Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

| Sep 26, 2011
சாயந்திரம் ஆச்சுனா, சரக்கு. இடையிலே, மொபைல் ல - எஸ் ஹனி , லவ்   யூ செல்லம் னு - ஒரு நாலு பேருக்கிட்ட பேச்சு. கட்டின பொண்டாட்டி பேசுறப்போ , மீட்டிங் முடிய போகுது கண்ணு. இதோ வந்துடறேன் .... 
இது தான் இன்னைக்கு மாடர்ன் யூத் பண்ணிக்கிட்டு இருக்கிற , ஒரே வேலை. நல்லா சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் , காசு பார்த்திட்டு - ஒரு   ரெண்டு , மூணு பொண்ணுங்க , அவன் பின்னாடி சுத்தும். காசுக்குத்தான்னு தெரியும் , இவருக்கும். இருந்தாலும், இவரும் அதை தொடர்வார். கட்டின பொண்டாட்டி தவிர, எல்லா பொண்ணுங்களுமே , எதோ ஒரு வகையிலே - இவரை இம்ப்ரெஸ் பண்ணுவாங்க.. ! இப்படியே வண்டி ஓடும்.     

சிட்டில பாதி இளைஞர்கள் இப்படித்தான். மீதி பேரு , இப்படி இருந்தா , நல்லா இருக்குமேன்னு நினைக்கிற இளைஞர்கள். 


தத்வமசி  னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும்


கெட்ட எண்ணங்கள் வராம இருக்க, நல்ல எண்ணங்கள் வளர்க்கணும். அதுக்கு முன்னே , நமக்கு நம்மை பத்தி நல்லா தெரியனும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை. இது தெளிவான கட்டுரை படிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க உங்களுக்குள் , கொஞ்சம் குட்டையை குழப்ப மட்டுமே. குழம்பிய பிறகு, மனது தெளிவடைய ஆரம்பித்த பிறகு, உங்களை நீங்கள் கவனியுங்கள். உங்களைவிட நல்லவர் யாருமே இல்லை... மேலே தொடரலாம்..!

"ஓ" போடு பாட்டு ஹிட் ஆன "ஜெமினி" படத்தில வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருக்கிறாரு.. ஆனா , அதை நம்மில் எத்தனை பேரு நோட் பண்ணிருப்போம்னு தெரியலை. .. தலை கீழா பொறக்கிறான்னு வர்ற பாட்டு.. .... வாய்ப்பு கிடைக்கும்போது , பொறுமையா கேட்டுப் பாருங்க... 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSEr8IXXKpoTkhtu4muqHkX679Gf5SY9CxUUotbYIF_ChUQ_Ifr
ஒரே ஒரு துளி யில் இருந்து உருவாவது இந்த உயிர். இத்தனைக்கும் , ஒரு துளி விந்துவில் இருப்பது , பல கோடி ஜீவ அணுக்கள். உங்களுக்கு முன்னே இருந்த ஒரே ஒரு அணு , முண்டிப் போயிருந்தா , இன்னைக்கு நீங்க இல்லை. உங்களுக்கு பதிலா , உங்க அண்ணாச்சி தான் , பிறந்து இருப்பாரு. அத்தனையும் தாண்டி , நீங்க , பிறக்கும்போதே , கோடி பேரை ஜெயிச்சு , இந்த பூமியைப் பார்க்க ஆசைப் பட்டு , வெற்றி வீரனா வந்து இருக்கீங்க...

பிறக்கும் முன்னாலே இருந்தே போராட்டம் தான் , ஆனா அதுலே நீங்க வெற்றி பெற்று சாம்பியனா வந்து இருக்கீங்க. போராட்டம் ஒன்னும் நமக்கு புதுசு இல்லை. வெற்றியும் நமக்கு புதுசு இல்லை. 
எப்பவுமே எடுத்த முயற்சி எல்லாம் தோத்துப் போகுதே, வாழ்க்கையிலே முன்னேறாம இப்படியே இருந்திடுவோமோனு, பயப்படாதீங்க... உங்களால கண்டிப்பா முடியும். உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்து காட்டுவீங்க.. அதுக்குத் தான்,  நீங்க வந்து இருக்கீங்க...

