Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நீங்கள் ஏன் கடவுளை நம்புகிறீர்கள் ?

| Sep 6, 2011
நமது சமீபத்து கட்டுரைகளைப் படித்து விட்டு , வாசகர்கள் சிலர் - சில தினங்களாக , பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கொஞ்ச நாளா, ரொம்ப ஓவராவே தான் இருக்கு. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அவர்களுக்கு சற்று விரிவாகவே , விளக்கம் சொல்ல வேண்டியிருப்பதால் இந்த பதிவு அவசியமாகிறது.

 நமது கட்டுரைகளில் பெரும்பாலானவை மூட நம்பிக்கையை வலியுறுத்துவதுபோலவே இருப்பதாக எழுதுகிறார்கள்.  சுய சிந்தனை, சுய எண்ணம் மட்டும் இருந்தாலே போதுமே.. எதற்கு இத்தனை கடவுள்களைப் பற்றி எழுதுகிறீர்கள்.. தப்பு நடக்கும்போது , நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும்.. ? தெய்வம் கேட்கட்டும் என்று ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதனைத்தையும்,  பகுத்தறிவு , நாத்திக சிந்தனை என்று ஒதுக்கிவிட முடியாது.

நியாயமான கேள்விகள் தான்.

நமது முந்தைய கட்டுரைகளில் நான் மிகத் தெளிவாக சில விஷயங்களை எழுதி இருக்கிறேன். அவர் படித்து இருக்க நியாயமில்லை. தன்னால் எதையும் கண்ட்ரோல் பண்ண முடியும் என்று நினைப்பவர்களுக்கு தெய்வத்தின் அவசியமே இல்லை. அப்படி இல்லாதவர்களுக்கு?

உங்களை மாதிரி பலம்  பொருந்தியவர்கள் அவர்களுக்கு உதவினால் பரவா இல்லை. ஒரு சில காரியங்களுக்கு , யார் உதவியும் பலன் அளிக்காது. தானாகவே நடந்தால்தான் உண்டு. 

ஐயா , இந்த இணைய தளத்தில் எனது கட்டுரைகள் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி , அவர்களே விரும்பி  , ஆன்மீக வழியினில்  செல்ல அடையாளம் காட்டுவது  மட்டுமே.  சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதை செய்தால் நல்லது என்று தான் சொல்லுகிறோமே ஒழிய, இதை செய் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 

மக்கள் ஒன்றும் நாம் சொல்லுவதை எல்லாம் நம்புபவர்கள் , என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாளுமல்ல. அவர்களை முட்டாள்களாக்குவது ஏன் நோக்கமுமல்ல.

கோவில்களோ, மசூதிகளோ , சர்ச்சோ  - இன்று யாரும் செல்வதே இல்லையா? நீங்கள் ஏன் கடவுளை நம்புகிறீர்கள் என்று எப்போதாவது , யாரிடமாவது கேட்டுப் பார்த்து இருக்கிறீர்களா? 

நோய்நொடி, கடன், கல்யாணம், குழந்தையின்மை , குடும்பத்தில் நிம்மதியின்மை , நம்பிக்கைத் துரோகம் - என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள். புஜ பல பராக்கிரம சாலி கூட ஒன்னும் செய்ய முடியாது.

எப்போது - பிரார்த்தனைகளின் பலன்களை கண்கூடாக உணர முடியுமோ, அப்போதுதான் தெய்வ நம்பிக்கையே பிறக்கிறது. மொட்டை போடுறதும், தீ  மிதிக்கிறதும், தீ சட்டி ந்துறதும்,  அலகு குத்துறதும், காவடி எடுக்கிறதும் , பால் குடம் எடுக்கிறதும் , உண்டியலில் காசு போடுவதும், கோவில் காரியங்களுக்கு காசு தருவதும் - வெறுமனே பந்தாவுக்குனு நெனைக்கிறீங்களா?

