Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உங்கள் சகல பிரச்னைகளையும் தீர்க்கவல்ல பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் நாளைய ஆடி அமாவாசை விரதம் !

| Jul 29, 2011
இறைவனின் சிருஷ்டியில் ,  எந்த நேரமும், நாளும் நல்ல நாட்களே. கிரக சுழற்சி காரணமாக , ஒரு சில தினங்களில் அந்த அருள் அலைகள் , அபரிமிதமாக வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான தினம் தான் , நாளை வரவிருக்கும் ஆடி அமாவாசை. இதில் என்ன அப்படி விசேஷம் என்று , நாம் பார்க்கவிருக்கிறோம், இன்றைய கட்டுரையில்.

எந்த ஒரு பெற்றோருக்கும், தன்னோட குழந்தைகளை  நல்லா கவனிக்கணும். தன்னோட சக்திக்கும் மீறி , அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை இருக்கும். நூற்றுக்கு தொண்ணூத்தொம்பது பேரு அப்படித்தான். ஒன்னு , ரெண்டு தவறுவதும் உண்டு. பெற்ற பிள்ளைகளைவிட தன்னோட சுயநலம் முக்கியம்னு  நெனைக்கிற பெற்றோர்களும் உண்டு. 

அப்படி , கண்ணும் கருத்துமா - உசிரையே உங்க மேல வைக்கிற பெற்றவர்களை - நீங்க எப்படி கவனிச்சுக்கணும் ? அவங்களுக்கு வயசானா, அவங்களை கடின வேலை  எதுவும் செய்ய விடாம, மருத்துவ வசதி, ஆரோக்கியமான உணவு எல்லாம் கொடுத்து கவனிக்கலாம். 

இது உங்களை வளர்த்ததுக்கு , நீங்க செய்ய வேண்டிய நன்றிக்கடன். கடமை. 

ஐயா, அவங்க விதி முடிஞ்சு போச்சு. மேல போயிட்டாங்க. ... அதுக்கு அப்புறம்? வீட்லே படம் மாட்டி மாலை மட்டும் மாட்டிட்டா போதாது ..! அவங்க ஆத்மா சாந்தி அடைய வைக்கணும். அவங்க பூரிச்சுப்போய் , உங்களை ஆசீர்வாதம் பண்ணனும். 
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQg5VbR50GrUQcVuTnc5rCRA9icGfwuj7YTCMejD9G3JdQ0YivUng
இதுவும் உங்க கடன் தான். எப்படின்னு கேட்குறீங்களா? பத்து மாசம் அம்மா வயித்துலே இருந்தது ஒரு கடன்.  உங்க மூன்று தலைமுறையோட ஜீன்ஸ் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகுத்த , உங்கள் தந்தை , தாத்தா , கொள்ளுத் தாத்தா - இப்படி உங்க முன்னோர்களுக்கும், நீங்க பெரிய கடன் பட்டு இருக்கிறீங்க .  இதை எப்படி தீர்க்கப்போறீங்க? நீங்க பண்ற கர்மத்துலே தான், இந்த கடன் அடையும்.

நீங்க , கடனாளியா இருந்தா - உங்களுக்கு , எப்படி மனசுலே நிம்மதி கிடைக்கும்?  சரி, கடன் கொடுத்தவன் - நீங்க திருப்பி கொடுக்கிறவரைக்கும் உங்களை படுத்தி எடுத்திட மாட்டாங்க? நீங்க கொடுக்கலைனா, உங்க குழந்தைகளை தானே கேட்பாங்க !  இந்த மாதிரி தான் சார், பித்ரு கடனும். 

நம் உடம்பே பஞ்ச பூதங்களின் கலவை தான்.  நாம இயற்கையில் இருந்து எடுத்துக்கிடுறோம். என்ன ஆட்டம் போட்டாலும், ஒருநாள் இயற்கையிலேயே அடங்கி விடுகிறோம்.

மேல  போன, ஆத்மா - நீங்க  கொடுக்கிற எள்ளுப் பிண்டத்துக்கு - ஆலாப்  பறக்குமாம். நீங்க பிண்டத்தை ,  பஞ்ச பூதமாகிய நீரில் கரைக்கிறது அவங்களுக்கு - சரியாக மேலுலகம் சென்று அடைகிறது. நீங்க பிண்டம் கொடுக்கும்போதே , அவங்க ஆத்மா நீங்க உலகத்திலே எந்த மூலைல இருந்தாலும், உங்க கிட்டக்கவே நிற்குமாம்.

இது உண்மை, பொய்னு எல்லாம் மடத்தனமா , ஆர்க்யூ பண்ணாம , ஆத்ம பூர்வமா - தர்ப்பணம் பண்ணுங்க. உயிரோட இருக்கும்போது ,  உங்க பிள்ளைகளோ , இல்லை உங்க அம்மாவோ , எதோ கோபத்திலே சாப்பிடாம படுத்திட்டா  , எப்படி மனசு கஷ்டப்படுறீங்களோ  , அதே அளவு அக்கறையோட - இந்த காரியத்தையும் செய்து வாருங்கள்.

இந்த பிண்டம் - அந்த ஆத்மாக்களுக்கு சாந்தி தரும். அவங்களுக்கு வலு கொடுக்கிற மிக முக்கிய சக்தி , இந்த எள் கலந்த மாவு உருண்டை. கருட புராணம் சொல்லும் தகவல்கள் , கடோபநிஷத் சொல்லும் உயிரின் பயணம் குறித்த நிலையை படித்த எந்த ஒரு மனிதனும் , பிற உயிர்களை வெறுக்க மாட்டான். பித்ரு தர்ப்பணம் செய்ய தவற மாட்டான்.

இன்றைக்கும் , பிராமண சமூகத்தில் - பெற்றோரை இழந்தவர்கள் , அமாவாசை தர்ப்பணம் செய்ய தவறுவதே இல்லை. நம்மில் , குறைந்த பட்சம் - இறந்தவர்களின் திதி வரும் அன்னைக்கு பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும், வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உங்கள் முன்னோர்களின் ஆசி , உங்களுக்கு முழுவதும் கிடைக்க , ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து , மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விட, உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை.

நீங்கள் உயிருள்ள வரை, உங்கள் தாய், தந்தையரின் இறந்த திதி வரும் நாளில் , மறக்காமல் , ஈம சடங்குகளை குறைவற செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம், முக்கியமான காரியம் எதுவும் இல்லை. 

வாய்ப்பு இருக்கும் அன்பர்கள், நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் - தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும் , நீங்கள் உணவு உட்கொள்ளும்முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால்தான், உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும்.
உங்கள் உணவை காகம் சாப்பிடும்போது, உங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும் , தன்னைப்போல விலகும். உங்கள் பின்னால், உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும், புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.

திடீர்னு , இந்த விஷயத்தை இன்னைக்கு ஏன் திரும்ப எடுக்கிறேன்னா.. நாளைக்கு ஆடி அமாவாசை. சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம் , தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. இவை ஆரம்பிக்கும் மாதங்களில் , விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது . அந்த வகையில் - ஆடி மாதத்திற்கும், தை மாதத்திற்கும் - வரும் அமாவாசையில் - நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜை , தர்ப்பணம் செய்தாலும், அவர்களை உடனே சென்றடையும்.

இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள் - இந்த ஆடி அமாவசை யன்றோ , அல்லது தை அமாவாசை யன்றோ - பித்ரு பூஜை செய்து , பிண்டங்கள் கொடுக்கலாம். 

உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில், அதன்பின் உங்கள் குலதெய்வம் , அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! உங்களுக்கு ஒரு கஷ்டம் நா , உடனே ஓடி வர்றது , உங்க அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி தான். இவங்களுக்கு பலம் கொடுக்கிறது , உங்கள் பித்ரு பூஜையும் , தர்ப்பணமும் தான்.

நாளை - அமாவாசை . அதிலும் ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனி, உங்கள் கர்மங்களை முற்றிலும் அழிக்க ,  நாளை விரதம் இருந்து , உங்கள் முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு , பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை. சதுரகிரியில் , அதே நேரத்தில் , சிறப்பு பூஜைகள் நடைபெறும். லட்சக் கணக்கில்  - பக்தர்கள் . நாளை நள்ளிரவு சதுரகிரியில் தங்கி , அந்த பாக்கியம் அடைவர்.


 உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று , நீங்களும் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் !

இறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய ஆலயம் !

| Jul 28, 2011
சில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமல் பூரண மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம தொடர்பு அந்த ஆலயங்களுக்கும் , நமக்கும் இருக்கும் என்கிற எண்ணம் மனதில் மெல்ல அரும்பும்.  , புராதன காலத்தில் இருந்தே பெரும் புகழுடன் , அருள் பாலித்துக் கொண்டு இருந்த ஒரு சில ஆலயங்கள் - இன்று மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படுவது இல்லை. ஆனால் , அந்த ஆலயங்களில் இன்றும் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படுகின்றன. 

அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான - அக்னியும், நவ கிரகங்களில் நீதி தேவனான - சனி பகவானும் , வழிபட்ட பழம்பெரும் ஆலயமான திருக்கொள்ளிக்காடு ஆலயம் பற்றிய தகவல்களை , நமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பர் ஒருவர், தனது கடன் இந்த ஜென்மத்தில் முடியாது என்று , எல்லா விதமான முயற்சி , பரிகாரம் என்று சகலமும் செய்துவிட்டு , வெறுத்துப் போய் , விரக்தியின் விளிம்பில் , குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விபரீத முடிவுக்கும் சென்றவர்.  அந்த நிலையில் எதேச்சையாக திருவொற்றியூர் - வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் , அவர் என்னை சந்திக்க ,  என்னுடைய ஆலோசனையின் பேரில் இந்த ஆலயம் சென்று வந்தார்.  " 48 நாட்கள் - உடல் , மன சுத்தியோடு , கடைசி ஒன்பது  நாட்கள் தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு , விரதம் மேற்கொண்டு - இந்த ஆலயம் சென்று அபிஷேகம் செய்து வாருங்கள் . உங்களை அந்த சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று நம்பிக்கையூட்டினேன்.  

