Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மிதுன , கன்னி ராசி நேயர்களுக்கு - நீங்கள் அடக்கி வாசிக்க வேண்டிய நேரம் இது !

| Jul 18, 2011
அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம் !

நெப்போலியன் போனபார்ட் சொல்லியிருக்கிறாராம்..  (  What is circumstance? I make my circumstance on my own ) சூழ்நிலைன்னு ஒன்னும் தனியே ஏதும் கிடையாது. என்னுடைய சூழ்நிலைகளை நானே சிருஷ்டிக்கிறேன்..
அந்த மாதிரி - உங்களுக்கு சர்வ வல்லமை கிடைச்சு - உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் முழுவதும் அடக்கம். உங்களால் மற்ற எந்த Influence இல்லாமல் , நிம்மதியாக இருக்க முடியும் என்றால் - ரொம்ப நல்லது. அப்படி இருக்க கூடியவர்களும் கவனிக்க வேண்டிய விஷயம் தான் இப்போது நாம் பார்க்க விருப்பது.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQmJvQiiaKHqpOTHWyWYd2MThQRGuX1TGypPdXdaK6dbfGpz8enIw
நமது ஜோதிட பாடம் முழுவதும் படித்த அன்பர்களுக்கு சுப கிரகங்கள் யார் , யார் - பாவ கிரகங்கள் யார் யார் என்று ஒரு விஷயம் தெளிவாக தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் - கடுமையான பாவ கிரகங்கள் என்று கருதப்படும் , ஒருவருக்கொருவர் பரம  எதிரிகள் என்று கருதப்படும் இரு பெரும் கிரகங்கள் - செவ்வாயும், சனியும்.
இந்த இருவரும் , ஒருவருக்கொருவர் பார்க்கும் சூழ்நிலை இப்போது ஏற்பட விருக்கிறது.

கன்னி ராசியில் அமர்ந்து இருக்கும் சனி - மூன்று , ஏழு , பத்தாம் பார்வைகளாக - விருச்சிகம், மீனம், மிதுனம் இந்த மூன்று ராசிகளையும் சுமார் ரெண்டு வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் - இப்போது ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் , வரும் 24 .07 .2011 முதல் மிதுனத்திற்கு வந்து  , 10 .09 .2011 வரை - அமர்கிறார். அங்கு அமர்வதால், அவரது பார்வை - கன்னி, தனுசு , மகரம் ராசிகளில் விழுகிறது.
இதில் - செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்து இருக்கும் சனியைப் பார்க்க , சனி மிதுனத்தில் அமர்ந்து இருக்கும் செவ்வாயைப் பார்க்கும் சூழ் நிலை ஏற்பட விருக்கிறது.

இதனால், இந்த குறிப்பிட்ட காலத்தில் - மிதுன , கன்னி ராசிக் காரர்கள் - உங்கள் மனதுக்குரிய இஷ்ட தெய்வத்தை வணங்கி , மித மிஞ்சிய பொறுமையை கடைப் பிடித்தல் நலம். நீங்களே ஒதுங்கி இருந்தாலும், உங்களை சீண்டி, வம்புகளில் சிக்க விடும் சூழல் ஏற்படலாம். குடும்பத்திலும், வியாபாரம், தொழில் அலுவலகங்களிலும் - மிகுந்த ஜாக்கிரதையுடன் , ஒன்றுக்கு பலமுறை யோசித்து எந்த முடிவையும் எடுப்பது நல்லது. மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள், இந்த ஒன்றரை மாதத்திற்கு  , அந்த பக்கமே எட்டிப் பார்க்க வேண்டாம். செவ்வாய் , சனிக் கிழமைகளில் வேண்டவே வேண்டாம். சபரிமலை , அல்லது முருகன் கோவில்களுக்கு பாத யாத்திரை செல்லும் வழக்கம் இருப்பவர்கள் இந்த காலத்தில் - மாலை போட்டு , உங்கள் வாழ்க்கை பழக்க வழக்கங்களை நெறி படுத்திக் கொள்வது நல்லது.

தொட்டது எல்லாம் தோல்வி , விரக்தி என்று இருந்தால் கூட பரவாஇல்லை. உங்களோடு முடிந்தது என்று கொள்ளலாம். ஆனால், எதை எடுத்தாலும் வில்லங்கம், என்று வந்தால் ?பதட்டப் படாமல் , அடக்கி வாசியுங்கள்.. !!

கண் கெட்ட பிறகு - சூரிய நமஸ்காரம் வேண்டாமே. ... !
முறையான வழிபாடுகளை மேற்கொண்டு அந்த ஆண்டவனின் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு கஷ்டங்களை தாங்கும் மன பக்குவத்தையும், கஷ்டங்களைக் கடந்து வெற்றி கொள்ளும் வேட்கையையும் அந்த பரம்பொருள் உங்களுக்கு வழங்கட்டும்.

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com