Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Living Extra : முதல் வருட நிறைவு கட்டுரை...! நம்பிக்கையூட்டும் சில நல் எண்ணங்கள் .....!

| Sep 29, 2011
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSRjbRuNqMla_K1HHi9islDFHN3D-_hBNzjs17bZKJO5omCQbE2UA
நமது வாசக அன்பர்களுக்கு , என் சிரம் தாழ்ந்த வணக்கம். நமது இணையதளம் தொடக்கி, இன்றோடு சரியா, ஒரு வருஷம் முடியுது...! உங்களோட ஆதரவு , பக்க பலம் , ஊக்கம் இல்லாம, இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்க முடியாது. தமிழில் சினிமா அல்லாத , பல்சுவை , வழிகாட்டி / ஆன்மீகத் தளங்களில் , இந்த குறுகிய கால கட்டத்தில் , வேறு எந்த தளமும் இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சி அடைந்ததில்லை என்று நினைக்கிறேன்.  உலக அளவில் தமிழ் படிக்கத் தெரிந்த , வாழ்க்கையில் ஒரு நல்ல தேடல் உள்ள அனைவருக்கும், அறிமுகமாகி உள்ளது.

எதேச்சையாக ஒரு முறை, வந்தவர்களை, கட்டிப் போட்டது போல் உட்கார வைப்பதில் - ஓரளவுக்கு வெற்றி அடைந்து இருக்கிறோம். வாரம் ஒருமுறையாவது வந்து , ஆற அமர , அந்த வார கட்டுரைகளை முழுவதும் படித்து, உங்கள் மனதுக்குள் அசைபோட ஆரம்பித்தால் போதும் , அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி. 

ஒரே ஒரு தருணத்திலாவது , உங்களுக்கு ஒரு சரியான யோசனை / வழி கிடைக்க , இந்த தளம் உதவியாக இருந்தது என்று மனதளவில் ஒரு முறையாவது , உங்களை நாங்கள் நினைக்க வைத்து இருந்தால் கூட போதும், அதை விட வேறு எங்களுக்கு எதுவும் தேவை இல்லை ...

நமது சமூகத்திற்காக, சக தோழர்களின் நலனுக்காக ,ஒரு சிறு துரும்பை கிள்ளிப் போட்ட , சந்தோசம் ஒன்றே போதும். இது ஒரு துவக்கம்தான். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. தொடர்ந்து , அந்த பரம் பொருள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன். 

தொடர்ந்து இன்னும் தரமான பதிவுகளை , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள , தொடர்ந்து முனைகிறேன்... வருங்காலத்தில் , நமது இணைய தளம் படிப்பவர்களுக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல் அனைவரையும் சந்தோசத்தில் திளைக்க வைக்கும்.

வெறுமனே படிக்கும் சுகத்தில் மட்டும் இருந்து விடாது, உங்களுக்கு நல்ல விஷயங்களாக தோன்றுபவற்றை - கடை பிடித்து வாருங்கள்.  


நாள் தவறாமல் , எனக்கு நல்ல எண்ண வித்துக்களை தூவிவரும் , நண்பர் ஆன்மீகக்கடல் வீரமுனி அவர்களுக்கும் மேலும், மின்னஞ்சல் மூலமும், பின்னூட்டங்களிலும், அவ்வப்போது நேரிலும் , மொபைலிலும் - வாழ்த்துக்களையும் , கருத்துக்களையும் பதிவு செய்த , நண்பர்கள் அனைவருக்கும் , மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்கிற பொறுப்பை அதிகரிக்கிறது.  

