Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உங்க பசங்களுக்கு - ஒரு பெற்றோரா நீங்க என்ன, என்ன செய்யலாம்.?.

| Sep 10, 2011
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTaJ4mrUeHbFdUBCR9JhZh0BXTRZu1v1R83THBrRAWudYcIuC78VQ
Information is wealth , டே தம்பி இங்கே வா.. இன்னைக்கு மத்தியானம் ஆஞ்சநேயர் கோவில்ல  புளிசாதமும், உளுந்தவடையும்..போடுவாங்க.. இந்தா உனக்கு ஒன்னு , எனக்கு ஒன்னு னு ரெண்டு தூக்கு ..... பாய்ஸ் படத்தில செந்தில் இப்படிப் பண்ணுவாரு , ஞாபகம் வருதா? . 

இந்த மாதிரி , தகவல்களை துல்லியமா வைச்சுக்கிட்டு, ஷேர் மார்க்கெட் ல புகுந்து விளையாடிக்கிட்டு - கோடிகள்ள சம்பாதிக்கிறது ஒரு கூட்டம்.. நாலு விஷயம் கூடுதலா தெரிஞ்சு வைச்சுக்கிறது எப்போவுமே நல்லது.. எப்படி விஷயங்களை தெரிஞ்சுக்கிடுவது...? ஆர்வம் வேணும்...!

இந்த கட்டுரை  -  உங்க குழந்தைகளை நீங்க எப்படி வளர்க்கலாம்னு எனக்கு  தோன்றிய சில விஷயங்கள். என்னை எங்க அப்பா வளர்த்த விதம் எனக்கு எப்படி உபயோகமா இருந்தது பத்தி எழுதப் போறேன். எங்க அப்பா என்னுடைய முதல் குரு. கண்ணுக்குள் கண்ணாக வளர்த்துவிட்டு , இன்று என்னை காக்கும் தெய்வமாகிவிட்ட மகான். எனக்கு யோகா, தியானம் கற்றுக்கொடுத்தவர். தன்னோட 70 வயதிலும், அதிகாலை எழுந்து அரை மணி நேரம் தவறாமல் உடற் பயிற்சி செய்தவர். எந்த ஒரு வேலை என்றாலும், முழு ஈடுபாடு, பதட்டமில்லாத நிதான வேகம்.  அவரோட மகனா பிறந்ததுக்கு, நான் பல ஜென்மங்களில் புண்ணியம் செஞ்சு இருந்திருக்கணும்! 

குழந்தைகள் விஷம்ங்கிறதால , இந்த கட்டுரை கொஞ்சம் அதிகமாவே நீண்டுவிட்டது. பொறுமையா படிச்சுப் பாருங்க. உங்களுக்கும் ஒருவேளை உபயோகப்படலாம் !

இன்றைய  சூழலில்  நம் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம்.. சமச்சீர் கல்வி திட்டம் என்று  ஒன்றை அறிமுகப்படுத்தி , அதை ஒரு கேள்விக்குறியாக்கி , பின் நீதித்துறையின் நிர்பந்தத்தால் அதை மீண்டும் அமுல் படுத்தி இருக்கிறது தமிழக அரசு. ஆனால் , எனக்கென்னவோ , நம் குழந்தைகளுக்கு அவர்கள் அறிவுக்கு போதிய தீனி கொடுக்கிறோமா என்ற கேள்வி இன்னும் நிற்கிறது.


சென்னையில் என் அண்ணன் குடும்பத்தில்  இரண்டு பசங்க இருக்கிறாங்க.  CBSE பாடத்திட்டத்தில் தான் படிக்கின்றனர். ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். தமிழ் பேசத் தெரியும். ஆனால், படிக்கத் தெரியாது. கம்ப்யூட்டர் கேம்ஸ் , மொபைல் கேம்ஸ்ல பட்டையக் கெளப்புற அளவுக்கு எக்ஸ்பெர்ட்ஸ் (!) ரெண்டு பசங்களும். மாங்கு , மாங்குன்னு படிக்க வைக்கிற பள்ளி நிர்வாகம். புத்தகத்தில் உள்ளதை , மனப்பாடம் செஞ்சு - அதை அப்படியே எழுதிட்டு வர தெரியும். அவங்க, புரிஞ்சு படிக்கிறாங்களா, புரியாமலா ஒன்னும் தெரியாது. நாலு , நாளைக்கு முன்னாலே நடந்த கிரிக்கெட் மேட்ச் ல சுரேஷ் ரெய்னா எவ்வளவு ஸ்கோர் பண்ணினார், உலக கோப்பை பைனல்ஸ்ல கம்பீர் எவ்வளவு ஸ்கோர்  பண்ணினார்னு விஷயங்கள்  எல்லாம் அத்துபடி யா வைச்சிருக்காங்க.. இது போதுமா..?


