Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

முன் ஜென்ம வினை தீர வழி...அகத்தியர் நடத்திய அதிசயம் ! (நிஜ சம்பவம் )

| Jul 5, 2011

சென்ற வாரம் நமது இணைய தளத்தில் வந்த அகத்தியர்  நடத்திய அற்புதம் பற்றிய கட்டுரையை படித்த நமது வாசகர் ஒருவர் , திரு . ஹனுமத்தாசன் அவர்களை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டு இருந்தார். ஐயா, ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இறைவனடி சேர்ந்தார். எல்லா முக்கிய தமிழ் நாளிதழ்களிலும் அதைப் பற்றிய செய்தி வந்து இருந்தது. 

எனினும், நீங்கள் அதை நினைத்து மனம் தளர வேண்டாம். அகத்தியர் அருளே உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது  , ஒரு முறை சதுரகிரி சென்று வாருங்கள். ஸ்ரீவில்லிபுத்தூர்  பத்திரகாளியம்மனையும் பார்த்து உங்கள் கோரிக்கையை வையுங்கள். உங்கள் மனக்குறை , கண்டிப்பாக விலகும். இந்த கட்டுரையை படியுங்கள்....சில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமலேயே நம் கர்மக்கணக்கு நேர்த்தியாகிறது. அப்படி  அனுபவம்,உங்களுக்கு சதுரகிரி யாத்திரை யின் போது  கிடைக்கலாம்.

 அவரது ஜீவ நாடி தொடர் தந்தியில் வெளியானதில் இருந்து , மேலும் ஒரு கட்டுரை கீழே கொடுத்து உள்ளேன். இதைப் போன்ற கட்டுரைகளில் உங்களுக்கு தேவையான ஒரு சில சூட்சுமமான விஷயங்கள் இதில் அடங்கி இருக்கக் கூடும். இதைப் படிக்கும் நமது வாசகர்களுக்கு , நிச்சயம் சதுரகிரி செல்லும் ஆவல் அதிகரிக்கும்... !! இன்றும் சித்தர்கள் கோலோச்சும் அந்த அற்புத மலையில், உங்களுக்கு சித்த தரிசனப் பேறும் கிடைக்கலாம்.

எங்கும் வியாபித்து இருக்கும் அந்த சுந்தர மகாலிங்கத்தின் அருள் மழையில் நீங்களும் ஒரு முறை நனைந்து வாருங்கள்..!!

=====================================================================

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSIFt4X5TlvSecotawJVXDFjEUykUW6RJ-QIGcK51WvXGIM-DQ8Ew
தெய்வத்திரு . ஹனுமத்தாசன் அவர்களின் ஜீவ நாடி அனுபவத்திலிருந்து...  

ஒரு நண்பகல் பொழுது. எல்லாப் பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு வெளியே கிளம்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, அரக்க பரக்க ஓடி வந்தார் ஒருவர். அவர் வந்த வேகத்தைப் பார்த்தால் மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

நடுத்தர வயது இருக்கும். ஆஜானுபாகுவாக இருந்தார். முகத்தில் ஆரோக்கியம் இருந்தது. வசதியுள்ளவர் போல் தோன்றியது. வந்தவரை உட்காரச் சொன்னேன். பிறகு அவரை விசாரித்தேன்.

நன்றாக இருந்த அவரது மனைவிக்கு திடீரென்று மேனியெல்லாம் வெள்ளை வெள்ளையாகப் புள்ளிகள் தோன்றிற்று. பல்வேறு தோல் நோய் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார். தோல் நிறம் மேலும் வெண்புள்ளியாக மாறிக் கொண்டிருந்ததே தவிர சிறிதும் குணமாகவில்லை.
மிகவும் செக்கச் சிவப்பாக இருந்த உடம்பு இப்பொழுது வெண்புள்ளிகளாக மாறியதால் தனக்கு குஷ்டம் வந்து விட்டது என்று எண்ணி தன்னம்பிக்கை இழந்து இரு முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார் அவரது மனைவி.
இது தொழுநோய் அல்ல. தோலில் ஏற்பட்ட ஒரு வகையான அலர்ஜி.

மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் படிப்படியாகக் குணமாகிவிடும் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் யாரோ ஒருவர் அவரது வீட்டில் வாஸ்து சரியில்லை: அதனால் தான் இத்தனை தொல்லை என்று சொல்லியிருந்ததால் தன் மனைவியின் தோல் நோய்க்கும், வாஸ்து பற்றிய சந்தேகத்திற்கும் அகத்தியர் நாடியில் விளக்கம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.
அகத்தியர் நாடியில் நல்ல பதில் வரவில்லையென்றால் அந்த நபரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருப்பதாக பின்னர் அவரது பேச்சில் தெரிந்தது.

அவரது உள்ளத்தை மிக நன்றாக அறிந்த நான் முதலில் அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். ஐயா நல்வாக்குத் தாருங்கள். ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவர்கள் இருவரது உயிர்களையும் பறித்து விடாதீர்கள் என்று பிரார்த்தனை செய்தேன்.

எனது மவுனமான பிரார்த்தனையை அறியாத அவர்,  ஏன் சார் எனக்குப் படிக்க மாட்டீங்களா? என்று கெஞ்சுவது போல் பேசினார்.

கண்டிப்பாக படிக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி விட்டு, பூஜை அறையிலிருந்து அகத்தியர் ஜீவநாடியை எடுத்து வந்தேன்.
முதலில் தெய்வ ரகசியமாக,  வந்தவரைப் பற்றி அப்படியே புட்டுபுட்டு வைத்தார் அகத்தியர். அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனேன். பின்பு அவரைப் பார்த்து உங்களுக்கு நாடியில் நம்பிக்கை இருக்கிறதா என்றேன்.
‘எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஏனெனில் நிறைய பேரிடம் நாடி பார்த்தேன். கடந்த காலத்தைப் பற்றி நன்றாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.
‘ஏன்?’ – நான் கேட்டேன்.

அவர்கள் பரிகார காண்டம்,  தீட்சை காண்டம்,  சாந்தி காண்டம்….. என்று சொல்லி எனக்குள்ள தோஷம் போக ஏராளமானப் பரிகாரங்கள் சொன்னார்கள். இந்த பரிகாரங்களுக்காக நாடி படிப்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதே நேரத்தில் என் மனைவிக்கு நோய் குறையாமல் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது. எனவே வேறு வழியில்லாமல் தலையெழுத்தே என்று கொடுத்தேன். அப்படி கொடுத்தும் இன்று வரை என் மனைவிக்கு நோய் குறையவே இல்லை என்றார் வெறுப்புடன்.
ஒரு வேளை அகத்தியர் ஜீவநாடியில் சில பிரார்த்தனைகள் வந்தால் அதை முழுமனதோடு செய்ய வேண்டும். எந்த பரிகாரமும் அல்லது பிரார்த்தனைகள் ஆனாலும் நீங்கள் தான் செய்ய வேண்டும். செய்யத்தயாரா? என்றேன்.
எது முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்றார்.

உங்கள் மனைவிக்கு நோய் குணமாக வேண்டாமா? அதற்குத்தானே என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன்.

எல்லோரும் உங்களைப் பற்றிச் சொன்னார்கள். கடைசி முயற்சியாக ஒரு தடவை பார்க்கலாமே என்று தான் வந்தேன். ஏற்கனவே பரிகாரங்களைச் செய்து வெறுத்துப் போனதால் மனது வெம்பிப் போய்விட்டது. இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லுங்கள். முடிந்த வரை செய்கிறேன் என்று ஒரு வழியாக இயல்பான நிலைக்கு வந்தார்.
அகத்தியர் நாடி மூலம் வாய் திறந்தார்.

தஞ்சாவூரில் ஒரு பெருநிலக்கிழாராக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன். சொத்து அதிகம். நன்செய், புன்செய், தோப்பு, துரவு என்று செழிப்பான மண் வளம் மிக்க சொத்துக்களை வைத்து அதிகார போதையிலே செல்வாக்கு புகழோடு வாழ்ந்து வந்தான்.

தெய்வ நம்பிக்கை என்பது இவனுக்கு ஒரு போதும் கிடையாது. பெரியவர்கள், பெற்றோர் சொன்ன அறவழிக்கு எதிராகச் செயல்பட்டவன். இறைநம்பிக்கை இல்லாத அரசியல் கட்சியில் கொடிகட்டிப் பறந்தான். ரத்தக் கொழுப்பும், பணத்திமிரும் ஆட்டிப் படைத்ததால் தன்னை எதிர்த்துப் பேசிய பலமில்லாத பெண்கள், சிறுவர், சிறுமியரை பலர் மத்தியில் அவமானப்படுத்தினான்.