என்னை புடம் போட்டுக் கொள்ளவும், வாழ்க்கையின் நிதர்சனத்தை இன்னும் விரைவாகவும் புரிய வைக்கிறது. 
ஜாதக ஆலோசனை கடிதங்களுக்கு பதில் சொல்வதில்  மட்டும் , பெரிய சுணக்கம் உள்ளது. சின்ன , சின்ன கேள்விகளுக்கு , உடனேயும், நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டிய ஜாதகங்களுக்கு வாரம் ஒன்று .. அல்லது ரெண்டு என்ற வகையிலும் பதில் அனுப்பிக் கொண்டு இருக்கிறோம்.. பதில் கிடைக்காதவர்கள் மட்டும் கொஞ்சம் பொறுமை காக்கவும்.. ! ஆனால், பலருக்கும் பொதுவான வேண்டுகோள்.. பலருக்கும் பொதுவான ஆன்மீக ... ஆலோசனைகள் , நமது பல கட்டுரைகளிலேயே அடங்கி இருக்கிறது.. 

நமது ஜோதிட பாடங்களை படித்தாலும், சில முக்கியமான கட்டுரைகளை படித்தாலும், நீங்கள் தேடும் விடை, உங்களுக்கே புலப்பட்டு விடும். 

எந்த ஒரு பதிவும், ஏனோ தானோ வென்று இருக்காது. கவனமாக படித்தால், புதிதான ஒரு விஷயம் பளிச்சிடுவது நிச்சயம். .. .  

இதுவரை உளமார வாழ்த்தி வரும், என் நலனுக்காக தொடர்ந்து பிரார்த்தித்து வரும் , அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி. உங்கள் அன்புக்கு, நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை!


தயங்காமல் , கூச்சப்படாமல் , வயசு வித்தியாசம் , இன மத பேதம்  பார்க்காமல்  - உங்கள் கூட பிறந்த சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு குடும்பமாக இணைந்து, பல சாதனைகள் புரிந்து காட்டுவோம்.  அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை , வாழ்ந்து காட்டுவோம்..!

அப்படியே , கீழே இன்றைய ஸ்பெஷல் கட்டுரையை படித்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. ரொம்ப சிம்பிள் ஆன விஷயம் தான்.

எதுவுமே முடிவு இல்லை. உச்சிக்கு வந்துட்டோம்னு ஆட்டம் போடாதே.. ! விதியால் துரத்தப்பட்டு முடங்கி விட்டோமே என்று துவண்டு விட வேண்டாம். ஒரு ராஜபாட்டை பயணம் உங்களுக்கு நிச்சயம் உண்டு.. காலம் , விதின்னு எல்லாம் சொல்றோமே , அது எனக்கென்னவோ , பெரும்பாலானோருக்கு ஒருதலைபட்சமாகவே இருக்குதோனு நினைப்பு வர்றதை பெரும்பாலும் தவிர்க்க முடிவதில்லை. 


ஆனா, நிச்சயம் மாறும். மாறும்ங்கிற நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக்கையை உறுதிப் படுத்துவது போல நடந்த , ஒரு நிஜ சம்பவத்தை உங்ககிட்டே பகிர்ந்துக்கப் போறேன்.!


ஒரு சின்ன கிராமம். எங்க பக்கத்து ஊர் தான். அதுக்குள்ளேயே எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள். ஒரு சிலர் ஓஹோனு இருந்துக்கிட்டே இருக்கிறாங்க. ஒரு சிலர் அடி மேல் அடி வாங்கி நொந்து போறாங்க , ஒரு குட்டி கிராமத்துக்கே இப்படி, மெட்ராஸ் மாதிரி ஊருக்கெல்லாம்... ?


மெட்ராஸ் ஒரு ஊர் இல்லை சார். லட்சக்கணக்கான குடும்பத் தீவுகள் கொண்ட ஊர். பக்கத்து வீட்டுல கொலையே , நடந்தா கூட , டிவி பாத்துக்கிட்டே கம்முன்னு இருந்திடுவாங்க.. 


