Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அடப் போப்பா..உனக்கு இதே வேலையா போச்சு.. ! ( யாரும் இந்த கட்டுரையைப் படிக்காதீங்க பாஸூ..!)

| Oct 22, 2011
http://www.visvacomplex.com/image/paramacharyar.jpg
வாழ்க்கை முழுக்க , கம்பெனி, வேலை - சம்பளம் , அதுல குடும்பத்தை ஓட்டனும் ... இப்படியே அடுத்தவங்களுக்கு வேலை செஞ்சு , அப்படியே வாழ்க்கையை முடிச்சிடப் போறோமா? கடைசி காலத்துல, உடம்பு எல்லாம் தளர்ந்து , அடங்கின பிறகுதான் , நம்மளைப் பத்தி யோசிப்போமா..?


வாழ்க்கையிலே எவ்வளவோ வெட்டித்தனமான வேலைகள் எல்லாம் செஞ்சு இருக்கோம். கொஞ்ச நஞ்ச அநியாயமா பண்ணி இருக்கிறோம்?  ஒரு தடவை, உருப்படியான செயல் ஒன்னு செஞ்சு பார்ப்போமேன்னு தான் இந்த முயற்சி.

சில நல்ல காரியங்களை செய்யும்போது , அதனால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. சில ஆலயங்களுக்கு செல்லும்போது , ஒரு சிலர் ஏதாவது மந்திர ஸ்லோகங்கள் அடங்கிய தாள்களை நோட்டீசாக கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். நம்மிலும் நிறைய பேர், அதை வாங்கி இருப்போம். அவர்கள் ஏதும் பலன் இல்லாமல் , இதைப் போல காசை கரியாக்கும் வேலையை செய்வார்களா? நிச்சயமாக இருக்காது. இந்த மாதிரி செயல்கள் செய்யும்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி இருக்கிறதே , அதற்க்கு விலை மதிப்பே இல்லை.

ஒரு சிலருக்கு , இந்த மாதிரி தெய்வீக காரியங்களை செய்யும்படி ,யாராவது பரிந்துரை செய்தும் இருக்கலாம். இது எந்த விதத்தில் உதவும் என்பதை, இந்த கட்டுரை முடிவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 

காஞ்சிப் பெரியவர் - அஷ்டமா சித்திகளை அடைந்த ஒரு அவதார புருஷர். ஆனால், துளி கூட கர்வமின்றி, அதை எந்த ஒரு சுய நலத்துக்கும் பயன் படுத்தாத மகான். அவரைப் போன்ற புண்ணிய ஆத்மாக்கள் எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையை இன்றும் பண்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

பெரியவரின் பக்தர் ஒருவர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான, உண்மை சம்பவத்தை இன்று நாம் பார்க்க விருக்கிறோம். 
காஞ்சி பரமாச்சாரியாரின் அடியார்களில் ஒருவர் ஒருமுறை கல்கத்தாவைச் சேர்ந்த சேட்டு ஒருவரை அவரிடம் கூட்டிவந்தார். அந்த சேட் மிகவும் வசதிபடைத்தவர். பக்தியும் பணிவும் கொண்டவர்.
அவருக்குக் கடுமையான நோயொன்று சிரமம் கொடுத்தது. இரைப்பைக்கு மேலேயுள்ள உணவுக்குழாயின் இயக்கத்தில் பாதிப்பு. அதன் விளைவாக உணவை வயிற்றில் துவாரம் போட்டு

அதன்மூலம் உணவு செலுத்தப்பட்டு வந்தது.

இருப்பினும் அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தார். எந்த விதமான வைத்தியமோ, கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனையோ, மாந்திரீகமோ எதுவுமே அவருக்குப் பலிக்கவில்லை.

அவர் பரமாச்சாரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே அவரைப் பார்க்க அழைத்துச்செல்லுமாறு அவருடைய நண்பராகிய அடியாரை வற்புறுத்தினார்.
பரமாச்சாரியாரிடம் சொன்னபோது அவர் முதலில் பார்க்க மறுத்துவிட்டார்.
அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அடியார் அந்த சேட்டை அழைத்துக்கொண்டுபோய் பரமாச்சாரியாரின் முன்னிலையில் நின்றார். 

அந்த அடியார் என்ன சொல்லியும் பரமாச்சாரியார் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
இரவு வெகுநேரமாகிய பின்னர் அதைப் பற்றி பேசினார்.