இது தான் சார் , என்னுடைய கடைசி முயற்சி . நீங்கள் சொல்லியபடி இன்னும் ஒரு வருடத்தில் , எனக்கு விடிவு இல்லை என்றால், நான் வாழ்வதிலே அர்த்தமில்லை என்று சொல்லிச் சென்றவர்.

சென்று வந்த ஆறே மாதத்தில் , அவரது ஒட்டு மொத்த கடனும் அடைந்து , பூரிப்புடன் இருக்கிறார். இப்போது , அவரை பார்க்கும்போது - அவர் முகத்தில் தெரியும் சந்தோசம் , மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

அதனால் தான், அடிக்கடி நான் சொல்வது உண்டு. சில ஆலயங்களுக்கு நாம் செல்லும்போது , நமது கர்மக்கணக்கு நேராகிறது.

ஏழரை சனி , அஷ்டம சனி  நடப்பவர்களும் , மகர  , கும்ப - ராசி , லக்கினங்களில் பிறந்தவர்களுக்கும் , சிம்ம ராசி , இலக்கின நேயர்களும் - இந்த ஆலயம், அவசியம் ஒருமுறை வந்து , வழிபட்டுச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்படும்.ஆலயத்தின் பெருமைகளையும், மகிமைகளையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பழம் பெரும் அரசர்கள், இறைவனின் மகிமையை பரிபூரணமாக உணர்ந்து , அவரை பூஜித்து இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களாக , பூஜை செய்யப்பட்ட இறை சந்நிதானத்தில் - அருள் அலைகள் அபரிமிதமாக நிறைந்து இருக்கும். ராகு கால நேரங்களில் இதைப் போன்ற ஆலயங்களில் - அம்மன் சந்நிதி முன்பு இருக்க வாய்ப்பு கிடைப்பவர்கள், பாக்கியம் செய்தவர்கள்.


திருக்கொள்ளிக்காடு! -  திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.

1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

சோழ மன்னன் ஒருவனுக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக இங்கு வந்து சனி பகவானைப் பூஜித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கி சிவஜோதியின் காரணமாகச் சனி தோஷம் முழுவதும் நீங்க மனமகிழ்வடைந்தான் என்பது தலபுராணம்.சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

இத்திருக்கோயிலின் தலமரம் வன்னி. தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் பலி பீடமும் நந்தியும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகப் பெருமான், மகாலெட்சுமி, சனி பகவான், பைரவர் சந்நிதிகள், உள்ளன. விநாயகர், காசி விசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே நேரே மூலவராம் அக்னீஸ்வரரைத் தரிசனம் செய்யலாம். இடப்புறம் மிருதுபாத நாயகியின் சந்நிதி உள்ளது.

மூலவரின் கர்ப்பகிருகத்தின் வெளிப்புற மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டில் செப்புத் திருமெனியாக விளங்கும் அமரசுந்தரப் பெருமான், நம்பிராட்டியார், பணபதிப் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், திருக்கொள்ளிக்காட்டு ஊரார் கோயிலுக்காக நிலம் அளித்தது. அதன் வருவாயிலிருந்து தினமும் 6 நாழி அரிசி அமுதுக்காக அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதற்குத் தடையாக யார் இருந்தாலும் அவர்களிடமிருந்து 25 கழஞ்சுப்பொன்னை ஊர் மன்றம் அபராதமாக வசூலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் பாதசிவன் ஆச்சன் என்பவனும் அவன் தம்பி ஆச்சன் அடிகள் என்பவனும் கோயிலில் சங்கு, காளம், சேகண்டிகை ஆகியவை ஒலிப்பதற்கு நிலம் அளித்தது குறிக்கப் பெற்றுள்ளது.

இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் கொள்ளிக் காட்டைச் சேர்ந்த மூவேந்த வேளான் என்பவன் வழிபாட்டிற்காக ஒரு வேலி நிலமும் 200 பொற்காசுகளும், அளித்தாகவும் அந்த நிலம் அருமுளைச் சேரியான மறையமங்கலத்தில் இருந்ததாகவும் கூறுகிறது.

இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் திருக்கொள்ளிக்காட்டுக் கோயில் நிலத்தை உத்தம சோழனின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு வரை சிலர் தவறாக அனுபவித்து வந்ததை திருவெண்டுறை அன்னதான யோகிகள் மன்னனிடம் முறையிட, மன்னனும் தன் அதிகாரியை அனுப்பி விசாரணை செய்து அந்த நிலங்களை கைப்பற்றியதோடு 400 பொற்காசுகளைத் தண்டமாகப் பெற்றுக் கோயிலுக்குச் செலுத்திய செய்தி கூறப்பெற்றுள்ளது.

ஏழரை ஆண்டுச் சனித்தோஷம், ஜன்மச் சனி, சனிபகவானின் கடுமையான பார்வை ஆகியவை உடையவர்களும், மற்றவர்களும் கொள்ளிக்காடு சென்று வழிபாடு செய்தால் எல்லா நலமும் பெறலாம்.

தல வரலாறு

செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான   தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதர சிறப்புகள்:

அக்னி பகவான் நமது சாபம் தீர இத்தலத்து ஈசனை பூஜித்தமையால் இக்கோயிலுக்கு அக்கினிபுரி, அக்னீஸ்வரம் என்று பெயர்.

இவ்வாலயத்துக்கு மூன்று தல விருட்சங்கள் வன்னி, ஊமத்தை மற்றும் கொன்றை ஆகியன. இதில் வன்னி மரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலை, ஆகியவற்றை போக்கக் கூடியது. கொன்றை குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது.

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் தரிசனம் தருவார்கள் (ஒன்றை ஒன்று பாராமல்) ஆனால் இத்திருக்கோயில் ‘ப’ வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரங்களுக்கு இல்லை. ஆதலின் நவக்கிரகங்களில் நமது மாறுபட்ட குணங்களை விட்டு ‘ப’ வடிவில் ஒருவரை ஒருவர் நோக்கிய வண்ணம் காட்சியளிக்கின்றனர்.


நம்பிக்கையுடன் நீங்களும், ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். மங்களம் உண்டாகட்டும்!

சனி பகவானின் சக்தி அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களில் - திரு நள்ளாறும் ,  திருக்கொள்ளிக்காடும் முதன்மையானவை , என்று ராஜ ராஜன் காலத்திலிருந்தே நம்பிக்கை இருந்து இருக்கிறது.


என் அனுபவத்தில், நான் கீழே உள்ள ஆலயங்களையும் என்னிடம் ஜாதகம் பார்க்கும் நேயர்களுக்கு - சனி பிரீதிக்காக பரிந்துரைப்பது வழக்கம். நீங்களும் உங்கள் அருகில் இருக்கும் இந்த ஆலயத்திற்கு சென்று  வணங்கி வரலாம்.அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை.

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்.

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம்.

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், திருவண்ணாமலை.

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான், மதுரை.


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - 

திருக்கொள்ளிக்காடுநிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
01

ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
02

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
03
பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
04

வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
05
பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
06

இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
07
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
08
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
09

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
10

நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.
11


===============================================================ஹவ் கேன் ஐ டாலரேட் ? பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ள ஒரு சூத்திரம் !

| Jul 27, 2011
பிரச்னைகளின் தொகுப்புதான் வாழ்க்கை. எந்த ஒரு மனிதனுக்கும் , பிரச்னைகள் உண்டு. கடலில் அலைகள் எப்படி வந்து கொண்டு இருக்குமோ, அதைப் போல பிரச்னைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். பிரச்சினை வருமே என்று , எந்த முயற்சியும் எடுக்காமல் ஒதுங்கி நிற்பதால் , உங்களுக்குத் தான் நஷ்டம்.
இல்லை சார், நானும் எவ்வளோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்.. ஒண்ணுமே திறமை இல்லாதவன்லாம், முன்னுக்கு வர்றான், அதிர்ஷ்டம் தான் சார் முக்கியம் , நமக்கு அது இல்லை போலனு , விரக்தியாகிற எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறோம்.. இந்த நிலைமையை எப்படி சமாளிக்கலாம்?
எனக்குத் தெரிஞ்ச ஒரு சில விஷயங்களை உங்க கிட்டே பகிர்ந்துக்கப் போறேன்.. இந்த விஷயத்தில் , அனைத்தையும் துல்லியமாக அறியக்கூடிய அதி மேதாவி, இந்த உலகத்தில் யாருமே  இல்லை. பொதுவாக பொருந்தக்கூடிய விஷயங்களை வைத்து ஜோதிட விதி முறைகள்  இருந்தாலும், அனுபவத்தில் சில் உண்மைகளையும் வைத்தே எந்த ஒரு ஜோதிடரும் பலன் சொல்கிறார்கள். 

நமது ஜோதிட பதிவு படிக்கும் மாணவர்களுக்கு  - இது 22 ஆவது பாடம். இருந்தாலும், நமது ஒவ்வொரு வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருப்பதால், இதை ஒரு பொதுக் கட்டுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்..
சரி, விஷயத்திற்குப் போவோம்.. !

=========================================

எந்த ஒரு மனிதனும் , பிறந்தால் - ஒரு நாள் இறந்தே தீரவேண்டும். அவன் பிறக்கும்போதே இறக்கும் தேதியும் நிர்ணயிக்கபடுகிறது. அது மட்டுமில்லாமல் , அவன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் பிறக்கும்போதே தீர்மானிக்கப் படுகிறது , என்பது ஜோதிட விதி. 

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் , ஒன்பது மூலாதார சக்கரங்கள் இருக்கின்றனவாம். ஒன்பது கோள்களின் கிரக நிலை நிற்கும் நிலைக்கேற்ப , வரும் கிரக கதிர் வீச்சுக்கேற்ப -  இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கும். கோட்சார ரீதியில் , இந்த கிரகங்கள் வரும்போது , அந்த சுழற்ச்சிக்கேற்ப - உங்கள் உடல் , மனம் , ஆத்மா மூன்றும் தூண்டப்படுகிறது. அதற்கேற்ப நீங்கள் செயல்பட ஆரம்பிக்கிறீர்கள் .... அந்த செயல்களின் விளைவே உங்கள் வெற்றி , தோல்வி, புகழ், அவமானம் , இப்படி சகலமும்.. 