உங்களோட சக்தியை , நீங்க உணர்ந்து - நம்பிக்கையுடன், வாழ்க்கையில் தொடர்ந்து பயணியுங்கள்... வெற்றி நிச்சயம்... !


நமக்கு உலகத்திலே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்குது தெரியுமா? முதல்ல நமக்கு நம்ம யாருன்னு தெரியுமா? நம்ம உடலைப் பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரியுமா?

ஒரு சட்டை வாங்குறோம், பைக் வாங்குறோம்..... இதை எல்லாம் , ஒரு விலை கொடுத்து வாங்குறோம். சரிதானே ! அதன் பிறகு,  அது நம்ம பொருள்.

ஐயா, சரி ஐயா , உங்க உடம்புனு சொல்றீங்களே, அதுக்கு ஏதாவது விலை கொடுத்து வாங்கினீங்களா? இல்லை, நீங்க வாங்கலையே . அப்புறம் எப்படிம், என் உடம்பு னு உரிமை கொண்டாடுறீங்க?

சரி, இந்த உடம்பு எப்படி வந்துச்சு - உயிர் கொடுத்தவங்க ,  உங்க அப்பா , அம்மா ரெண்டு பேரும்தானே. உரிமை கொண்டாட வேண்டியவங்க அவங்க தானே.  நியாயமா , இந்த உடம்பு உழைச்சு ஓடாப் போக வேண்டியது அவங்களுக்குத் தானே. ஆனா , எத்தனை பேரு , அப்படி நினைக்கிறோம்?  எத்தனை தடவ பெற்றவங்களுக்கு கண்ணீர் வர வைச்சு இருக்கிறோம்? பெத்தவங்களை எவ்வளவு வேதனைப் பட வைக்கிறோம்? எத்தனை முதியோர் இல்லங்கள், அதில் எத்தனை பேரு ஆதரவு இல்லாம , கண்ணீரும் , கம்பலையுமா? உங்க உயிர் தங்கிக்கிட வாடகைக்கு வீடு கொடுத்த , வீட்டு உரிமையாளர்களுக்கு , உங்க கூட , ஒரே வீட்டில தங்கிக்கிட கொடுப்பினை இல்லை.  

வயசான அப்பா , அம்மா இருந்தா , உங்க கூட வைச்சுக்கிட முயற்சி பண்ணுங்க. அவங்க பண்ற எதுவும் உங்களுக்கு பிடிக்கலை, சரி, பரவா இல்லை - வாழ்க்கையிலே , எத்தனையோ விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, சகிச்சுக்கிட்டு போறோம். பெத்தவங்களை பார்த்துக்க முடியாதா? 

வேற ஒருத்தரோட உடமை , உங்க கிட்ட இருந்தா அதை எவ்வளவு பத்திரமா பாதுகாக்கணும்? திரும்ப கேட்டா , எந்த சேதாரம் இல்லாம கொடுக்கணும் இல்லை. நம்ம உடம்பு , நம்ம உடமை இல்லையே? அதை குறைந்த பட்சம் , பத்திரமா பார்த்துக்க வேண்டாமா? ஆனா, பண்ணுறோமா?

