Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மரணத்தைவிட கொடியது எது தெரியுமா?

| Aug 18, 2011


 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTSYms0vcawV0nkW22Zr9rbe4Zm40jkIDDIheAaRSVb_4dVQsKsBQ


ஓகோனு ஒரு பிசினெஸ் ஓடிக்கிட்டு இருக்கும். திடீர்னு சரிய ஆரம்பிக்கும். புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நெனைச்சு, குட்டிக்கரணம் அடிச்சுப் பார்ப்பீங்க. இதோ, இதோன்னு தா காட்டிக்கிட்டே இருக்கும்.  இப்படி இருந்தா, உங்களுக்கு கேது  தசை நடக்குதானு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.


வாழ்க்கைங்கிறது ஒரு கட்டுமர கடல் பயணம்தான். அலைகளுக்கு ஏற்ற ஆட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், எத்தனை பேர் மீன் பிடிச்சுட்டு வர்ராங்க. விழிப்புணர்வு, திறமை இரண்டும் இருந்தாத்தான் ஜெயிக்க முடியும்.  


 நான் அடிக்கடி சொல்ற விஷயங்களில் ஒன்று, நவகிரகங்களில் பெரும் வலிமை வாய்ந்த கிரகம் கேது. என்னடா இப்படி சொல்றாரேன்னு நீங்க நினைக்கலாம். மேலே படிங்க. அப்புறம் நீங்களே சொல்வீங்க எப்படினு? 


 கேது , ராகு, செவ்வாய் , சனி , சூரியன் - இந்த வரிசையிலேதான் , கெடுதல் பலன்கள் அதிகமா நடக்குது. இன்னைக்கு நடைமுறையிலே சனி பற்றி ஓரளவுக்கு எல்லோருக்குமே தெரிஞ்சு இருக்கு. ஆனா, அவருக்கும் மேலே ஒரு மூன்று தாதாக்கள் இருக்கிறாங்க. 


நம்ம இணையதளத்துலே ஏற்கனவே, ராகு தசை , செவ்வாய் தசை பற்றி கொஞ்சம் விரிவா பார்த்து இருக்கோம். இன்னைக்கு  கேது தசை பற்றி கொஞ்சம்  சுருக்கமா பார்க்கலாம்.


 கேது பகவான் ஞான காரகன். அதாவது ஞானமார்க்க ஈடுபாட்டை வளர்ப்பவர். அதாவது கோவில், குளம் ,ஆன்மிகம் இப்படி ஈடுபாட்டை வளர்க்கும். நல்லது தானே சார், இது எதுக்கு கெடுதல்னு நெனைக்கனும்னு நீங்க கேட்கிறது புரியுது.


உங்களை அப்படியே தோள்லே கைபோட்டு , ஈடுபாடு வர வைக்கிறது இல்லை . அடி, அடி, செமத்தியான அடி. விரக்தி. வேதனை, அவமானம் எல்லாம் கொடுத்திட்டு , அடத் தூ, இப்படி ஒரு பொழைப்பு பொழைக்கனுமானு உங்களை நினைக்க வைச்சுட்டு , அதுக்கு அப்புறம் வாழ்க்கைனா என்னனு உங்களுக்கு ஞானம் புகட்டுகிறார். (வெளங்கின மாதிரி தான் )
நீங்க எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தாலும், கேது தசை வர்றப்போ , கொஞ்சம் உஷாரா இருந்துக்கிடுவது நல்லது.


மரணத்தைவிட கொடியது என்ன தெரியுமா? நம்மளை உயிருக்கு உயிரா நேசிச்ச ஜீவன்கள் கூட மறந்து போற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழுறது.
யாரை நீங்க நேசித்தீர்களோ , அவர்கள் உங்களை வெறுக்கும்படி ஒரு மட்டமான வாழ்க்கை வாழும் சூழ்நிலை ஏற்படுவது. 


கணவன் - மனைவி உறவு விரிசல், இந்த கேது தசையில் சர்வ சாதாரணம். சின்ன , சின்ன சண்டை இல்லை , விவாக ரத்து வரை , கோர்ட் , கேஸ் என்று  அலைய வைக்கும். நேசித்த ஒரு நெஞ்சம் வஞ்சிக்குமா என்று எண்ணி, எண்ணி மாய்ந்து போக வேண்டி வரும்.
அஸ்வினி, மகம், மூலம் என்று மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , பிறக்கும்போதே கேது தசை நடக்கப் பிறந்து இருப்பர். நல்ல, செழிப்பா நீங்க பிறக்குறதுக்கு முன்னாலே வரை அந்த குடும்பம் இருந்து இருக்கும். கேது தசை முடியறதுக்குள்ளே ஒரு சின்ன விபத்து. அப்படியே கேது முடிஞ்சிடும். அப்பாடா.. ! பெரிய நிம்மதி. பிறக்கும்போது குரு, சனி , புதன் தசை நடக்கப் பெற்றவர்கள் - மத்திம வயதில் கேது தசையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு தான் முழுமையா , இதோட பாதிப்பு தெரிய வரும். 