குழந்தை பிறந்த நேரத்தை வைத்து லக்கினம், சந்திரன் நின்ற நட்சத்திரத்தை வைத்து - ராசி - அதன் பிறகு மற்ற கிரகங்கள், இருக்கும் வீடுகளை வைத்து - உங்களுக்கு கிடைக்கும் கதிர்வீச்சு தீர்மானிக்கப் படுகிறது.

தினப்படி , நாம் செய்யும் செயல்களை ஜாதகம் சொல்லிவிடுமா ? நான் இன்னைக்கு காலைலே எத்தனை தோசை சாப்பிட்டேன்னு சொல்ல முடியுமான்னு பைத்தியகாரத் தனமா , விதண்டாவாதம் பண்றவங்களுக்கு இந்த கட்டுரை கிடையாது . அவர்கள் மேலே படிக்காமல் , வேறு வேலை பார்க்க செல்லலாம். 
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTHLTWIHQOEfePqiaQ3IpR3JsIO6cJ8dPVkeOVjF56u3sMswprO
ஆனால், ஒன்று - உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? காலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்து இருக்க முடியும்? நீங்கள் அன்றாடம் பூஜை , ஸ்லோகம் , அல்லது அடிக்கடி முக்கிய கோவில்களில் வழிபாடு செய்வதன் மூலம் , உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழி உண்டா? என்பதை இந்த கிரக கதிர்வீச்சு நிர்ணயம் செய்கிறது.

எப்படி ஒரு இயந்திரத்திற்கு - operating manual  - Do 's and Don 'ts இருக்கிறதோ - அதைப் போல மனிதனுக்கு ஜாதகம். அந்த பன்னிரண்டு கட்டத்தையும், ஒன்பது வீடுகளையும் வைத்து - உங்கள் தலை விதியை ஓரளவுக்கு ஒரு நல்ல ஜோதிடரால் படிக்க முடியும்.  ஒரு சில மனிதர்கள் சில விஷயங்களை  செய்யவே கூடாது என்பது இருக்கும். அந்த மாதிரி விஷயங்களில் நீங்கள் என்னதான் தலையிட்டு , பிரம்ம பிரயத்தனப் பட்டாலும், உங்களுக்கு வெற்றி கிடைக்காது. 

ஒரு விஷயம் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்வு , தாழ்வு அவனது சொந்த முயற்சியால் மட்டுமே இருக்க வேண்டும். நான் ஜோதிட பாடங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது அந்த காரணத்திற்க்காகத்தான். சில அடிப்படை விஷயங்களை சொல்லி விட்டால், அதன் பிறகு - நீங்கள் ஆராய்ந்து முடிவெடுக்கலாம். படிக்க கத்துக் கொடுத்தாச்சுன்னா , நீங்க படிக்க ஆரம்பிச்சுட மாட்டீங்களா என்ன! 

லக்கினம் எதுவென்று பாருங்கள். இலக்கின அதிபதி எந்த வீட்டில் இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? பகை  / நட்பு , நீசம், ஆட்சி , உச்சம் , தீய கிரக சேர்க்கை, பார்வை , சுப கிரக பார்வை ...  இப்படி பல விஷயங்களையும் ஆராய்ந்து - நீங்கள் அதன் பலம் கண்டு பிடிக்கலாம்.  ராசிக் கட்டம் இல்லாமல் , அம்சத்திலும் அந்த கிரக நிலைமை என்னவென்று பாருங்கள்..

இப்போது அந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறதா? இல்லை பலம் இழந்து இருக்கிறதா என்று முடிவெடுங்கள்.. 

சரி, பலம் இழந்த கிரகத்திற்கு - பலம் அளிக்கணும். என்ன பண்றது?

அதற்க்கு தான் , சில கிரக வீச்சு , வலிமை அதிகமாக இருக்கும் இடங்களை - ஒரு சில குறிப்பிட்ட பரிகார ஸ்தலங்களாக , நம் முன்னோர்கள் வகுத்து இருக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம், இயந்திரம் என்று ஸ்தாபிக்கப்பட்டு , சிற்ப சாஸ்திரப்படி , அந்த குறிப்பிட்ட கிரக கதிர் வீச்சு அதிகம் கிரகிக்கப்ப்படும்படி அந்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.  நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று , அபிசேக ஆராதனை செய்யும்பொழுது - அந்த கதிர்வீச்சைப் பெற்ற உங்கள் மூலாதார சுழற்ச்சி,  அதற்கேற்ப  தூண்டப்பட்டு - உங்களை வழிப்படுத்தும் .

அதிர்ஷ்டக் கற்கள் , ரத்தினக் கற்கள் - அணிந்து கொள்வதன் மூலமும், உங்கள் நாடியை தூண்ட முடியும். இயற்கையில் கிடைக்கும் அந்த கற்கள் , பல நூறு வருடங்களைத் தாண்டி, சில பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 

அதே நேரம், கண்ணை மூடிக்கொண்டு , அந்த ரத்தினங்களையும் அணிந்து விடாதீர்கள். மிக நன்றாக அலசிப்பார்த்து , ரத்தினங்களை தேர்ந்தெடுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் மீன லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். சூரிய தசை வரவிருக்கிறது , சூரியன் பலம் இழந்து இருக்கிறது என்று , நீங்கள் பாட்டுக்கு - மாணிக்க மோதிரம் அணிந்து கொள்ள வேண்டாம். மீனத்திற்க்கு - ஆறுக்கு உரியவனாக , சூரியன் வருகிறார். கடன் , நோய் , எதிரி என்று படுத்தி விடும். ஆறுக்கு உரியவன் , பலம் இழந்து தசை நடத்தினால் பரவா இல்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும். 

அதே நேரம் , உங்களுக்கு முழு யோகம் தரக்கூடிய கிரகம் -உதாரணத்திற்கு , கடக லக்கினம் , செவ்வாய் பலம் இல்லாமல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் , உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் , வைத்தீஸ்வரன் கோவில், திருச்செந்தூர் சென்று வரலாம். அருகில் இருக்கும் முருகன் ஆலயம் செவ்வாய் கிழமைகளில் சென்று , பாலபிசேகம் செய்யலாம். செவ்வாய், அல்லது மாதா மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் முருகனுக்கு விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கு உகந்த - பவளத்தில் மோதிரம் அணிந்து கொள்ளலாம். இதனால், உங்கள் ஒட்டு மொத்த பூர்வ, புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் திகழ முடியும். தொழில் , வியாபாரம் அமோகமாக இருக்கும். ரத்த சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளும் தீரும். விபத்துகள் ஏற்படாது.
மேஷம், விருச்சிக லக்கினங்களில் பிறந்தவருக்கும் இது பொருந்தும். எந்த வித பிரச்னைகளையும் நீங்கள் சமாளிக்க முடியும். 

எதனால் இப்படி சொல்கிறேன் என்று  உங்களுக்கே இப்போது புரியும். இல்லையெனில், நமது பழைய பாடங்களை திரும்ப படியுங்கள்... !
இன்னும் சில சூட்சுமங்களை - அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம். !

=========================================================
நமது வாசகர்கள் அனைவருக்கும், ஒரு வேண்டுகோள். சமீபத்தில் - நமது ஒவ்வொரு கட்டுரையும் , பலரையும் சென்றடைய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் இன்ட்லி என்னும் இணையதளத்தில் பதியப்படுகிறது.  ஒவ்வொரு பதிவின் கீழும், அதற்குரிய  லிங்க் இருக்கிறது. உங்கள் கண்ணோட்டத்தில், அது சிறந்த கட்டுரை என்று நீங்கள் எண்ணினால் , அதைக் க்ளிக் செய்து - நீங்கள் வாக்கு அளியுங்கள். முதல் முறை , நீங்கள் register செய்ய வேண்டி வரும். அதன் பிறகு , ஒரு சில வினாடிகள் தான் ஆகும். எனக்குத் தெரிந்து , ஒரு இருபது கட்டுரைகளாவது - உங்களுக்கு மிகப் பிடித்தவை இருக்கும் என்று நினைக்கிறேன்.. எனக்கு மிகப் பிடித்தவை என்று பார்த்தால் , அது ஒரு இருநூறாவது இருக்கும். ஒரு பத்து பேர் அதிகம் பார்ப்பது , ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப் பெரிய சந்தோசமும் , உந்துதலும் தரும்.


உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, வாக்களியுங்கள்.. பலரையும் சென்றடைய அது வழி வகுக்கும். எனக்காக கொஞ்சம் சிரமப்படுவீர்கள் என்று நம்புகிறேன்..!மீண்டும் நாளை சிந்திப்போம்.. !

உலக அதிசயம் - GRAND CANYON - பள்ளத்தாக்குகளின் மேல் - SKY WALK - வீடியோ காட்சி, அழகான புகைப்படங்கள்

| Jul 26, 2011
பூமி என்பது , சூரியனிடம் இருந்து தெறித்து விழுந்த ஒரு வெப்பத்துளி.  அது சிறிது சிறிதாக குளிர்ந்து - மலைகளும், பாறைகளும், நதிகளும், கடல்களும் - பின்பு உயிரினங்களும் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றி இருக்கின்றன, என்கிறது அறிவியல். அப்படிப்பட்ட இயற்கையின் விசித்திர சிருஷ்டியான ஒரு பள்ளத்தாக்கு பற்றி , இன்று நாம் காண விருக்கிறோம்.

