Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. !

| Aug 25, 2011


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR5d0QpF7unkduc1BAn0BKpv5rukTa6mYJkkkxAHjGLA1tf9_H3E2_eD3fc

வாசக அன்பர்களுக்கு வணக்கம். இன்னைக்கு நாம கொஞ்சம் உருப்படியான விஷயத்தைப் பார்க்கப் போறோம். நம்மில் எல்லோருக்குமே ஒரு பழக்கம் இருக்கிறது. எதையுமே நாம உணர்ந்து , அனுபவிக்காதவரை - எந்த ஒரு விஷயத்தையும், நம்புறது கிடையாது. ரொம்ப நல்ல விஷயம்தான். சந்தேகமே இல்லை. கடவுள் விஷயத்திலும், நமக்கு இந்த எண்ணம் இருக்கு.


இந்த உலகத்திலே இன்னைக்கு இருக்கிற இரண்டு மாபெரும் கேள்விகள் என்ன தெரியுமா? உயிர் பிரிந்த பின் என்ன ஆகிறது? கடவுள் உண்மையா இல்லை பொய்யா? இந்த இரண்டு விஷயங்களையும் உறுதியாக கூற , எந்த விஞ்ஞானிகளும்  தயாராக இல்லை. அதனால் நாமும் , ஒரு பெரிய , குழப்பத்திலேயே இருந்து உழண்டு கிட்டு வர்றோம். அதே நேரத்தில் , இதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், நிம்மதியாக அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு , வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்களும் உண்டு. நல்ல விதமாக போறவரைக்கும் பிரச்னை இல்லை. எப்போ, நாம் நம்மோட வாழ்க்கையை முழுசா கண்ட்ரோல் பண்ண முடியும்னு தோணுதோ , அப்போ கடவுள் இருந்தா என்ன.. இல்லைனா என்ன..? நாம பாட்டுக்கு , நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதானே...


ஆனால், அப்படி இருக்க முடியுதா? முடியலை.. ! ஏன் ? நாம ஆசைப்படுறோம்.. நம்மாலே முடிஞ்சதுக்கும் தாண்டி, முடியாததுக்கும் சேர்த்து ஆசைப்படுறோம்.. ! அடுத்தவங்களைப் பார்த்து அவங்க கூட நம்ம நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்குறோம்.. அவங்க மாதிரி நாம ஆகணும்னு ஆசைப்படுறோம். நமக்கு இருக்கிற தகுதிக்கு , இன்னும் கொஞ்சம் பெட்டரா , நமக்கு கிடைச்சு இருக்கலாம்னு, எல்லா விஷயத்துலேயும் - பீல் பண்றோம். பொன், பொருள் கூட ஒரு பெரிய விஷயமா தெரியலைனா கூட, பெண் விஷயத்தில் அப்படியே கிளீன் போல்ட் ஆகிடுறோம். நல்லவன்கிற முக மூடி போட்டுக்கிட்டு ,  தப்பான விசயங்களுக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு ஏங்குறதே வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.  இதிலே ஆன்மீக போர்வைலே உலவுற ஆளுங்கதான் அதிகம். எங்கேயுமே போலித்தனம் !
பெரிய, பெரிய யோகி , துறவி, மடாதிபதிகளே இதுலே ஒன்னும் கிடையாது. நமக்கு வேற பாவம், விஸ்வாமித்திரர் பற்றி வேற அறிமுகப் படுத்தி விட்டாங்க. காமத்தைக் கட்டுபடுத்திட்டா அதை விட பெரிய விஷயம் எதுவுமே இல்லை.  ஆனா, ரொம்ப கஷ்டமான விஷயம்தான். முயற்சி பண்ணுவோம். மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இருக்கணும்னு நெனைச்சா, தனி மனித ஒழுக்கம் முக்கியம் தான். கடைசி , ஒரு நிமிட சபலம் கட்டுப் படுத்திட்டா கூட போதும். பின்னாலே வரக் கூடிய கேவலத்தை , அவமானத்தை வர விடாம பண்ணிடலாம். 


