Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உங்கள் சகல பிரச்னைகளையும் தீர்க்கவல்ல பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் நாளைய ஆடி அமாவாசை விரதம் !

| Jul 29, 2011
இறைவனின் சிருஷ்டியில் ,  எந்த நேரமும், நாளும் நல்ல நாட்களே. கிரக சுழற்சி காரணமாக , ஒரு சில தினங்களில் அந்த அருள் அலைகள் , அபரிமிதமாக வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான தினம் தான் , நாளை வரவிருக்கும் ஆடி அமாவாசை. இதில் என்ன அப்படி விசேஷம் என்று , நாம் பார்க்கவிருக்கிறோம், இன்றைய கட்டுரையில்.

எந்த ஒரு பெற்றோருக்கும், தன்னோட குழந்தைகளை  நல்லா கவனிக்கணும். தன்னோட சக்திக்கும் மீறி , அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை இருக்கும். நூற்றுக்கு தொண்ணூத்தொம்பது பேரு அப்படித்தான். ஒன்னு , ரெண்டு தவறுவதும் உண்டு. பெற்ற பிள்ளைகளைவிட தன்னோட சுயநலம் முக்கியம்னு  நெனைக்கிற பெற்றோர்களும் உண்டு. 

அப்படி , கண்ணும் கருத்துமா - உசிரையே உங்க மேல வைக்கிற பெற்றவர்களை - நீங்க எப்படி கவனிச்சுக்கணும் ? அவங்களுக்கு வயசானா, அவங்களை கடின வேலை  எதுவும் செய்ய விடாம, மருத்துவ வசதி, ஆரோக்கியமான உணவு எல்லாம் கொடுத்து கவனிக்கலாம். 

இது உங்களை வளர்த்ததுக்கு , நீங்க செய்ய வேண்டிய நன்றிக்கடன். கடமை. 

ஐயா, அவங்க விதி முடிஞ்சு போச்சு. மேல போயிட்டாங்க. ... அதுக்கு அப்புறம்? வீட்லே படம் மாட்டி மாலை மட்டும் மாட்டிட்டா போதாது ..! அவங்க ஆத்மா சாந்தி அடைய வைக்கணும். அவங்க பூரிச்சுப்போய் , உங்களை ஆசீர்வாதம் பண்ணனும். 
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQg5VbR50GrUQcVuTnc5rCRA9icGfwuj7YTCMejD9G3JdQ0YivUng
இதுவும் உங்க கடன் தான். எப்படின்னு கேட்குறீங்களா? பத்து மாசம் அம்மா வயித்துலே இருந்தது ஒரு கடன்.  உங்க மூன்று தலைமுறையோட ஜீன்ஸ் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகுத்த , உங்கள் தந்தை , தாத்தா , கொள்ளுத் தாத்தா - இப்படி உங்க முன்னோர்களுக்கும், நீங்க பெரிய கடன் பட்டு இருக்கிறீங்க .  இதை எப்படி தீர்க்கப்போறீங்க? நீங்க பண்ற கர்மத்துலே தான், இந்த கடன் அடையும்.

நீங்க , கடனாளியா இருந்தா - உங்களுக்கு , எப்படி மனசுலே நிம்மதி கிடைக்கும்?  சரி, கடன் கொடுத்தவன் - நீங்க திருப்பி கொடுக்கிறவரைக்கும் உங்களை படுத்தி எடுத்திட மாட்டாங்க? நீங்க கொடுக்கலைனா, உங்க குழந்தைகளை தானே கேட்பாங்க !  இந்த மாதிரி தான் சார், பித்ரு கடனும். 

நம் உடம்பே பஞ்ச பூதங்களின் கலவை தான்.  நாம இயற்கையில் இருந்து எடுத்துக்கிடுறோம். என்ன ஆட்டம் போட்டாலும், ஒருநாள் இயற்கையிலேயே அடங்கி விடுகிறோம்.

மேல  போன, ஆத்மா - நீங்க  கொடுக்கிற எள்ளுப் பிண்டத்துக்கு - ஆலாப்  பறக்குமாம். நீங்க பிண்டத்தை ,  பஞ்ச பூதமாகிய நீரில் கரைக்கிறது அவங்களுக்கு - சரியாக மேலுலகம் சென்று அடைகிறது. நீங்க பிண்டம் கொடுக்கும்போதே , அவங்க ஆத்மா நீங்க உலகத்திலே எந்த மூலைல இருந்தாலும், உங்க கிட்டக்கவே நிற்குமாம்.