ஸ்கூல்ல மார்க் குறையாத வரைக்கும், அண்ணனுக்கும்  அண்ணிக்கும் , இவங்களைப் பத்தி பிரச்னை இல்லை. படிப்புக்கு வருஷத்துக்கு ரெண்டு லட்சம் வரைக்கும் இப்போவே ஆகுது..  ஆனா, கொஞ்சம் கூட பொதுவான விஷயங்களில் இருக்கவேண்டிய ஞானம், ஆர்வம் எதுவுமே பசங்களுக்கு இல்லை ... டிவி , மொபைல், கம்ப்யூட்டர் - பள்ளிக்கூடம் இவ்வளவுதான் லைப்...


விளையாட்டு கூட இல்லை. டிவி ல பார்க்கிறதோட சரி. எத்தனாம் வகுப்பு படிக்கிறேடா.. னு கேட்டா புரியலை... என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்னு சொல்லுடா னு சொன்னாதான் , செவன்த் ஸ்டாண்டர்ட் சித்தப்பா னு சொல்றாங்க.. எனக்கு ஆனாலும் கொஞ்சம் சந்தோசம். சித்தப்பான்னாவது சொல்றாங்களேன்னு..


ஒரு நியூஸ் பேப்பர், வார இதழ்கள் - ம்ஹூம் எதுவும் கிடையாது. வீட்டுலேயே வாங்குறது இல்லையாம். இது வருங்காலத்துக்கு நல்லதான்னு தெரியலை.


சில கதைகளை படிக்கிறப்போ , குழந்தைகள் மனதில் கற்பனை விரிவடையும். நல்ல , நல்ல கதைகள் சின்னக் குழந்தைகளுக்கு சொல்றது அதனாலதான். நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல மருத்துவம் எல்லாம் கொடுக்கிறோம், அதே நேரத்தில அவங்களுக்கு நல்ல பழக்க வழக்கம், மன வளம் பெருக முயற்சிகள் செய்ய வேண்டியதும், நம்மோட கடமைதான். என்னதான் ஸ்கூல் நிர்வாகம் பார்த்துக்கிடும்னு நெனைச்சாலும், ஒரு பெற்றோரா , உங்க குழந்தை மேலே அக்கறை வைச்சுகிடுறது எப்போவுமே பெட்டெர். 
நான் சின்ன வயசுல நாலாம் வகுப்பு படிக்கிறப்போ , எங்க அப்பா கேட்ட கேள்வி இன்னும் ஞாபகத்தில இருக்கு. " தம்பி, நல்ல படிக்கிறயாடானு கேட்டார்"."நல்லா படிக்கிறேன்பா" னு சொன்னேன் .. "கிளாஸ் ல முதல் ரேங்க்" , ன்னு சொன்னேன். "ஹ்ம்ம்.. வகுப்புல பாடம் படிக்கிறது மட்டும் போதாது... வெளி உலக விஷயங்கள் தெரிஞ்சுக்கிடுறதுதான் முக்கியம். நல்லா படி. உடம்பை ஆரோக்கியமா வைச்சுக்கோ.. சரி, நான் ஒரு கேள்வி கேட்குறேன்... பதில் சொல்யா  "னு கேட்டார்.

சரின்னேன். முதல் கேள்வி.

" ஒரு டீக்கடை. அதுல நாலு பென்ச் , நாலு மேஜை இருக்கு. ஒரு பெஞ்ச் ல நாலு பேரு உட்காரலாம்.  நாலு , மேஜை - பெஞ்ச்ச்சையும் மூலைல போட்டா, ஒரே நேரத்தில எத்தனை பேரு உட்கார்ந்து டீ சாப்பிட முடியும்".


