Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

எட்டு என்ன ஓய், பதினொன்னே போட்டு காட்டுறேன் வாங்க !

| Oct 13, 2011
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQU1imuR4rLIWpm98LAvq4ZyxS5mhkDN-bBEeAx4uUxHkFb-XNi

எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட என்னோட நண்பர் ஒருத்தர் ,கம்பெனியில கூட வேலை பார்த்துக் கிட்டு இருந்தார். பெங்களூர்ல இருந்து ஒரு செகண்ட் ஹான்ட் கார் வாங்கி இருந்தார். வேலை பார்த்தது ராணிபேட்.  கர்னாடகா  நம்பர்ல இருந்து நம்ம TN registration நம்பரா மாத்தணும். வேலூர் RTO ஆபீஸ்ல , பக்காவா எல்லா பேப்பர்சும் எடுத்திட்டு அப்ளை பண்ணினார். இது நடந்து ஒரு பத்து வருஷம் மேல இருக்கும். அட, இன்னைக்கும் இதே கதை தான், அதை விடுங்க. நம்ம ஊர்ல , RTO ஆபீஸ்ல ஒரு வேலை நடக்கணும்னா , என்ன வேணும்னு ஒரு LKG படிக்கிற பையனுக்கே தெரியும். ஆனா, நம்ம மனுஷன், ரொம்ப தெளிவா இருந்தார். சார், நானே புது கார் வாங்க முடியாம, இந்த கார் வாங்கி இருக்கேன். ரூல் , லாஸ் படி எவ்வளவு பைசா கட்டணுமே, அதை கட்டுறேன். அதுக்கு மேல, ஒரு பைசா கூட தர மாட்டேன். எங்கே இருந்து இது முடிய...?
ஆபீஸ்ல தினமும் - சார், ஒரு டூ அவர்ஸ் பெர்மிசன் வேணும். RTO ஆபீஸ் வரைக்கும் போகணும் . இதே தான் தினமும். ஒரு நாள் , ரெண்டு நாள் இல்லை சார். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. முப்பத்தி ஏழு தடவை. சலிக்காம, மனுஷன் , விடாம அங்கே போய் , ஒருவழியா, வேலையை முடிச்சார்.

நானே , அவர் கிட்ட கேட்டேன், சார் , விடுங்க சார்... நான் கூட வரட்டுமா, அங்கே ஒருத்தர் நமக்கு நல்லா தெரியும். ரெண்டு நாள்ல முடிச்சிடலாம். அவர் கிட்டேயும் பேசினேன். அப்படியா, வாங்க சார், நான் பார்த்துக்கிறேன்.. என்ன , கருமம் பைசா கேட்பாங்க. என்னோட பைசால இருந்து பிடிச்சுகிடட்டும் (?  என்ன, கொடுமை பாருங்க ) , உங்களுக்கு இல்லாமலானு அவர் சொல்ல ,  இவரு... ஹ்ம்ம்... "இல்லைப்பா , அது மகா தப்புடா அம்பி" ங்கிறார். "என்னோட வேலை. அவர் பைசா ஏன் கொடுக்கணும் ?" "சார், இல்லை சார், அது அவர் பைசா கூட இல்லை, நீங்க ஏன் இவ்வளவு  கஷ்டப்படனும்... நான் பார்த்துக்கிறேன்"... கடைசி வரை கேட்கவே இல்லை.... அந்நியன் படம் வந்தப்போ ஒரு ரூல்ஸ் ராமானுஜம் காரக்டர் பார்த்து இருப்பீங்களே ... அந்த  மாதிரி மனுஷன்.