இதுக்கு , நீங்க என்ன பண்ணனும்? கடவுள் இருக்கிறாரா , இல்லையா னு ஒரு  நாம யோசிக்கும்போது - இரண்டு விஷயங்கள் யோசிக்க வேண்டியிருக்கு.  ஒன்னு , கடவுள் ஒருத்தர் இல்லைன்னு இருந்தா, தப்பு செய்யறவங்க எந்த காலத்துலேயும் அதை நிறுத்த வேண்டியதே இல்லை . அவங்க பாட்டுக்கு அதை தொடர்ந்து செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க. இல்லையா, கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார்னு வைச்சுப்போம். நாம செய்யற தப்புக்கு எல்லாம், தண்டனை உண்டுன்னு நெனைச்சா, மறுஜென்மம் உண்டுன்னு நம்புனா - தப்பு செய்யாமலாவது இருப்போம்.  இல்லை குறைச்சுப்போம்.. அதனாலே , இந்த இரண்டும் இருந்தா நல்லது. இருக்கிறதா நம்பிட்டுத்தான் போகலாமே.. அதனாலே உங்களுக்கு என்ன பெரிசா நஷ்டம்? ஒருவேளை , இருந்தா - நாம பண்ற புண்ணியத்துக்கு , பெரிய அளவுலே லாபம் தானே..!
சரி, இப்போ - இந்த ஜென்மத்துலே, நாம் பண்ணின பாவ புண்ணியத்துக்கு ஏற்ப , நமக்கு ஒரு சில விஷயங்கள் நடக்குது. இல்லை தவறுது. போன ஜென்மத்துலே நாம என்ன செஞ்சோம்னு தெரியாது, இல்லையா? ஐயா, சரி - நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேன் , அதை எப்படி சரி செய்றது? எப்படி தெரிஞ்சுக்கிறது..


அதுக்குத் தான் உங்களுக்கு - கடவுள் தேவைப்படுகிறார். அல்லது ஒரு குரு தேவைப்படுகிறார். ஆனா, நல்ல குரு கிடைக்கணும். இப்போ குரு ஸ்தானத்துலே இருக்கிற பெரிய, பெரிய மடாதிபதிகள் எல்லோருமே நல்லவங்களா  இருக்கிறது இல்லை. எதோ ஒரு சில சித்து வேலைகள் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு , நம்மளை ஆச்சரியப் படுத்தினாலும்,  அவங்களோட இன்னொரு முகம் பார்க்கிறப்போ - நாம அவங்களை விட எத்தனையோ மடங்கு மேல்னு தான் தோணுது இல்லையா?  நம்மளோட சொந்த அனுபவங்கள்னு பார்க்கிறப்போ - பெரிய பெரிய ஜோதிட மேதைகள், பிரசன்னம், ஆரூடம், நாடி ஜோதிடம், ஜீவ நாடி எல்லாமே ஒரு கட்டத்துலே - நம்பகத்தன்மை இல்லாமே,  சலிப்பு ஏற்படுத்தி விடுகிறது.  பல பேருக்கு அது பொருந்தி வந்தாக் கூட , நமக்குன்னு வர்றப்போ.. ??


அப்போ வேற வழி.. ஒரு வழி இருக்கு... முயற்சி பண்ணுங்க..


ஐயா , மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா... !


சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில்  மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க  இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
 
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .

 

பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.  ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். 


ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு,


ஓம் சிங் ரங் அங் சிங்


என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். 


நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை.  இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை  உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ,  உங்களுக்குமனபலம் கூடும்.


கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும்.

எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?

ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.  நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...


எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....!  
மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

இதைப் போன்ற , பல அபூர்வமான தகவல்களை அவ்வப்போது  முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறேன்.. ஆனால், வெறுமனே தெரிந்து கொள்வதில் அர்த்தமில்லை.  சின்சியரா , இந்த ஒரே ஒரு பயிற்சி பண்ணிப் பார்த்துடலாம்.. என்ன சொல்றீங்க.. இப்போ இருந்தே தயாராகுங்கள்...  யார் யார் எல்லாம்  ஆரம்பிக்கவிருக்கிறீர்களோ,  கொஞ்சம் நமக்கும் தெரியப்படுத்துங்க.   மின்னஞ்சலிலோ , பின்னூட்டத்திலோ தெரியப்படுத்தவும்.


