Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நீங்கள் கடவுளை நேரில் பார்க்க ஆசையா? - மிகத் தீவிர ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு !

| Jul 8, 2011
இதை இதை இதைதான் நான் எதிர் பார்த்தேன் , என்று உங்களை திக்கு முக்காட வைக்கப் போகும் கட்டுரை. மிகத் தீவிர ஆன்மீக தேடல் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு புதையல் ... படித்துப் பாருங்கள். அண்ணாமலையானின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். படித்த பிறகு உங்கள் கருத்துக்களை அனுப்பி வைத்தால் , மகிழ்ச்சி யடைவேன்.. இந்த கட்டுரையை நீங்கள் உங்களால் முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு , தெரிந்தவர்களுக்கு அனுப்பி வையுங்கள். சிவன் அருள் எங்கும் வலுவடையட்டும்..!! உலகில் சுபிட்சம் நிலவட்டும்.. !! உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கட்டும்..

சென்ற அமாவாசைக்கு முந்தைய ஒரு ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தேன். சாதாரண நாட்களில் செல்லும்போது , மூலவரையும், அஷ்ட லிங்கங்களையும் - மனதுக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தரிசிக்கலாம். கூட்ட நெரிசல் இருக்காது. பஸ்சுக்காக ஓடும் கூட்டம் இருக்காது. ஒரு சாதுவான திருவண்ணாமலையை  பார்க்க முடிகிறது. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், கிரிவலம் செல்லும்போது சள சள பேச்சோ, சினிமா பாடல்களை மொபைலில் கேட்டுக்கொண்டோ வரும் கூட்டம் இருக்காது.

இந்த முறை சென்றபோது , ஒரு ஆச்ச்சரியமூட்டக் கூடிய சம்பவம் நடந்தது.

 ராகு கால நேரத்தில் அம்மன் சந்நிதிக்கு அருகில், நவ கிரகங்களுக்கு அருகில் வெளியில் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமம் முழுவதும் படித்து விட்டு , ஆறு மணிக்கு மேல் கிரிவலம் செல்ல ஆரம்பித்தேன். இந்திர லிங்கம், அக்னி லிங்கம் தரிசனம் முடித்து விட்டு , இரவு நேரம் சுமார் 8 மணி அளவில் எம லிங்கம் வந்து தரிசனம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது அங்கு இருந்த சாமியார் ஒருவர் என்னை அழைத்தார். கிரிவலம் செல்கிறீர்களா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்லுங்களேன் என்று கேட்டார்...

அண்ணாமலையில் பிச்சை எடுப்பவர்களும் அதிகம். அவர்களும் காவி தான் கட்டி இருப்பார்கள். ஆனால் , நான் சொல்வது சாமியார். இறை தேடல் எப்பொழுதும் இருப்பதற்காக காவி கட்டியவர். அவர்களுக்கு காவி ஒரு அடையாளம் மட்டுமே. சட்டென்று , போலீஸ் காரர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே. இவர்கள் ஒரு நாளும் பிச்சை எடுப்பதில்லை. தானாகவே இவர்களை தேடி எல்லாம் வருகிறது. இதை ஒதுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு தினமும் காடுகளில் சுற்றிக் கொண்டு இருந்தால், போலீஸ் சந்தேகப்படும் தானே?.. இவரைப் பார்க்கும்போதே , முகத்தில் நல்ல தேஜஸ் , களை சொட்டியது.

என்ன , மலை சுற்ற ஆரம்பிக்கும்போதே யாருடனும் பேச வேண்டாம் என்று நினைத்தீர்களோ.. ? நான் தான் உங்களை தொந்தரவு செய்கிறேன் போலே .. என்று ஆரம்பித்தார்... சிலரைப் பார்த்தால் , பேசலாம் என்று தோன்றும். அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. உங்களைப் பார்த்ததும் பேசலாம் என்று தோன்றியது என்றார். பேச்சில் அவ்வளவு மரியாதை , நாகரீகம் தெரிந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நீண்டது. ஆச்சரியம்.. அற்புதம் ! நான் எதிர்பாராத சந்திப்பு. ஏராளமான தகவல்கள் , நான் நீண்ட நாட்களாக என் மனத்தைக் குடைந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு - பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நடந்த சந்திப்பு போலே தோன்றியது.

அவருக்கு வயது சுமார் 65 க்கும் மேல் இருக்கும் . அந்த காலத்திலேயே  B .E . முடித்தவராம். அண்ணாமலை வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்றார். ரிஷி மூலம் பற்றி அதிகம் கேட்ககூடாது என்பதால் நானும் அதிகம் அவரைப் பற்றி இன்னும் அதிகமாக கேட்கவில்லை.

