்காயாவதுன்னு மனசு டக்குன்னு மாறிடுறதுதான்....

உங்களுக்கு பாசம் நிலைச்சு நிக்கணும்னா , நீங்க பணம் நிறைய சம்பாதிக்க கூடிய அளவுக்கு திறமைசாலியா இருக்கிறது அவசியமுங்கோ...


நல்லதுக்கு காலமே இல்லையா... ! நாம படிச்ச படிப்புக்கும், இருக்கிற திறமைக்கும் என்னதான் மதிப்பு? நம்மளை மட்டும் ஏன், இந்த ஆண்டவன் கண்ணு வைச்சு வஞ்சம் வைக்கிறான்னு தெரியலையே..ன்னு புலம்பிக்கிட்டே இருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லை...!  இந்த கவுன்சிலர் , சேர்மன் மாதிரி எல்லாம் போக வேணாம். நாளைக்கே இந்த சேர்மன் நடுத் தெருவுக்கு வந்து நிப்பாரு. எவனாவது வந்து வெட்டு, குத்துன்னு நிப்பாங்க.. ! நமக்கு அந்த கருமம் எல்லாம் எதுக்கு?

உங்க, கண்ணு முன்னாலேயே - செய்யும் தொழிலை திருந்த செய்கிற, சில நல்ல உள்ளங்கள் - வாழ்க்கைலே நல்லதொரு நிலைமைல இருக்கிற ஆட்கள் இருக்க தான் செய்வாங்க... அவங்களை உங்க ரோல் மாடலா நினைச்சுக்கோங்க. நல்ல வழியிலேயே போவோம்...  நல்ல விதமா சம்பாதிக்கிற காசே, நம்ம கையிலே நிக்க மாட்டேங்குது.. அநியாயமா ஏன் போகணும்.. ஆனா, சம்பாதிங்க... !

ஒரு விதண்டாவாதத்துக்கு , ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க.. அமிதாப் பச்சன் KBC ல கூட பல தடவை சொல்லி இருக்கிறாரு.. " பூத் கபூத் ஹை த்தோ க்யூ தன் சஞ் ஹை ; பூத் சபூத் ஹை த்தோ பீ க்யூ தன் சஞ் ஹை "  இதுக்கு அர்த்தம் தெரியுமா? உன் பிள்ளை உருப்படாம போறவனா இருந்தா, நீ சம்பாதிச்சு என்ன பிரயோஜனம். சரி, உன் பையன் , திறமைசாலியா இருந்தா , நீ சம்பாதிச்சு அதனாலேயும் என்ன பிரயோஜனம்? அவனே பார்த்துக்கிடுவான் இல்லே?

அட, ஆமா இல்லைன்னு யோசிக்கிறீங்களா? ஏன் கிட்டேயும் இதே கேள்வி, என்னோட நண்பர் ஒருத்தர் கேட்டாரு. நான் என்ன சொன்னேன்னு நினைக்கிறீங்க?

இல்லை பாஸூ... நீங்க ஏன் தகப்பனா யோசிக்கிறீங்க? பிள்ளையா யோசிங்க.. நம்ம தகப்பன், நம்மளை " சபூத் " , திறமைசாலி ன்னு நினைச்சுக்கிட்டு , நம்ம கிட்ட பொறுப்பை விட்டுட்டாரு.. நாம , அதை நிரூபிக்க வேண்டாமா? பொறுப்பில்லாம  இருந்து - நாங்களும் போராடிப் பார்த்தோம், ஜெயிக்க முடியலை, நம்ம புள்ளைகளாவது..... ன்னு ஒதுங்கனுமா? போராடுவோம்..!

பாறையை தூக்கி வேற இடத்துல வைக்கணும் , இது தான் டார்கெட். யார் உங்களை கையிலே தூக்க சொன்னா, JCB  , கிரேன் வைச்சு தூக்கிடுறோம் இல்லே..? ஒவ்வொரு நோக்கத்திற்கும், அதற்கேற்ற வழிகள் , வலிகள் கண்டிப்பாக  இருக்கத் தான் செய்யும்.. ! கண்டுபிடிப்போம்..!