மொட்டையடித்து அவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி கிராமத்தைச் சுற்றி வரச் செய்தான். இந்தக் கொடுமையை முன் ஜென்மத்தில் செய்திருந்தாலும், அந்த ஊழ்வினை தான் இந்த ஜென்மத்தில் இவன் மனைவிக்கு தோல்நோயாக மாறி மனதைத் துடிக்க வைத்திருக்கிறது.
எனினும் அகத்தியனை நோக்கி வந்ததாலும், இவனை ஈன்றோர் செய்திட்ட பெரும் புண்ணியம், அன்னதானம் ஆகியவற்றாலும் இவனது மனைவிக்கு வந்த தோல் நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்பு உண்டு.

என்றாலும், விட்ட குறை தொட்ட குறை போல் இவனுக்கு இன்னமும் முழுமையான தெய்வ பற்று இல்லை. அகத்தியன் சொல்வதை ஒரு போதும் இவன் செய்யமாட்டான். இன்னும் சொல்லப்போனால் அகத்தியனை சோதிக்கவே இவன் இங்கு வந்துள்ளான். அதுதான் உண்மை என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

கடைசி நான்கு வரியை மாத்திரம் அவரிடம் சொல்லாமல் அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்தால் உங்கள் மனைவிக்கு தோல் நோய் குணமாகும் என்றேன். அகத்தியர் சொன்னதை தான் செய்வதாகச் சொல்லி தலையைத் தலையை ஆட்டினார்.

சதுரகிரி மலைக்குச் சென்று எட்டு காததூரத்தில் வலப்புறம் திரும்பினால் அங்கு ஒரு சிறு குகை இருக்கும். அந்த குகைக்கு இடப்புறத்தில் ஒரு வித்தியாசமான மரம் இருக்கும். அந்த மரத்தின் பூவை (பதினெட்டு) பறித்து குப்பைமேனி, மிளகு, ஆவாரம்பூ, குமரிப்பூ, மாதுளம்பூ, சரக்கொன்றைப் பூ, செம்பரத்தம் பூ இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு கலந்து மேனியில் தடவி வந்தால், வெண்புள்ளி மறையும். தோல் நோய் முற்றி குஷ்ட நிலைக்குச் செல்லாமல் தடுக்கும். சுமார் மூன்று மாதங்கள் இந்த மருத்துவச் சிகிச்சை தொடர வேண்டும் என்றார் அகத்தியர்.

இதைக் கேட்டதும் வந்தவருக்கு சந்தோஷம் வரவில்லை. வெறுப்போடு சதுரகிரி மலைக்கு நான் எங்கே போவது? எது எது எந்த பூ என்று எனக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி? என்று நேரிடையாகவே பட்டென்று சொல்லி விட்டார்.

மறுபடியும் அகத்தியரிடம் இதை சொல்லி இதை விட எளிய வைத்தியம் சொல்லக்கூடாதா என்று கேட்டேன்.

‘உண்டு அதையும் உரைத்திருப்பேன். இவனுக்குத்தான் எதிலும் நம்பிக்கை இல்லையே. இவன் அந்த மருந்தைப் பெற வைப்பேன். அகத்தியன் மீது நம்பிக்கை வைத்து முதலில் இவன் சதுரகிரிக்கு போகட்டும் என்று மறுபடியும் உரைத்தார். இதைத்தவிர வேறு வழியே இல்லையா? என்றார்.

அகத்தியன் சொன்னபடி செய். இல்லையெனில் முன் ஜென்ம கர்ம வினையிலிருந்து நீ தப்ப முடியாது. உனக்கும் அந்த மாதிரி நோய் வரும் என்றார். அதைக்கேட்டு அமைதியாக திரும்பினார்.
நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் என் வீட்டு வாசலில் தன் மனைவியோடு வந்து நின்றார் அவர். அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். பின்னர் விசாரித்தேன்.