ஒரு எடிட்டர் என்கிற முறையில் - நானும், பல விஷயங்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். பெரியாரின் , அண்ணாவின் புத்தகங்களை - நானும் படித்தவன்தான். நான் ஏன் நாத்திகனானேன்.. படிக்கும்போது , நானும் பல தடவை , ஆஹா சொன்னவன்தான். ஆனாலும், நடைமுறை வாழ்வில் - சில ஆலயங்களுக்கு சென்று, என் பிரார்த்தனை - நம்ப முடியாத அளவில் , நிறைவேறும்போது, அந்த சக்தியினால் தான் என்று என் உள் மனதுக்கு தோன்றும்போது - தெய்வம் பொய் என்று , முழுவதுமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. பலப்பல இன்னல்கள் வந்தாலும், வந்த சுவடே தெரியாமல் போன போது  - என் ஒருவனின் புத்தி பலத்தால் மட்டுமே என்று முட்டாள் தனமாக நம்பத் தோன்றவில்லை. 

என்னைவிட அறிவு ஜீவிகளும், பலசாலிகளும் , தகுதி உள்ளவர்களும் என் கண்  முன்னே இருக்கும்போது - அவர்களில் பெரும்பாலானோரைவிட - ஒரு மன நிறைவான வாழ்க்கை எனக்கு கிடைக்க , எந்த தெய்வத்தின் அருளோ, யார் செய்த புண்ணியமோ என்ற கேள்வி எனக்குள்  எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எனக்கு தெரிந்த சில நல்ல விஷயங்களை , நான் கற்ற சில வித்தைகளை , உணர்ந்த சில விஷயங்களை - எந்த பிரதி பலனும் பாராது , நான் பகிர்ந்துகொள்கிறேன். 

மெனக்கெட்டு , நீங்கள் பின்னூட்டம் போடுவதால் , உங்கள் நேரத்தையும், உழைப்பையும், அக்கறையையும் மதித்து - மிக்க வந்தனத்துடன் இதை எழுதுகிறேன். மற்றபடி,  நீங்கள் எப்படி என் கட்டுரையை படித்து , மாறப்போவதில்லையோ - அதைப் போல , உங்கள் பின்னூட்டங்களைப் படித்து  - நானும் மாறப் போவதில்லை. உங்கள் பாதையில் நீங்கள்  பயணியுங்கள். நான் என் பாதையை தீர்மானித்துக் கொள்கிறேன்.....


பழுத்த மரம் தான் கல்லடி படும். இதைப் போல , எத்தனை விமரிசனங்கள் வந்தாலும், தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கிறது. ஆனால், வெறுமனே இதைப் போலவே விமரிசனங்கள் வந்தால்...? நாம செய்றது வீண் முயற்சியோ , என்கிற சந்தேகம் வந்து விடுகிறது.


நம் வாசகர் அனைவரும் - பின்னூட்டம் போடுவது  தான் இல்லையே தவிர, நமது கட்டுரைகள் உங்களுக்கு ஓரளவுக்காவது பிடித்து இருக்கும் என்று நம்பியே, ( நிஜமாவே அப்படித்தானுங்களே  ... ! ) நான் தொடர்ந்து கட்டுரைகளை பிரசுரிக்கிறேன்..  யாரோ துன்பத்தில் இருப்பவருக்கோ, ஆன்மீக தேடல் இருப்பவர்களுக்கோ - தக்க நேரத்தில் , நமது சில கட்டுரைகள் பயனளிக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன், தொடர்ந்து பயணிக்கிறேன்...

நம் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்... அப்பப்போ டச் ல இருங்க.. Either through E -mail or  comments )

 உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கும், அன்புக்கும் - என் மனமார்ந்த நன்றிகள் !

17 comments:

YourFriend said...

//////யாரோ துன்பத்தில் இருப்பவருக்கோ, ஆன்மீக தேடல் இருப்பவர்களுக்கோ - தக்க நேரத்தில் , நமது சில கட்டுரைகள் பயனளிக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன், தொடர்ந்து பயணிக்கிறேன்...//////

நூறு சதவீதம் உண்மை பாஸ்.