இந்த கட்டுரை  சம்பந்தமாக மேற்கொண்டு தகவல்கள் வேண்டுவோர், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 


குருவருள் நம் அனைவருக்கும் துணை நிற்கட்டும்.. ! இந்த அமாவாசையிலிருந்தே ஒரு நல்ல முயற்சியை ஆரம்பிப்போம்.. இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை எழுதினால் , மேற்கொண்டு புதிதாக படிக்கும் அனைவருக்கும் , ஒரு புது உத்வேகம் பிறக்கும். உங்கள் , சொந்தம் , சுற்றம்,  நண்பர்களில் தகுதி உள்ளோருக்கு இதை தெரியப்படுத்துங்கள்.. !  ஒரு நிம்மதியான, பரிபூரண ஆனந்தம் எல்லோருக்கும் கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்... ! 


அடுத்த மூன்று நாட்கள் , கொஞ்சம் பிஸி.. மீண்டும் திங்கள் கிழமை சந்திப்போம் !  விஷிங் யு ஆல் தி பெஸ்ட் !

24 comments:

ismail said...

உங்களின் ஆன்மீகஈடுபாடு எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வகையில் தாங்கள் ஒரு ராமானுஜர் போல தங்களுக்கு தெரிந்த தெய்வீக ரகசியங்களை மிக சாதரணமாக எல்லோருக்கும் தெரியபடுத்தி ஆன்மீக ரீதியில் படிப்பவரும் உயரவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை. தாங்கள் நீளஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ இறையருளும் குருவருளும் என்றென்றும் துணை நிற்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
இஸ்மாயில், திருப்பூர்

Gopinath M said...

ஞானக் கோவை பாடலை பதிவு செய்தால், அது பயனுள்ளதாக இருக்கும் ...

Rishi said...

இஸ்மாயில் சார்! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களின் பாராட்டுக்கு நான் அவ்வளவு தகுதி உள்ளவன் இல்லை . ஆனால், உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட வாசர்களின் கருத்துக்கள் , என்னை இன்னும் உழைக்க உத்வேகப்படுத்துகிறது. நல்ல கருத்துக்களை , சிந்தனைகளை - நம் வாசர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள உங்கள் பின்னூட்டம், எனக்கு மிகப் பெரிய ஊட்டம்.. நன்றி.! மத , இன வேறுபாடு இன்றி , அனைவரும் நம் தளத்தை ஆர்வத்துடன் பார்வையிடுவதில் , என்னுடைய பொறுப்பு கூடியிருப்பதை உணர்கிறேன்..

கோபிநாத் சார்.. ! கண்டிப்பாக சித்தர் பாடல்களை விரைவில் பதிவிடுகிறேன் .. நம் வாசகர்களுக்கு இல்லாமலா.?
அடுத்த வாரத்திலிருந்தே ஆரம்பித்து விடலாம்.. !

Anonymous said...

sir itharku munbu aanmika kadalalil thiru mistic selvam sir sittharkalai kanum mandirm om sim pum am um mam entra manthirathithai sollumaru potirunthan ippoluthu neenkal kuriya mandiram vera mathiri ullathey ethil ethai nankal kadai pidipathu

SriSurya said...

அன்புள்ள ரிஷி, உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி! இங்கு பகிர்ந்துள்ளதுப்போல 90 நாட்கள் இடைவிடாது செய்யவேண்டுமா? பெண்கள் மாதவிளக்கு நாடகள் விட்டு திரும்பவும் தொடரலாமா? பதில் சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்!

regards

Sridurga Anand

nathan said...

உங்கள் தளத்தில் வரும் பதிவுகள் என்னை புதிய பாதையில் நடை போட வைத்துள்ளது.உலக அறிவு தெரிய ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே பல தொடர் சோதனைகளால் ஆன்மீக தேடலை தொடங்கியுள்ள எனக்கு, உங்கள் தளம் நிம்மதியை தருகிறது. தங்களிடம் நிறைய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக அறிய விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை ,உங்கள் அஞ்சலை எனக்கு தெரிவிக்கவும்----நாதன்,பெங்களூர்

Rishi said...

வணக்கம் துர்கா மேடம்.. பெண்கள், மாத விலக்கு நாட்கள் தவிர , மீதி நாட்களில் தொடர்ந்து ஜபிக்கலாம். நீங்கள் கூறியது சரியே. மற்றவர்கள் தொடர்ந்து 90 நாட்கள் செய்யவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால், ஐயா அவர்கள் இரவு எட்டிலிருந்து - ஒன்பது மணிவரை என்பதை குறிப்பிட்டு , உறுதியாகக் கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் முயற்சிப்பதே நல்லது மந்திர வார்த்தைகள் சரியா என்று ஒரு வாசக அன்பர் கேட்டு இருந்தார். திரும்பவும் ஒருமுறை உறுதிப் படுத்திவிட்டேன்.. மிகச் சரி...
உங்கள் அனைவரின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!