அந்த ஆபீஸ்ல , இருந்த ஒரு சாதாரண க்ளெர்க் கூட மதிக்கலை அவரை. இத்தனைக்கும் ஒரு MNC கம்பெனில மேனேஜர் அவர் அப்போவே. யோவ், நீ காசு தர மாட்டியானு வாய் விட்டே கேட்டு இருக்கானுங்க, அங்கே. நம்ம அரசு அலுவலகங்கள்ளே , வருஷத்துக்கு  லட்சக் கணக்குல IT கட்டுற ஆளுங்க , ஒரு வேலையா உள்ள போய் , ரத்தக் கொதிப்பு இல்லாம வெளியில வந்தா , அதுவே அவங்க ஜென்ம , ஜென்ம புண்ணியமா இருக்கும். ஐயோ, பாஸ்போர்ட் ஆபீஸ்ல நடக்குற ஒரு கூத்து இருக்கே  , RTO ஆபீஸ்க்கு கொஞ்சம் கூட கம்மி இல்லாத ஒரு விஷயம். சரி, அதை இன்னொரு சமயம் பார்க்கலாம் .

ஆனா, இவர் கடைசி வரைக்கும் , கொஞ்சம் கூட கோவப்படலை. என்னோட போறாத வேளைப்பா இது. பகவான் என்னை சோதிக்கிறான்னாரே  பார்க்கலாம்,... என்னோட ஆபீஸ் ல இருந்த ஸ்டாப்ஸ் எல்லாம் கூட , நக்கலா , ஏளனமா பார்த்து சிரிச்சாங்க ... ஆனா, எனக்கு அந்த விஷயம் , புதுசா ஒரு விஷயத்தை உணர்த்துச்சு...!
கடைசியா, வேற வழியே இல்லாம, இல்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கு
றான்னு நினைச்சாங்களா தெரியலை, ஒரு வழியா , அவர் வேலையை , அங்கே இருந்த கருணை மகா பிரபு ஒருத்தர் முடிச்சுக் கொடுத்தார் ....

என்ன பண்றது, இந்தியாவுல இருக்கிறோமே, இங்கே IAS முடிச்சு இருக்கிறவங்களுக்கே மதிப்பு கிடையாது. அட, அரசு ஊழியர்கள்ளேயும், அநியாயத்துக்கு நல்ல மனுஷங்களும்  இருக்கிறாங்க. ஆனா, அவைகளை (!)  எல்லாம் , பொழைக்கத் தெரியாத ஆளுன்னு அவங்க வீட்டுலேயே யாரும் மதிக்கிறது இல்லை.  மனுஷனுக்கு எங்கே சார் மதிப்பு இருக்கு... பணம், பதவி... அவ்வளவுதான், உலகம்னு போய்ட்டு இருக்கோம்....  சரி, விடுங்க அரசியல் நமக்கு எதுக்கு....

சரி, இந்த சம்பவம் நம்ம தளத்துல எதுக்குன்னு கேட்குறீங்களா... பொறுங்க பாஸூ... எதுக்கு அவசரப்படுறீங்க,,, நாம என்னைக்காவது , உபயோகமில்லாத விஷயத்தைப் பத்தி பேசி இருக்கோமா..?


நீங்க, நான் எல்லாருக்கும் குறுகுறுனு ஒரு விஷயம் எப்பவுமே ஓடும். ஏதாவது அதிசயம் நடக்கணும், திடீர்னு ஒரு புதையல் , அந்த மாதிரி,... ஒரு நிமிஷத்துக்குள்ளேயே  எல்லா பிரச்னையும் தீர்ந்துடனும். ஏன்? ஏன்னா, நாமள்லாம் திருந்திட்டோம்... செஞ்ச தப்பை உணர்ந்துட்டோம்  ...  So , We deserve that . தப்பு செஞ்சுக் கிட்டு இருந்த காலத்துல, கிளிப்பிள்ளையை கெஞ்சுற மாதிரி , நம்ம கூட இருந்தவங்க எல்லாம், கெஞ்சி இருப்பாங்க... ஹ்ம்ம்.... நாமளாவது, கேட்குறதாவது.... ! எனக்கு தெரியும்பா, நான் தப்பு தான் செய்றேன்... ஆனா, நான் பார்த்துக்குறேன்... ஒன்னும் பிரச்னை வராது. எவ்வளோ கெத்தா பேசி இருந்து இருப்போம்.... ! அதுக்கு அப்புறம் செமத்தியா ஒரு அடி,... வாங்குன பிறகு, ஞானோதயம் வரும்...