முதல்லே, நம்ம வாழ்க்கையிலே பொருளாதார ரீதியா, எந்த நிலைமைலே நாம இருக்க நினைக்கிறோம்னு முடிவு எடுங்க... டார்கெட் என்னன்னே தெரியாம , நீங்க எந்த ஸ்கோரை சேஸ் பண்ணப் போறீங்க... நம்ம வாசகர்கள்ளேயே , நிறைய பேர் இருக்கிறாங்க... என்ன லட்சியம் வைச்சு இருக்கிறீங்க ஒரு கேள்வி கேட்டா ... ? திரும்ப , திரும்ப ப்ளிங்க் பண்ணிக்கிட்டே தான் இருப்போம்...!

இதை, நீங்க அடுத்தவங்களை கேட்டு முடிவு எடுக்க முடியாது... சாகும் வரை , நம் உற்ற நண்பன், ஏன் ஜென்ம ஜென்மமா நம் உற்ற நண்பன் , யார் தெரியுமா? நம்ம மனசு தான். !

ஆத்மாவுக்கு அழிவில்லை , நீ எதை நினைக்கிறாயோ , அதுவாகவே ஆகிறாய்.. தத்வமசி  ! எல்லாம் ஞாபகத்துக்கு வருதா?

குறைந்த பட்சம் நம்ம இலக்கு என்னன்னு நீங்க தெளிவா முடிவு எடுங்க. அப்புறம், நீங்க பண்ண வேண்டியது, அதை அப்படியே உங்க ஆழ் மனசுக்கு பதிய வைங்க... நல்ல கோரிக்கைகள் , நல்ல லட்சியம்னா , உங்க மனசும், குதியாட்டம் போட்டுக்கிட்டு உங்களுக்கு உதவி பண்ணும்... தினம் , கொஞ்ச நேரம் உங்க ஆழ்மனசுக்கிட்டே பேசி பழகுங்க.. நீங்க போக வேண்டிய பாதை, செய்ய வேண்டிய முயற்சி எல்லாம், அது தெளிவா உங்களுக்கு காட்டும்...

தினம் நீங்க தூங்குறதுக்கு முன்னே , கொஞ்ச நேரம் - நீங்க என்னவாக விரும்புறீங்கன்னு தெளிவா, ஒரு கற்பனை காட்சி ஓடனும்.. உதாரணத்துக்கு ஒரு வீடு , கார்னு யோசிச்சா .. எவ்வளவு பெரிய வீடு, எத்தனை சதுர அடி இருக்கணும்? எத்தனை மாடி இருக்கணும்? போர்டிகோ எத்தனை அடி? கதவு எந்த மரம்? டைல்ஸ் என்ன கலர்.. பூஜை ரூம் எந்த பக்கம்? அதுலே என்ன படம் இருக்கு? சிலை இருக்கா?  சாப்பிடுற ரூம்ல எத்தனை டேபிள், சேர்.. சோபா என்ன சைஸ் ? எந்த மேக்? தூங்குற ரூம் .. AC எந்த கம்பெனி? இப்படி, பிட்டு பிட்டா , அணு அணுவா , நீங்க பத்திரம் பதிவு பண்ணி, வானம் தோண்ட ஆரம்பிச்சு... வீடு உங்க கண்ணு முன்னே கட்டுனா, என்ன பண்ணுவீங்களோ, அத்தனை விஷயமும் , உங்க கண்ணு முன்னாலே ஓடனும்... ஒரு சின்ன படம் மாதிரி ஓடனும்,... கார்னா , அது எந்த கலர், எந்த கம்பெனி , எத்தனை சீட்டர் , டாஷ்போர்ட்ல  எந்த மியூசிக் சிஸ்டம்..? இப்படி ஒன்னு விடாம , படம் ஓடனும். !

நம்ம பூசலார் - ஹிருதயாலீஸ்வரரர் கோவில் கட்டுனாரே..! மனக் கோவில் கொண்ட பூசலார் கதை தெரியும் இல்லே? அதே மாதிரி,,,,!

