Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பணத்தை முதலீடு செய்யும் முன்... இதையும் தெரிந்து கொள்ளுங்கள் !!

| Jul 22, 2011
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட Ms . ஹாசினி கண்ணன் , அவர்களுக்கு மனமார்ந்த  நன்றி. வாசகர்கள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். பல புதிய யோசனைகளை பிறப்பதற்கும், அவரே யோசனை கூறியுள்ளார்..

RMP multinational business என்பது ஒரு பிரமிட் வடிவ வியாபாரம். இது எங்கள் நாட்டில் (ஸ்ரீ லங்கா) சட்டத்தால்  தடை செய்யப்பட்ட ஒன்று.

விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

1 . நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் பொருளில் 80 % பிரயோஜனம் இருக்காது. (50 % தேறுவதே கஷ்டம்)
2 . இதில் முன்னாடியே சேர்ந்தவர்களுக்கு பரவாயில்லை. பின்னால் சேர்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை இழக்கக் கூடிய வாய்ப்புக்கூட உண்டு.

உதாரணத்திற்கு,
ஒரு ஊரை எடுப்போம். அதில் ஐந்தாயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. முதலாவதாக சேர்பவர் எட்டு பேரையாவது (பொதுவாக எட்டு) சேர்க்கும் போதுதான் தன் கட்டுக்காசை எடுத்துமுடிப்பார்.
அதேநேரத்தில் அந்த எட்டுப்பேர் கட்டுக்காசை எடுக்க மேலும் 64 பேர் (8 x 8 ) இதில் இணைய வேண்டும். இப்படியே போனால், ஒரு நிலையில் கிராமத்தில் புதிதாக சேர ஆட்கள் இருக்கமாட்டார்கள். (அடுத்த ஊரிற்கு போவோம்தானே என கூறாதீர்கள். அங்கேயும் இதே நிலைமைதான்)
எனவே ஒரு நிலையில் (குறிப்பிட்ட காலத்தில்) இந்த நிரம்பல் நிலை வந்துவிடும்.

இப்போது, இந்தத் திட்டத்தில் முதலில் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக சம்பாதித்திருப்பார்கள்... பின்னால் போகப் போக சம்பாத்தியம் தேய்ந்து தேய்ந்து இறுதியில் நட்டத்தில் முடிந்திருக்கும்.

இங்கே, உங்களுடைய கட்டுப்பணத்தில் ஒரு சிறு பகுதி உங்களை சேர்த்துவிட்டவருக்கு சென்றடையும். ஆனால், பெரும்பகுதி கம்பனிக்கு போகும். சேருபவர்கள் கூடக்கூட கம்பனியின் வருமானம் கூடும்.

இத் திட்டம் இருக்கும் காலத்தில் கம்பனியை மூடிவிட்டு போய்விடுவார்கள்..... (மேலும் தொடர ஆட்கள் இருக்க மாட்டார்கள் - வாங்கியவர்களே திரும்ப வாங்கலாம்தானே என கூற முடியும். ஆனால், இதனால் இலாபமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் - பிரமிட்டின் உச்சி போகப் போக குறுகும். எனவே, சிறிது காலதாமதமாகினாலும் மீண்டும் இறுகும் - கம்பனி நிச்சயமாக தலைமறைவாகும்)

இந்த நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டு நஷ்டமடைந்தவர்கள் தங்களை சேர்த்துவிட்டவர்களை கேட்பார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? அழுதுவிட்டு இருக்கவேண்டியதுதான். (புதிதாக, அதாவது பிரமிட்டின் கடைசி சில வரிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.)

மேலும், நீங்கள் எவ்வளவுதான் புதிய ஆட்களை சேர்த்துவிட்டாலும், உங்கள் வருமானத்தில் ஒரு லிமிட் இருக்கும். இங்கே உள்ள திட்டத்தில் அது ஆறு லட்சம் ரூபாய் மாசத்திற்கு. இதற்குமேல் நீங்கள் எவ்வளவுதான் சேர்த்தாலும் பிரயோசனம் இல்லை. எல்லாத்தையும் கம்பனியே சுருட்டிக்கொள்ளும்.

தவிர, அவர்கள் தரும் பொருட்கள், உண்மையிலேயே உங்களுக்கு பிரயோசனமானதுதானா? உங்களுக்கு தேவைப்பட்ட ஒன்றா? நீங்கள் வாங்க நினைத்த ஒன்றா?