குடி, புகை , கறி , மீனு , மாமிசம்.. எவ்வளவு உள்ளே போகுது? பெண் சுகத்துக்கு ஏங்குகிற உடம்பு... இப்போதைக்கு உடம்பு தான் ஜெயிக்கிறது. மனசு , பாவம் ... என்ன பண்றதுனே தெரியாம மிரண்டு போய் இருக்குது. முதல் தப்பு பண்றபோது , மனசு கொஞ்சமாவது பக் பக்குன்னு அடிச்சிக்கும். ஒரு வார்னிங் தரும். ஆனா, அடுத்தடுத்து..? கம்முனு போயிடுது. நாமதான் இதை மனப் பக்குவம் (?) னு நெனைச்சு , நம்மளையே ஏமாத்திகிடுறோம். 
இப்படியே போனா, என்ன ஆகும்? சீக்கிரம் , உடம்பு தளர்ந்து , இளமையை நினைச்சு ஏங்கிக்கிட்டு.. அட ச்சே.ன்னு ஆகிடாது? உடம்பை பத்திரமா வைச்சுக்குவோம் சார்.. ! அந்த காலத்திலேயே , சர்வ சாதாரணமா , எண்பது வருஷம் , தொண்ணூறு வருஷம்னு இருந்து இருக்கிறாங்க? இப்போ பாருங்க.. !

உடம்புக்குள்ள , உயிர்னு ஒண்ணு , என்னென்னே தெரியாம , நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுது . உங்க உரிமை இல்லாத உடம்புக்குள்ள அது இருக்குது. ரெண்டும் சேர்ந்தது தான் நீங்க. நீ யார்னு முதல்லே தெரிஞ்சுக்கோனு சித்தர்கள் சொல்லுவது இதைத்தான். பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் உடல். ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம் இருந்துக்கிட்டே தான் இருக்கணும். அது கூடினாலும், குறைஞ்சாலும், உயிர் அந்த உடம்புலே தங்குறது இல்லை.

இப்போதைக்கு உலகத்திலே இருக்கிற ஜீவ ராசிகளிலே , கேட்க , சிந்திக்க, பேச ,  தெரிஞ்ச ஒரே இனம் நாம தான். ஆனா , நமக்கு நம்மை பற்றி தெரிஞ்சுக்க அவகாசம் இருந்தும், என்னென்னே தெரிஞ்சுக்கிடாம, நாமளும், மிருகத்தோட மிருகமா , வாழ்ந்து , ஒரு நாள் மடிஞ்சும் போறோம்.. நம்மளை பத்தி , நமக்கு இப்போ , புரியாம, அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுத்த பிறகுதான் புரியணுமா?  இப்போ இருந்தே , அதற்க்கான முயற்சியில் இறங்கலாமே?

நாம விடுற மூச்சுக் காற்றை , கவனிக்க ஆரம்பிச்சாலே போதும், நமக்கு கூடிய சீக்கிரம் , அதற்க்கான விடை கிடைக்க ஆரம்பிக்கும். மூச்சுப் பயிற்சி,
தியானம் - உங்களுக்கு இந்த பிறவியின் நோக்கம் என்ன என்பதை தெரிய வைக்க , நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி.

சப்தங்களை கேட்க தெரிஞ்ச மனிதன், தானும் சப்தம் எழுப்பி - பேசி - ஒரு விஷயத்தை அறிய முற்படுகிறான். இந்த பூமியே, ஒரு மெல்லிய சப்த அதிர்வில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அதிர்வை ஒத்து அது இருக்கிறதாக , நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான், நாமும் மந்திர ஜெபங்களின் மூலம் , இறைவனை அடைய முயற்ச்சிக்கிறோம். 

மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.


எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதற்கு அப்படி சொல்லுறாங்க? 
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQD7YWqo6Fgqq51BqofepCGTBazGdJR_QxxBAmL_ddkIvBvjk3NWg

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்

மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRh5syiyl269D_F3LvwhDXmGDKyizT6G2QrAaabV7EG9J_HbBdGgw
வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

இந்த மாதிரி, சில சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கிட ஆரம்பிப்போம்.
நம் உடம்பில் சக்தியை எப்படி பெருக்குவது என்று பார்ப்போம்.