நீங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை தொடரவும்.

தங்களுக்கு இருக்கும் இணைய அறிவு மற்றும் கணிப்பொறி திறனை பயன்படுத்தி, வலைத்தளம் என்ற பெயரில் வாஷ்பேசின்கள் நடத்துபவர்கள் தான் தற்போது அதிகம். ஆனால், நீங்கள்... எப்பேர்ப்பட்ட மகத்தான் பணியை செய்து வருகிறீர்கள்.

பொதுவாகவே வலைத்தளங்களில் கட்டுகதைகள், கலகங்கள், வக்கிரங்கள், தனி நபர் தாக்குதல்களுக்கு தான் ஏதோ வகையில் பின்னூட்டங்கள் அதிகம் இருக்கும். அதற்காக அவை உயர்ந்தவைகளாகிவிட முடியுமா? தகுதி என்ற ஒன்று இருக்கே பாஸ். அது நம்ம்ம தளத்துக்கு நிறைய நிறைய இருக்கு. அந்த ஒரு சந்தோஷமே போதும் உங்களுக்கு.

உங்கள் ஊக்கத்தை உற்சாகத்தை குறைப்பதற்காக திட்டமிட்டு போடப்படும் பின்னூட்டங்களை சட்டை செய்யவேண்டாம்.

நல்லவங்க வாழ்வாங்க... என்ன கொஞ்சம் நேரமாகும். அவ்வளவு தான்!

சரிதானுங்களே...

Anonymous said...

சமீப காலமாக நான் உங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
உங்கள் கட்டுரைகள் மிக மிக பிரமாதம். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.

Kalai said...

உங்கள் சேவை வளர்க, சிலர் அப்படித்தான்.
நான் உங்கள் இணையதளத்தை ஒரு மாதமாக வாசித்து வருகிறேன்.
உங்கள் கட்டுரைகள் மிக மிக பயணுள்ளதாக உள்ளது. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.

ismail said...

///நீங்கள் எப்படி என் கட்டுரையை படித்து , மாறப்போவதில்லையோ - அதைப் போல , உங்கள் பின்னூட்டங்களைப் படித்து - நானும் மாறப் போவதில்லை. உங்கள் பாதையில் நீங்கள் பயணியுங்கள். நான் என் பாதையை தீர்மானித்துக் கொள்கிறேன்.....///

மிகவும் எதார்த்தமான உண்மைகள். நம்பிக்கை கொண்டவனுக்கு இருளே ஒளி. நம்பிக்கை இல்லாதவனுக்கு எல்லாம் இருளே.
தேவைப்பட்டவர் அவரவர் பகுத்தறிவுக்கு உட்பட்டு ஆராய்து எடுத்துக்கொள்ளட்டும்.
வேதாத்ரி மகரிஷி அவர்கள் சொன்னபடி "சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய் சிந்தித்தே தெளிவாய்".

NageshRWD said...

Nallatha parata ketka nallu peru iruntha atha kandu kadupagi atha kurai solravanga ipo nethu illa eppavumae irukanga! Neenga avangala ninachi unga sevaia vitutathinga! Thodaratum ungal sevai! Pakka thunaiai nangal endrum ungaludan!

eswar said...

தாங்கள் கற்றதை சமுகத்திற்கு பயன்படும்படி எடுத்துரைக்கின்றீர் இது தங்களது சமூகபணி ஆகவே இப்பணியை நிறுத்திவிடாதீர் தொடர்ந்து எங்களது ஆதரவு உண்டு

நன்றி,

மா. ஈஸ்வரன்

perumal shivan said...

boss unga pathiva padikkumpothellaam manam saththiyamaay nallathu perugirathu !

neenga entha nambikkaiyil ezhuthugireerikalo athaivida athigamaagave antha nambikkai uyirkkondullathu .

naan earkanave solliyullen !
ungal shevaikku naan kadamaippattullen.

natpudan s.perumal

bala said...