நேற்று இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய " சிவம்" நாவலை மீண்டும் ஒருமுறை படிக்க உட்கார்ந்தபோது - ஒரு தகவல் மனதில் பதிந்து விட்டது. அது எவ்வளவு தூரம் உண்மையோ, பொய்யோ தெரியாது..  அமெரிக்காவின் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்குகளில் - நமது மும்மூர்த்திகளான " சிவா , விஷ்ணு , பிரம்மா " வின் படிமங்கள் - பாறைகளில் படிந்து இருப்பதாக எழுதி இருந்தார். இவ்வளவு பெரிய பள்ளத்தாக்குகளில் - சந்தேகமே இல்லாமல் , ஏராளமான ரூபங்கள் - நம் கண்ணுக்கு தெரியக்கூடும்.     

பொதுவாக இந்திராஜி எழுதிய நாவல்களை , நாம் முதன்முறை படிக்கும்போது - கதையின் விறுவிறுப்பில் , நாம் நிறைய விஷயங்களை மனதில் பதிய வைக்க முடியாது. திரும்ப நீங்கள் படிக்கும்போது , உங்களுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக புலப்படும். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத , அதே சமயம் ஆன்மீக பொக்கிஷங்கள் நிறைய அடங்கியவை அவர் நாவல்கள் .  

உண்மைலேயே , இயற்கையின் ஒரு அதி  அற்புதமான சிருஷ்டி - இந்த பள்ளத்தாக்கு. நம் இந்தியாவிலும், ஏராளமான இடங்கள் இதைப் போல் உள்ளன. வானில் , நம் கண்ணுக்கு புலப்படும் ரூபங்கள் , பூமியில் இருந்தால் எப்படி இருக்குமோ , அதைப்போல - அழகின் உச்சமான இந்த பள்ளத்தாக்குகளை , நம் வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இங்கு பகிர்கிறேன்.


நமது வாசகர்களில், யாராவது நேரடியாக சென்று வந்து இருந்தால் - உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

கிராண்ட் கன்யான் :இது NGC வெளியிட்டுள்ள கிராண்ட் கன்யான் - sky வாக் - வீடியோ தொகுப்பு. க்ளிக் செய்து பாருங்கள் . பரவசமூட்டும் அனுபவம். சுமார் 4000 அடி உயரத்தில் , கண்ணாடி தரையில் கீழே பார்க்க முடியுமாம்.

http://video.nationalgeographic.com/video/player/news/culture-places-news/grand-canyon-skywalk-vin.html

மேலும் அதிக விவரங்களுக்கு கிராண்ட் கன்யான் official website
: http://www.nps.gov/grca/index.htm

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - சிலஅற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்

| Jul 25, 2011
திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள்.

நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க.. 
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா?  நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா? 

அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?
https://www.himalayanacademy.com/taka/past/2008/April/April_08_2008/innersearch_080130-Tiruchendur-KK_661_IMG_9782.jpg
கடவுளை எப்படி வேண்டுவது? 

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள்  , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா? 

அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. ! 
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்.. 

எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? 
அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க..  விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட ,  ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம்  நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா?  அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும். 

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்...  சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை.. 

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள். 

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்..  குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

 சர்ப்ப தோஷம் - திருமண தடை நீங்க  சரபேசர் வழிபாடு பற்றி சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. அந்த கோவில் பற்றி , நிறைய வாசகர்கள் மேலும் தகவல்கள் கேட்டு இருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்  கிழமை ராகு கால நேரத்தில் - மாலை 4 .30 முதல் , அபிசேக , ஆராதனை நடக்கிறது.. கூட்டம் அதிகம் இருப்பது இல்லை. உங்களுக்கு நான்கு அடி தூரத்தில் , சர்வ வல்லமை பொருந்திய சரபேசரை  , நீங்கள் சலிக்க தரிசனம் செய்யலாம். வழிபாடு முடிந்து செல்ல இரவு எட்டு மணி ஆகிவிடும். 

கோவில் இருக்கும் இடம் : வன்னிவேடு.. வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிட நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வாலாஜா - ராணிப்பேட்டை, ஆற்காடு அருகில் உள்ள ஒரு நகரம். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் எல்லா பேருந்துகளும், வாலாஜா நின்று செல்லும்.. வேலூர் டு வாலாஜா - 25 km. சென்னை டு வாலாஜா - 100 km (approx .)


உங்களுக்கு அதிக பயன் தரும் சில முக்கியமான பாராயண மந்திரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நமது இணைய தளத்தில் ஏற்கனவே  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை பதிகங்களை பாடி , கோடிகளில் செல்வம் குவித்த தென்காசி நண்பரை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்..  

இந்த பதிவை  படித்த பிறகு, நமது வாசகர் ஒருவர் - பாம்பன் சுவாமிகள் பற்றி தனியே இயங்கும் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருந்தார். நமது வாசகர்கள்   அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் , உங்களிடம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.. அதில் உள்ள ஒரு பதிவு நம் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மறைய, பணம் , பொருள், ஆபரணம் சேர்க்க , குடும்பம் - மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ , மரண  பயம் நீங்க, துக்க செலவுகள் குறைய, துர் செய்திகள் வராமல் இருக்க , திருமணம் கை கூட , பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேர என்று -
இவை ஒவ்வொன்றும் , அற்புதமான பலன்கள் தரும் மந்திரங்கள்.


மந்திரங்களை படிக்க  இங்கே க்ளிக் செய்யுங்கள் 


நம்பிக்கையுடன் பாராயணம் செய்யுங்கள் !

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..!

| Jul 23, 2011
I am a blogger , I am a blogger என்று  காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் , சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும்  " Post your comments "  வசதியால் வந்த வினை இது. 

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல்  - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது.. 

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள்.  வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர்.  பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார். 

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி  எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு,  தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த  அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது.. 

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர். 

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர்  நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க..  உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

 நன்றி,

ரிஷி... 


பரிகாரங்களில் மிகச் சிறந்த, அனைத்து தடைகளையும் உடைத்து , உடனடி முன்னேற்றம் தர விஜயாபதி , நவகலச யாகம் !

|
நமது ஜோதிட பாடம் பயிலும் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை - உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். மிக முக்கியமான கட்டுரை. திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க - ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் - இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி - நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம். 

எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம். 
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் - நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !
 http://mmimages.mmnews.in/Articles/2011/Jun/b28d1b6b-a42d-46cc-810f-5b4992d9c0d5_S_secvpf.gif
ஆணெனில் 31 வயதுக்குள்ளும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளும் திருமணம் முடிந்துவிட்டால்,அது திருமணத் தடையென்று எடுத்துக்கொள்ள முடியாது.இந்த வயது எல்லை அதிகபட்ச எல்லையாகும். ஆனால்,நடைமுறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.முறைப்படி வரன் பார்த்தும்கூட ஏழு ஆண்டுகள்,பத்தாண்டுகளாக வரனைத் தேடிக்கொண்டே இருப்பவர்களுக்கு சிறந்த,செலவு குறைந்த தோஷப்பரிகாரமாக விஜயாபதி நவகலச யாகம் இருக்கிறது.


திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் கருவுற்றாலே புத்திர தோஷம் இல்லை என்று பொருள்.பல தம்பதிகளுக்கு கருவுறுதல் கூட நடைபெறுவதில்லை;இப்படிப்பட்ட தம்பதியரின் ஜனன ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் யாராவது ஒருவருக்கு புத்திர தோஷம் இருக்கும்.புத்திர தோஷம் கடந்த ஏழு முற்பிறவிகளில் செய்த கடுமையான கர்மவினையின் /வினைகளின் விளைவாக புத்திர தோஷத்தை உருவாக்குகிறது.இந்த புத்திர தோஷம் நீங்கவும் விஜயாபதியின் நவகலச யாகம் சிறந்த பரிகாரமாக அமைந்திருக்கிறது.

லக்னத்துக்கு , ஒன்று ,  மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம்  இடங்களில் இராகு அல்லது கேது ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது பிதுர்தோஷம் ஆகும்.இது உரிய ஜாதகரின் வாழ்க்கையில் திருமணத்தடை,புத்திர பிறப்புத் தடை,அரசுப்பணியில் சேர இயலாமை,சொந்த வீடு வாங்கவோ/கட்டவோ இயலாமை; நல்ல வாழ்க்கைத் திருப்புமுனைகளை அனுபவிக்க இயலாமல் போகுதல்;குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் இருப்பது போன்றவைகளால் தினசரி வாழ்க்கையே போராட்டமாகிவிடும்.இந்த நிலை நீங்கிட, விஜயாபதியில் நவகலச யாகம் செய்வது அவசியம்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தாலும்,ஒருவரை ஒருவர் ஏழாம் ராசியில் பார்த்தாலும் அது நான்கு தலைமுறைவரையிலும் சொத்துக்காக சண்டைபோட்டு அதன் சாபத்தை அனுபவிப்பதைக் காட்டுகிறது.இந்த கிரகநிலையுள்ள ஜாதகர் எந்த ஒரு சிறு முன்னேற்றத்திற்கும் கடுமையாகப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.இந்த நிலை வாழ்நாள் முழுக்கத் தொடரும்.இந்த சூழ்நிலையை மாற்றி வாழ்க்கையில் நல்ல விரைவான முன்னேற்றம் காண விஜயாபதியில் நவகலசயாகம் செய்துகொள்வது நன்று.

இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம்
ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.

ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .

இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.

ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய  பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.

உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.

தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.

ஒரு முறை நவகலசயாகம் செய்ய மொத்தம் சுமார் ரூ.4000/-  வரை செலவு ஆகும். ஆகும்.இந்த நவகலச யாகத்தினை குரு தட்சிணை எதுவும் வாங்காமல் செய்து வருபவர் தெய்வத்திரு . ஆன்மீக செம்மல் ஐயா. மிஸ்டிக். செல்வம் அவர்களின் நேரடி சீடர்களில் ஒருவரான ,  திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் வசித்து வருகிறார்.


விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும்.கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா,இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர் புளியங்குடியிலிருந்து விஜயாபதிக்கு தமது சொந்தச் செலவில் கார் ஏற்பாடு  செய்து கொண்டால் நல்லது. போக்குவரத்து வசதி கொஞ்சம் குறைவுதான்.