மனசுன்னு ஒன்னு இருக்கிறதை உணர முடியுதா உங்களால? அறிவியலுக்கு அது தெரியாது. கண்ணுக்கு தெரியாத ஒன்றை எப்படி ஒத்துக்க முடியும்? நல்லா உடம்பை பார்த்துக்கிடுறோம், நல்லா ஆரோக்கியமா சாப்பிடுறோம்.. உடம்பு சக்தியோட இருக்கு. திடீர்னு ஒரு கெட்ட நியூஸ். ஹா... அதிர்ச்சி வரும் அளவுக்கு. என்ன ஆகும்..? உடம்பு என்னதான் சக்தியோட இருந்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. 


என்ன வேலை செய்திட முடியும்? அதுக்கு அப்புறம், ஒழுங்கா சாப்பிடாம, இன்னும் உடம்பு வீக் ஆகும். இல்லையா? இந்த உடம்பு , மனசு / ஆத்மா ரெண்டும் சேர்ந்தாதான் , அது நாம்.


ரெண்டுல ஒன்னு இல்லைனாலும், பயன் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம்...! நாம ஒன்னும் , பெரிய பெரிய அரசியல்வாதிகள் வீட்டில் பிறந்துவிட வில்லை. நாம உழைச்சாத்தான் , நமக்கு சாப்பாடு. நிறைய சம்பாதிங்க.! ஒரு பத்து குடும்பத்துக்காவது , நல்லா சம்பாதிக்கிற வாய்ப்பு, வழிமுறை சொல்லிக் கொடுங்க.. ! 


நம்ம காலம் முடிஞ்சாலும், நம்மளை வாழ்த்தி அனுப்ப - ஒரு பத்து பேராவது இருக்கட்டும். நமக்கு பிடிச்ச விஷயங்கள்லே , நம்ம மூளையை எப்படி பயன்படுத்துறோமோ, அதைவிட ரெண்டு மடங்கு - பணம் சம்பாதிக்கிறதுலே காட்டுங்க. 

வெறுமனே பெண் சுகம், குடி,  போதை வஸ்து என்று அனுபவிப்பதிலேயோ  , அல்லது அதையே நினைத்துக்கொண்டு  இருந்தோ  - நமக்கு கிடைத்துள்ள , இந்த மனித வாழ்க்கை என்னும் , அருமையான சந்தர்ப்பத்தை - இழந்து விட வேண்டாம். இதுவரை எப்படி இருந்தாலும் பரவா இல்லை, இனிமேலாவது சுதாரித்து எழுங்கள்..!உடலுக்கு தேகப் பயிற்சி , மனதுக்கு இறை பக்தி, வழிபாடு - இரண்டுக்கும் அடிப்படை - மூச்சுப் பயிற்சி. உங்களை முதலில் , அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அதன் பிறகு - வானம் நிச்சயம் உங்கள் வசப்படும்!
 
நம் வாழ்க்கையின் வெற்றி , தோல்வி - நம் கையில் தான் இருக்கிறது. 


வாழ்க வளமுடன்!   

13 comments:

Anonymous said...

சார் வணக்கம்
எனக்கு 30 வயசு ஆக போகுது நீங்க சொன்ன விசியம் எனக்கும் பொருந்தும். வாரத்துல மூணு நாள் நண்பர்களோட பார்ட்டினு வாழ்க்கைல பெருசா ஒன்னும் பண்ணாம இருந்துட்டேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க சொன்ன படி வாழ இன்று முதல் முயற்சிக்கிறேன். நன்றி

sri said...

well done.Every one have to study.

dawoodkhanameer said...

அருமை அருமை அருமை.படிப்பவர் நிட்சயம் உனர்வர் , திருந்துவர். இது போல் இன்னும் வேன்டும். இன்னும் எழுதுக.

redfort said...

Dear Sir,

Good evening. Superp.

very useful for every one

SELF ANALYS NEED FOR EVERY PERSON.

Thanks/Sengo

Anonymous said...

Dear Sir, Why you are not helping me with guidance answer to my questions on Astrology? You are encouraging the readers to use your free consultation for Astrology, but in practice you are not answering to Astrology questions, I do not know why.

Anonymous said...