Sankar Gurusamy said...

இந்த பதிவிற்கான சுட்டியை கீழ்க்கண்ட பதிவின் கமெண்ட் பகுதியில் கொடுத்துள்ளேன்.

Sankar Gurusamy said...

http://www.gurumuni.com/2011/10/blog-post_27.html?showComment=1319711871464#c6651602395958143599

r.sivakumar,hubli said...

your service is very useful and it make awareness of our religion to the younger generation.it leads to a spiritual revolution silently
thank you i wish and pray the god for continuation.
r.sivakumar. hubli

ஆன்மீக உலகம் said...

ஒரு அற்புதமான ஒரு விசயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்... கண்டிப்பாக இந்த பயற்சியை செய்ய முயல்கிறேன்... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

Anonymous said...

excellent article. I never sit in the computer for more than 1hr. but ur aticles made me sit and read for more tahn 5 hrs....very useful to all.

Vazgha Vaiyagam Vazgha Valamudan

shashikala

c said...

I really appreciate your knowledge. And also you are sharing your knowledge... that is god gift for you... Keep it up...

Melmelum valara Ennudaiya Vazhthukkal....
cheran s

Jeeva Nadi said...

I am Selvaraj from Coimbatore. Please inform the next Jeeva Nadi Reader of Shri.Hanumathdasan sir. It will be very helpful to all.

Thanks!

Selvaraj
Coimbatore.

Unknown said...

om sing rang this mantra in periya ignanakovai old edition mantra ,

RAJ KUMARAN said...

தங்களின் ஆன்மீக ஆலோசனைகள் இன்றய இளைஞர்களுக்கு
வழிபாட்டு முறைகளை அறிய உதவுவதோடு தனி மனிதன் ஒழுக்கதோடும் வாழ உதவுகின்றது.

jobs and carreers said...

adhi arputhamana thagaval .agathiyar thiruvadigalai dharisika virumbugeram, thangal guruvaga irundhu asirvathika vendugiren

Unknown said...

sir, intha mantra alreDY PRINTED TO SIDHAR PERIYA GKYANA KOVAI.

Karthigeyan C.P said...

நான், அயல்நாட்டில் வாழ்கிறேன்.. இதை என்னால் முயற்சி செய இயலுமா..
தாமரை திரி கொண்டு விளக்கு ஏற்ற இயலாது, நெய் கிடைக்கும், நெய் கொண்டு ஏதேனும் பஞ்சி வைத்து விலகு ஏற்ற இயலும்..
இதை செய்வது முறையா, இல்லை நீங்கள் சொனது போல் தாமரை திரி கொண்டு தான் செய்ய வேண்டுமா, அதே போல் காசி செம்பில் கிடைக்காது இங்கு..
நான் என்ன செய்ய வேண்டும்.
உங்களின் அறிவிரை வேண்டும் இதில்...

SWEET LITTLE FAMILY said...

Ur service is excellent. I am from chennai. Now i am hitting the bottom level in my life. Cant decide on anything. I sm totally losy job, business, relatives, and now i sm totally helpless. I have a severe belief in god, but font know what made him to punish me to this level. Probably my purva karma. Can u pl help in checking my horoscope? Pl relieve me from this.

datchina moorthy said...

thank you

Sivaraman Hasithaa said...

இரவு 8 to 9 மணி நேரத்தில் மட்டும் இந்த மந்திரம் ஜெபிகவேண்டுமா?
ஆனால் இந்த தீப பயிற்சி இரவு நேரத்தில் செய்தல் துஷ்ட ஆன்மாக்கள் நம்மை தொந்தரவு பண்ண வாய்ப்பு உள்ளது ...?
ஆகவே காலை நேரம் 5 to 6 பிரம்ம முகூர்த நேரங்களில் பயிற்சி செயலாமா ...?
பதில் சொல்லுங்க குரு ஜி...

Sivaraman Hasithaa said...

குருஜீ இந்த பயற்சியை செய்கிரேன்

Bhadreshan Velusamy said...

Varum amavasai 29.10.2016 mudhal start pannukiren

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com