அந்த கிராமத்துல பெரிய குடும்பம் அது. சொந்தமா வயல் , பெரிய மில்லு, தீப்பெட்டி தொழிற்சாலை எல்லாம் இருக்கு. ஆனா, அவங்க பண்ணாத அட்டூழியம் இல்லை. வேலைக்கு வர்ற பொண்ணுங்க, கொஞ்சம் சுமாரா இருந்துட்டா போச்சு.   பணத்துக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லை. ஊர்ல அவங்க வைச்சதுதான் சட்டம்.  அண்ணன் , தம்பி எல்லாம் ஒண்ணா , படை பரிவாரத்தோட கூட்டு குடும்பமா இருந்தாங்க.பணம், திமிரும் இருந்தா , படிப்பு ஏறாது இல்லே..? பத்து முடிச்ச தம்பி தான் , அங்கே ரொம்ப படிச்ச தம்பி...


இவனுங்களுக்கு இப்படி ஒரு வாழ்வா? இவங்கல்லாம் அடங்கவே மாட்டானுங்களானு தானே கேட்கிறீங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஒரு இருபது வருஷம் கழிச்சுப் பார்த்தா, கேவலமா இருக்குது அவங்க நிலைமை. ஆண்டவன் நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு சோதனை வைச்சு இருந்தா கூட பரவா இல்லை. இவனுங்க ஆடுன ஆட்டத்துக்கு, உயரத்துல உச்சில தூக்கி , டமால்னு கீழே போட்டுட்டார். கூடப் பொறந்த அண்ணன் , தம்பிக்குள்ளேயே வெட்டிக்கிட்டு, தினம் பயத்துல செத்து பொழைக்கிறாங்க ... 


பெரிய (பிஸ்தா) அண்ணன் , சொத்துல தம்பி ஏமாத்திட்டான்னு நினைச்சு , அவனை போட்டுத் தள்ளி, தற்கொலை பண்ணிட்டான்னு ஊரை நம்ப வைச்சுட்டான்.  நடந்து ஒரு வருஷம் கூட முடியலை.. குடும்பமே தலை கீழாயிடுச்சு. இவரு , எப்ப வீட்டுக்கு வந்தாலும், பெரிய பாம்பு ஒன்னு கண்ணுல மாட்டுதாம். வீட்டுல தூங்க ஆரம்பிச்சாலே, திடீர் திடீர்னு பாத்திரம் உருளுதாம்.. !


மலையாள நம்பூதிரி ஒருத்தர் வந்து பார்த்திட்டு - வீட்டுக்கு உரிமையுள்ள ஒரு ஆவி இங்கே இருக்குது , அதுவா போனாத்தான், ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.


ஒரு சாதாரண குடும்பத்துல இருக்கிற நிம்மதி கூட இவங்களுக்கு இன்னைக்கு இல்லை, நான் நிறைய தப்பு பண்ணிட்டேன், எனக்கு விடிவே கிடையாதான்னு பொலம்பிக்கிட்டு இருக்கு பெருசு. எதுக்கு தெரியுமா? செய்யாத ஒரு தப்புக்கு, அவர் பையன் ஒருத்தனை , வசமா தூக்கி உள்ள போட்டு இருக்காங்க. வெளிய வர முடியலை. பொலிடிகல் பிரஷர்.தினம் அடி , பெண்டு எடுக்கிறாங்க..!அந்த ஊர்லேயே இன்னொரு சாதாரண குடும்பம் ஒரு முப்பது , முப்பத்தஞ்சு வயசுள்ள தம்பதிகள் உள்ள குடும்பம் - அன்றாடம் உழைக்கிறதை வைச்சுத்தான் , அவங்க சாப்பிடமுடியும். சின்னஞ் சிறுசுமா ரெண்டு பொம்பளை புள்ளைங்க. மூணாவதா ஒரு பையன்... 


