Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..!

| Jul 23, 2011
I am a blogger , I am a blogger என்று  காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் , சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும்  " Post your comments "  வசதியால் வந்த வினை இது. 

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல்  - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது.. 

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள்.  வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர்.  பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார். 

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி  எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு,  தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த  அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது.. 

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர். 

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர்  நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க..  உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

 நன்றி,

ரிஷி... 


8 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மீ த ஃபர்ஸ்ட் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹா ஹா நீங்க உஷார் தான்

Rishi said...

சி. பி. கலக்கிட்டீங்க .. போங்க... , நீங்களே மெனக்கெட்டு வந்து , பின்னூட்டம் போடுவீங்கன்னு எதிர் பார்க்கலை.. ரொம்ப நன்றி.. !!

shortfilmindia.com said...

:)

cable sankar

கடம்பவன குயில் said...

புதிதாய் பிளாக் தொடங்கிய என்னைப்போன்றவர்களுக்கு எச்சரிக்கைதரும் தங்கள் பதிவுக்கு நன்றி. ஆயிரக்கணக்கான பேர் நடமாடும் இடத்தில் நாம ஜாக்கிரதையாதான் இருக்கணும் போல. தொடர்ந்து இதுபோல் எச்சரிக்கை வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன்.

perumal shivan said...

nandri G

Sankar Gurusamy said...

நல்ல எச்சரிக்கை...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

She-nisi said...

மிகவும் பயனுள்ள பதிவு! நன்றி நண்பரே!

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com