நேத்து  வரைக்கும் இதுதான் உலகம்னு நினைச்ச ஒரு விஷயம், அடத் தூ.. இவ்வளவு கேவலமான ஒரு விஷயமானு தோணும்... 

 ஐயோ... கடவுளே, உனக்கு கண்ணு இல்லையா, ஏன் எனக்கு மட்டும் இப்படி? தப்பு செய்றவன் எல்லாம் நல்லா இருக்கிறானே..... அப்போ கூட , பாருங்க, தப்பு செய்றவன் எல்லாம் நல்லா இருக்கிறானே...! என்னை மட்டும் காலை வாரி விட்டுட்டியே..! ஒரே புலம்பல் மயம் ... !

அப்போ, அது தப்பா சார், இனிமேல் தப்பு செய்ய மாட்டேன், நான் உணர்ந்துட்டேன்.. கடவுள் கருணை காட்ட மாட்டாரா? செஞ்ச தப்புக்கு அதிகமாவே தண்டனை அனுபவிச்சுட்டேன்... போதும், இதுக்கு மேல தாங்குற சக்தி இல்லை சார்....!

கவலைப் படாதீங்க .... கடவுள், உங்களை, என்னை விட ரொம்ப நல்லவர். அழ வைச்சுப் பார்க்கிறதுல சந்தோசப்படுற , ஒரு குரூரத்தனம் சத்தியமா அவர்கிட்ட கிடையாது. மனுஷ மனம் ரொம்ப விசித்திரமானது. கீழே விழுந்தோம்னா,  வெறும் சிராய்ப்பு தான்னு வைச்சுக்கோங்க. திரும்ப ஓடுவோம்... அதே தவறான பாதையில. அதனால, அவர் வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறக்கூடாதுன்னு , கொஞ்சம் முழுசா முடக்குவார். 

ஒரு தகப்பனுக்கு தெரியாதா, புள்ளைக்கு எது , எப்போ கொடுக்கணும்னு... ! ரொம்ப சமர்த்தா , அமைதியா இருக்கிற குழந்தைகளைவிட துரு துரு னு இருக்கிற குழந்தைகளைத் தான் எல்லாருக்கும் பிடிக்கும். தப்பு செஞ்சுட்டோமேனு , உள்ளுக்குள்ளேயே போட்டுக் குமைஞ்சுக்கிட்டே இருக்காதீங்க... ஐயோ.. போச்சேன்னு புலம்பாதீங்க... அவனுக்கு தெரியும், நமக்கு எது , எப்போ கொடுக்கணும்னு.... நாம எல்லாம் செல்லப் புள்ளை சார் அவனுக்கு.. !

இந்தா, தந்தேன் ... னு ஒரே நொடில தூக்கிக் கொடுத்தா, கனம் தாங்காம கீழே கூட போட்டுடுவீங்க... உங்களுக்கு கிடைக்கிற அருமையான விஷயங்கள் , எல்லாம் உங்களுக்கு இப்போ புரியாம இருக்கலாம்... ( இதோ, இந்த கட்டுரை மாதிரி... என்னதுங்க... ரொம்ப ஓவரா இருக்கா .. சரி... சரி.. ) , கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, எப்பேர்ப்பட்ட ஒரு அருமையான விஷயம் உங்களுக்கு கிடைச்சு இருக்குதுன்னு புரியும்... !