இதே மாதிரி , உங்க மற்ற இலட்சியங்களுக்கும், அது தொடர்பா ---- அணு அணுவா படம் பாருங்க.. தினமும், தூங்க முன்னாலேயும்... காலைலே தூங்கி எழுந்த பிறகும்... ஒரு பத்து நிமிஷம் போதும்... தூங்கி எழுந்த பிறகுன்னா..காலைலே ஏழரை மணிக்கா..? இல்லை பாஸூ... நாலரை மணிக்கு... ! நாம உருப்படணும்னா, முதல்லே பண்ண வேண்டிய விஷயம், சீக்கிரம் எழுந்துக்க ஆரம்பிப்பதுதான்.. சூரிய உதயம் பார்க்கும்போதே , உங்க மனசு பரவசப் படும்... எப்படி, கடலை பார்க்கிறப்போ, மனசுக்குள்ளே ஒரு நிர்மலமான எண்ணம் இருக்கிறதோ, அல்லது ஒரே விஷயத்தை மனசு அசை போடுமோ.. அதே effect சூரிய உதயத்துக்கும் உண்டு...!

இதை ஒரு 48 நாள் தொடர்ந்து பண்ணுங்க.. இப்படி செய்ய , செய்ய - உங்க ஆழ் மனசு உங்க லட்சியம் என்னான்னு புரிஞ்சுக்க ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம், அது காட்டுற வழியைப் பாருங்க.. உங்களை பம்பரமா சுத்த விட்டு , வேலை வாங்கும்.... பஸ்சுல, ரயில்லே கூட்டத்துல நெருக்கி அடிச்சுக்கிட்டு , நொந்து போய் நீங்க போகும்போது கூட - உங்க லட்சிய விஷயங்கள் சம்பந்தமா, யாரவது ரெண்டு பேர் பேசிக்கிட்டு வருவாங்க.. உங்க காதும் அதை கேட்கும். ஏதாவது ஒரு புத்தகம் யாராவது படிச்சிக்கிட்டு வருவாங்க.. உங்க கண்ணும் அதைப் பார்க்கும்..!

மனசு , ஐம்புலன்களையும் விழிப்பா வைச்சுக்கிடும்...!கிடைக்கிற , பார்க்கிற ஒவ்வொரு விஷயமும் , உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

அதுக்கு அப்புறம், நிஜமாவே - நீங்க உங்க லட்சிய பாதையில் , வேகமா பயணிக்க ஆரம்பிப்பீங்க..!

இன்னைக்கு , பல புகழ் பெற்ற பிரபலங்கள் , இந்த மாதிரி அனுபவத்தில இருந்தவங்க தான்.. ! ஒரு தடவை - புகழின் உச்சியில் இருக்கும்போது நடை பெற விருக்கும் சம்பவத்தை - ஒரு ஆயிரம் தடவையாவது மனசுக்குள் அசை போட்டு இருந்தவங்க தான்.." பத்தாயிரம் பேர் கூடி இருக்கிற அரங்கம்... நான் என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தேன். முதல் வரிசைலே யார் , யார் இருந்தாங்க.. அவங்க எந்த டிரஸ் ல இருக்கிறாங்க.. யார் , யார் கை தட்டுனா, விசில் அடிச்சா... இப்படி எல்லாமே... ! சார், உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இதே மாதிரி சம்பவம் , நான் எத்தனயோ தடவை பார்த்து இருக்கேன்"னு சொல்லுவாங்க..!

கனவு காணுங்கள்னு - டாக்டர் அப்துல் கலாம் சொல்றது இதைத்தான். சினிமா இயக்குனர்கள் காட்சியை கற்பனை பண்ற மாதிரி , நம்ம வாழ்க்கையை நாம கற்பனை பண்ணி பார்க்கிறப்போ, மனசு - நம்மளை சரியா இயக்க ஆரம்பிக்கும்.