பொதுவான விடை "இல்லை". கம்பனி உங்கள் மேல் தங்கள் பொருளை / பொருட்களை திணிக்கிறார்கள். அதன் உற்பத்தியில் / அதன் கொள்வனவில் வரும் இலாபத்தையும் கம்பனியே எடுத்துக்கொள்ளும்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு கிடைத்தது "stabilizer " (கரண்டின் அளவை சீர் செய்யும் கருவி) - உண்மையில் அவருக்கு அது அவசியமற்றது. இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டது ஒரு கல் (இமைய மலையில் எடுத்ததாக கூடப்படும் ஒரு கல்) - அதனால் ஐந்து சதத்திற்கும் பிரயோசனம் இல்லை. அது உண்மையில் அங்கே எடுக்கப்பட்டதா என்பது கூட தெரியாது.

இப்போது சொல்லுங்கள், அந்தப் பொருட்களின் பிரயோசனம் எவ்வளவு? கிடத்தட்ட பூஜ்ஜம் சதவீதம்.

இது எப்படி என்றால், 20 வீத விலைக்கழிவு என விளம்பரப்படுத்துவார்கள். நம்ம ஆட்களும் பாய்ந்து விழுந்து வாங்குவார்கள். ஆனால், உண்மையை சொல்லப்போனால், நமக்கு நட்டம்தான். சரியாக யோசியுங்கள், அந்த நேரத்தில் அந்தப் பொருள் உங்களுக்கு தேவைப்பட்டதா? அந்தப் பணத்தில் செய்ய நினைத்த காரியம் என்னானது? திடீரென பொருள் வாங்கியதால் உங்கள் குடும்பம் திடீர் பணக் கஷ்டத்தில் மிதக்கவில்லையா? (பாங்கில் பணத்தை போட்டுவிட்டு வட்டி வளருகிறதா என பார்த்துக்கொண்டிருப்போரை விட்டுவிடுங்கள். சாதாரண ஊதியம் பெறும் சராசரி குடிமகனை யோசியுங்கள்).

நான் உறுதியாக சொல்ல விரும்புவது, இந்த மாதிரியான பிரமிட் மார்க்கெட்டிங் கம்பனிகளை நம்பாதீர்கள். துணை போகாதீர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்கள் உறவினர்களை, உங்கள் ஊரார்களை ஒரு கம்பனி சார்பாக எமாற்றப்போகிறீர்கள்.

யோசியுங்கள், உங்கள் கிராமத்தின் பணம் கம்பனிக்கும் (60 % இற்கு மேல்), மீதி கிராமத்தில் உள்ள சிலருக்கும் (பிரமிட்டில் மேல் தட்டுகளில் இருப்பவர்கள்) போகப்போகிறது.

எனது சொந்த கருத்து. :

உங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் (அல்லது இந்த திட்டத்தில் சேர நினைத்தவர்களின் வீட்டில் இருந்து) குறிப்பிட்ட தொகையை வாங்கி ஒரு குழுவை அமைத்து, ஒரு குட்டி தொழிற்சாலையை உங்கள் கிராமத்தில் நிறுவுங்கள். (உதாரணம்: ஆடை தைக்கும் தொழிற்சாலை, சிறிய மின் உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலை - printed circuit board தாராளமாக கிடைக்கிறது. அவற்றைக் கொண்டு சில பொருட்கள் இலகுவாக செய்யலாம். மேசை விளக்கு, வாகனங்களில் பொருத்தும் கலர் லைட், LED டோர்ச் லைட்......இன்னும் பல.)

குறைந்தபட்சம் ஒரு வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுங்கள். உங்கள் கிராமமே உழைக்கும். காலாகாலத்திற்கும் அந்த கம்பனி உங்கள் கிராமத்தவருக்கு வருமானத்தை தரும். சமத்துவம் இருக்கும். முடிந்தால் சிறிய தொழிற்சாலையை பெரிதாக்குங்கள்.... பல தொழிற்சாலைகள் ஆக்குங்கள்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கூட முன்னேறலாம்....

குறிப்பு : கிராமத்தில் உள்ள தொழிற்சாலை பொதுச் சொத்தாக இருக்கும் வரை, சண்டை சச்சரவு இருக்காது.

(ரொம்பப் பெரிதாக எழுதிவிட்டேன். 4096 எழுத்துகளை மட்டுமே google comment இல் போடா முடியுமென்பதால் இரண்டாக பிரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். முடிந்தால், பதிவர் விரும்பினால், இதை ஒரு தனி போஸ்ட் ஆக பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
நன்றி.

by ஹாசினி கண்ணன்.
https://www.facebook.com/hashinikannan

3 comments:

Namadevan. said...

ரொம்ப சரியாகச் சொல்லியிருக்கார் ஹாசினி கண்ணன்.வழத்துக்கள்.

Anonymous said...

it good advice

ghatam suresh said...

Brilliant... I was a victim in eighties (I was in my teens) with a loss of 2000 rupees when my family was struggling to earn that. Not a single beneficiary in the previous link came forward to help. I have silently cried many a nights for bringing this misfortune to my family.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com