இது உண்மை, பொய்னு எல்லாம் மடத்தனமா , ஆர்க்யூ பண்ணாம , ஆத்ம பூர்வமா - தர்ப்பணம் பண்ணுங்க. உயிரோட இருக்கும்போது ,  உங்க பிள்ளைகளோ , இல்லை உங்க அம்மாவோ , எதோ கோபத்திலே சாப்பிடாம படுத்திட்டா  , எப்படி மனசு கஷ்டப்படுறீங்களோ  , அதே அளவு அக்கறையோட - இந்த காரியத்தையும் செய்து வாருங்கள்.

இந்த பிண்டம் - அந்த ஆத்மாக்களுக்கு சாந்தி தரும். அவங்களுக்கு வலு கொடுக்கிற மிக முக்கிய சக்தி , இந்த எள் கலந்த மாவு உருண்டை. கருட புராணம் சொல்லும் தகவல்கள் , கடோபநிஷத் சொல்லும் உயிரின் பயணம் குறித்த நிலையை படித்த எந்த ஒரு மனிதனும் , பிற உயிர்களை வெறுக்க மாட்டான். பித்ரு தர்ப்பணம் செய்ய தவற மாட்டான்.

இன்றைக்கும் , பிராமண சமூகத்தில் - பெற்றோரை இழந்தவர்கள் , அமாவாசை தர்ப்பணம் செய்ய தவறுவதே இல்லை. நம்மில் , குறைந்த பட்சம் - இறந்தவர்களின் திதி வரும் அன்னைக்கு பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உங்கள் முன்னோர்களின் ஆசி , உங்களுக்கு முழுவதும் கிடைக்க , ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து , மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை.

நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில் , மறக்காமல் , ஈம சடங்குகளை குறைவற செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை. 

வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் - தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும் , நீங்கள் உணவு உட்கொள்ளும்முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால்தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும்.
உங்கள் உணவை காகம் சாப்பிடும்போது, உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும் , தன்னைப்போல விலகும். உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.

திடீர்னு , இந்த விஷயத்தை இன்னைக்கு ஏன் திரும்ப எடுக்கிறேன்னா.. நாளைக்கு ஆடி அமாவாசை. சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம் , தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. இவை ஆரம்பிக்கும் மாதங்களில் , விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது . அந்த வகையில் - ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் - வரும் அமாவாசையில் - நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை , தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும்.

இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள் - இந்த ஆடி அமாவசை யன்றோ , அல்லது தை அமாவாசை யன்றோ - பித்ரு பூஜை செய்து , பிண்டங்கள் கொடுக்கலாம். 

உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம் , அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! உங்களுக்கு ஒரு கஷ்டம் நா , உடனே ஓடி வர்றது , உங்க அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி தான். இவங்களுக்கு பலம் கொடுக்கிறது , உங்கள் பித்ரு பூஜையும் , தர்ப்பணமும் தான்.

நாளை - அமாவாசை . அதிலும் ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனி, உங்கள் கர்மங்களை முற்றிலும் அழிக்க ,  நாளை விரதம் இருந்து , உங்கள் முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு , பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை. சதுரகிரியில் , அதே நேரத்தில் , சிறப்பு பூஜைகள் நடைபெறும். லட்சக் கணக்கில்  - பக்தர்கள் . நாளை நள்ளிரவு சதுரகிரியில் தங்கி , அந்த பாக்கியம் அடைவர்.


 உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று , நீங்களும் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் !

2 comments:

DrPKandaswamyPhD said...

//உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம் , அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! //

மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் பித்ரு கடனை அடைத்தேயாகவேண்டும்.

GOVINDAN SUBRAMANI said...


உங்கள் முன்னோர்களின் ஆசி , உங்களுக்கு முழுவதும் கிடைக்க , ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து , மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை.


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_29.html#ixzz38Uwx2aPH
மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com