இதை தான், தன் நம்பிக்கைனு சொல்லுறாங்க... ! "எவ்வளவு இடர் வந்தாலும், லட்சியப் பாதையில் - தொடர்ந்து செல்" னு சொல்றாங்க...!  அதாவது இந்த ஆழ் மனசுக்கும் , பிரபஞ்சத்துக்கும் ஒரு நேரடி தொடர்பு , இந்த தியானப் பயிற்சி ஏற்படுத்துது. ... ! ஆல்பா எனெர்ஜினு இதற்குப் பெயர்..! ஆழ்நிலை தியானப் பயிற்சியில்  இதை தான், உங்களுக்கு நல்லா , புரியும்படி - அடிப்படைலே இருந்து , கொஞ்சம் கொஞ்சமா கற்றுக் கொடுக்கிறார்கள்.. !  

அப்புறம், கறி, மீன் , மாமிசம் சாப்பிடுவதை - நிறுத்துங்க... ! உங்களுக்காக ஒரு உயிர் பிரியும்போது, அந்த கொலை செய்த பாவம், அந்த கோழியோ , ஆடோ -- அதன் குட்டிகளிடம் இருந்து தாயைப் பிரித்த பாவம், என்று பாவ மூட்டையை , நம் முதுகில் நாமே ஏற்றுகிறோம்..! அந்த ஸ்தூல உடல் , உங்களின் ஸ்தூல சரீரத்துக்கு கிடைக்கும் நல்ல பலன்களை , சமயத்தில் தட்டி விடும்..! எல்லா ஜீவன்களும் இறைவனின் பிள்ளைகள் எனும்போது,,, அந்த ஜீவனை துடிக்க வைக்கிற காரணத்தால், இறைவனும் நம் மேல் இரக்கப் படுவது கிடையாது..!

நான் வெஜ் சாப்பிடுறவங்க யாரும் நல்லா இல்லையானு கேட்குறீங்களா? இருக்கட்டும்..! நமக்கு இது தேவையா? நமக்கு கடவுள் அனுக்கிரகம் வேணுமா. வேண்டாமா? இது தான் கேள்வி..!

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புத்தகத்தை படிக்கும்போது , தெரிந்து கொண்ட ஒரு வியக்க வைத்த சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய ஊர் பொன்னாக்குடி .  இங்கு ஒரு புகழ் பெற்ற சிவ ஆலயம் உள்ளது. இறைவன் அம்மனுடன் அருணாச்சலேஸ்வரர் என்கிற நாமம் தாங்கி அருள் பாலிக்கிறார். கேரளாவுக்கு - இறைச்சிக்காக கொண்டு செல்லப் படும் மாடுகள் , இந்த சாலை வழியாகத் தான் கொண்டு செல்லப் படுமாம். அங்கே கரண்ட் ஷாக் கொடுத்து கொல்கிறார்கள் .. சாலை முழுக்க அம்மா , அம்மா என்று கதறியபடியே மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன...! படிக்கிறதுக்கே மனசு கஷ்டமா இருக்கு இல்லே... !

நாம இறைச்சி சாப்பிடும்போது அந்த ஜீவன்களை கொல்லும்போது , அந்த ஜீவன்கள் உயிர் போகுதேன்னு துடிச்சு இருக்கும்.. அதை தான் நாமளும் சாப்பிடுறோம்.. மாடு ன்னா மட்டும் பதைக்குறோம், ஆடு , கோழின்னா பரவா இல்லையா..?

அந்த ஆண்டவனுக்கே நெஞ்சு பதறி இருக்கு... மேலே படிங்க.. 
சில ஆண்டுகளுக்கு முன் , பிரதோஷ பூஜை நடந்து கொண்டு இருக்கும் ஒரு பூஜை வேளையில் - பல பக்தர்களின் முன்னிலையில் நடந்த , உண்மை சம்பவம் இது...!

ஆலயத்தில் இருந்த அதிகார நந்தி - அம்மா அம்மா என்று வாய்விட்டு கத்தி இருக்கிறது... !

கல்லுக்கே மனசு உருகி இருக்கு, நடக்கிற கொடுமைகளைப் பார்த்து. நாமதான் , இன்னும் கல்லாவே இருக்கிறோம்..!

இந்த கோவில் சம்பந்தமா , தினமலர் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பிலும், இந்த செய்தி உறுதிப் படுத்தப் பட்டு இருக்கு. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்..


