Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சர்ப்ப தோஷம் , திருமண தடை நீங்க அற்புதமான பரிகார ஸ்தலம்

| Jul 12, 2011
ஹர ஹர மஹா தேவ்....!! கொஞ்சம் நீங்க வாய் விட்டு சொல்லும்போது , உங்க உடம்புக்குள்ளே சிவ்வுனு புது ரத்தம் பாயும்.. உடம்பு கொஞ்சம் அதிரும்.. சொல்லிப் பாருங்க...!

கிட்டத்தட்ட இந்து மதம் முழுவதுமா அழிஞ்சுக்கிட்டு இருந்த நேரத்திலே , கடவுளால் அனுப்பப்பட்ட தூதன் போலே , மராட்டிய மாநிலத்தில் தோன்றி , அவுரங்கசீப்பை கதிகலங்க வைத்த " வீர சிவாஜி " தனது வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்க சொல்லிய மந்திர வார்த்தைகள் தான் இந்த " ஹர ஹர மஹா தேவ் !"
அந்த காலத்து படையெடுப்புகளால் மிரண்டு கிடு கிடுத்து , லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டுப் பக்கம் ஓடோடி வந்து இருக்கிறாங்க. ராஜா வலுவிழந்தா , இன்னொரு ராஜா படையெடுப்பான். தலைமை சரி இல்லேன்னா, குடி மக்கள் கதி கலங்க வேண்டி வரும். அப்படியே கட்டாய மத மாற்றம் நடந்து இருக்குது. மதம் என்கிற ஒரு விஷயம் , அதை பெரிசா எடுத்துக்கிட்டு - இந்த நூற்றாண்டுலேயும்  உயிரையே பறிக்கிறதுன்னு , உலகத்திலே இன்னும் சண்டை நடந்துக்கிட்டு தான் இருக்குது. அந்த காலத்திலே இன்னும் எப்படி இருந்து இருக்கும் ? 

ஒரு இந்து வீட்டில் பிறக்கிறதும், முஸ்லீம் வீட்டில் பிறக்கிறதும் நம்ம கையிலேயா இருக்குது ?  இந்தியாலே பிறக்குறதும் ,  உகாண்டாலே பிறக்குறதும் உங்க கையிலேயா இருக்குது? ஒரு ஐயர் வீட்டிலே பிறக்குறதும், ஹரிஜன் வீட்டிலே பிறக்குறதும் நிச்சயமா நம்ம கையிலே இல்லையே. அப்படி இருக்கிறப்போ, மனுஷனுக்குள்ளே  ஏன் இந்த துவேஷம்?


 ராஜா வலுவிழந்தா , இன்னொரு ராஜா படையெடுப்பான். வீட்டுலேயும் அதே கதை தான். கட்டுக்கோப்பான தலைவன், பாசமுள்ள கணவன் - மனைவி , ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கிற குடும்பத்துலே ... கள்ளத் தொடர்பு எங்கே இருந்து வரும். ஒரு குடும்பம் நல்லா இருந்தா, ஒரு சமூகமே நல்லா இருக்கும். முடிந்த அளவு தனிமையை குறைச்சு இருக்கிறப்போ , மனசுக்கு உள்ளே சபலப்படுற எண்ணங்கள் குறையும். நம்ம மனசை ஜெயிச்சுட்டோம்னா ,  அது போதும். அதுக்கு உங்களுக்கு இறை வழிபாடும் உதவும்.அந்த மாதிரி மொகலாய ராஜ்ஜியம், நவாப்புகள் ராஜ்ஜியம் நடந்துக்கிட்டு இருந்தப்போ - எத்தனையோ ஆலயங்கள் சூறையாடப் பட்டு இருந்து இருக்குது. ஒரு சில இடங்கள்லே - வெறும் கோவில் மட்டும் இருக்குது. சுத்தி ரொம்ப தூரத்துக்கு வீடுகளே இல்லை. கேட்டா, நவாப் அங்கே ஒரு ஊரை நிர்மாணம் பண்ணினாரு. அதனாலே ஊரையே காலி பண்ணி அந்த ஊருக்குப் போயிட்டாங்க. நாளடைவிலே கோவில் தவிர மீதி இடம் எல்லாம் , புல் பூண்டு முளைக்க ஆரம்பிச்சு - கோவில் ஊரை விட்டு ஒதுங்க ஆரம்பிச்சு , பாழடைந்து -- பல வருஷங்களுக்கு அப்புறம் புதுப்பிச்சு , திரும்ப பொலிவோட இப்போ திரும்புது.

அந்த மாதிரி ஒரு கோவிலைப் பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்கப்போறோம். கோவில் இருக்கிற இடம் வன்னிவேடு. வேலூர் மாவட்டம், வாலாஜாவுக்கு ஒரு இரண்டு / மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குது. மூலவர் - அகத்தீஸ்வரர். அம்பாள்  : ஸ்ரீ புவனேஸ்வரி

ராணிப்பேட்டை , ஆற்காடு , வாலாஜா என மூன்று நகரங்கள் அருகில் இருந்தும் - அங்கு இருப்பவர்களுக்கே அதிகம் தெரியாத ஆலயம். ஆனால், இங்கு ஒரு முறை வந்து பாருங்கள். உங்களுக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் ஆலயம் இது. வன்னி மரத்தடியில் சுயம்பாக தோன்றி - அகத்திய முனிவரால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டவர் அகஸ்தீஸ்வரர்.