தோஷமுள்ள ஜாதகர் தமது குடும்பத்தோடு விஜயாபதிக்கு வந்து நவகலச யாகம் செய்வது நல்லது; தவிர்க்க இயலாதவர்கள் தனியாகவும் வரலாம்.மேலும் விபரமறிய திரு.சிவ.மாரியப்பன் அவர்கள்,புளியங்குடி-9677696967.இவரை தாங்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எல்லா நாட்களிலும் தொடர்புகொண்டு பேசலாம்.

ஓம்சிவசிவஓம்..........

திருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம் நாம ஜெபம் !

| Jul 22, 2011


சுமார் 16 ஆண்டுகளாக வரன் பார்த்து சலித்துப்போய் விட்டதால்,அந்த கன்னிப்பெண்ணின் வீட்டில் வருத்தப்படாத நாளே இல்லை;நமது தலைவிதி அவ்வளவுதான் என முடிவு செய்திருந்த வேளையில் எனது நண்பரும்,ஆன்மீகக்கடல் வாசகருமாகிய ஒருவர்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமையையும்,ஜபிக்கும் விதத்தையும்,1,00,000 முறை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் விவரித்திருக்கிறார்.

சில நாட்கள் சிந்தித்த அந்த கன்னிப்பெண்,ஒரு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தாள்.மஞ்சள் நிற விரிப்பு,மூன்று ருத்ராட்சங்கள் வாங்கிக்கொண்டார்.தினமும் காலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.கூடவே, தனது ஜப எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.வெறும் 14 நாட்களில் அந்த கன்னியின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை 1,00,008 ஐக் கடந்துவிட்டது.

15 ஆம் நாள் அதிகாலையில் அந்த கன்னிப்பெண்ணின் வீட்டுவாசலில் ஒரு சிகப்பு நிற பசுவும்,ஒரு வெள்ளை நிறப்பசுவும் வந்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்ததாம்.அதன் கழுத்துகளில் இருந்த மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க,ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருந்த அந்த கன்னி,வீட்டுக்கு வெளியே வந்து அந்த பசுக்களை விரட்டியும் அவை போகவில்லை;சுமார் ஒரு மணிநேரம் கழித்தப்பின்னரே,அவை தாமாக புறப்பட்டுச்சென்றன.

16 ஆம் நாள் அந்த கன்னிக்கு திருமணம் நிச்சயமானது.இன்று அந்த கன்னி செல்வச்செழிப்பான,அன்பான கணவனை அடைந்திருக்கிறாள்.மணமாகும்போது அந்தக் கன்னியின் வயது 37!

இறைத்தொண்டில், 

அன்பன் . கே. வீரமுனி
ஓம்சிவசிவஓம்

பணத்தை முதலீடு செய்யும் முன்... இதையும் தெரிந்து கொள்ளுங்கள் !!

|
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட Ms . ஹாசினி கண்ணன் , அவர்களுக்கு மனமார்ந்த  நன்றி. வாசகர்கள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். பல புதிய யோசனைகளை பிறப்பதற்கும், அவரே யோசனை கூறியுள்ளார்..

RMP multinational business என்பது ஒரு பிரமிட் வடிவ வியாபாரம். இது எங்கள் நாட்டில் (ஸ்ரீ லங்கா) சட்டத்தால்  தடை செய்யப்பட்ட ஒன்று.

விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

1 . நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் பொருளில் 80 % பிரயோஜனம் இருக்காது. (50 % தேறுவதே கஷ்டம்)
2 . இதில் முன்னாடியே சேர்ந்தவர்களுக்கு பரவாயில்லை. பின்னால் சேர்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை இழக்கக் கூடிய வாய்ப்புக்கூட உண்டு.

உதாரணத்திற்கு,
ஒரு ஊரை எடுப்போம். அதில் ஐந்தாயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. முதலாவதாக சேர்பவர் எட்டு பேரையாவது (பொதுவாக எட்டு) சேர்க்கும் போதுதான் தன் கட்டுக்காசை எடுத்துமுடிப்பார்.
அதேநேரத்தில் அந்த எட்டுப்பேர் கட்டுக்காசை எடுக்க மேலும் 64 பேர் (8 x 8 ) இதில் இணைய வேண்டும். இப்படியே போனால், ஒரு நிலையில் கிராமத்தில் புதிதாக சேர ஆட்கள் இருக்கமாட்டார்கள். (அடுத்த ஊரிற்கு போவோம்தானே என கூறாதீர்கள். அங்கேயும் இதே நிலைமைதான்)
எனவே ஒரு நிலையில் (குறிப்பிட்ட காலத்தில்) இந்த நிரம்பல் நிலை வந்துவிடும்.

இப்போது, இந்தத் திட்டத்தில் முதலில் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக சம்பாதித்திருப்பார்கள்... பின்னால் போகப் போக சம்பாத்தியம் தேய்ந்து தேய்ந்து இறுதியில் நட்டத்தில் முடிந்திருக்கும்.

இங்கே, உங்களுடைய கட்டுப்பணத்தில் ஒரு சிறு பகுதி உங்களை சேர்த்துவிட்டவருக்கு சென்றடையும். ஆனால், பெரும்பகுதி கம்பனிக்கு போகும். சேருபவர்கள் கூடக்கூட கம்பனியின் வருமானம் கூடும்.

இத் திட்டம் இருக்கும் காலத்தில் கம்பனியை மூடிவிட்டு போய்விடுவார்கள்..... (மேலும் தொடர ஆட்கள் இருக்க மாட்டார்கள் - வாங்கியவர்களே திரும்ப வாங்கலாம்தானே என கூற முடியும். ஆனால், இதனால் இலாபமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் - பிரமிட்டின் உச்சி போகப் போக குறுகும். எனவே, சிறிது காலதாமதமாகினாலும் மீண்டும் இறுகும் - கம்பனி நிச்சயமாக தலைமறைவாகும்)

இந்த நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டு நஷ்டமடைந்தவர்கள் தங்களை சேர்த்துவிட்டவர்களை கேட்பார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? அழுதுவிட்டு இருக்கவேண்டியதுதான். (புதிதாக, அதாவது பிரமிட்டின் கடைசி சில வரிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.)

மேலும், நீங்கள் எவ்வளவுதான் புதிய ஆட்களை சேர்த்துவிட்டாலும், உங்கள் வருமானத்தில் ஒரு லிமிட் இருக்கும். இங்கே உள்ள திட்டத்தில் அது ஆறு லட்சம் ரூபாய் மாசத்திற்கு. இதற்குமேல் நீங்கள் எவ்வளவுதான் சேர்த்தாலும் பிரயோசனம் இல்லை. எல்லாத்தையும் கம்பனியே சுருட்டிக்கொள்ளும்.

தவிர, அவர்கள் தரும் பொருட்கள், உண்மையிலேயே உங்களுக்கு பிரயோசனமானதுதானா? உங்களுக்கு தேவைப்பட்ட ஒன்றா? நீங்கள் வாங்க நினைத்த ஒன்றா?

பொதுவான விடை "இல்லை". கம்பனி உங்கள் மேல் தங்கள் பொருளை / பொருட்களை திணிக்கிறார்கள். அதன் உற்பத்தியில் / அதன் கொள்வனவில் வரும் இலாபத்தையும் கம்பனியே எடுத்துக்கொள்ளும்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு கிடைத்தது "stabilizer " (கரண்டின் அளவை சீர் செய்யும் கருவி) - உண்மையில் அவருக்கு அது அவசியமற்றது. இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டது ஒரு கல் (இமைய மலையில் எடுத்ததாக கூடப்படும் ஒரு கல்) - அதனால் ஐந்து சதத்திற்கும் பிரயோசனம் இல்லை. அது உண்மையில் அங்கே எடுக்கப்பட்டதா என்பது கூட தெரியாது.

இப்போது சொல்லுங்கள், அந்தப் பொருட்களின் பிரயோசனம் எவ்வளவு? கிடத்தட்ட பூஜ்ஜம் சதவீதம்.

இது எப்படி என்றால், 20 வீத விலைக்கழிவு என விளம்பரப்படுத்துவார்கள். நம்ம ஆட்களும் பாய்ந்து விழுந்து வாங்குவார்கள். ஆனால், உண்மையை சொல்லப்போனால், நமக்கு நட்டம்தான். சரியாக யோசியுங்கள், அந்த நேரத்தில் அந்தப் பொருள் உங்களுக்கு தேவைப்பட்டதா? அந்தப் பணத்தில் செய்ய நினைத்த காரியம் என்னானது? திடீரென பொருள் வாங்கியதால் உங்கள் குடும்பம் திடீர் பணக் கஷ்டத்தில் மிதக்கவில்லையா? (பாங்கில் பணத்தை போட்டுவிட்டு வட்டி வளருகிறதா என பார்த்துக்கொண்டிருப்போரை விட்டுவிடுங்கள். சாதாரண ஊதியம் பெறும் சராசரி குடிமகனை யோசியுங்கள்).

நான் உறுதியாக சொல்ல விரும்புவது, இந்த மாதிரியான பிரமிட் மார்க்கெட்டிங் கம்பனிகளை நம்பாதீர்கள். துணை போகாதீர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்கள் உறவினர்களை, உங்கள் ஊரார்களை ஒரு கம்பனி சார்பாக எமாற்றப்போகிறீர்கள்.

யோசியுங்கள், உங்கள் கிராமத்தின் பணம் கம்பனிக்கும் (60 % இற்கு மேல்), மீதி கிராமத்தில் உள்ள சிலருக்கும் (பிரமிட்டில் மேல் தட்டுகளில் இருப்பவர்கள்) போகப்போகிறது.