சதுரகிரி மலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு யாரோ ஒருவர் அகத்தியர் அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு தோல் நோய்க்குரிய அகத்தியர் சொன்ன அத்தனைப் பூக்களையும் தன் கைப்படவே கொடுத்திருக்கிறார். அந்த பூக்களைக் கொண்டு தன் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார். நாற்பத்தைந்து நாளில் தன் மனைவி பூரண குணத்தோடு மாறியதை என்னிடம் காட்ட தன்னோடு அழைத்து வந்திருக்கிறார் சந்தோஷத்தோடு.

அவரது நெற்றியில் திருநீறும், குங்குமப் பொட்டும் பளிச்சென்று தெரிந்தது.

16 comments:

Sankar Gurusamy said...

அருமையான பதிவு...

இப்போதய பெருவாரியான நாடி ஜோதிடர்கள் எவ்வளவு பணம் எப்படி பிடுங்குவது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். எனவே நாடி என்றாலே அலர்ஜியாகி விட்டது...

இவர்களில் உண்மையானவர்களை கண்டுபிடிப்பதே ஒரு சாதனைதான்... இந்த சூழலில் என்ன செய்வது...

கடவுள்தான் வழி காட்டணும்.

http://anubhudhi.blogspot.com/

ISMAIL said...

அய்யா வணக்கம். தெய்வத்திரு.ஹனுமந்தாசன் அவர்களை குறித்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எனது சென்னை நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு முறை போனில் பேசியதுடன் சரி. பின்னர் என்ன தெய்வ சங்கல்பமோ தெரியவில்லை அவரை போய் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அவரின் ஜீவ நாடி அனுபவங்களை படிக்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது.
அவரை போல வேறு யாரவது இப்படி ஆத்மார்த்தமாக ஜீவ நாடி பார்ப்பவர்கள் இருந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்
ismaa@sify.com

kasi said...

I want to see the jeeva Naadi. Where i can find ?
Pl Help

Kasi

muralichem02 said...

I am childless for 6 years, so please share the info about Jeevanadi and kindly contact me in this id
muralichem02@gmail.com,

help people like us.

Thanks

Murali

Priya said...

I want to see the jeeva nadi. Please help me to contact

rojagreen said...

i already send a horoscope of Mrs T.s Anitha and i want to see the jeeva nadi please help me my e mail id jaan60@gmail.com

rojagreen said...

i want to see the jeeva nadi please help memy email id jaan60@gmail.com

Anonymous said...

if u want to see jeevanadi go to tanjore one jeevandi available Mr ganesan reading jeevandi

muthu said...

i want to see the jeeva nadi...as like as hanumathasan jeeva nadi ... please help me.. where can i find..

P.Narayana Swamy said...

Hi,

Those who have full faith on Agathiyar Maharishi can get his advice thro his readings from Mr.Ganesan at Siddhar Kudil, Co-operative colony bus stop, Tanjore.
Please check this link for further details

http://www.jeevaarulnaadi.com/contactus.html


May god bless all !!!

Best regards,
Swamy
pnswamy2@yahoo.com

selvakumar said...

I am childless for 13 years, so please share the info about Jeevanadi and kindly contact me in this

Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_8163.html#ixzz24t9MHJ80

Gnana Boomi said...

Shri Ganesan is the only authentic person as of now who reads Jeeva Nadi. But it appears Agastya Muni has instructed the Nadi be kept under pooja till he approves further reading. To read the incidents of Jeeva Nadi in simple English, please visit http://www.gnanaboomi.com

alltek said...

Recently i have visited agathiyar jeeva nadi at kallar. They are real cheats and collecting the information from us and cooking up the stories . So donot waste your money and time to go to Kallar.

Blogger said...

@alltek

I have also visited kallar.There is no cheating over there.They are collecting the Address for sending the agathiar guru pooja & other celebration invitation.

The Naadi reader is reading Whatever told by sage agasthya.

There is no need of cooking up the stories.It is all your Karma.That's all.

abiramy said...

i also want to see jeevanadi for my son.he having delayed speech and not study well.i am in cochin.please help me ...where i can find? this my email id vijaya.abiramy@gmail.com thank u

abiramy said...

i want to see jeevandi for my son. he having delayed speech and not study well.please help me. we are in cochin .kindly contact me this my email id vijaya.abiramy@gmail.com

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com