ஏழு வருஷம் . கேது தசை நடக்குது. யாருக்குமே நல்லது நடக்காதா ? நடக்கும். எப்படி?
நீங்களும் நல்லவனா மாறுனாதான் உண்டு. வேற வழியில்லை பாஸ் ! உங்க மனசு அறிஞ்சு , நீங்க தப்பு னு தெரிஞ்சு பண்ணுற தப்பான விஷயங்களை விட்டாலே போதும். 


 பெரிய பெரிய கோவில் கட்டுற விஷயம் கூட நீங்க கேது தசையில் செய்ய முடியும். கேது உங்களுக்கு நடந்தால் , ஆலய புனருத்தாரணம், கும்பாபிசேகம் செய்யும் விஷயங்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். அது மிகப் பெரிய புண்ணியம். உங்களுக்கு வர விருக்கும் கெடுதல்கள் அனைத்தும் ஓடிவிடும். கேது தசையில் , இறைவனையே நேரில் தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் கூட கிடைக்கும்.


கேது உங்கள் லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ, தசை நடத்தும்போது - அந்த வீட்டிற்குரிய பலன்களை கொடுக்கிறார்.
லக்கினத்தில் இருந்து இரண்டு எனில் , தனம் ,குடும்பம் , கல்வி , வாக்கு - இப்படி. அதாவது , வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம , ஊரெல்லாம் வம்பு சண்டை போட்டுக்கிட்டு , குடும்பத்துக்குள்ளே நிம்மதி இல்லாம , குடும்பத்தையே பிரிஞ்சு ... இப்படி...
கேதுவுக்கு உரிய தெய்வம் - விநாயகப் பெருமான். விநாயகரை முறைப்படி வழிபாடு செய்தாலே , உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தவிர்க்கப்படும்.


நம் ஜோதிட பாடங்களை , பழைய பதிவுகளை திரும்ப ஒரு தடவை பார்த்தீங்கன்னா, கேதுவோட இயல்புகள், காயத்ரி மந்திரம் , ஸ்தலங்கள் எல்லாம் ஏற்கனவே கொடுத்து இருக்கிறோம். கேது தசையில் , விநாயகரை கும்பிடுவதன் மூலம் - நீங்கள் எவரையும் வெல்லும் ஆற்றல் பெற முடியும். அந்த இறைவனையே தரிசிக்க முடியும்.
விநாயகரை எப்போ, எப்படி கும்பிடுவது என்ன துதிகள் என்று பார்ப்போம். நமது சர்வ காரிய சித்தி மாலை கட்டுரையில் உள்ள மந்திரங்கள் தவிர்த்து மேலும் சில powerful துதிகளை , சங்கடகர சதுர்த்தி பற்றி சில சிறப்பு தகவல்களை இன்று பார்ப்போம். 


விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக்  கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம்.
 இதுமட்டுன்று  ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.

 மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

 விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.

 ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய  தனிப்பட்ட மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.

 சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

 சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு  பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.

 சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.
 விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை'  என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு. 

 சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.

இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இரண்டில் ஒன்றைப் படிக்கலாம்.

 முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம்.
 விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று.

  இளஞ்சூரியனைப்  போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.
                'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.


விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம்  இங்கு விளக்கப்படுகிறது.   "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
        காரியசித்தி மாலை

1.

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ

எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.

2.


உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்

உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

3.


இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்

தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.

4.


மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான

தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

5.


செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்

ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

6.


வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய

வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

7.


மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்

நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

8.


பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்

பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்


இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்

சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்

தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.        சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் 


இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில் 
காணப்படுவது.  பதினெட்டுப் புராணங்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
இவை போலவே பதினெட்டு உப புராணங்களும் எண்ணற்ற ஸ்தல
புராணங்களும்  உண்டு. 

   
இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை
நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில்  ஒரு விசேஷ வழிபட்டு
மூர்த்தி  இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி'  என்பது அவருடைய பெயர்.சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம்
'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து
வழிபடலாம்.     
             
 இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் 
படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய  பலனைப்
பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு  நாமங்கள் இருக்கின்றன.

 இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள்
நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு  தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம்  வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.
 

தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு
ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின்  சங்கடத்தைத் தெளிவாக
எடுத்துரைத்து அதை நீக்குமாறு  சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில்  'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா? 
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல்  செய்து
படிக்கவேண்டும்.

        நாரத உவாச -

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே


          தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை
விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச்
சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்


            வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே!
லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை
முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்


            சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே!
விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!

நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்


            நெற்றியில் சந்திரனை உடையவரே!  கணங்களின் தலைவரே!
விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ


            இந்தப் பன்னிரண்டு  பெயர்களையும் மூன்று வேளைகளிலும்
படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.   

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்

           
 கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை
வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு
குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு
மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:


 இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு
மாதங்கள்  சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும்.படிப்பவர்களுக்கு
அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:


 எட்டு கணேச பக்தர்களுக்கு  இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக்
கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக 
வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

        இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
 

2 comments:

thiru said...

Very Nice posts. Thank you very much.Continue your great job !!

Trading Options said...

only one word to describe this site - Quality.

All the best.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com