"ப்  பூ.. சிம்பிள் பெருக்கல் வாய்ப்பாடு. இதெல்லாம் , ரெண்டாப்புலேயே சொல்லிட்டாங்களே.. உடனே பதில் சொன்னேன். "பதினாறு பேர் உட்காரலாம்பா" னு. 
"ஹ்ம்.. சரிதான். இங்கே வா. நம்ம வீட்டுல இருக்கிற பெஞ்ச்சை எடு. வா , பக்கத்துல உட்காரு. அக்கா ரெண்டு பேரையும் கூப்பிடு. நாலு பேரு சரியா உட்கார முடியுதா... இப்போ, அப்படியே அதை மூலைக்கு எடுத்திட்டு வா. டேபிள் ஐப் போடு.  அம்மா கிட்ட போய், நாலு பேருக்கும் பால் சாப்பிட வாங்கிட்டு வா".  நான் கொண்டு வந்தேன். அதே பெஞ்ச் தான். ஆனா, எனக்கு இப்போ உட்கார இடம் இல்லை...!


எனக்கு செம ஆச்சர்யம்..! எப்படிப்பா !.. அப்புறம் தான் புரிஞ்சது. மூலைல போட்டோம்னா ஒரு ஆள் குறையா தான் உட்கார முடியும்..! நான் தான் தப்பா சொல்லிட்டேன்". " இல்லைடா, ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முன்னாடி, அதுலே கொடுத்து இருக்கிற எல்லா விஷயத்தையும், கவனமா பார்த்து , புரிஞ்சிக்கிட்டு - அதுக்கு அப்புறம் பதில் சொல்லணும். இதை புரிஞ்சுக்கோ... சரி,இன்னொரு கேள்வி கேட்கட்டா...?  ஹ்ம்.. பயங்கர உற்சாகம் எனக்கு. அடுத்த கேள்வியாவது பதில் சொல்லனும்னு.


"நம்ம நாட்டோட, பிரதமர் - ஜனாதிபதி யார்னு தெரியுமா"? 
ஓ ..உடனே பதில் சொல்லிட்டேன்.. கேள்வி அது இல்லை. 
திட்டக் கமிஷன் னு ஒன்னு இருக்கு தெரியுமா? (Planning commission ) அதோட துணைத் தலைவர் யாரு..? 
"போப்பா.. எனக்கு தெரியாது"னு சொன்னேன்.. "தெரிஞ்சுக்கோ, அதோட அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு எனக்கு ரெண்டு நாள்ல சொல்லு". மறுநாளே அதைப் பத்தி எங்க வாத்தியார் கிட்ட கேட்டு , அவரு இன்னொரு வாத்தியாரை கேட்க சொல்லி -அவர் கிட்ட கேட்டு, அப்பாக் கிட்ட தெளிவா சொன்னேன்.. அவருக்கு ரொம்ப சந்தோசம் .
அப்போ, ரேடியோ ல செய்தி கேட்டுக்கிட்டு இருந்தோம்..  அதோட விடலையே..  உடனே இன்னொரு கேள்வி. "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யாரு?"
போச்சுடா.. அப்புறம் தான் சொன்னார்..."இப்போ செய்தில கூட அவர் பேர் சொன்னாங்களே. நீ சரியா கவனிக்கலையா ".  இதுக்கு பதில் நாளைக்கே சொல்லனும்னு இல்லை.. தெரிஞ்சுக்கோ.  அடுத்த மாசம் , ஏதாவது ஒரு கேள்வி கேட்பேன்.. அதுக்கு பதில் சொன்னா போதும்... 

அப்புறம் எப்படி , சும்மா இருக்க முடியும்..? கொஞ்சம் கொஞ்சமா கூர்மையாக ஆரம்பிச்சேன். ஒரு வேட்டைக்காரனுக்குரிய வேகம் , கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம், ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கு. சீக்கிரம் வேட்டையை முடிக்கணும். கவனமில்லைனா, எந்த நேரமும் எந்த மிருகமும் நம்ம மேல பாயலாம்.