 ஒருநாள், வேலை முடிச்சு வந்த வீட்டுக்காரரு, மனுஷன் திடீர்னு நெஞ்சைப் புடிச்சிக்கிட்டே உட்கார்ந்தாரு. எழுந்திருக்கவே இல்லை ! சின்னப் பிஞ்சுங்க கதறுன , கதறல் பார்த்தா,  அந்த கடவுளுக்கு கண்ணு இல்லைன்னு தான் தோணும். 
 

பாவம் அந்த அம்மா , என்ன பண்ண முடியும்? எப்போ, அந்த குடும்பம் தலை நிமிர.. எத்தனை வருஷம் ஆகும்? (நான் சொல்வது , மானத்தோட பிழைச்சு, முன்னுக்கு வர்றதுக்கு. எப்படி வேணும்னாலும் வாழலாம்னா... ஒரு மாசத்துல கூட , எங்கேயோ வந்திடலாம்.... )


விதவைன்னாலே ஈவு இரக்கம் எல்லாம் யாரும் படுவதே இல்லை. கண்ணாலேயே  தின்னுடறது மாதிரி தானே பார்க்கிறாங்க  ...


ஊர்ல இருந்தா, நிம்மதியா பொழைக்க விடுவாங்களா?  குடும்பத்தோட , மெட்ராஸ் வந்து , மத்தவங்க கிட்ட இருந்து மானத்தை காக்க , தாலியை  பேருக்கு கழுத்தில கட்டிக்கிட்டு - இட்லி , தோசை போட்டு விக்கிற கடை ஆரம்பிச்சாங்க.... அவங்க நல்ல மனசுக்கு , கடை வியாபாரம் சூடு பிடிக்க , ஒரு வருஷத்திலேயே சின்ன ஹோட்டல் ஆகிடுச்சு. பசங்களும் , தங்கமான பசங்க .... மூணு புள்ளைங்களும், ஸ்கூல் விட்டு வந்ததும் , அம்மாவுக்கு உதவி பண்ண, அப்படியே குடும்பம், படிப்படியா நிமிர்ந்தது....
 
இந்த இருபது வருஷத்துல , இவங்க சம்பாதிச்சு , ஊர்ல கிராமத்துல , கொஞ்சம் நிலம் வாங்கி , வீடு கட்டி  பொண்ணுங்க ரெண்டுக்கும், நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்து - பையன் இன்னைக்கு , இன்ஜினியரிங் முடிச்சிட்டு , சென்னையில ஒரு பெரிய கம்பெனில , நல்ல வேலைல இருக்கிறான். 


இன்னைக்கு இந்த அம்மா குடும்பத்துக்கு , ஊர்ல இருக்கிற மதிப்பு , மரியாதை - அந்த மில் ஓனர் குடும்பத்துக்கு கூட கிடையாது. அந்த வீட்டுல இருக்கிற ஒரு பொண்ணுக்கு, இவங்க பையனை கட்டி வைக்க கேட்டப்போ, நாசூக்கா மறுத்திட்டாங்க, ஜாதகம் பொருந்தலைன்னு.     


ஏன்க்கானு கேட்டேன், இல்லீங்க தம்பி, அந்த புள்ளை பாக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கிறா. அவங்க குடும்பத்துக்கு, எத்தனையோ பொண்ணுங்க விட்ட சாபம் , இன்னும் எத்தனை தலைமுறைக்கு இருக்குமோ..? நம்ம புள்ளைக்கு 
எதுக்கு அந்த கொடுமை.. வம்சம் நல்லா வரணும் இல்லே? 


எங்க தலைமுறைல யார் செஞ்ச பாவமோ, நான், என் புள்ளைங்க சின்ன வயசுலேயே , அவரை பறி கொடுத்திட்டு , ஆண்டவனை தவிர யாரும் இல்லாம நின்னோம். அவன் கருணை, இன்னைக்கு கொஞ்சம் பரவா இல்லாம இருக்கோம். அவன் போட்ட பிச்சை, எங்களுக்கு கிடைச்சு இருக்கிற வாழ்வு. நல்ல குடும்பத்துல, வசதி கம்மியா இருந்தாலும், நல்ல குணம் உள்ள அப்பா - அம்மா இருக்கிற வீட்டுல இருந்து பொண்ணு வந்தாப் போதும். 