நான் திருந்திட்டேன். எனக்கு இப்போவே குடுனு , உடனே போய் மல்லுக் கட்டாதீங்க. முயற்சி திருவினை ஆக்கும். முதல் முறை கேட்டேன். கிடைக்கலை. திரும்ப கேளுங்க. முதல் முறை சரியா கேட்கலைன்னு புரிஞ்சுக்கோங்க... மனுஷ வாழ்க்கையில கர்மத்தால மனுஷன் கஷ்டப்படுறப்போ , அவனுக்கு கை கொடுக்கத் தான் , அந்த காலத்துல நம்ம தாத்தா , பாட்டி எல்லாம் கோவில் கட்டி வைச்சு இருக்கிறாங்க. இந்த காலத்துல , கட்டுற திடீர் கோவிலைப் பத்தி , பக்கா பிசினெஸ் ப்ளான் , பரிகாரம் எல்லாம் பண்ற கோவிலைப் பத்தி சொல்லலை. நான் சொல்றது கோவில்களைப் பத்தி...

மனசு அறிஞ்சு , திருந்தியாச்சா, விடாம போய் நில்லுங்க... முதல்லே மன பாரம் குறையும். அடுத்து எப்போவோ செஞ்ச தப்புக்குத் தான் , இப்போ கஷ்டப்படுறோம்னு மனோ பாவம் வரும். திரும்ப தப்பு செய்யக் கூடாதுன்னு பக்குவம் வரும். இப்போ செஞ்சா, நாளைக்கு கஷ்டப்படுவோம்னு தோணும். நடப்பு வாழ்க்கையில பாவம் குறையும்.. அதனால , நல்லதோட பலம் அதிகமாகி , கெட்டதோட பலம் குறையும். அப்புறம், கெட்டது ஒண்ணுமே இல்லாம போயிடும்.

கோவில்ல இருக்கிறது வெறும் கல்லுன்னு மட்டும், நெனைச்சுடாதீங்க... ! புத்தி தான் பலம், இல்லைன்னு சொல்லலை. நாமளும் புத்தியோட தான் இருந்தோம்.. இருந்தாலும் கீழே விழுந்து புழுதியிலே புரளலை ... அப்போ எங்கே போச்சு நம்ம இந்த புத்தி? திரும்ப நம்ம புத்தி , முழு பலத்தோட வேலை செய்யத்தான் , நாம கோவிலுக்கு போவோம்னு சொல்ல வர்றேன்.
ஆயிரம் வருஷத்துக்கு முந்தி கோவில் கட்டின ஆளுங்க எல்லாம் , பைத்தியக் காரனுங்க.. நாம தான் பயங்கர புத்திசாலி.. இல்லே?

தெய்வம் நம்மளை கை விட்டுடுச்சோனு நினைக்காதீங்க... நாம தான் தெய்வத்தோட கைப்பிடியை விட்டு இருந்து இருப்போம்... எந்த காலத்துல, (அறிவுள்ள )பெத்தவன் , புள்ளையை விட்டுக் கொடுத்து இருக்கான்? ஆனா, எத்தனை புள்ளைங்க , பெத்தவங்களை அநாதை இல்லத்துல, முதியோர் இல்லத்துல சேர்த்து இருக்கிறாங்க?

ஆன்மீக எண்ணம் இருக்கிறவங்களுக்கு  மட்டும் தான் , மனசை காத்து போல லேசாக்கி , கஷ்டங்களை சமாளிக்க கூடிய சக்தி இருக்கும். பதிலுக்கு பதிலு தாக்கி , செத்து மடியிறதுக்கு நாம ஒன்னும் மிருகமா பிறக்கலை... அபூர்வமான மனித இனம். துரோகத்தை தட்டி கேட்குற பொறுப்பை ஆண்டவன் கிட்டே விட்டுட்டு, நிம்மதியா நம்ம வேலையை நாம பார்ப்போம்... பொழைப்பை  பார்க்கலாம்யா... ... 