அப்பா , பக்கத்து ஊர் லைப்ரரில மெம்பரா இருந்தார். அஞ்சாம் வகுப்புக்கு அப்புறம், ஊர்ல பத்தாம்  வகுப்பு  முடிக்கிற வரைக்கும் , நான் தான் அந்த கார்ட் யூஸ் பண்ணினேன். நான் எடுத்த புத்தகத்தைத் தான் அப்பாவும் படிக்க ஆரம்பிச்சார். என்னோட படிக்கிறதுல இருந்த பரிணாம வளர்ச்சியை பார்த்துக் கிட்டு இருந்து இருக்கார். தினம், கொஞ்ச நேரமாவது படிக்கலைனா , அந்த நாள் வீண்னு நினைக்கிற அளவுக்கு, சந்தோசமா பொழுது போனது. 

அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே,  லைப்ரரி கதை புக்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். வாண்டு மாமா, அழ .வள்ளியப்பா,  தமிழ் வாணன் னு ஆரம்பிச்சு, அரபுக் கதைகள், தெனாலிராமன், பீர்பால், வேதாளம், நீதிக்கதைகள்னு அடுத்து வந்து, லஷ்மி, சிவசங்கரி, சுஜாதா, பாலகுமாரன்னு ஜெட் வேகத்துலே பறந்து இருக்கேன். என்னோட ஏழாம் கிளாஸ் அரைப் பரீட்சை லீவுல , சாண்டில்யனோட யவன ராணி படிச்சு முடிச்சிட்டேன். டென்த் முடிக்கிறப்போ, தி. ஜா , நா. பார்த்தசாரதி, பிரபஞ்சன், கல்கி , ஜெயகாந்தன் , அகிலன்னு ... அந்த லைப்ரரி ல இருக்கிற, என்னோட வயசுப் பசங்களுக்கு, என்ன ஏதுன்னே தெரியாத ஒரு உலகத்துல வாழ்ந்துக் கிட்டு இருந்தேன்.. இதுல கொஞ்சம் ஓவர் என்னென்னா, மோகமுள் , மரப்பசு , ஜெயகாந்தனோட பாத்திரங்கள் - பற்றி எல்லாம் , மணிக்கணக்கில விவாதிச்சுக் கிட்டு இருந்ததுதான்.  நம்ம வாசகர்கள்லேயே நிறைய பேர் , இவங்கல்லாம் யாரு னு கேட்டாலும் கேட்பீங்க..!
அப்புறம் , மேல் படிப்புக்கு மெட்ராஸ் வந்ததும் - வாசிப்பு இன்னும் இலக்கியம் சார்ந்து விரிவடைய ஆரம்பிச்சது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி , சுந்தரம் ராமசாமி, கி.ரா , ஜெயமோகன்னு இன்னும் போய்க்கிட்டே இருக்குது ... சமயம், தத்துவம், ஜோதிடம் , சித்த மருத்துவம் அப்படின்னு.....  இன்னைக்கும் ஆபீஸ் விட்டு வந்ததும் , ஒரு மணி நேரமாவது படிக்கலைனா , அந்த நாள் தூக்கம் பிடிக்கிறது கஷ்டம் தான்.ஆங்கில நாவல்களும் இலக்கியமும் படித்ததால் வந்த ஆங்கில அறிவு, இன்றும் நடைமுறை வாழ்வில் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.   


வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பம், சூழ்நிலை வந்தாலும் - நிதானத்துடன் சமாளிக்கக் கூடிய மன திடம் , சாதக - பாதகம் அறிந்து , துல்லியமாக முடிவெடுக்கும் திறன் - எனக்கு இந்த புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன.


இதுல குறிப்பிடத் தக்க விஷயம் என்னன்னு கேட்டால் , சப்ஜெக்ட், விளையாட்டு , சினிமா , இப்படி எந்த ஒரு விஷயத்தையும் மிஸ் பண்ணாம , அதே நேரத்துல இதையும் விடாம அனுபவிச்சுப் படிச்சதுதான். டென்த் படிக்கும்போதே, இங்கிலீஷ் கிராமர், ஸ்போக்கன் எல்லாம் செம ஸ்ட்ராங்.   மெட்ராஸ்ல படிச்சு முடிச்சதும் கேம்பஸ் ல செலக்ட் ஆனேன். முதல் வேலை பூனா ல. அப்போ எல்லாம் , இன்டர்நெட்லாம் இல்லை. அங்கே வாரா வாரம், விகடனுக்கு இருபது கிலோ மீட்டர் பஸ்ல போய், அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வருவேன்.  ஒவ்வொரு தடைவை ஊருக்கு வரும்போதும் , கட்டு கட்டா - புத்தகங்கள் வாங்கிட்டு போவேன் . எல்லாம் , படிச்சு முடிச்சா, திரும்ப உடனே ஊருக்கு வர தோணும். என்னதான், இன்டர்நெட் வந்தாலும், புத்தகம் படிக்கிறதுல உள்ள சுகமே தனி.   