ஆனால், இதற்கெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது; பக்தியுடன் இருந்து நல்ல காரியங்களை நிறையச்செய்யுமாறும் சொல்லிவிட்டார்.

அடியார் விடவில்லை. எப்படியும் இதற்கெல்லாம் விமோசனம்,  பரிகாரம் இருந்துதான் ஆகவேண்டும் என்று பணிவுடன் வாதிட்டு பரமாச்சாரியரை மிகவும் உரிமையுடனும் நம்பிக்கையுடனும் வற்புறுத்தினார்.

 
சிறுது நேரம் மௌனமாக இருந்த பரமாச்சாரியார், அந்த சேட்டிடம் தாம் சொல்வதை அப்படியே செய்யுமாறு வாக்குறுதி கேட்டார். சேட் ஒத்துக்கொண்டார்.
இந்து சமயத்திலுள்ள பதினெட்டுப் புராணங்களையும் பதினெட்டுத் தனித்தனிப் புத்தகங்களாக சமஸ்கிருதத்தில் அச்சிட்டு, தகுதியுடையவர்களாகிய வேத நூல் படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று பரமாச்சாரியார் ஆணையிட்டார். 

 பரமாச்சாரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சேட் அந்த நற்காரியத்தைத் தாம் செய்வதாக ஒத்துக்கொண்டார். பரமாச்சாரியர் அந்த சேட்டை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கச்செய்தார்.
கல்கத்தாவுக்குச் சென்ற சேட், தம்முடைய ஐந்து மாடிக்கட்டடத்தின் மேல்மாடி முழுவதையும் புராண வெளியீட்டிற்காக ஒதுக்கினார். பல சாஸ்திர விற்பன்னர்களை கூட்டுவித்தார். அவர்களின்மூலம் தரமான காகிதத்தில் சுத்தமாக அச்சிட்டுப் பெரிய பெரிய புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுத்தார்.

 'பக்தியே விலை' என்றும் குறிப்பிடச் செய்தார், சேட்.    
பதினேழு புராணங்கள் அச்சிடப்பட்டுவிட்டன.
ஆனால் சேட் வழக்கம்போல் குழாய்மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்தார்.

ஆனாலும்கூட சேட் அதைப் பற்றி கவலையும்படவில்லை. அவர்பாட்டுக்கு புராண வெளியீட்டை நம்பிக்கையுடன் ஒரு கர்மயோகமாகச் செய்தார்.

கடைசியாக ஸ்கந்த புராண வெளியீட்டு வேலை தொடங்கியது.

 
அவ்வளவுதான்.
திடீரென்று ஒருநாள் சேட் சாப்பாட்டை வாயால் மென்று விழுங்கி சாப்பிடத் துவங்கினார்.

நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.

அதுவரை தீராமல் இருந்த நோய் பரமாச்சாரியார் பேரருளால் நீங்கியது.

பரமாச்சாரியாரைப் போய்ப் பார்த்து விபரத்தைச் சொன்னார்கள்.

பரமாச்சாரியரின் ஆற்றலை வியந்து அவர் தந்த வரத்தால் சேட்டின் நோய் நீங்கிப் பிழைத்துக் கொண்டதாக அந்த அடியார் சொல்லி, 'பரமாச்சாரியார்தான் கடவுள் என்றும் சொன்னார்.

ஆனால் பரமாச்சாரியாரோ ரொம்பவும் 'கூலாக'ச் சொல்லியிருக்கிறார்.

"நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரக் காப்பாத்தியிருக்கு?"


அதுதான் பெரியவர்.  


சரி, இதைப் போல நாமும் ஏதாவது செய்யலாமே. தனி ஒரு மனிதனாக செய்வதை விட, ஒரு குழுவாக இயங்கி செய்ய முயற்சிக்கலாமே!நமது சகோதரர் , ஆன்மீக கடல் வீரமுனி ஐயா அவர்கள், ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை, ஆன்மீக அன்பர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்னால் முடிந்த அளவு நானும் உதவுவதாக உறுதி அளித்துள்ளேன். நீங்களும் உதவ நினைத்தால், தாரளமாக கை கோர்க்கலாம். என்னுடைய வேண்டுகோள், இதைப் பரப்பும் முன்பு, நாம் ஒவ்வொருவரும் இதை ஜெபிக்கத் தொடங்கி, இதன் சக்தியை மனப் பூர்வமாக உணர்ந்து , பின் மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல உதவலாம்.   