உங்கள் பிளாக்கை ஒரிரு வாரமாகத்தான் பார்த்து வருகிறேன். மிக அருமை...!
உங்களின் கருத்துக்கள் என்னைப் போன்ற ஆன்மீகத்தில் முழு நம்பிக்கையுடைய பலரைச் சென்றடைந்து ஆன்ம பலத்தை நிச்சயமாக அதிகரிக்கும். வாழ்க்கையில் ஆறுதல் தரும்.
அவர்களுக்காகவாவது தங்களின் கட்டுரைகளைத் தொடருங்கள்...
நன்றி

பாலா said...

ஒரிரு வாரங்களாக உங்கள் பிளாக்கை பார்த்து வருகிறேன். மிகஅருமை
தங்களின் கருத்துக்கள் என்னைப் போன்ற ஆன்மீகத்தில் முழு நம்பிக்கை உள்ள பலருக்கு ஆன்ம பலத்தை கூட்டும். வாழ்வில் நம்பிக்கை அளிக்கும். ஆகவே யாரோ ஒரு சிலருக்காக வருத்தப்படாமல்... கட்டுரைகளைத் தொடருங்கள்...

அருட்சிவஞான சித்தர் said...

ஆன்மிக வலைத்தளங்களில் உங்களின் தளமும் சிறந்ததாகவே உள்ளது. உங்களின் தளத்தை எனது நண்பர்களிடமும் பரிந்துரை செய்துள்ளேன். குறைகூறுபவர்களைப்பற்றி தாங்கள் எதுவும் கண்டுகொள்ள வேண்டாம். அதுவும் இறைவனின் சோதனையே ஆகும். தொடர்ந்து நல்ல கருத்துக்களை கூறுங்கள். வரவேற்க நல்லவர்கள் நான்கு பேர் இருந்தாலே போதும். அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

Rishi said...

கருத்துகளையும் , பாராட்டுக்களையும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நமது கட்டுரைகளை படித்து வாருங்கள். குறைகள் ஏதாவது இருப்பின், தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.. அது , இன்னும் எங்களை பக்குவப் படுத்த உதவும்... மிக்க நன்றி !

rajram said...

Recently I have started to read this web page. Really its very nice and I am getting lot of information. Well done. Keep it up.

yuvarajxp said...

Sir, your articles are really Superb. My best wishes to you.

renu said...

Ayya, I came across your blog while searching for vasthu informations. But then I got very interested in your posts and became a regular visitor. Am deep routed in our culture and religion. What you are doing is a great service for people like us, who have many questions about life, karma, soul, etc. 1000s may have disbelief, but please do not stop your service,because, some like me find your words valuble.

Balaji said...

Sir, You are doing a great job to many people. I have been following your blog. I've changed my life accordingly like before seeing this site and after. Please don't mind other negative comments. We need your help through out the life. After seeing this post I felt sad, why didn't we comment on every post and encourage his great person. I believe you have been appointed as a owner of this site by the god to serve the people enough to get away our ignorance and to show a divine direction to live honestly also peacefully with dignity. You are really great and what you are doing is a great job. I had tried to let other know about the knowledge what I got though this divine blog. Our family appreciate your job. Thanks. You should live a long with health and wealth.

Regards,
Pandiya Balaji.

Rajali1910 said...

PLS CONTINUE TO WRITE ABOUT THE TRUTH .....TRUTH OF RELIGION WHICH SAYS THE RIGHT PATH NOT THE ONLY RIGHT PATH LIKE OTHERS PREACH AND DO PROPAGATE INTOLERANCE...WE ARE NOT GOING TO BE PERMANENT IN THIS WORLD BUT THIS WORLD MAY BE THERE EVEN AFTER WE GO .
PLS WRITE UR WRITINGS ARE FREING ME FROM MY RIGHT RIGID STANDS.....
THANKING U SO MUCH.....
CONTINUE TO WRITE..
REAGRDS
RAJA

Rajali1910 said...

DEAR AYYA
PLEASE CONTINUE TO WRITE...
FOR US..
REGARDS
RAJA

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com