சரி , நம்ம கதையை சொன்னா, அது போய்க்கிட்டே தான் இருக்கும். நான் சொல்ல வந்த விஷயமே இன்னும் சொல்லலை. 

புத்தகப் பைத்தியமான என்னோட கண்ணுக்கே மிஸ் ஆகிற  மாதிரி , ஒரு சில அபூர்வ புத்தகங்கள் கண்ணுல மாட்டும். இன்டர்நெட் ல அந்த மாதிரி, ஒரு புக் மாட்டிச்சு. நம்ம தலைமுறைலேயே , இந்த புக்ஸ் எல்லாம் மறைஞ்சு போச்சுன்னா, நம்ம குழந்தைகளுக்கு, நம் தமிழோட பெருமை, பாரம்பர்யம், பெருமைகள் எங்கே தெரியப் போகுது? 


புத்தகத்தின் பெயர் - கணக்கதிகாரம். To download click here

இந்த புத்தகத்தை, நேரம் கிடைக்கிறப்போ, படிச்சுப் பாருங்க.ஆரம்பத்துல , தமிழ் கொஞ்சம் கடினமா தெரியலாம். ஆனா, சுவாரஸ்யமான புத்தகம். 

 நம் பூமியோட அளவு என்ன, நிலம் எவ்வளவு, நீர் எவ்வளவு , சூரியன், சந்திரன் எவ்வளவு தொலைவுலே இருக்கு , மயிர் முனையை விட பல மடங்கு சின்ன அளவைகள், ஒரு மலையோட உயரம் எப்படி கண்டு பிடிக்கிறது , ஒரு படி நெல்லுல, எத்தனை நெல்லு இருக்கும்.. இப்படியே போயி, தயிர் கடல் , பாற் கடல் - அப்படின்னு அந்த காலத்து நம் கலாச்சாரம் , கண் முன்னே தெரிகிறது. அது தவிர , அன்றாட வாழ்க்கையில், அவர்களது டே-டு-டே விஷயங்களுக்கும் , பல சூத்திரங்கள் சொல்லி இருக்கிறார்.  
என்ன !  ஒன்னு , ரெண்டு  நம்பர்லாம் - தமிழ் ல இருக்கு. அதை முதல்லே நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் படிக்கலாம். அவர்களின் திறமை ,  ஆச்சர்யத்தில் மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கிறது.

 படிக்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு பொக்கிஷம்.
.சாம்பிளுக்கு கீழே ஒன்னு பாருங்க.

ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறிய
     "பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
     சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
     ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
     வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"


அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றியுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வ‌குத்தால் கிடைப்ப‌து அந்த‌ பலாவில் உள்ள‌ எண்ணிக்கையாகும்.

உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 30 எனில் 30 x 6 = 180     180/5 =36 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 36 ஆகும். இதை எல்லாம் சர்வ சாதரணமாக கண்டறிந்து , அதை நம்மைப் போல பிற்கால சந்ததியும் அறிந்து கொள்ள பாடல் இயற்றி , வழி வகுத்துள்ளனர். 


இப்படிப் பலப்பல ஆச்சர்யங்கள்... !
========================================================


அண்ணன் வீட்டுல இருந்து கெளம்பி வர்றப்போ, அந்த ஏழாம் கிளாஸ் படிக்கிற பையன் கிட்டே கேட்டேன். டி.வி. ல ஒரு பழைய இத்துப் போன - ஜிம்பாப்வே மேட்ச் ஓடிக்கிட்டு இருந்துச்சு. மனோஜ் பிராபகர் பாட்டிங். திணறிக்கிட்டு இருந்தார். ரொம்ப ஆர்வமா பார்த்துக்கிட்டு இருந்தான். 