தமிழ்நாட்டில் இருக்கும் 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு சிவ அம்சமுடைய துறவி கிடைப்பது அரிதாக இருக்கிறது.இந்த துர்பாக்கிய சூழ்நிலையை 1980களில் உணர்ந்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்தார்;குடும்பஸ்தராக  இருக்கவேண்டும்;மந்திர சக்தியும் கைகூடவேண்டும்;துறவு நிலையை எட்டாமலேயே சிவனருள் கிட்ட வேண்டும்.தினசரி வாழ்க்கை வேகமாக இருக்கிறது.அதற்கேற்றாற்போல் எளிமையான,ஆனால் சர்வ சக்திவாய்ந்த சிவ மந்திரம் ஏதும் உண்டா? என பல சிவனடியார்களைத் தேடி வேண்டினார்.அவரது பல வருடத் தேடலின் முடிவாக நமக்குக் கிடைத்த சிவ வைரம் “ஓம்சிவசிவஓம்”

இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளே இந்த மந்திரத்தை ஜபிக்க உண்டு.வேறு எதுவும் தேவையில்லை;

1.21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

2.அசைவம் சாப்பிடக்கூடாது.

பிரயாணம்  செய்யும்போது, வாகனம் ஓட்டும்போது, நடந்துகொண்டு ஜெபிக்கவேண்டம். கிரிவலம் சுற்றும்போது, ஆலய வலம் வரும்போது, பாத யாத்திரை, சபரிமலை யாத்திரை செய்யும்போது செய்யலாம்.

எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவைக்கு மேல் உரு (ஜபம்) ஏற்றியபின்னரே வேலை செய்யும்.ஓம்சிவசிவஓம் 10,000 தடவை சொல்வதற்குள் நம்முடைய கடுமையான நெருக்கடியிலிருந்து நம்மை மீட்கத் துவங்கும்;கவனிக்கவும் துவங்கும்.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தையும் 1,00,000 தடவைக்கு ஜபிக்க வேண்டும்.

எப்படி ஜெபிக்கவேண்டும்?

மஞ்சள்விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.நெற்றியில் விபூதி(திருநீறு) பூசிக்கொண்டோமா? என்பதை பார்த்துக்கொள்ளவும்.செல்போன்,டிவி,காலிங் பெல் இவற்றை மவுனமாக்கிக் கொள்ள வேண்டும்.(அல்லது அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முந்திய ஒரு மணிநேரம் வரையிலும் எந்த தொந்தரவும் இராது)

முதலில் ஓம் (உங்களின் குலதெய்வத்தின் பெயர்) நமக

அடுத்து ஓம் கணபதியே நமக

அடுத்து ஓம் (உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயர்) நமக என வரிசையாக மனதுக்குள்,உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.

இப்போது உங்களின் நியாயமான ஆசை என்ன வென்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

(சில உதாரணங்களைப் பார்ப்போம்:இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்

நான் விரும்பும் படிப்பில் கவுன்சிலிங்கில் சேர வேண்டும்

எனது இப்போதைய மாத வருமானம் ரூ.15,000/-இது ரூ.45,000/-ஆக உயர வேண்டும்.

எனது நோய் விரைவில் தீர வேண்டும்

எனது பிரிந்த தம்பி என்னிடம் வந்து பேச வேண்டும்

எனது 2 லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும்

எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க வேண்டும்

என உங்களுக்கு விருப்பமான,நியாயமான,யாருக்கும் தீங்கு தராத ஒரு கோரிக்கையை நினைத்துக்கொள்ளவும்.ஒரு முறை நினைத்தால் போதுமானது)

பிறகு,ஓம்சிவசிவஓம் ; ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபித்து வர வேண்டும்.

சிலருக்கு 10 நாளுக்குள் பலன் கிடைக்கத் துவங்கும்;சிலருக்கு 45 நாளாகலாம்;சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்;சிலருக்கு ஓரிரு வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கும்.தமிழ்நாடு மாநிலத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.தமிழ்நாடு தவிர,பிற மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் சுமார் 3 கோடித்தமிழர்கள் வாழ்ந்துவர,ஆக தமிழர்களின் எண்ணிக்கை 10,00,00,000(பத்து கோடி)பேர்களாகும்.இவர்கள் அனைவருக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்  புனிதமான சிவத்தொண்டினைச் செயல்படுத்திட விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் மூன்று விதங்களில் செயல்படமுடியும்.
 
கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து , மவுசில் ரைட் க்ளிக் செய்து View  Image செலக்ட் செய்யுங்கள். அதன் பிறகு அந்த படத்தை திரும்ப க்ளிக் செய்தால், படம் பெரியதாக தெரியும். 


1.உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாக அச்சடித்து விநியோகிக்கலாம்.

2.ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அச்சடிக்க அன்பளிப்பு அனுப்பலாம்.1000, 2000, 5000, 10,000 50,000 எண்ணிக்கையில் அச்சடிக்க அன்பளிப்பு தரலாம்.(அல்லது) உங்கள் ஊரிலேயே உங்கள் நேரடி மேற்பார்வையில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு அனுப்பலாம்.

3.வெளிமாநிலம்,வெளி நாடுகளில் இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து,உங்கள் பகுதியில் அச்சடித்து விநியோகிக்கலாம்.

அச்சடிக்க இயலாதவர்கள், விநியோகம் செய்ய மட்டும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் அஞ்சல் முகவரியை aanmigakkadal @gmail .com  அனுப்பவும்.தங்களுக்கு ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அனுப்பி வைப்போம். பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் , வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். 


இதைத் தவிர, நாங்களே நேரடியாக - சதுரகிரியிலும், அண்ணாமலையிலும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் - சில குறிப்பிட்ட தினங்களில் , நோட்டீஸ் அச்சடித்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். விருப்பம் இருப்பவர்கள் உங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.

நோட்டீஸ் தான் அடிச்சு வெளியிடனும்னு இல்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு , தெளிவா எடுத்துச் சொல்லலாம். இந்த பதிவை, இணையத்தின் மூலை முடுக்குகளுக்கும் - தமிழ் கூறும் வாசகர்களின் பார்வைக்கு    எடுத்துச் செல்ல உதவினாலே , அது நீங்கள் செய்யும் மகத்தான உதவி.

ஓம் சிவ சிவ ஓம் !

இது, நாம் செய்யும் காரியம் அல்ல. நம்முள் புகுந்து இயக்கிக் கொண்டு இருக்கும் அந்த சிவத்தின் வேலை தான் ! 

இவ்வளவு தூரம் , திரும்ப திரும்ப சொல்றேனேங்கிறதுக்காகவாவது , நம் வாசகர்கள் - ஓம் சிவ சிவ ஓம் - ஜெபிக்க ஆரம்பிப்பீங்கனு நம்புறேன்..!

நமக்கு ஒன்னும் நல்லது நடக்க மாட்டீங்குதேனு புலம்புறதை விட, நம்ம கஷ்டங்கள் தீர , கடவுள் நமக்கு ஒரு சந்தர்ப்பம் , வலிமையான ஆயுதம் அல்லது கவசமா,  இந்த மந்திரம் என்னும் வரத்தை கொடுத்து இருப்பதாக, நம்புங்க..! நடக்கும் சம்பவங்கள் - மிக நன்மையாக முடிய, இறை அருள் புரியட்டும்..! 

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

4 comments:

ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள நண்பரே
உங்களது இந்த பதிவு என்னுள் மிகுந்த நம்பிகையை ஏற்படுத்தி உள்ளது.
நிச்சயம் நான் புதுச்சேரியில் ஓம் சிவ சிவ ஓம் என்னும் மாமருந்தை இந்த மாயை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் (என்னையும் சேர்த்துதான் ) புதுவை மக்களுக்கு அளிப்பேன் !

YourFriend said...

மற்றுமோர் பயனுள்ள பதிவு நம் ஆசிரியரிடமிருந்து. இந்த தீபாவளி பரபரப்பிலும் பதிவு அளித்தமைக்கு நன்றி.