எனது சொந்த கருத்து. :

உங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் (அல்லது இந்த திட்டத்தில் சேர நினைத்தவர்களின் வீட்டில் இருந்து) குறிப்பிட்ட தொகையை வாங்கி ஒரு குழுவை அமைத்து, ஒரு குட்டி தொழிற்சாலையை உங்கள் கிராமத்தில் நிறுவுங்கள். (உதாரணம்: ஆடை தைக்கும் தொழிற்சாலை, சிறிய மின் உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலை - printed circuit board தாராளமாக கிடைக்கிறது. அவற்றைக் கொண்டு சில பொருட்கள் இலகுவாக செய்யலாம். மேசை விளக்கு, வாகனங்களில் பொருத்தும் கலர் லைட், LED டோர்ச் லைட்......இன்னும் பல.)

குறைந்தபட்சம் ஒரு வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுங்கள். உங்கள் கிராமமே உழைக்கும். காலாகாலத்திற்கும் அந்த கம்பனி உங்கள் கிராமத்தவருக்கு வருமானத்தை தரும். சமத்துவம் இருக்கும். முடிந்தால் சிறிய தொழிற்சாலையை பெரிதாக்குங்கள்.... பல தொழிற்சாலைகள் ஆக்குங்கள்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கூட முன்னேறலாம்....

குறிப்பு : கிராமத்தில் உள்ள தொழிற்சாலை பொதுச் சொத்தாக இருக்கும் வரை, சண்டை சச்சரவு இருக்காது.

(ரொம்பப் பெரிதாக எழுதிவிட்டேன். 4096 எழுத்துகளை மட்டுமே google comment இல் போடா முடியுமென்பதால் இரண்டாக பிரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். முடிந்தால், பதிவர் விரும்பினால், இதை ஒரு தனி போஸ்ட் ஆக பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
நன்றி.

by ஹாசினி கண்ணன்.
https://www.facebook.com/hashinikannan

ஓய்வு நேரத்தில் பணம் பண்ணலாம் வாங்க... ( பாகம் - 05 )

| Jul 21, 2011
வரப்புயர  ! அவ்வையார் அந்த காலத்திலேயே ஒரு மன்னனை , அதியமான்  னு நினைக்கிறேன்..  வாழ்த்த இந்த வார்த்தையை  சொன்னாங்க. இந்த ஒரே வார்த்தையிலேயே .. அந்த மன்னனுக்கு தேவையான வாழ்த்து கிடைச்சிடிச்சு .. 

வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி - ( அந்த குடி இல்லீங்கண்ணா ) மக்கள் வாழ்க்கை உயரும். குடி உயர கோன் (அரசன்) உயர்வான் ...  இதே மாதிரி தான் சார்.. நம்ம வாழ்க்கையும் உயரணும்..  

முதல்லே உங்க மனைவி, குழந்தைகள் , பெற்றோர் நல்லா இருக்கணும். நீங்க இவங்களை நல்லா கவனிச்சுக்கணும். முக்கியமா இவங்க உங்களை மதிக்கணும் . புஜ பல பராக்கிரமம் இங்கே எடுபடாது. பயம் வேற . மதிப்பு வேற. அதுக்கு நீங்க திறமை சாலியா இருக்கணும். 

ஆம்பளைக்கு மதிப்பு எப்போ வருது ? அவர் பணம் சம்பாதிக்கிற திறமைலே வருது.. பணம் நியாயமா, நேர்மையா சம்பாதிக்கணும்.. அடுத்தவங்க வயித்துலே அடிச்சு , சம்பாதிக்க கூடாது.. அப்படி வர்ற பணம் , உங்களை மட்டும் இல்லாம , உங்க தலை முறையவே பாதிக்கும்..

சரி, நாம படிச்ச படிப்புக்கு ஏற்ப ஒவ்வொருத்தரும், ஒரு வேலை , இல்லை சொந்த தொழில் னு சம்பாதிக்க முயற்சி பண்றோம்.. இதை தாண்டி என்ன பண்ணலாம் னு யோசிக்கிறப்போ தான்.... இந்த " ஓய்வு நேரத்தில்  பணம் பண்ற வித்தைகளைப் " பத்தி - எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க கிட்டே பகிர்ந்துக்கலாம்னு ஐடியா வந்தது.. இதிலே பல வகைகளைப் பார்க்க விருக்கிறோம். உங்களுக்கு எது சூட் ஆகுதோ , அதை நீங்க எடுத்துக்கலாம். .... !

சரி , இந்த " வரப்புயர " எதுக்கு சொல்ல வந்தேன்னா , ஒரு அஞ்சு வருஷம் முன்னாலே , வேலை சம்பந்தமா பரிதாபாத் லே ஒரு கம்பெனிக்கு  போயிருந்தேன் . ஒரு பிசினெஸ் டீல். பெரிய கிரேன் உற்பத்தி செய்ற கம்பெனி. அந்த கம்பெனி சேர்மன் பையன் - மோஹித் குலாட்டினு பெயர். வெரி எங் . முப்பது வயசு தான் இருக்கும். எல்லாம் பேசி முடிச்சிட்டு சாயந்திரம் டின்னேர்லே பேசுறப்போ , " மோஹித் , லைப் லே என்ன எய்ம் வைச்சு இருக்கிறீங்க ?" னு கேட்டேன்.  சொன்ன பதில். சும்மா நச்சுனு இருந்தது. "ரொம்ப சிம்பிள் பாஸ். கியூட் டா , ஒரு மெர்சிடிஸ் நான் சம்பாதிச்சு வாங்கணும் , அப்புறம் இதோ - "black Label " தினம் ஒன்னு , நண்பர்கள் கூட உக்கார்ந்து சாப்பிட உடம்பு வெச்சுக்கணும் " னு அந்த விஸ்கி பாட்டில் காமிச்சாரு. அந்த விஸ்கி எப்படியும் ஒரு ஏழு ஆயிரம்னு நினைக்கிறேன் விலை. 

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.  தினம் ஒரு பத்து ஆயிரம் செலவு பண்ண , நீங்க ஒரு அம்பதாயிரமாவது சம்பாதிக்கணும். ஒரு  மெர்சிடிஸ் கார் வாங்க - ஒரு முப்பது லட்சம் குறைஞ்சது வேணும். அந்த கார் பார்க் பண்ண , ஒரு நல்ல வீடு வேணும்.. உங்க கையிலே ஒரு கோடி இருந்தா , இதைப் பத்தி எல்லாம் யோசிக்கலாம்.  ம்ம்ம்..

தினம் விஸ்கி லிமிட்டா சாப்பிட , உடம்பு பலம் வேணும் . உங்க உடம்பை நீங்க மதிச்சு , தினம் ஒரு மணி நேரமாவது உடற் பயிற்சி செய்யனும்.   இது எல்லாத்துக்கும் - மேலே எல்லோருக்கும் கிடைச்சு இருக்கிற அந்த 24 மணி நேரத்தை - பக்காவா திட்டமிட்டு வேலைகளை செய்யனும்..   நமக்கும் இந்த மாதிரி நச்சுனு ஒரு Aim , லட்சியம் , இலக்கு இருக்கணும். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு - நாமே எப்படி இருக்கப்போறோம் கிறதை - இப்போ இருந்தே திட்டமிட்டு - க்ளியரா மூவ் பண்ணனும்..

நானும் , யோசிச்சுப் பார்த்தேன்.. அந்த பையன் நினைச்சு இருந்தா , அவருக்கு இருக்கிற வசதிக்கு பென்ஸ் வாங்கிடலாம். ஆனா, தானே சம்பாதிச்சு வாங்கனும்னு சொன்னது ரொம்ப பிடிச்சு இருந்தது. ஏன், என்னாலே வாங்க முடியாது ? அஞ்சு வருஷம் வேண்டாம்.. ஐயா, ஒரு பத்து வருஷம்.. ! why not ? முடியுமே.. இலக்கு வைச்சாச்சு..ஆண்டவன் அனுக்கிரகம் கிடைக்கணும். பார்ப்போம்..

பணம்  , பணம்னு இந்த உலகமே  ஓடுதே.. நாம ஏன் அந்த மாதிரி போகணும்.. கிடைச்சதை வைச்சு நிம்மதியா இருக்க முடியாதா? ஏன், முடியாது.. ? முடியும்.. ஆனா, உங்களுக்கு சம்பாதிக்கிற திறமை இருந்தா, அதை ஏன் சார் நீங்க utilise பண்ணக் கூடாது..? ஐயா , உங்களுக்கு காசு வேண்டாம்.. நீங்க நல்ல விதமா சம்பாதிச்ச காசு , உங்க புள்ளை குட்டி அனுபவிக்கட்டுமே.. அதுக்கு அப்புறம், நிம்மதியா , முழு நேரமா கோவில் , குளம்னு போங்க.. குடும்பத்தை இன்னும் நல்லா , அக்கறையா கவனிங்க.. அதுக்கு முன்னே.. நிறைய சம்பாதிங்க..! சரியா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSSLfwlr6jQpfU3AxPWdVVQh4eE4I_D1zgUlB2dgHv_EcNzEIrWHA
சரி, இப்போ இன்னொரு நண்பரை பத்தி சொல்றேன். கர்நாடகாவிலே ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனிக்காக சர்வீஸ் என்ஜினியரா இருக்கிறாரு.வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். படிச்சது  டிப்ளோமா மெக்கானிக்கல் . பத்து வருஷம் experience . சம்பளம் ஒரு முப்பது  ஆயிரம்  கையிலே  வருது. போன மாசம் ,  ஹூப்ளி ஒரு வேலையா போயிருந்தப்போ , மீட் பண்ணினோம்..

