Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

என்னதான் நடக்கும் பார்த்துடலாம்...! (அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை... Must read )

| Sep 14, 2011
நம் வாசகர்களுக்கு ஒரு மிக அதிசயமான ஒரு கட்டுரையை பகிர்ந்து கொள்ள விருக்கிறேன்... 

நம்மிடம் ஜாதகம் பார்க்க வரும் பல அன்பர்களும், புலம்புவது - ஆண்டாவன்னு ஒருத்தன் இருந்தா, அவர் ஏன் நம்மளை இப்படி சோதிக்கிறார்? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. ? கடவுளுக்கு கண்ணே இல்லன்னு , நொந்து போயி பேசுவாங்க... எவ்வளவோ பேர், மன விரக்தி அடைஞ்சு - தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்கிறதை , செய்திகள் ல பார்க்கிறோம்..!

எல்லோரும் , தயவு செய்து இதை படிங்க... உயிர் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தரும் சோதனை , நீங்கள் நிச்சயம் எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காகவே... ! எதை நினைத்தும் கலங்கவேண்டாம் என்று சொல்வது எளிதுதான்... ! ஆனால் ஒரு பக்குவம் உங்களுக்கும் வேண்டும். 
Whatever happens , life must move on... !  மேலே படிங்க...

அண்மையில் மெயிலில் எனக்கு வந்த இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான ஒரு பெரிய  விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆப்பரேசன்  தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிர்ஷ்ட (?)  மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கைக்கை  யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சிமுயற்சியிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.








பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர்  நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை நம் அனைவருக்கும்  சொல்லாமல் சொல்கிறது.

சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை நமக்கு  நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது.

ஆதாரம் : http://www.metro.co.uk/weird/56500-miracle-man-walks-again

3 comments:

Sakthi said...

Here the examplery man for Self confident!!

Tamilnadu said...

Really Inspiring Story, Thanks for Sharing it. God bless Him

YourFriend said...

உண்மையில் இந்த மனிதர் அதிசயப் பிறவி தான்.

இந்த பூமியில் உயிரினங்கள் அனைத்துமே போராடித் தான் வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் பல ஜீவன்கள், விலங்குகள் போராடித்தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றன. தாங்கள் உயிர் வாழ உணவை போராடித்தான் ஈட்டுகின்றன. அதே விதி மனிதனுக்கும் பொருந்தும்.

இந்த சம்பவத்தை படிக்கும்போது, எனக்கு கே.பி. அவர்கள் இயக்கிய 'வானமே எல்லை' படம்தான் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கையில் பல மட்டங்களில் தோல்வியுற்ற ஐவர் ஒன்றாக சந்தித்து ஒன்றாக தற்கொலை செய்வதாக முடிவு செய்துகொள்கின்றனர். அதற்கு நாளும் குறிக்கின்றனர். கிளைமேக்சுக்கு சற்று முன்பு தோன்றும் திரு.ராமகிருஷ்ணனை பார்த்து இவர்கள் வெட்கி தலைகுனிகின்றனர். தங்களது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழ்வை எதிர்நோக்க முடிவெடுக்கின்றனர். (ராமகிருஷ்ணன் ஒரு மாற்றுத் திறனாளி. தனது அமிழ்தினும் இனிய தமிழில் 80களின் இறுதியில் தூர்தர்ஷன் செய்திகளை வாசித்தவர். கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்.)

இவர்களை பார்த்து நாம் எந்த வகையில் குறைதுவிட்டோம் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு எதிர்நீச்சல் போடப் பழகினால் வாழ்வு இனிக்கும்.

(சொல்லத் தான் முடியுது. நடை முறை வாழ்க்கையில ஒரு சின்ன சோதனையை கூட தாங்கிக்கொள்ள என்னால் முடியவில்லை என்பது தான் சோகம்!)

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com