அந்த கால சிற்ப சாஸ்திரம் , துளியும் பிசகாது - அற்புதமாக கட்டி இருக்கிறார்கள். மதில் சுவர் , மற்றும் ஆலயத்தின் உள்ளே சில வேலைகள் செய்ய ஒருமுறை  ஸ்தபதி ஒருவரை அழைத்து வந்து காட்ட , அவர் இந்த ஆலயத்தைப் பார்த்து வியந்து போய் , சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ஆலயத்தில் நீங்கள் எந்த தெய்வத்தின் முன் நின்று வணங்கினாலும், உங்கள் தலைக்கு மேல் - ராகு , கேது உருவங்கள் - உங்கள் தலைக்கு மேல் உள்ள தூணில் இருக்கிறது. கோவில் அமைக்கும் போதே - சர்ப்ப தோஷ பரிகாரம் முழுவதும் கிடக்கும்படி அமைத்து இருக்கிறார்கள். அம்மன் - பீடமும், ஆவுடையார் மேல் அமைக்கப்பட்டு உள்ளது.


அஷ்ட திக் பாலகர்களும் - கோவிலை சுற்றி நிறுவப்பட்டு இருக்கிறார்கள். பிரகாரத்தில் ஹனுமான், ஹயக்கிரீவர் , கால பைரவர் , பெருமாள் ஆகியோரும் , அன்ன பூரணியும், காம தேனுவும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். வன்னி மரத்தடியில் - சனீஸ்வரர் அமர்ந்து இருக்கிறார். இதெற்கெல்லாம் சிகரம் போலே - சரபேஸ்வரர் ஆலயத்தினுள் கம்பீரமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

வன்னி மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கும் சனி பகவான் - உங்களுக்கு கஷ்டங்களை தாங்கும் முழு வலிமை தருவார். ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் , ஜாதகத்தில் சனி பகவான்  வலிமை இல்லாமல் இருப்பவர்கள் - அவசியம் வர வேண்டிய ஆலயம். நவ கிரகங்களில் , சனி பகவான் - ஒரு காலை உயர்த்தியபடி இருப்பது , இங்கு விசேஷமான ஒரு அமைப்பு. உனக்கு அபயம் அளிக்க நானிருக்கிறேன். கவலைப்படாதே ! என்று ஓடோடி வந்து உங்களுக்கு வரம் அளிப்பதற்கு தயாராக இருக்கிறாராம்.

ஒவ்வொரு ஞாயிறும், ராகு கால நேரத்தில் - சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் , மிக சிறப்பாக நடை பெறுகின்றது. வாழ்வில் நீண்ட கால தடைகள் , பில்லி , ஏவல், சூன்யம் பிரச்னைகள் , கணவன் , மனைவி திருந்தி ஒற்றுமையுடன் வாழ்தல், நீங்கள் நேரடியாக மோதாமல் உங்கள் எதிரிகளை வலுவிழக்க செய்தல், உங்களுக்கு வர வேண்டிய சொத்து  உங்களுக்கு விரைவில் கிடைக்க செய்தல் , நீண்ட காலம் வாரா கடனை உங்களுக்கு விரைவில் திரும்ப கிடைக்க செய்தல், உங்கள் கடன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்தல், முக்கியமாக ஒழுக்கத்துடன் உங்களை வாழ வைத்து உங்கள் கம்பீரத்தை பறைசாற்றுதல் , - போன்ற பல அற்புதங்களை செய்பவர் சரபேஸ்வரர். முக்கியமாக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு , திருமண தடை நீங்கியவர்கள் அநேகம்.

 சிவன் அவதாரங்களிலேயே - துடியான அவதாரம் சரபேஸ்வரர். எங்கெல்லாம் சரபேஸ்வரர் உருவம் தூணிலோ , அல்லது சிலையாகவோ இருக்கிறதோ - அங்கே ஜாலுவேச சித்தரின் ஆத்ம சரீரம் அடங்கி இருக்கிறது என்பது ஒரு பெரிய ரகசியம் .

உங்கள் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுபவர் இந்த  சரபேஸ்வரர். மிக முக்கியமான விஷயம் - கூட்டம் கட்டுக் கடங்காமல் இல்லாமல் , மிக சொற்ப பேரே இருப்பதால் - நீங்கள் கண் குளிர அபிஷேக / ஆராதனை தரிசனம் செய்யலாம். உங்களுக்கு மூன்றடி / நான்கடி தூரத்தில் - ஒரு சக்தி வாய்ந்த கடவுளுக்கு அபிஷேகம் நடந்தால் எவ்வளவு சந்தோசம் தரும் என்பதை நீங்கள் உணர முடியும். ..

 அவருக்கு படைத்த விபூதி , சந்தனம் உங்களுக்கு பிரசாதம் தருகிறார்கள். வழிபாடு முடிந்ததும்  - புளி சாதம், பஞ்சாமிர்தம் , தயிர் சாதம் - பிரசாதமாக அன்ன தானம் செய்கிறார்கள். மாலை , மங்கி இருள் சூழும் நேரத்தில் - சரபேச தரிசனமும், சூழ் நிலையும் - மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.

நீங்கள் ராகு காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் - கோவிலுக்கு வந்து விட்டு , மற்ற தெய்வங்களை தரிசித்து விட்டு சரபேசர் முன் அமர , அபிஷேகம் ஆரம்பிக்க சரியாக இருக்கும்.  அலங்காரம் செய்ய கிடைக்கும் இடைவேளை நேரத்தில் - வன்னி மரத்தடியில் அமர்ந்து - ஸ்ரீ ருத்ரமோ , லலிதா சஹஸ்ரநாமமோ மெதுவாக சத்தமின்றி சொல்லி முடிக்க , வழிபாடு தொடங்க சரியாக இருக்கும்.
ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை - பிரதோசமும் கூடி வந்தால், சரபேசரை வழிபடும்  இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். !

4 comments:

arul said...

Excellent post

arul said...

Excellent information

Ramesh said...

Please give the address of the Temple.

Anonymous said...

grate job thanks

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com