மிக நல்ல உணர்வுபூர்வமான பகிர்வு

Seema said...

நீங்க சொல்றீங்க இந்த உடம்பு அப்பா அம்மா கொடுத்தது.அதனால் அவங்களுக்குதான் சொந்தம்னு.ஆனா சுகி.சிவம் சொல்றார்.யாரும் குழந்தை பெற்று கொள்வதற்காக திருமணம் செய்து கொள்வதில்லை.அவர்கள் திருமணம் செய்து கொண்டதால் நாம் பிறக்கிறோம்.அதனால் தன்னுடைய குழந்தைகளை அடிக்க,அவர்களின் வாழ்கையை வாழ எந்த பெற்றோருக்கும் உரிமை இல்லை.அவரின் கூற்று 100 % சரியே. பெற்றோர்கள்,குழந்தைகளை அவர்களின் வாழ்கையை வாழ அனுமதிக்க வேண்டும்.அதற்கு அர்த்தம் தீய வழியில் சென்றாலும் விட்டு விட வேண்டும் என்பதல்ல.அவர்களின் விருபதிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அவர்களின் வாழ்கையும் நீங்களே வாழ்வதற்கு எத்தகு குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.இவர்களே வாழ்ந்து விட்டு போகலாமே.ஏனென்றால் சமுகம் எதாவது சொல்லும் என்ற பயம்.உதரணமாக,எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் மகன் எதாவது சிறு தவறு செய்தால் அப்பா அம்மா இருவரும் இருவரும் சாப்பிட மாட்டார்கள்.ஆனால் மிக அன்பாக வளர்த்தார்கள்.இதனால் அவன் ஒரு கோழையாகவே வளர்ந்தான். அவனுக்கு பருவ வயது வந்த பொழுது ஒரு பெண்ணை காதலித்தான்.இதை அறிந்த அவனது அம்மா,ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொண்டு இரண்டு வேலையும் பட்னி கிடந்தார்.விளைவு,அந்த மகன் அந்த பெண்ணிடம் பல காரணங்களை சொல்லி விலகி கொண்டான்.ஆனால் அந்த பெண் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு,அநாதை இல்லத்திலிருந்து குழந்தை தத்து எடுத்து வளர்க்க திட்டமிட்டிருகிறாள். இந்த பெற்றோரை அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.பிறப்பை கொடுத்த ஒரே காரணத்திற்காக,பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படிதான் குழந்தை நடந்து கொள்ள வேண்டும் என்று நினைகிறார்கள்.பிறப்பிற்கு அவர்கள் ஒரு காரணம் அவ்வளவுதான் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.எது எப்படி ஆனாலும்,வயதானவர்களை முதியோர் இல்லத்தில் விடுவது மிகவும் தவறு.

அடுத்து,வெறும் தரையில் படுத்து உறங்கினால் சக்தி தரை வழியாக வெளியேறும் என்பதை விட body heat , தரை சூடு இரண்டும் இரு வேறுபட்ட வெப்ப நிலைகளை கொடிருப்பதால் ஒத்து வராது என்பதே உண்மை.

My affiliates site said...

Well done...! meka nanraha sonnirkal.

sekar said...

அய்யா ஒரு நல்ல பதிவு . எல்லோரும் படித்து பயன்பெற வாழ்த்துகள்

yogiramam said...

Dear Sir,

Simple but High Value Article
Please Keep Place this type of a article always
It would be great helpful briefing of our mind
Many more THNX for you all the times
and one more requesting about, Why don't you teach PRANAYAMAM to us,
We don't have proper teacher where I'm staying in abroad
Is it is possible kindly proceed
It would be great thankful for you


Ever kind,
M.SENTHIL VEL

Dowsarpandiyan said...