உங்க கிட்ட , பொருத்தம் பார்த்தாக் கூட , நீங்களும் அப்படியே சொல்லிடுங்க தம்பின்னு சொன்னாங்க. 


இப்போ சொல்லுங்க, இந்த ரெண்டு குடும்பத்தில, யாருக்கு கடவுள் கருணை இருக்குது?புரை தீர்ந்த நன்மைனா , பொய் சொல்றதுல தப்பு இல்லை தானே. ஆனா, நிஜமாவே பொருந்தலை தான்.. ( எப்பூடி.. இன்னும் மெய்ண்டைன்   பண்றோம்ல!  )  


அதனாலே , என்ன சொல்ல வர்றேன்னா, நல்லவனா இருந்தா , ஒன்னும் பிரயோஜனமே இல்லையேன்னு - நொந்து போகாதீங்க. 


எப்பவுமே, இழப்பதற்கு ஒண்ணுமே இல்லை இதுக்கு மேலேன்னு ஒரு சூழ்நிலை வந்தா, அதன் பிறகும் தைரியமா மன தைரியத்தோட, நல்ல வழியில் நின்னு போராடினால், உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. அது கடவுள் ஆசீர்வாதம்னு பெரியவங்க சொல்றாங்க. 


கடவுள் ஏன், கடைசிலதான் வரணுமா? 


ஐயா, நீங்க இந்த ஜென்மத்துல இதுவரைக்கும் நல்லவனா இருந்து இருக்கலாம். ஆனா, போன ஜென்மத்துலே தப்பே செய்யாம  இருந்து இருக்க முடியுமா?


நெஞ்சை தொட்டு சொல்லுங்க.. இந்த ஜென்மத்துல தப்பே பண்ணலையா? இப்போவே இப்படின்னா, போன ஜென்மத்துல? 


நல்லவனா இருந்தாத் தானே, நமக்கு ஒரு வலி , ஏமாற்றம் இன்னும் வேதனையா இருக்கும்.... கெட்டவங்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, இல்லையா? 


செஞ்ச பாவத்துக்கு எல்லாம், தண்டனை கொடுத்திட்டு - கடைசியா, ஒன்னும் இல்லாம ஆக்கிட்டு, உங்க பாவ கணக்கை முடிச்சிட்டு - அதுக்கு அப்புறம் , கடவுள் நமக்கு அள்ளிக் கொடுக்கிறார்.


இதுக்கு அப்புறம், தொடர்ந்து தப்பு பண்ணாம இருந்தா.. அடுத்த பிறவில , முதல்ல  இருந்தே, கடவுள் கொடுக்க ஆரம்பிச்சிடுவார். 


நீங்க நல்ல நிலைமைல இருந்தா, உங்க பையனுக்கு முதல்ல இருந்தே, நல்ல லைப் - கடவுள் உங்க மூலமா கொடுக்க ஆரம்பிக்கிறார் இல்லையா? 
அவனையும் நல்ல விதமா , வளர்த்தா - அவன் பையனுக்கும் நல்ல லைப்..
உங்க அமைப்பு நல்ல விதமா இருந்தா, நீங்களே கூட உங்க மகனுக்கோ, இல்லை பேரனுக்கோ , திரும்ப பிறக்கலாம்.. யார் கண்டா? 


அந்த மாதிரி, நம் தனி ஒரு மனுஷனிடம் ஏற்படும் மாற்றம் - ஒரு தலை முறைக்கே வெளிச்சம். ஒரு தாத்தா இல்லை பாட்டி , கடைசி காலத்துல - உடம்பு முடியாம இருக்கிறப்போ , பேரன் கிட்ட எவ்வளவு பாசம் காட்டுறாங்க , எதையாவது சொல்லிக் கொடுக்கணும்னு எவ்வளவு பிரியப் படுறாங்க... 