நமக்கு தான் வாய் சும்மா இருக்காதே. தம்பி, கவெர்மென்ட்ல பிளானிங் கமிஷன்னா என்னன்னு தெரியுமா? ஒரு லுக் விட்டான்."தெரியாது சித்தப்பா". "இன்கம் டாக்ஸ்" ? "தெரியுமே. ஆக்டருங்க வீட்டுல எல்லாம் ரைட் போவாங்களே.. அதானே".. ஹ்ம்...!"சரி விடு , அது யாருடா கீப்பிங் பண்றது?" 
செக் பண்றதுக்காக கேட்டேன்.. .. "ஆண்டி ப்ளாவர். நல்லா பேட் பண்ணுவார். இப்போ கூட இங்கிலாந்து டீம் கோச் அவர்தான். ஓஹோ..!
IPL வந்து  இன்னும் பசங்களை பயங்கர crazy ஆக்கிடுச்சு ..


அவனுக்கே போர் அடிச்சது போல அந்த மேட்ச்..." சித்தப்பா, ஐஸ் கிரீம் சாப்பிட போகலாமா.. ! இங்கே தான் ஒரு 5 மினிட்ஸ் ரைட்ல போயிடலாம்"  . 
"சரிடா, அப்பாக்கிட்ட கார் சாவி வாங்க்கிட்டு வா". 
.இல்லை, சித்தப்பா , ஸ்கூட்டிலே போயிடலாம்..  நீங்க பின்னாலே உட்காருங்க.. ட்ராபிக் கம்மிதான். நானே ஓட்டுறேன்.. OK வா ?
ஹ்ம்... "ஐ ஹேவ் நோ ப்ராப்ளம்.. !"

சூப்பரா ஓட்டுனான்..  யார் சொன்னா, இந்த காலத்து பசங்கல்லாம் கெட்டிக்காரப் பசங்க தான்யா.. .

.."அப்புறம், சொல்லுங்க சித்தப்பா... planning commisson னா என்ன, சொல்லுங்க?"... 

அட... ! பரவா இல்லையே... பசங்க எல்லாம்.. ஒரு சில விஷயங்களில் சூப்பர் பாஸ்ட்டாத் தான் இருக்கிறாங்க... நாம தான் கொஞ்சம், அவங்களுக்கு ஆர்வம் வர வைக்கணும்... 

இப்படி ஒன்னு இருக்குனு நீங்க சொல்லிட்டாப் போதும்... மீதியை அவங்க பார்த்துப்பாங்க... அந்த விஷயம் இருக்கிறதை தெரிஞ்சுக்கிடற அளவுக்காவது, நீங்க விவரமா இருந்தாக் கூடப் போதும்... உங்க புள்ளை உங்களை விட டாப்பா வருவாப்ல... !

  ..  சரி, நான் ஒரு வெப்சைட் நேம் சொல்றேன்... உங்களுக்கு தெரியுமா பாருங்க. தெரியலையா பரவா இல்லை, உங்க பசங்களுக்கு இந்த சைட் டை அறிமுகப்படுத்துங்க...   This is the site to learn how everything works ...


www .howstuffworks .com

ஹய்யோ.... பிரமாதம்னு சொல்வீங்க.... ! 
ஓகே... மீண்டும் சிந்திப்போம்.... ! 

Have a nice day  and weekend !

8 comments:

யோகம் said...

கணக்கதிகாரம். To download click here

Sir, This link is not working.. please check it out and relink the correct location!

Rishi said...

Thank you sir. The error was rectified now. I regret for the inconvenience....

Kumar said...

Sir,
It is really useful article. But Kanakathikaram is not easily understanding one. Is there any other version of this book in easy tamil.

ammu said...

manasula romba natkalaga ninaitha vishyathai ingae pakir inthamaiku nanri.

welcometotalk said...

Please share more books like this.

1007 said...

I am not able to download the file Kanakathikaram from the given link. help me to download the file

Anonymous said...

I am not able to download the file Kanakathikaram from the given link.

Rajkumar Thiruvettai said...

Can you please update the download link. The link provided is not working

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com