சட்டம், சாட்சின்னு ஆதரவு இல்லாதவங்களுக்கு அந்த தெய்வம் மட்டும் தான் துணை. போய், காலைக் கெட்டியா  பிடிச்சுக்கிட்டு விடாதீங்க... மனசு  துடிக்க துடிக்க நீங்கள் அழும் குரலுக்குத்தான் சக்தி அதிகம்..! நம் குரலுக்கு எவ்வளவு சக்தி இருக்குதோ, அவ்வளவு சீக்கிரம் அவன் ஓடி வருவான். அப்பன் வரும் முன், அன்னை உடனே ஓடி வருவாள்..!

ஏமாற்றம் தானே எதிலுமே என்று நினைக்க வேண்டாம்... ஏ (சூப்பர்) மாற்றமப்பானு, நீங்களே சீக்கிரம் உணர்வீங்க...!

ரொம்ப பெரிய கட்டுரையா ஆகிடுச்சோ... சரி , அடுத்து பார்க்கலாம்..!

நல்லவனா இருந்தா மட்டும் போதாது பாஸு, நம்பிக்கையோட இருங்க.... நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்..... ! ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்க ஆரம்பிங்க...! ஜென்ம ஜென்ம எதிரிகளுக்கே உதவி பண்ண ஆரம்பிச்சுடுவீங்க... ! வெட்டிக்கிட்டு கிடக்கவா நாம பிறந்தோம்... இன்னும் ஒரு பாவ மூட்டையா? போதும்பா சாமி...!

கோபத்தை குறைங்க... ! உக்கிரமா இருந்து ஒரு புல்லைக் கூட (புல் தான்) புடுங்க முடியாது. இதுவே பதட்டப் படாம, நிதானமா இருங்க.. புயலையே சமாளிக்கலாம்... ! துன்பியல் சம்பவங்கள் இனியும் தொடர வேண்டாம்... (தயவு செய்து யாரையும் புண்படுத்துறதுக்காக சொல்றதா நினைக்க வேண்டாம் ) 

கடைசி காலத்துல, வெறும் நினைவுகள் மட்டுமே எஞ்சி படுக்கையில் கிடக்கும் அந்த நேரத்தில, ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு மகத்தான மனுஷனா , நம்ம வாழ்க்கை அமைய , அந்த அருணாச்சலம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கட்டும்..!


வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

13 comments:

redfort said...

Guru Vannakkam,

Neengal Enakkakave eluthuvathu phol ullathu. Really super

OM SIVA SIVA OM.

Sashi said...

iyya vanakam

katturai mkkia nandraga ullathu mikka nandri

Sashi said...

ayya vanakkam


nalla katturai

THEIVAM said...

nalla pathivu thinam oru pathivu ithu mathiri pottinganna kandippa lifela sathikka mudiyum

SrideviRamakrishnan said...

manadhai urudhiyakkum katturai, mikka nanri.

yoga begginers said...

sir enoda name prabu,age 29 unga katurai ellam romba super. unga mail ennoda inbox vantha minimum 10 members ku forward panniduven.thank u so much. vaalga valamudan

Sudha M said...

Vanakkam Ayya,thangalin anaithu katturaiyum arumai.Thangalin indha muyarchigal ayarchi adayaamal thodara vendugiren.Nandri.

Waradan said...

Iraivanin mel melana nambikai konda Aanmeega anbargaluku oru puthu thembu alipathu pondra thodaraga ithu ullathu enbathai en ullam negilum vazhthukaludan solli kolla kadamai patulen Guruji!

Anonymous said...

konnutta vathyare.un ezhuthai padichaa manasula pudhu balam varudhu.

CHANDRASEKAR said...

யாகன்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற மனதுள்ள உங்களுக்கு என்னுடைய பனிவான வனக்கங்கள் .தொடறட்டும் உம் மக்கள் சேவை

THEIVAM said...

enna sir romba busyo ?? thinam oru pathivu ketteeeen ippo varam onnukku kuda vali illa

Bala said...