அந்த அக்கறை , பாசம், நம்ம குடும்பத்து மேல என்னைக்கும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க... மனுஷனா பிறந்தாச்சு. கஷ்ட , நஷ்டங்களை தாங்கிக்கிட்டு , தொடர்ந்து முன்னேறுவோம்.. நாம எப்படி வளர்ந்தோம்கிறது போகட்டும்.. ,அது முடிஞ்ச கதை.  உங்க குழந்தையை நல்ல விதமா , வளர்த்துக் காட்டுங்க. உங்களுக்கு தெரிஞ்ச சகல நல்லது , கெட்டதையும் கத்துக் கொடுங்க....  நாம தெரியாம பண்ணின சில தப்பு , பாவங்களை , நம்ம புள்ளையும் பண்ண வேண்டாம்.. அவன் , அவனோட குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பான்.. அது , நாமளா கூட இருக்கலாம்.. அப்போ, நம்ம லைப் , இன்னும் பெட்டரா இருக்கணும்.


நாம நம்ம குடும்பத்துல வைக்கிற நேசம் , உங்களுக்கே உங்க மேல ஒரு மரியாதை ஏற்படுத்தும். அது போதும் சார்.. மனுஷனுக்கு..!


குடும்பத்துக்குள்ளே  எதுவும் ஈகோ பார்க்க வேண்டாம்..!


சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. 

அப்படி ஏதாவது , இப்போ பிரச்னை இருக்கு, ஒன்னும் நிம்மதியே இல்லைன்னு நினைக்கிறவங்க..

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். 

விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை  செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும். 

கட்டின  மனைவி தவிர , வேறு எந்த பெண்ணையும் மனத்தால் கூட தீண்டாத , ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடிஞ்சா , அதைவிட வேற ஒரு புண்ணியம் நீங்க பண்ண வேண்டியது இல்லை.... இப்போ உலகம் போற போக்குல, இதுதான் உண்மையிலேயே ஆண் / பெண் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சவால்.. !


நீங்க உலகத்தையே ஜெயிச்சாக்கூட வீட்டுல இருக்கிற , உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் சந்தோசமா வைச்சுக்க ட்ரை பண்ணுங்க..! உங்க குடும்ப சந்தோசத்தை விட , ஒரு பெரிய சொத்து எதுவுமே இல்லை.....


எப்பூடி.........., என்னதான்,  முதல் வருட நிறைவு , நினைச்சதை உளறின ஒரு கட்டுரைன்னு இருந்தாக் கூட, நம்ம டச் கொடுத்து முடிச்சோம்ல..!

கும்பிட்டுக்கிறேனுங்க..! 
மீண்டும் சந்திப்போம்..!


30 comments:

Waradan said...

ஸார் முதல உங்களுக்கு ஒரு என்னோட நள்வாழ்த்துக்கள்! உங்களோட பணி தொடர என்னை போன்ற ஆன்மீக தேடல் கொண்டவர்கள் நிச்சயம் உங்கள் பக்கமும் அய்யா வீரமுனி பக்கமும் இருப்போம்! இந்த பதிவும் மிகவும் உள்ளார்ந்த அர்த்தம் கொண்ட பதிவு! வாழ்த்த எனக்கு வார்த்தைகள் இல்லை! இறை உங்களில் இருந்து எங்களை நாள் வழி படுத்தாத்டும்!

spiritual ocean said...

இணையப் பெருங்கடலில் ஆன்மீகப்புரட்சியை துவக்கியிருக்கும் தங்களை ருத்ராட்சம் கொடுத்து வரவேற்கிறேன்.

jayachandran said...