நான்கு முறைக்கு மேல் அமர்நாத் யாத்திரை சென்று வந்துள்ளார்.  சரி, அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா  ? நான்கு முறையும் அண்ணாமலை யிலிருந்து  பாத யாத்திரையாம். காஷ்மீர் வரை நடந்தே..!! அம்மாடி..!! வெல வெலத்துப் போய் விட்டேன். எப்பேர்ப் பட்ட மகானின் தரிசனம் கிடைத்துள்ளது ? அவர்  பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள் . மிக தீவிர  சிவ தீட்சை மேற்கொண்டு உள்ளாராம். ஒரு பழைய நாடிக் குறிப்பு ஒன்றிலிருந்து - சில மந்திரங்களை எடுத்துக் கொண்டு , மனம் ஒருமித்து - ஜெபம் மேற்கொள்ளுகிறார்.  சிவ தீட்சை மந்திரங்கள் என்று அதற்குப் பெயர். அந்த தகவல் இந்த சாமியிடம் உரையாடிக்கொண்டு இருந்தபோது உறுதிப்படுத்த முடிந்தது. இதை ஏற்கனவே நான் கேள்விப் பட்டிருந்ததால் , அவரிடம் இதை குரு மூலமாக மட்டும் தான் உபதேசம் பெற்றுத் தான் ஜெபிக்க வேண்டுமா என்று கேட்டேன். உங்கள் குரு நாதர் எங்கு இருக்கிறார் என்று கேட்டேன்.
 
அண்ணாமலையை , அகத்தியரை விடவா உங்களுக்கு பெரிய குருநாதர் கிடைக்க போகிறார். நீங்கள் முதல் படி எடுத்து வையுங்கள். அடுத்து அடுத்து உங்களை அதுவே வழி நடத்தும் என்றார்.

எனக்கு என்னவோ , அந்த துறவியை சாமானியராக நினைக்க முடியவில்லை. அந்த ஈசனின் அற்புதம் , அவர் எனக்கு உணர்த்த வேண்டிய செய்திகள் என்றே தோன்றியது.

எனக்கு இரவில் கிரிவலம் செல்ல வேண்டியது இருந்ததால் , நேரமாகி விட்டதால் ,அவரிடம் விடை பெற்று - கிரிவலத்தை தொடர்ந்தேன்.. அடுத்த முறை வரும்போது மீண்டும் சந்திக்கலாம் என்றார். எந்த இடத்தில் , எப்போது என்று நான் கேட்கவில்லை ... அவருக்கு நான் வரும்போது உணர முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.

ஒன்பதரை மணிக்கு மீண்டும் கிரிவலம் தொடர்ந்தேன்.  தசாங்க வாசனை என்னுடன் தொடர்ந்து கிரிவலம் முடிக்கும் வரை வந்ததை உணர முடிந்தது.  நானும் கொஞ்சம் பாக்கியசாலிதான் போல.. !http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRLyQUPdhsWathHL4b5zE6IzQNoH6RHQccuTz73sCv5c5uGhWdl7A

அகத்தியர் பற்றிய  மேலும் பல அரிய தகவல்களுக்கும், சிவ தீட்சை பற்றி மேலும் விரிவான தகவல்களுக்கு , மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.  

14 comments:

R.Puratchimani said...

அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...

மிக சிறப்பான பதிவு... பகிர்வுக்கு நன்றி

http://anubhudhi.blogspot.com/

sundar said...

sir what about the 32 mantras............

Anonymous said...

sir what about the 32 mantras............

YOGESH said...

SIR,
SUPER ARTICLE!!

SHOULD I CHANT THOSE MANTRAS 1 LAKH TIMES CONTINUOUSLY(NOT POSSIBLE RIGHT) OR BY FRACTIONS(2000 PER DAY..) LIKE THAT SLOWLY??

PLEASE REPLY SIR..
GOD WILL BLESS YOU

balaji said...

Dear Sir,
I would like to know about these mantras,and I would like to see jeeeva nadi too.

Please do send me the mantras and place of jeeva nadi details to my email id, balajidcecse@gmail.com

Expecting your reply eagerly.

Many thanks,
Balaji Palamadai
balajipalamadai.blogspot.com

Arahant said...

Sir

Great job! Could you please let me know more information about Sivadeekshai ?

namashivaya said...

dear sir

i want to talk with u some personal my mail address guna_yk2@yahoo.co.in pls send ur phone no in my mail id

The One and Only said...

Dear Sir,
I would like to know about these mantras,and I would like to see jeeeva nadi too.

Please do send me the mantras and place of jeeva nadi details to my email id, ramesh.moon@gmail.com

Expecting your reply eagerly.

Many thanks,
Rameshkumar.K

Ravi Rusmathi said...

very nice
SWEET LITTLE FAMILY said...

Dear sir. Excellent wrietup and u r really blessed. May i request u to kindly share details of siva deekshai and agasthiar. I wanted to consult on my horoscipe also. Now i am in deep trouble on all front of my life . pl hekp me sirlll

Narmadha Narmy said...

sir romba natkalaga thediya thagavalkal indru kedaika Pagiyam petren ippozhuthuthan kedaithathu... pls siva theetchai panriya vivaram en mail id ku anupunga sir en mail id narmy01@gmail.com.. awaiting sir

ஆய்த எழுத்து said...

Vanakkam ayya en manakelvikku pathil theriyama irukken ungala partha kidikkumnu thonuthu so phone number illa address sonningana santhosam Nandriiiii ayya

ஆய்த எழுத்து said...

Vanakkam ayya en mana kelvikku vidai theriyama irukken ungala santhithal kidaikkumnu nenaikkiren so unga phone number or address sonna santhosam Nandriiiii ayya

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com