Sir,

The last paragraph touched my heart.

OM SIVA SIVA OM

YourFriend said...

>>>>>>>>>>>துரோகத்தை தட்டி கேட்குற பொறுப்பை ஆண்டவன் கிட்டே விட்டுட்டு, நிம்மதியா நம்ம வேலையை நாம பார்ப்போம்... பொழைப்பை பார்க்கலாம்யா...<<<<<<<<<<<

சார்... ஒரே ஒரு நிமிஷம். மனித வாழ்க்கையில் துன்பப்படும் தருணங்கள் பல இருக்கும். விரும்பியவர்களையோ தன்னையோ நோய் தாக்குறது, பிசினஸ்ல நஷ்டம், கடன் பிரச்னை, இப்படிப் பல. ஆனா, இது எல்லாத்துலயும் ரொம்ப கொடுமையானது, வலி மிக்கது எது தெரியுமா? நம்பிக்கை துரோகத்தை சந்திக்கிறது. அதுவும் நண்பர்கள் கிட்டேயிருந்து. அதை அனுபவிச்சவனுக்கு தான் அந்த வலி புரியும்.

>>>>>>>>>>>>>>>மனசு துடிக்க துடிக்க நீங்கள் அழும் குரலுக்குத்தான் சக்தி அதிகம்..!<<<<<<<<<<<<<<<<<<

நம்பினா நம்புங்க... போன டிசம்பர் மாசம் இருக்கும்... மிகப் பெரிய நம்பிக்கை துரோகத்தால் நிலைகுலைந்து கிட்ட தட்ட பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். இருந்தாலும், நீங்க சொல்ற மாதிரி ஏதாவது கோவிலுக்கு போய் 'ஓ'ன்னு அழனும் போல இருந்திச்சு. என் நண்பர் ஒருத்தரை துணைக்கு கூட்டிகிட்டு, திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் பக்கத்துல இருக்குற லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு ஓடினேன். (முன்னால ஒரு முறை அந்த கோவிலுக்கு போயிருக்கேன். அருமையான புராதன கோவில் அது).

எவ்வளவோ கோவில்கள் இருக்க, ஏன் நரசிம்மர் கோவிலுக்கு ஒடினேன்னு தெரியலே. ஏதோ அவருக்கிட்டே போனா நியாயம் கிடைக்கும்னு தோணிச்சு. போனேன். கோவில்ல பேர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணும்போதே எல்லாரும் பார்க்க அழுதுட்டேன். வெக்கத்தை விட்டு எல்லார் முன்னாடியும் "ஐயா... என் நண்பர்கள் இப்படி என் முதுகில குத்திடாங்க... எனக்கு உலகே இருண்டு போச்சு"ன்னு கதறுகிறேன். அவரு நம்மளை மாதிரி நிறைய கேஸூங்களை பார்த்திருப்பாரு போலிருக்கு. கூலா, "நீங்க எதுவா இருந்தாலும் அவருகிட்டே சொல்லுங்க" அப்படின்னு தலைவரை காண்பிக்குறாரு. (வேற யாரு நரசிம்மரை தான்!). என் கூட வந்த நண்பருக்கு அப்போ தான் நான் எந்தளவு அடிவாங்கியிருக்கேன்னு புரிஞ்சது.

இதை எழுதும்போதே என்னையறியாம ஒரு நிமிஷம் கண் கலங்கிடுச்சு. அது தான் சொன்னனே.... நம்பிக்கை துரோகத்தை தாங்குற சக்தி உலகத்துல எந்த மனுஷனுக்கு கிடையாது.

நரசிம்மர் வழக்கம் போல, என் பூர்வ ஜென்ம அக்கவுன்ட்டை பார்த்துட்டு சும்மா விட்டுட்டாரு.

என்ன செய்ய....

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com