ரெண்டு மாசம் முன்னாலே , புது டொயட்டோ இனோவா கார் வாங்கி இருக்கிறாரு. 14 லட்சம்.  பக்காவா  T - போர்டு வாங்கி , டிராவல்ஸ் ஓடுது. அவர் வாங்குற சம்பளத்துக்கு - கண்டிப்பா வாய்ப்பு கம்மி தான். ஏன், லோன் கூட கஷ்டம் தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். எப்படின்னு கேட்டேன்.. ? நம்ம கம்பெனி சம்பளம் தவிர , மாசத்துக்கு - 40 ஆயிரம் சம்பாதிக்கிறேன் சார் . வார வாரம் - 10 ஆயிரம் வரும். அப்படி ஒரு வாய்ப்பு. ஒரு வருஷமா, அந்த காசு தொடவே இல்லை. அதுலே ஒரு ஆறு லட்சம் இருந்தது. மீதிக்கு லோன் போட்டேன். இதுக்கு மேலே டியூ கட்டவும் , அந்த மாதிரி வர்ற காசுலே இருந்து தான். சம்பளத்தை தொடப்போறது இல்லே.  டிராவல்ஸ்லே வர்ற காசு வைச்சு - ஒரு டெம்போ டிராவலர் வாங்கணும்.  ஒரு நாலு வருஷம் சார்.. பெங்களூர் லே ஒரு வீடு வாங்கணும். அவுட்டர்லே ஒரு நாலு ஏக்கர் தோப்பு வாங்கணும்.. அதுக்கு அப்புறம் டிராவல்ஸ் மட்டும் பார்த்துக்கிட்டு - நிம்மதியா வீட்டோட இருக்கணும். என்னோட வண்டிகளுக்கு , சர்வீஸ் மெயிண்டனன்ஸ் பார்க்கிறதுக்கு ஒரு ஒர்க் ஷாப் ஆரம்பிக்கணும். அப்படியே சைடு பை சைடு மத்த வண்டிகளுக்கும் பார்க்க ஆரம்பிக்கலாம். அது போதுமே சார்.. நம்ம கையிலே தொழில் இருக்கு ... வேற என்ன சார் வேணும்..? 

எப்படி , இந்த மாதிரி உனக்கு தோணிச்சுன்னு கேட்டேன்.. ? " சார், நீங்களே சொல்லுங்க. மாச மாசம் டார்கெட் கொடுக்கிறீங்க. குட்டிக்கரணம் அடிச்சாதான் , அதுக்கிட்டே போக முடியும். டார்கெட் ரீச் ஆயிட்டா பரவா இல்லை. இல்லைனா, ஒரு அஞ்சு நாளைக்கு தினம் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ எல்லாம் திட்டுவீங்க. நான் நாலு பேர்கிட்டே  எரிஞ்சு விழனும்.. எதுக்கு இந்த பொழைப்பு னு தோணிச்சு ?

எத்தனை நாள் கம்பெனிக்கு வேலை பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? நீங்க எந்த கம்பெனி க்கு வேலை பார்த்தாலும், உங்க சம்பளம் கூட , கூட , உங்க முதுகு குனிய ஆரம்பிக்கும். வேற வழி கிடையாது பாஸ்.  பாட்டு வாங்கித்தான் ஆகணும்,... கம்பெனி சேர்மன் கிட்ட அதிகமா " ஏத்து " வாங்குறது , அந்த கம்பெனியிலேயே அதிகமா சம்பளம் வாங்குற GM  மா தான் இருப்பார். அவர் வாங்கினதை , இன்னொரு ஆளுக்கு  பாஸ் பண்ண , அவர் நாலு பேருக்கு பாஸ் பண்ண - கடைசி வேலை பார்க்கிறது ஒரு பத்து பேரா இருக்கும்.   சம்பளம் வருது .. கை நிறைய வருது.. ஆனா , அதை வைச்சுக்கிட்டு எத்தனை பேர் சந்தோசமா , குடும்பத்துக்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது ?  அதனாலே வேற ஏதாவது பண்ணனும்னு தோணிச்சு ...

கிரேட் யார்.. லவ்லி ! ஆல் தி பெஸ்ட் னு வாழ்த்து சொல்லிட்டு வந்தேன்.. நான் செய்ய தவறுனதை , கண் முன்னே நம்ம ஆளு ஒருத்தன் பண்றானேனு ஒரு சந்தோசம்... !!

சரி , அந்த வாரம் பத்து ஆயிரம் எப்படி வருதுன்னு சொல்லவே இல்லையே.. ! சொன்ன விஷயம் என்ன தெரியுமா?  சப்பை மேட்டருன்னு நான் எக்கச்சக்கமான பேருக்கு சொன்ன விஷயம். ... ! நான் சொன்னா , நீங்களே அட போங்க சார் னு சொல்லுவீங்க..!   எல்லாமே பெரிய பெரிய டுபாக்கூர் விஷயம்னு சொல்வீங்க. ...! RMP னு ஒரு விஷயம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? MLM ( Multi level marketing ) கான்செப்ட் தான். Detail லா ஒரு அரை மணி நேரம் அதைப் பத்தி சொன்னாரு. இனிசியல் ல ஒரு எட்டு ஆயிரம் இன்வெஸ்ட் பண்ணினாராம். பண்ணினதும் உங்களுக்கு மெம்பர்ஷிப் கார்ட் கொடுப்பாங்க. அதிலே நிறைய products இருக்கு. எட்டு ஆயிரம் மதிப்புக்கு நீங்க உங்களுக்கு தேவையான பொருள் வாங்கிக்கலாம். நீங்க கொடுத்த வேல்யூ க்கு ஒரு 80 % வொர்த்  தாவது அந்த மெட்டீரியல்  இருக்கும்னு வைச்சுக்கோங்களேன்..   அவரு ஒரு ரெண்டு பேரை join பண்ணி விடனும்.  லெப்ட் - ரைட் join பண்ணினா உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமாம். அந்த ரெண்டு பெரும் எவ்வளவு பேரை சேர்க்கிறாங்களோ  , அதுக்கும் உங்களுக்கு பைசா வருமாம். இப்படியே add ஆகிக்கிட்டே  போகுது.. 

வார வாரம் பேமென்ட் வருமாம். ஒரு குறிப்பிட்ட லெவல் தாண்டினதும் , நீங்க diamond லெவலோ  , ஏதோ சொல்றாங்க. அது வந்தாச்சுனா , மாசம் உங்களுக்கு அம்பதாயிரம் வந்துக்கிட்டே இருக்குமாம். என்னமா திங்க்  பண்ணுறாங்க  ..?


நம்ம ஆளு சேர்த்து விட்ட ரெண்டு பெரும் தீயா வேலை செய்ற ஆளுங்க போலே. பட்டையை கெளப்பி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல நேரம் நல்லா இருந்து இருக்கு.. பின்னிப் பெடல் எடுக்கிறாங்க. இவரும் தனக்கு தெரிஞ்சவங்க, போனவங்க , வந்தவங்கனு முடின அளவுக்கு சேர்த்து விட்டிருக்கார்.   இது வரைக்கும் அவருக்கு கீழே 256 pair இருக்கிறாங்களாம். இதிலே ஒரு 20 % active ஆ இருந்தாலே போதும்.. உங்களுக்கு பைசா வந்துக்கிட்டே இருக்கும்னு சொல்றாப்ல.   என்ன , முதல் லே சேர்வங்களுக்கு ஈஸி . Circuit நீளமாக ஆக உங்களுக்கு நல்லது.


இன்னும் கொஞ்சம் விசாரிச்சா , SPEAK ASIA , AUM GLOBAL னு நிறைய இருக்குது.. அதை எல்லாம் பின்னாலே பார்ப்போம்.. ! 

RMP பத்தி உங்களுக்கு இன்னும் தெரியணும்னா , அவங்க வெப்சைட் பாருங்க. 
http://rmpinfotec.biz    அவங்க - products detail பார்க்கிறதுக்கு இங்கே க்ளிக் பண்ணுங்க. 
  pant , shirt , watch , vaccum cleaner இப்படி எல்லாம் branded items தான். இதிலே என்னையும் உள்ளே சேர்த்து விட்டிருக்காங்க. நான் சேர்ந்ததும் , நம்ம சர்க்கிள்ளே ஒரு பத்து பேர் ஜாய்ன் பண்ணிருக்காங்க. 


கண்ணுகளா... எல்லாமே ஜஸ்ட் ஒரு சஜெசன் தான். ஜாய்ன் பண்றதும் , பண்ணாததும் உங்க இஷ்டம்.. ! ரொம்ப விரிவா, இதைப் பத்தி டீடய்ல் வேணும்னா உங்கள்  பெயர் , போன் நம்பர் mention பண்ணி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் ( Editor @livingextra .com ). உங்களுக்கு என்னோட நண்பரே போன் பண்ணி தெளிவா புரிய வைப்பார்.  அதுக்கு அப்புறம் , உங்களுக்கு பிடிச்சு இருந்தா இன்வெஸ்ட் பண்ணுங்க..  ... !

என்ன, சேரும்போது ஒரு ஏழு ஆயிரம் போச்சுன்னு நெனைச்சு ஜாய்ன் பண்ணனும்.. உங்களோட முயற்சி , நேரம் நல்லா இருந்தா , ஒரே மாசத்திலே நீங்க போட்ட காசு வந்துடும். அதுக்கு அப்புறம் வந்த வரைக்கும் லாபம்னு நெனைச்சுக்க வேண்டியதுதான். ட்ரை பண்ணிப் பார்க்கணும்னா பாருங்க... ஓகே... மீண்டும் சிந்திப்போம்... !

இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? (பாகம் - 04 )

|
பணம் சம்பாதிக்கணுமா?  முதல்லே உங்களுக்கு தேவை - பணம் சம்பாதிக்கணும்னு ஒரு ஆசை , வெறி இருக்கணும். ஒரு வேட்டை நாயோட - வேகம், விறைப்பு எப்பவும் இருக்கணும். சோம்பேறித்தனம் துளிகூட ஆகாது பாஸ்.. ! நல்ல சம்பாதிங்க.. உங்க தன் நம்பிக்கையை அது முதல்லே வளர்க்கும்....

நமது முதல் மூன்று கட்டுரைகளைப் படித்துவிட்டு , மிகுந்த ஆவலுடன் உள்ள வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரைலே  நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..

நான், உங்களுக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி - இணையம் மூலம் நாம் சம்பாதிக்கிற வழிகள் பல இருந்தாலும், மிக முக்கியமான , நம்பகமான ADSENSE பற்றி , இன்னும் விரிவா தெரிஞ்சுக்கிட்டு மத்த விஷயங்களைப் பார்ப்போம்..