நான் ஆற அமர உட்கார்ந்து என்னால் முடிந்த வரை நமது தளத்தை படித்து முடித்து விட்டேன். உங்கள் சேவை என் போன்றோருக்கு மிகவும் தேவை சகோதரரே..

sowri said...

Thank you for the wonderful article. Its very apt and timely for me at least. I hope you will continue to guide us and pray divine support.

redfort said...

Dear sir,

First i congrats to you for start the 2nd year.

Also iam crying now because the story touching me. Becase the mother was as dito my mother.

YA My father was gone away on my 9th year. On that day My yonger brother was 20 days child.

The situvation was critically gone near about 30 yrs.

But the GOD grace now iam in tirupur working at PVT concern and also running one garment unit separatly with Own home,and car.

Also my brother working as a government teacher in my native.

ELLA PUGALUM EN THAYARUKKE.(AYYAMMAL)SHE IS ALIVE WITH US.
ELLA PUGALUM ERAIVANUKKE.

redfort said...

UNGAL PANI MENMALUM THODARA ELLAM VALL ERAIVAI PRATTHIPPOM.

EMOTIONALLY,
SENGO

thiru said...

All the very best.
Continue your great work.

The almighty GOD be with you and your readers.

mann said...

nice!!but y cant u avoid words like dogs,rape???? it doesnt sound tht good!!!

Reflections said...

Seriously, this was a very good article, especially your aspect of " bad things can happen to good people but they will come out good.
Thanks.

Gobinat said...

vazhthukkal, you are right as on your words.
Thanks Gobinat/Tirupur

Trading Options said...

Best wishes for first anniversary and many more years to come!!!

Rishi said...

Thank you each & every one, who have sent wishes & wished by heart.

Thank you Karthi, Nagesh, Sengo, Thiru, Gobi, Mann, sowri, Jayachandran, Reflections, trading options & All the readers...

Thank you Mann --- I have altered the words & will ensure in future also..

My sincere thanks to all of you once again..!

Nanthakumar said...

Dear Sir,

I want to congratulate your all efforts...Not only myself but also my entire family would have to tell thanks to your such a great great articles like this...
We expect this (second year)celebrations will be continue more than a hundred year
Thank you so much we will pray to the Almighty God to give you and your family's peace and health, Wealth.

Thank you,
S.Nandakumar,Trichy...

Sankar Gurusamy said...

வாழ்த்துக்கள்.. தங்கள் தளத்தில் பல நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

http://anubhudhi.blogspot.com/

Suresh said...

Thank you very much for your articles. I pray to the god for your long and prosperous life to continue your work for this mankind.

Suresh said...

Thank you for your wonderful work to this mankind. I pray to the god for your long and prosperous life to continue your work for this mankind.

THEIVAM said...

100 vathu varuda niraivu katturaiyum ningale elutha iravanai vendukiren

YourFriend said...

அட... இன்னைக்கு முதல் வருடமா? பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்!

நல்ல விஷயங்களை எழுதி வலையுலகில் ஒரு வருஷம் நிறைவு பெறுவது என்பது உண்மையில், முப்பத்திரண்டு பற்களுக்கிடையே ஒரு நாக்கு கடிபடாமல் வாழ்வது போன்று தான். சாதிச்சிபுட்டீங்க ஐயா!

இந்த பதிவை படிக்கும்போது, ஏதோ நம்ம புலம்பலுக்கு பதில் சொன்னாப்ல இருக்கு. ஹூம்... சரி.. சரி...

சற்று விரிவான கமெண்ட்டை திரும்பவும் அளிக்கிறேன். அதில், இந்த பதிவு பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

வந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்கள் சார்பாக ஆசிரியருக்கு மீண்டுமொருமுறை நன்றியும் வாழ்த்துக்களும்.

vprasanakumar said...

sir

thangal katurai migavum nanraga ulladhu.

sekar said...

