Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

| Sep 8, 2011

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRyKsrjST5TA68tcpFa18wyu9_2mlb9Zvh5O1U94M9l-OdIGnKvC5j4n5w

இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.சோகம் வாழ்க்கையில் இருக்கலாம் தான். ஆனால், அப்படிப் பட்ட சோகத்தை , நிரந்தரமாக வைத்து விடுவது புத்திர சோகம் . இதனுடைய வலி, வீர்யம் -அதை அனுபவிப்பவர்களை தவிர மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம்.


தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு, இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

 மருந்து கால் - நம்பிக்கை முக்கால் என்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை நம்பிக்கையுடன்  பின்பற்றினால் ,  அவர்களுக்கு நிச்சயம் வாரிசு பாக்கியம் உண்டாகும்.

நமது சமீப காலத்து சித்தர் பெருமான் தவத்திரு . பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதைப் பற்றி நமது முந்தைய கட்டுரையில் , ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.  அதைப் படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்.  இது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த மந்திரம்.

http://www.livingextra.com/2011/06/blog-post_444.html


குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.

இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.

குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளின் தொகுப்பான ஆன்மீகப்பயணம் பாகம் 1.பக்கம்53,54.


சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்..


அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

புளிச்ச கீரைகளை,வெங்காயம் சேர்த்து சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

இலவங்கப் பட்டை கஷாயம் செய்து அருந்தி வந்தால் தாதுவிருத்தி உண்டாகும்.

அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.

செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

கானா வாழை சமூலம், தூதுவ‌ளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து  40 நாட்கள் சாப்பிட‌  தாது பலப்படும்.

முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர  ஆண்மைக் குறைவு நீங்கும்.

அத்திப்பழத்தை  உலர்த்திப் பொடி செய்து சூரணமாக பாலில் போட்டு சாப்பிட ஆண் ஆண் மலடு அகலும்.

தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் எடுத்து இரவு பாலில்  கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால்  கருப்பைக் கோளாறுகள் குறையும்.

முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.


நிலபூசணிக்கிழங்குச் சாறுபிழிந்து, பசும்பால் விட்டு, சர்க்கரை  காலை, மாலை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

இரவு  படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அரை கைப்பிடிய‌ள‌வு கொத்த‌ம‌ல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தாது விருத்தி உண்டாகும்.தொட‌ர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வ‌ர‌ வேண்டும்.

தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

மாதுளம்பழம் தினமும் இரவு உணவுக்கு பின் சாப்பிட விந்து விருத்தியாகும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர விந்து வலிமை பெறும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வர விந்து விருத்தியாகும்.

முறைப்படி, யோகாசனங்களை மேற்கொள்ளுவதன் மூலமும் , குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம்.

கூடிய விரைவில் , குறைகள்  நீங்கப் பெற்று - மழலை இன்பம் உங்களுக்கு கிடைக்க , இறைவன் அருள் கிடைக்கட்டும்...!

3 comments:

Anonymous said...

யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
அசைவ உணவு சாப்பிடலாமா ? இதை இந்த இனைய தளத்தில் சொல்வது வேதனையாக இருக்கிறது ?

Rishi said...

As a medicine, it is permitted Sir! Have faith on God - that is sufficient! Without his permission, we can not do anything....

pasumai yugam said...

நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com