Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்

| Sep 12, 2011
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTcTvwwZi8piOLkwWp1QK8XErAU9jfY34ShDwm96g6PprukLJp8E80j_Cn9வாசக அன்பர்களுக்கு வணக்கம்.இன்று நாம் காண விருக்கிற விஷயம் - பலருக்கும் மிக பயனுள்ள ஒரு விஷயம். அனேகமாக , இதில் நேரடியாக , சொல்லப்படாத மறைமுக விஷயத்தை, தெளிவாக புரிந்து கொண்டால், சில லட்சம் பேருக்காவது உதவியாக இருக்கும். 

புரிந்து கொள்ள முடிந்தால் - நல்லது. இல்லாவிட்டாலும் பரவா இல்லை... !

உங்கள்  இழந்து போன உடமைகள்  எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டு தரவல்ல , அதி அற்புதமான மந்திரம் - இந்த கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.

உங்கள் வீட்டில் தொலைந்து போன பொருட்களை ,எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லையே என்று விரக்தியில் - விடு , கிடைக்கிறப்போ, கிடைக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். ஆனால், ஒரு சில பொருட்களை - அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க முடியாதே, திரும்ப திரும்ப தேடிப் பார்த்து - நொந்து நூலாவது தான் மிச்சம். சிலருக்கு பதட்டமும் அதிகமாகி விடும்.

இழப்பு - ரொம்ப கொடுமையான விஷயம். இழப்பின் வலி, தரும் வேதனை - ஆறுதல் மொழிகளால் அடங்குவதில்லை. நீண்ட , நெடு நாட்களாக உயிருக்குயிராக பழகிய நண்பர், சந்தர்ப்ப சூழ்நிலை / விதி வசத்தால், நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல , நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு பழகி இருக்க கூடும். இன்று அவர் மிக உயர்ந்த நிலையில் இருக்க கூடும். அவருடனான நட்பைப் புதுப்பிப்பதின்  மூலம் , உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் / வாழ்வில் மீண்டும் ஒளி கிடைக்கலாம். . 

..அவனுக்கே நான் முக்கியம் இல்லை, நான் மட்டும் அவன் கிட்ட பேசணுமா.. னு ஈகோவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு , அவனா வந்து பேசுனா , ஓகே... அப்படின்னு நினைக்கிறீங்களா..? ( இது பரவா இல்லை )

ஐயா , அவர் வரவே இல்லை... அப்போ...?
யாராவது ஒருத்தராவது இறங்கி வந்தாத்தானே..! 


சரி, நீங்களும் வர வேண்டாம்,,, அவரும் வர வேண்டாம்.. ! எதேச்சையா , தன்னாலே நடக்கற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டா?  அந்த அதிசயம்  செய்வது தான் இந்த மந்திரம்..!

கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ  ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண { ----------}
கதம் நஷ்டம்ச லப்யதே..

 
 { ----------}   - இந்த இடத்தில் , நீங்கள் சந்திக்க விரும்பும் உங்கள் நண்பர் பெயரை  / தொலைந்து போன பொருளை சொல்லவும்.

மேலே சொன்ன மந்திரம் தான் , கார்த்த வீர்யார்ஜுன மந்திரம். விரும்பும் நபரை சந்திக்க வேண்டும் என்று ஆன்மார்த்தமாக மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டு - தினம் 1008 முறை , மேலே சொல்லிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 108 நாட்கள் - தொடர்ந்து ஜெபித்து வர , உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..
உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளின் மதிப்பை , உலகத்தில் உங்களை விட யாராலும் கணிக்க முடியாது.. 108 x 1008 முறை ஜெபம் பண்ணும் அளவுக்கு, அது மதிப்புள்ளதா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.. !

நேற்றைய பௌர்ணமி தின வழிபாடு ,  இந்த மாதத்தில் உங்களுக்கு  நிறைய வளங்களும், அனுகூலங்களும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்..

4 comments:

arul said...

mutual divorce case entha vitha prachanayillamal(munnum pinnum) mudiya kovil ullatha?veru ethavathu vali ullatha?

arul said...

oruvar vithiyin vasathal fist marriage failure aanal(matravargalalin soolchiyal muthal thirumanam murinthaal) aduthu enna seyya vendum?

Nathan.... said...

My long search has just ended

indiasuresh said...

romba use ful information

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com