Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

அண்ணாச்சி.. நீங்க மதுரைப் பக்கமா? ஒரு உதவி செய்ய முடியுமா?

| Jul 8, 2011
மதுரைக்கு அருகில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும், ஆன்மீகத் தொண்டு செய்யும் ஆர்வலர்களுக்கும், இந்த தகவலை கொண்டு செல்ல உதவுங்களேன்...!!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQBgZz--wBzckuw6lU1PJMkVgrBWMxzoHSWWYL-C6tZPTIRcPhg
திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி புகழப்படும் புண்ணியஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்பட்ட இக்கோவிலில் கடந்த 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாலய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி, தங்க விமானம், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உபசன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு அங்குள்ள கோபுரங்கள், சிலைகள் வர்ணம் பூசப்பட்டு முழு வீச்சில் பணிகள் முடிந்தது. பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அரசு உத்தரவின்பேரில் வருகிற 10-ந்தேதி அன்று மகா கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

6-ந்தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கி 7, 8 ஆகிய நாட்களுக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 9.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கள்ளழகர் கோவிலில் உள்ள பள்ளியில் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து 20000 பேருக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றோம் . விருந்து தொடர்ந்து நல்ல விதத்தில் நடைபெற , உதவி  /  சேவை செய்யஅழைக்கிறோம். விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

We need volunteers for feast service & to manage the crowd ,if you are interests please call on us.


Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai

C/o Chamundi Vivekanandan
Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,Madurai -625 001
Cell: 94424 08009,Shop: 0452-2345601

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com