Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

Sri Rudram - ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் with complete download option

| Aug 30, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பு சதுரகிரி  பற்றி எழுதிய கட்டுரையில் , அமைதியாக ஸ்ரீருத்ரம் படியுங்கள் என்று கூறியிருந்தேன். நம் வாசகர் ஒருவர் , இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள், ருத்ரம் எப்படி வாசிப்பது, புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு இருந்தார்.

ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு - இன்று அந்த பணி நிறைவேறுகிறது.  கண்டிப்பாக நம் வாசர்களிடம் இதை சேர்க்கவேண்டும் என்று மனதில் இருந்த ஆசை பூர்த்தியாகிறது.

பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு  இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை ,  தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை செய்து முடித்தேன்...

 கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு  விழா எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ - அவங்களோட தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது - அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா ! அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. !

இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல - மகத்தான மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்..


ஸ்ரீருத்ரம் கேட்டால் மட்டும் போதுமா , அதை பாராயணம் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியதுதான் , இந்த வரி வடிவ புத்தகம். இதில் , ஸ்ரீ ருத்ரம் தவிர , புருஷ சூக்தம் , வேத , சாந்தி மந்திரங்கள் ஆகியவையும் உள்ளன.

என்னை பொறுத்தவரை , என்னை போல ஒரு ஆன்மீக தேடுதல் இருக்கும் அனைவருக்கும், இது ஒரு பெரிய பொக்கிஷம்.  ஆடியோவும், புத்தகமும் இருக்கும்பொழுது நல்ல முறையில் சாதகம் பண்ணினால் ,  விரைவில் முழு ருத்ரமும் பாராயணம் செய்ய இயலும்.

 ஒரு இரண்டு மாதம் , சின்சியரா - ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் vibration துல்லியமாக உணர முடியும்..

சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை  அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க - சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது - ஸ்ரீ ருத்ரமும் ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அமாவாசையா பௌர்ணமியோ - நள்ளிரவில் சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி முன்பு நீங்கள் , அமர்ந்து இருக்கிறீர்கள் . உங்களுக்கு அந்த சூழ்நிலையில் ஸ்ரீருத்ரம் ஜெபிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

 அண்ணாமலையில் அமைதி தவழும் ஒரு நன்னாளில்  - கிரிவலம் வருகிறீர்கள். உங்களால் ஸ்ரீருத்ரம் ஜெபித்தவாறே வர முடிந்தால் - அது ஜென்ம ஜென்மமாக - நீங்கள்  சேர்த்து வைத்த புண்ணியம் அல்லவா ? 
...................................
ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும்.

முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்....

 ஸ்ரீ ருத்ரம் - வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய

http://www.ziddu.com/download/16232335/Sri_Rudram.pdf.html

 ஆடியோ பதிவிறக்கம் செய்ய   : 

 http://www.ziddu.com/download/16232325/rudram.wma.html

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் கைகொடுங்கள்..!
 சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்...!


18 comments:

THEIVAM said...

nandri solla unakku varthai illai enakku

VIJAYAKUMAR.R said...

ஆன்மீகத்தேடலில் அடி எடுத்து வைக்கும் என்னை போன்ற அடியவர்களுக்கு உங்கள் சேவை என்றும் பேருதவியாக இருக்கும்.
வாழ்க நின் பணி: வாழ்க வளமுடன் .

Anonymous said...

awesome blog, do you have twitter or facebook? i will bookmark this page thanks.

My site:
rachat de credits www.rachatdecredit.net

nallendra said...

sri rudram audio is not the full length which cuts in between. but good try. it will be very use full for everyone.

Lakshmi said...

Thank you for giving such a wonderful pdf Sri Rudram... Live long

ismail said...

அய்யா வணக்கம். இதனை போல மஹா காளி சஹஸ்ரநாமம் மந்திர புத்தகம் கிடைத்தால் தயவு செய்து பதிவிடவும்.
இஸ்மாயில், திருப்பூர்

praba said...

சிவன்க்கு ஸ்ரீ ருத்ரம் பாடலை போன்று பெருமாளுக்குரிய பாடல் எது?????நண்பரே

praba said...

சிவன்க்கு ஸ்ரீ ருத்ரம் போல் பெருமாளுக்கு பாடல் எது??????????

Rishi said...

For Vishnu - You can chant Vishnu sahsranaamam, Pursha shuktham , Naraayana shuktham....

In my experiece - these three are extreme powerful...

Thanks for your query

மு. கந்தசாமி நாகராஜன் said...

Could not download.. pls help me to download this

SELVAKUMARAN K said...

நான் சிவ தீட்சை பெற வேண்டும். எப்படி செய்ய வேண்டும்.

senthil said...

pls send lalitha sakashkara namam and vishnu sakashkara namam audio.

senthil@iris-india.com

senthil said...

லலித சகஸ்கர நாமம் மற்றும் விஸ்ணு சகஸ்கர நாமம் audio mp3 publish செய்யவும்.

North South said...

Vanakam.
I couldn't download the Audio and Pdf file. some error there. Pls sir, if can send to my email vijay6179@yahoo.com.au.

Namah Shivaya....

G. Sumathi said...

லிங்க் வேலை செய்யவில்லையே. எனது வெகுநாளைய தேடல். g.sumathi55@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு தயவு செயது ஸ்ரீருத்ரம் audio & pdf அனுப்பி உதவவும்.

Mohanraj Muruganandam said...

Dear ji,

Vanakkam.

The links are not navigated. Plz send both pdf and audio to my mail id mohanraj.mk@gmail.com.
Pls send it this valuable one.

thanks,

M Mohanraj

Mohanraj Muruganandam said...

Dear ji,

Greetings.

The links are not working.
Pls send both to my mail id: mohanraj.mk@gmail.com

Thanks,

M Mohanraj

Sathish Oma said...

ஐயா நீங்கள் குடுத்து உள்ள லீங் ஓபேன் ஆகவில்லை தயவுசெய்து pdf & mp3 எனது மின்னஞ்சல்லுக்கு அனுப்பி வைக்க முடியுமா
மின்னஞ்சல் முகவரி:- sathishoma92@gmail.com

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com