அய்யா வணக்கம். தங்களது இந்த தொண்டு நமது இந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளது . தங்களது இந்த பணி தொடர எனது இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்

கண்ணன் ஜே நாயர் said...

வாழ்த்துக்கள். அருமையான தளம் உணமையில் நீங்கள் சொன்னது போல் பல நேரங்களில் பல கேள்விகளுக்கு இறைவனே இந்த தளத்தின் வாயிலாய் பதில் சொன்னதாய் உணருகிறேன்.

/* பதில் கிடைக்காதவர்கள் மட்டும் கொஞ்சம் பொறுமை காக்கவும்.. !*/ மன்னிக்கவும் நானும் அவசர பட்டு விட்டேன் :)) உ ங்கள் சேவை தொடரட்டும் ...

வாழ்க வளமுடன்

dawoodkhanameer said...

முதல் ஆண்டு வாழ்த்துகள் .
எதேயசையாகவே உள்ளே வந்தேன் .இன்று every day -program ஆகா ஆகி விட்டது உங்கள் இணையத்திற்கு visit செய்வது.
மீண்டும் ஒரு வாழ்த்து .

R.V.Nathan said...

Congradulation to 1 year baby&many more returns of the day,your"s R.V.Nathan.

சிவஹரிஹரன் said...

முதல் பிறந்தநாளுக்கு எனது பணிவான வணக்கங்கள். தாங்கள் மேன்மேலும் இதுபோன்ற பல நல்ல கருத்துகளை இணையதளத்தின் மூலம் வழங்கிட, தங்களுக்கு மேலும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதிடத்தை கொடுத்திட எல்லா வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன். - அன்புடன் - சிவஹரிஹரன்.

venkatesan.P said...

Very good work sir. Keep it up. My hearty wishes for you.

venkatesan.P said...

keep posting about Joint family and its importance

Anonymous said...

ஐயா வணக்கம்.
தங்கள் வலைப்பூ ஓர் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள தளம். இந்த வருடம் மேலும் சிறக்க இறைவன் அருள் உண்டு. தங்கள் நலத்திற்கும் இறை அருள் உண்டு. நன்றி.
தியாகலிங்கம் லண்டன்.

YourFriend said...

//நீங்க உலகத்தையே ஜெயிச்சாக்கூட வீட்டுல இருக்கிற , உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் சந்தோசமா வைச்சுக்க ட்ரை பண்ணுங்க..! உங்க குடும்ப சந்தோசத்தை விட , ஒரு பெரிய சொத்து எதுவுமே இல்லை.....//

இந்த கட்டுரையிலேயே எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இது தான் வாத்யாரே.

ஒவ்வொருத்தரும் அவன்வங்க குடும்பத்தை நல்லா கவனிச்சிகிட்டாங்கன்னா போதும், நாட்டுல பாதிப் பிரச்னை தீர்ந்துபோயடும்.

இந்த ஜென்மத்துல என்ன தான் நல்லவனா இருந்தாலும் போன்ஜென்மத்து பாவங்களோட பலனை அனுபவிச்சே ஆகணும்னு சொல்றீங்க... என்ன சொல்ல... ஒத்துக்க தான் வேணும். அதை தீர்க்குற மாதிரி கோவில் ஏதாவது இருந்தா சொல்லுங்க பாஸ். முடிஞ்சா ஒரு எட்டு போயிட்டு வந்துடுறேன்.

மத்தபடி அசத்தல் பதிவு. சுய பரிசோதனை செய்துகொள்ள ரொம்ப உதவியா இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Suresh said...

Congratulations and all the best for more success.

Anonymous said...

very beautifully written. Even i use to feel, people doing good always lead a very difficult life. Yes...I know good deeds will always return back...but then there is a time limit. when that time limit crosses, good people start feeling irritated.

Anyways pl keep up the good work.

Also can u publish "Swarna Ganapathy Mantram". Is is possible?

shashikala

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com