<<<<<<>>>>>>

இது சற்று பின்பற்ற எளிமையாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இங்கு வரும் வாசக அன்பர்கள், இறை அடியார்கள் ஆசிரியர் கூறியவற்றை இயன்றவரை நடைமுறைப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுகிறேன். நான் இது குறித்து என்ன செய்யவிருக்கிறேன் என்று விரைவில் கூறுகிறேன். (என்னால் இயன்றவரை எளிமையாக)

இதை பிறருக்கு சொல்கிறோமே நாம் எந்தளவு பின்பற்றுகிறோம் என்று யாரும் யோசிக்க தேவையில்லை. உங்களிடம் உள்ள ஒரு சிறு அகல் விளக்கில் மற்ற தீபங்களுக்கு விளக்கேற்றுவது போல தான் இதுவும். உங்கள் தீபத்தில் எண்ணெய் வற்றினாலும், காற்றில் அணைந்தாலும் அல்லது நீங்கள் பராமரிக்காது விட்டுவிட்டாலும் உங்களால் ஏற்றப்படும் தீபங்கள் மற்றவர்களுக்கு ஒளிகொடுக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும். நல்ல விஷயங்களை தயக்கமின்றி அனைவருக்கும் சொல்லுங்கள். அதை பின்பற்றி யாரேனும் பயனனடைந்தால் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும். நாளாவட்டத்தில் உங்களிடம் உள்ள குறைகளும் அகன்றுவிடும்.

காஞ்சி பெரியவர் பற்றி ஆசிரியர் கூறியிருப்பதை படித்தவுடன், நான் முன்பு கேள்விப்பட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

பொதுவாக மற்ற மதங்களை போலல்லாமல் ஹிந்து மதத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள், மதச் சடங்குகள் ஏராளம். இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமிருப்பதில்லை. ஆகையால், இது குறித்த மகா பெரியவரிடம் அப்போது ஒருவர், ரொம்ப குறைப்பட்டுக் கொண்டார்.

"சுவாமி.... எதற்கு நம் மதத்தில் இத்துனை சாஸ்திரம், சம்பிரதாயங்கள்? இன்றைய அவசர உலகில் இதுவெல்லாம் சாத்தியம் தானா? நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற கஷ்டமாக இருக்கிறதே... நீங்கள் தான் எங்களுக்கெல்லாம் அத்தாரிட்டி. இந்த எண்ணற்ற சம்பிரதாயங்களை சற்று சுருக்கி, 'இவைகளை பின்பற்றினால் போதுமானது' என்று கூறி ஒரு 10 அல்லது 20 கட்டளைகளை கூறினால் எல்லாரும் பின்பற்றுவது சௌகரியமாக இருக்குமே....' என்று விண்ணப்பம் வைத்தார். நியாயம் தானே...?

பெரியவர் அதற்க்கு சொன்ன பதில் என்ன தெரியுமா?

"அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. சம்பிரதாயங்களாய் சுருக்குகிறேன் என்று கூறி இன்றைக்கு நான் 10 கூறுவேன். வருங்காலம் இதை விட அவசரமிக்கதாக இருக்கும். அப்போது இந்த இடத்தில் இருப்பவர்கள் அதை ஐந்தாக்குவர்கள். அதன் பிறகு வருபவர் மூன்றாக்குவார்கள். இறுதியில் சம்பிரதாயம் சாஸ்திரம் என்று ஒன்றுமேயிருக்காது... எனவே... இந்த உபாயம் சரியல்ல. சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்திலும் காரணமிருக்கிறது. அவரவர் இயன்றவரை அவர்களால் முடிந்தவற்றை பின்பற்றுங்கள். அது போதும். எதை பின்பற்றினாலும் அது அதற்குரிய பலன் நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும்" என்று கூறினாராம்.

அடேங்கப்பா.... என்ன ஒரு தீர்க்கம்... பார்வை...!!

-இவண்
(பக்த) கோடியில் ஒருவன்

சிவஹரிஹரன் said...

தங்களது "ஓம்சிவசிவஓம்" முயற்சி மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. "சதுரகிரி சிவசங்கு அன்னதான அறக்கட்டளை" என்ற அமைப்பில், இறைவனின் ஆணையுடன் என்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதால், தங்களுக்கு என்னால் இயன்ற உதவியை ஆற்ற கடமைப்பட்டுள்ளேன். தங்களின் அன்பான கடமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

! ஸ்பார்க் கார்த்தி ! said...

சார்! நானும் இந்த தெய்வீக பணியில் சேர விரும்புகிறேன் தங்கள் முகவரிக்கு நோடீஸ் அனுப்பி வைக்கிறேன்,

எனது வலை பதிவையும் கொஞ்சம் பாருங்கள் அன்பரே!!!
http://sparkkarthikovai.blogspot.com/

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com