அதனாலே, நாம சொல்ல வர்றது என்னனு கேட்டீங்கன்னா, பெரிய பெரிய கோவில் கட்டுன நம்ம ஆளுங்க எல்லாம், மடத்தனம் பண்ணலை, இன்னும் அங்கே சக்தி இருக்குது.. உள்ள உள்ள சிலைகள் எல்லாம் , வெறும் கல் இல்லை.

உங்களோட நியாயமான கோரிக்கைகளை , நீங்களும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் - இறைவன் விரைவில் நிறைவேற்றுவான்.

மனமுருக , நீங்கள் நம்பிக்கையுடன் ஜெபிக்கும் மந்திர ஜெபங்கள் - நிச்சயம் வீணல்ல. இப்போது இருக்கும் உங்கள் நிலையை விட, பலமடங்கு அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமைய அது வழி அமைத்து தரும்.

ஓம் சிவ சிவ ஓம் - மந்திரத்தை தினமும் ஜெபிப்பது , உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் விரதம் இருந்து ஜெபிப்பது - சில குறிப்பிட்ட செயல்கள் சீக்கிரம் நிறைவேற வழி வகுக்கும்.
 அது என்ன எப்படின்னு , நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..!

இது தவிர , ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் போலவே - அகத்தியர் அருளிய - லட்ச தடவை உருவேற்றுவதால் - நவ கிரகங்களை திருப்தி படுத்தும் , எளிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் உள்ளன. இதையும் அடுத்த கட்டுரையில் காண்போம்..

இப்படி மந்திர ஜெபங்களை பண்ணும் காலத்தில் - நாம் அசைவ உணவு தவிர்த்தல் , ஒரு அடிப்படையான விஷயம். இறைவனின் அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்க செய்யும் இந்த நல்ல விஷயங்கள் மேலும் நமக்கு எந்த விதத்தில் அனுகூலம் தெரியுமா?

வாழ்க்கையில யார் வேணும்னாலும் - ஜெயிக்கலாம், உயரம் தொடலாம். ஆனா, மேலே போனவங்க, அந்த வெற்றியை தக்க வைக்க, இந்த மந்திர ஜெபம் உதவும். அகந்தை , ஆணவம் - பதவி , பணம் வந்த பிறகு, சர்வ சாதாரணம் . ஆனால், மந்திர ஜெபம் பண்ணுபவர்களுக்கு - அகந்தை , புகழ் போதை ஏறாது.
முக்கியமாக வக்கிர , காம எண்ணங்கள் தலை தூக்காது. உச்சியில் இருந்து - பெண்களால் , முறை தவறிய உறவுகளால் - சீரழிந்து , அதல பாதாளத்தில் விழுந்த எவ்வளவு பேர் இருக்கிறார்கள். இந்த மந்திர ஜெபம், வலிய வரும் வழியல் கேசுகளையும் , ஒதுக்கச் செய்யும்..! 


நல்ல வருமானம், நல்ல ஆரோக்கியம், நிம்மதியான வாழ்க்கை - வேற என்ன வேணும் நமக்கு?


மொத்தத்தில் - நீங்களும் , உங்கள் குடும்பமும், உலகமும் பெருமைப் படத்தக்க வாழ்க்கை உங்களுக்கு அமையும்... ! அப்படி அமைவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது...! நீங்க முதல்லே உங்களுக்காக மனசு வைங்க..! ஆண்டவனும் உங்களுக்கு மனசு வைப்பான்.. ! 

என்ன , முயற்சி பண்ணிப் பார்க்கலாமா? 

6 comments:

Sivasubramanian said...

அற்புதமான கட்டுரை. பெரிய விசயங்களை மிக மிக சாதாரணமாக சொல்லும் எளிய நடை அருமை. உங்களின் ஒவ்வொரு கட்டுரைகளையும் மிக ஆர்வத்துடன் எதிர்ப் பார்த்து வாசிக்கிறேன். உங்களின் இப்பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.

அன்புடன்,
சிவசுப்ரமணியன்.

YourFriend said...

