Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நகைச்சுவை : சில Lovely Tamil Jokes

| Aug 1, 2011
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!
=====================================================
சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............  

=========================================================
உங்க மாமா டெல்லிக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.


---------------------------------------------------------------------------------------------------------------------உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.


---------------------------------------------------------------------------------------------------------------------
====================================================================
ஒரு சிறப்புக் கேள்வி. ஐ.ஏ.எஸ் வினாத்தாளில் உள்ள கேள்வி. முடிந்தால் நீங்கள் பதில் கூறலாம்.

ரோட்டில் ஒரு பையனும் பொன்னும் நடந்து போறாங்க. பையனோட மாமியார் பொண்ணோட  மாமியாருக்கு அம்மா. அப்படின்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு?


கண்டுபிடிங்க பாப்போம் !
பின்னூட்டத்தில் உங்கள் கமெண்டுகளை எதிர்பார்க்கிறேன்.. 
 இன்றைய தினம் இனிதே தொடங்கட்டும் !
===============================================================

12 comments:

perumal shivan said...

avangalukkaanaa relation maamanaar and marumagal ok thaane !

Tamil Stories in Tamil said...

பெண்ணிற்கு அந்த பையன் அப்பா(சித்தப்பா இல்லை என்றால் பெரியப்பா) முறை வேண்டும்

kkssenbrothers said...

Dear sir,
அம்மா ----->மகள் / மறுமகன்------------>>மகன் மருமஹேல்


அதாவது பெண்ணிற்கு பையன் மாமனார் / மாமா .....
பையனுக்கு பெண் மருமகல் ....

kkssenbrothers said...

Dear sir,
அம்மா ----->மகள் / மறுமகன்------------>>மகன் மருமஹேல்


அதாவது பெண்ணிற்கு பையன் மாமனார் / மாமா .....
பையனுக்கு பெண் மருமகல் ....

ram said...

Father in law and daughter in law... Ruined almost 15 mins of time.. So i would have failed that exam.lol :-)

sekar said...

Appa , magal relation

sekar said...

Appa , magal uravu

ilaiyaa said...

பையனுக்கு பொண்ணு வந்து அக்க மகள்,அவ்வளவு தான்.,,.


இளையராஜா

M.R said...

மகன் -சின்னம்மா உறவு தான் இருவருக்கும்

VCTALAR said...

பையன் சின்ன அல்லது பெரிய மாமனார் ; பெண் பையனுக்கு கொழுந்தியா மருமகள். அப்படிஎன்றால் பையனுடைய மாமியார் பெண்ணுடைய புருஷனின் பாட்டி ஆவாள்.அதாவது பையனின் மனைவியும் பெண்ணினுடைய மாமியாரும் சகோதரிகள். புரிகிறதா ? எனக்கு விடை கண்டுபிடிப்பதற்குள் கிறுக்குப் பிடித்து விட்டது.
அருணாசலம் - கோட்டையூர்.

Balaji Komal said...

பேரன் பேத்தி

Maharajan Coffeeday said...

amma. magan relation

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com