வணக்கம்!
தலைவா! திருப்பாச்சி அருவாள எடுத்து எங்க மண்டையில போட்டிடீங்க தலை! நல்ல வேளை அருவா பக்கம் மாறிடுச்சு! சூப்பர் அப்பு.. அருமையான கருத்து! உங்கள் பதிவை படித்த சகோதரர் "நீங்க சொன்ன படி வாழ இன்று முதல் முயற்சிக்கிறேன்" என்று எழுதி இருக்கிறார். அது உங்கள் வெற்றி! அது சரி! அந்த ஆமை பூசை பற்றி சொல்லவே இல்லையே!
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:‍‍ நமக்கு உதவி செய்யவில்லை (ஜாதகம், பரிகாரம், நம் கேள்விகளுக்கு பதில்) என யாரும் கோபிக்காமல் மறுபடியும் கேளுங்கள். கிடைக்கும்! ஏனெனில், இந்த அற்புதமான தகவல்களை தரும் வலை பதிவர்கள் சாதரணமாணவர்களாக இருக்கிறார்கள்! அவர்களின் குடும்பம், வேலை மற்றும் எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையில் நமக்கு இப்படி பொக்கிஷங்களை தருகிறார்கள்! இது சாதரண விஷயம் கிடையாது! மணதார வாழ்த்துவோம்!
வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!
ஓம் சிவசிவ ஓம்!

Rishi said...

அண்ணாச்சி... பாண்டியன் அண்ணாச்சி! ரொம்ப நன்றி... உங்கள் கருத்துக்களுக்கு !... உங்களை மாதிரி நண்பர்களோட வாழ்த்துக்கள் , will be a big booster for us ... ! நமக்கு வருகிற , ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கும் இயன்றவரை பதில் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.. சற்று விரிவான ஆராய்ச்சி செய்ய வேண்டியவற்றை , வாரம் ஒன்று அல்லது இரண்டு என்று முடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. எதோ , நம்மால முடிஞ்சது.. ! நல்ல விதமா எடுத்துக்கிறவங்க எடுத்துப்பாங்க.. ! ரொம்ப Keen ஆ இருக்கிறவங்க, எப்படியாவது , நம்மளை புடிச்சிடுவாங்கனு வைச்சிக்கோங்க.. ! நிறைய பேர் .. ஜஸ்ட் க்யூரியாசிட்டி கேஸ் தான்.. ! கேள்விகளை பார்த்தாலே தெரியும்.. இதுலே ஒரு சில, மெனக்கெட்டு , பக்காவா மண்டையை பிச்சுக்கிட்டு - Prediction - பண்ணி அனுப்பிச்சா, அந்த மெயிலை படிக்காம விடுறவங்களும் இருக்கிறாங்க... ! சரி விடுங்க.. அதுக்கு என்ன பண்றது.. நம்ம வேலையை , நாம தொடர்ந்து பண்ணுவோம்..! வாய்ப்பு இருப்பவர்கள் பயன் பெற்றுக்கொள்ளட்டும்..!
உங்களுக்கு நான் ஏற்கனவே அறிமுகமானதாலே , நீங்க உடனே புரிஞ்சுக்கிட்டீங்க.. ! பதிவுலக பிரபலம் டவுசர் பாண்டியன் அண்ணாச்சி அவர்களுக்கு , மீண்டும் ஒருமுறை நன்றி..நன்றி..! நிஜப் பெயர் சொல்லி , கமெண்ட்ஸ் எழுத... வேண்டாமே..! ப்ளீஸ்..!

Rishi said...

மிக நீண்ட பின்னூட்டம் இட்ட சகோதரி சீமா அவர்களுக்கு மிக்க நன்றி... உங்கள் கருத்துக்களும் அருமை.. எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது..

மேலும் கருத்துக்கள் அனுப்பிய , ஸ்ரீ, செங்கோட்டையன், தாவூத் கான் , சேகர், யோகிராமன் , பெயர் குறிப்பிடாத , வாசகர்கள் அனைவருக்கும் , மிக்க நன்றி.. ! உங்கள் பின்னூட்டம், எங்களுக்கு மிகப் பெரிய ஊட்டம் ! ..

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com