வர வர எங்க மனசாட்சியை தட்டி எழுப்புறதே உங்க வேலையா போச்சு. உக்காந்து யோசிப்பீங்களோ?

//நம் கண் முன்னே வெறுமனே அநியாயம் மட்டுமே செய்து கொண்டு இருக்கிற, மகா கேவலமான ஆட்களை எல்லாம், இந்த தெய்வம் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது..?//

இதுக்கு நீங்க பதிலே சொல்லியே தலைவா...

என்னை பொறுத்தவரை வர வர கடவுளோட செயல்பாடு எப்படி போய்கிட்டிருக்கு தெரியுமா?

டிராபிக் கான்ஸ்டபிள் சிக்னல் ஓரமா நின்னுகிட்டு, மனம் போன போக்குல வண்டியை செக் பண்ண ஆளை பிடிக்கிற மாதிரி தான் இருக்கு.

திடீர்னு கையை குறுக்கே நீட்டி வண்டியை ஓரங்கட்டுன்னு சொல்லி எவனாவது ஒருத்தனை பிடிச்சி அத்தை காமி, இத்தை காமி, அப்படி இப்படின்னு ஃபைனை போட்டு போட்டு தீட்டுவாங்க. அவனை என்கொயரி பண்ணிக்கிட்டு இருக்கும்போதே இந்த பக்கம் ஹாய்யா வண்டியை கன்னாப் பின்னான்னு ஓட்டுற ரோமியோ ஒருத்தன் தெனாவட்ட கிராஸ் பண்ணி போவான். சிக்னலையும் ஜம்ப் பண்ணியிருப்பான். ஹெல்மட்ல இருக்காது. வண்டிக்கான ஒரு டாகுமெண்ட் கூட அவன் கிட்டே இருக்காது. வண்டில நம்பர் பிளேட் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதுல இருக்குற நம்பர்சை படிக்க முடியாத மாதிரி ஏதோ ஒரு மொழில எழுதியிருப்பான். ஆனா, அவன் தப்பிச்சிடுவான். நியாயம் தர்மத்தை மதிக்கிற நம்மாளு அங்கே பாவம் மாட்டிக்கிட்டு முழிப்பாரு.

இப்படி தான் இருக்கு இப்போ கடவுள் செய்யுற வேலையும். இதுனால தான் சார், நீங்க எவ்ளோ சொல்லியும் சில சமயம் கடவுள் பற்றிய அவநம்பிக்கை வந்துடுது. என்ன செய்யா, கேவலம் நாமெல்லாம் மனுஷங்க தானே...

வக்கிர புத்தி படைத்த, நல்லதையே சிந்திக்காத, கருணையே இல்லாத ஜென்மங்கள் ஒற்றுமையாக் இருப்பதையும், அப்பப்போ கோவிலுக்கு போவதையும், பார்த்துகிட்டு தானே இருக்கோம்... இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லி சமாதானபட்டுக்கப்போறோம்? (நீங்க ஏற்கனவே ஏதாவது பதிவுல சொல்லியிருக்க வாய்ப்புண்டு!)

T K Arumugam said...

அன்புள்ள ஐயா

நான் SP. VR. சுப்பையா அவர்களின் வகுப்பறை மாணாக்கன். வலையில் உலா வரும்போது உங்களின் வலை மனையினை பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. அதைவிட கஷ்டப்படும் உள்ளங்களுக்கு மிகவும் ஆறுதல் தரும் வலைமனையாக உள்ளது. அதில் உள்ள கோவில்கள் பற்றிய விஷயங்கள், கஷ்டங்கள் தீர மந்திரங்கள், ஜோதிட ஆலோசனைகள் ஆகியவை மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்

T K ஆறுமுகம்

Anonymous said...

really good we need more and thanks

IASAspirants said...

Great Article!
Thanks

para said...

hello sir, i'm in canada and i read all your articles, great work thanks a million for that but i do have a question about inviting sithar in our home. if some reason we don't follow the same "acharam" is sithar may do harm for us. Also i do have young children under 6 years old, is it ok to invite sithar in that came, please clarify.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com