நாங்களும் கலக்குறோம் பேர்வழினு --- தமிழ் ப்ளாக் ஆரம்பிச்சுடாதீங்க.. ! பைசா பிரயோஜனம் இல்லை. ! ஒரு ரெண்டு , மூன்று வருஷம் விடாம தமிழ் ப்ளாக் develop பண்ணினா , பின்னாலே - ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம். நீங்க சம்பாதிக்கணும்னு நினைச்சா , சிம்பிள் - சினிமா சம்பந்தப்பட்ட - நியூஸ் , படங்கள் - இப்படி ஏதாவது ஒன்னு எடுத்துக்கோங்க. இங்கிலீஷ் லேயே ஆரம்பியுங்க.. எதுக்காக சொல்றேன்னா.. ஆரம்ப காலத்துலே , உங்கள் ப்ளாக் குக்கு எத்தனை visitors வர்றாங்களோ , அத்தனைக் கத்தனை - உங்களுக்கு ஆர்வம் வரும்... சினிமா சம்பந்தமா நீங்க எதைப் போட்டாலும் , அதுக்கு ஒரு நூறு பேராவது தினமும் வருவாங்க...   ! கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். முடிஞ்ச அளவுக்கு சொந்தமா நீங்களே எழுதுங்க. புதுசா எதை எழுதினாலும், கூகுளுக்கு கொண்டாட்டம். உடனே இன்டெக்ஸ் ஆகும். நல்லா உங்களுக்கு பழக்கம் ஆனதுக்கு அப்புறம் , உங்களோட favourite subject லே  புகுந்து விளையாடலாம்.

உங்க ப்ளாக் க்கு எத்தனை visitors லைவ் லே இருக்கிறாங்கன்னு பார்க்கிறதுக்கு "FEEDJIT "  னு ஒரு widget இருக்கு. உங்களுக்கு ஒரு ஆர்வத்துக்கு மட்டும் தான். இதனாலே வேற ஒன்னும் use இல்லை. உங்க ப்ளாக் லே இதை இன்செர்ட் பண்ணிக்கோங்க.  நிறைய ஆளுங்க வரும்போது உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கும்.

நான்  ஏற்கனவே சொல்லி இருக்கிற மாதிரி , இந்த தொடர் கட்டுரையோட நோக்கம் ப்ளாக் எப்படி develop பண்றது மட்டும் இல்லை , அது மூலமா எப்படி சம்பாதிக்கிறதுன்னு பார்க்கிறது தான்.. 

உங்களுக்கு ப்ளாக் லே இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு , தமிழ் லே ஒரு நல்ல சைட் இருக்கு. பிளாக்கர் நண்பன் .... இதைப் பாருங்க.. உங்க பல கேள்விகளுக்கு , இதில்லே நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கும். 

சரி, Google Adsense - நீங்க ப்ளாக் ஆரம்பிச்ச உடனே கிடைக்காது.. உங்க ப்ளாக் ஒரு நல்ல ப்ளாக் னு சர்ச் எஞ்சின் recognise பண்ணனும்  .   அதுக்கு அப்புறம் தான் கிடைக்கும். ஆறு மாசமாவது ஆகணுமே.. வேறு வழி இருக்கா?
இருக்கு... நிறைய இணைய தளங்கள் இருக்கு.. அதன் மூலமா apply பண்ணினா வாங்கலாம்.


www .Indyarocks .com னு ஒரு இணைய தளம் இருக்குது. இதிலே நீங்க உள்ள register பண்ணுங்க. உங்க கிட்டே இருக்கிற படங்கள் , இல்லை நெட் லே இருந்து டவுன்லோட் பண்ணின படங்கள் - ஒரு இருபது , இருபத்தஞ்சு - இந்த தளத்துலே upload பண்ணுங்க.   அதுலேயே உங்களுக்கு apply adsense option இருக்கும். apply பண்ணுங்க. Adsense apply பண்ணும்போது , உங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் , வீட்டு முகவரி எல்லாம் ஒரிஜினல் கொடுங்க. ஏதாவது பழக்க தோஷத்திலே - வேற பெயர் கொடுத்திடப் போறீங்க. உங்கள் அக்கௌன்ட் லே நூறு டாலர் கிராஸ் ஆனா உடனே, உங்கள் பெயரிலே - கூகுள் லே இருந்து செக் வரும். நீங்க கொடுத்த வீட்டு முகவரி க்கு வரும். முடிந்த அளவுக்கு courier சர்வீஸ் இருக்கிற ஊர் முகவரி யா இருந்தா நல்லது. சமீபத்துலே வர்ற செக் எல்லாம் , நம்ம ஊர்லே  அதிகமாக "BLUE DART " கூரியர் லே வருது. அந்த சர்வீஸ் உங்க ஊருக்கு இருக்க பாருங்க. ஏன்னா , அட்ரெஸ் அப்புறமா மாற்ற முடியாது. .... Adsense detail வேறு யார் கிட்டேயும் ஷேர் பண்ண வேண்டாம். HIGHLY CONFIDENTIAL ஆ வைச்சுக்கோங்க. .

ஒரு நாளைக்கு ஒன்னு , அல்லது வாரத்துக்கு ஒன்னு பதிவு கண்டிப்பா போடுங்க. உங்களால் முடிந்த அளவுக்கு பதிவு போட்டுக்கிட்டே இருங்க...

அப்புறம், ஒரு முக்கிய விஷயம்.. நீங்க என்னதான் பதிவு போட்டாலும், உங்க பதிவுக்கு visitors வர வைக்கணும் இல்லையா? பத்து நிமிஷம் போஸ்டிங் போட spend பண்ணினா,  ஒரு மணி நேரமாவது அதைப் பிரபலப் படுத்த முயற்சி பண்ணுங்க.. அதுக்கு நிறைய தளங்கள் இருக்கு. social sites னு சொல்லுவாங்க.     
ZIMBIO , digg , hotklix , னு நிறைய தளங்கள் இருக்கு. இதிலே பார்வையிடும் வாசகர்கள் லட்சக்கணக்கிலே தினமும் வர்றாங்க. உங்க பதிவுகள் நீங்க இங்கே ஷேர் பண்ணும்போது, அதைப் பார்த்திட்டு - உங்க வலைப்பூவுக்கு வருவாங்க. தமிழ்லே - இன்ட்லி , தமிழ்மணம் , மாதிரி நிறைய தளங்கள் இருக்கு.  மேலும், facebook , twitter - னு உங்க பதிவுகளை , நீங்க ஷேர் பண்ணும்போது , உங்களோட வாசகர் எண்ணிக்கை அதிகமாகும்.

உங்கள் ultimate aim -  வாசகர் எண்ணிக்கை அதிமாக்கணும். alexa ரேங்க் டாப் லே வரணும் , நல்ல தரமான ஒரிஜினல் பதிவுகள் மூலம் பேஜ் ரேங்க் வரணும்.. இவ்வளவு தான். அதுக்கு என்ன என்ன பண்ணணுமோ , எல்லாம் பண்ணுங்க.

ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது , புதுசு புதுசா விஷயங்கள் கத்துக்கோங்க. ஆறா இருந்தாக் கூட , தண்ணி தேங்க ஆரம்பிச்சுட்டா  - அதுக்கு பேரு குட்டை தான். தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.. நான் ஒரு சின்ன கோடு போட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்.. இதுக்கு மேல உங்களுக்கு தேவையான விஷயங்கள் இணையத்துலேயே எவ்வளவோ கிடைக்கும்.. தேடுங்க.. கண்டுபிடிச்சு கத்துக்கோங்க.. எந்த சந்தேகம்னாலும் கூச்சப்படாம என்கிட்டே கேட்கலாம்... !

சரி, பணம் சம்பாதிக்கலாம் வாங்கன்னு , நம்ம தொடர் கட்டுரைகளை படித்து விட்டு எத்தனை பேர், புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கிறீங்க.  ? சில பேர் ப்ளாக் சம்பந்தமா கொஞ்சம் சந்தேகம் னு கேட்டு இருந்தீங்க.. திரும்பவும் சொல்றேன்  .. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், தயவு செய்து E-மெயில் ,  மூலம் கேளுங்க. ஒரே நாளில் உங்களுக்கு reply கிடைக்கும்.. கோச்சுக்காதீங்க.. தினமும் அவ்வளவு மெயில் வருது,,, போன் நம்பர் ஷேர் பண்ணினா,,, அன்புத்தொல்லை அதிகமாகிடும்னு  ஒரு பயம் தான்...

இப்போ தான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சவங்களுக்கு - First preference ...Immediate  reply . உங்க followers லிஸ்ட் லே முதல் ஆளா நானும் join பண்ணத்தான்.  உங்க ப்ளாக் நேம் தெரியப்படுத்துங்க.

சரி, மீண்டும் சிந்திப்போம், நிறைய சிந்திப்போம்.. !! உங்கள் பின்னூட்டங்களுக்கு காத்திருக்கிறேன்...!

நேரில் தரிசனம் தந்த திருப்பதி பாலாஜி - மெய் சிலிர்க்க வைக்கும் நிஜ சம்பவம் !

| Jul 20, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நேற்று நமது ஹனுமன் தரிசனம் பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு , மதுரையிலிருந்து திரு. குரு மூர்த்தி அவர்கள் , பின்னூட்டம் இட்டு இருந்தார். அவரது அனுபவத்தை அப்படியே இங்கே தருகிறேன்...
பின்னூட்டத்தில் இருந்தால், நிறைய வாசகர்கள் கவனிக்க தவறிவிடுவதால், இதை தனிப் பதிவாகவே பதிவிடுகிறேன்..!, இவர் எவ்வளவு புண்ணியம் செய்தவராக இருக்க கூடும்.. ! பெருமாளின் பரிபூரண அருள் , நம் அனைவருக்கும் கிடைக்க மனமார வேண்டுவோம்...!! உங்களிடமும், இதைப் போலே மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் இருந்தால் , பகிர்ந்து கொள்ளுங்களேன்!
  =======================================================

நானும் என் குடும்பத்தாரும் ஸ்ரீ நிவாசப்பெருமாளை, கண்ணாரக் கண்டோம் என்றால் நம்புவீர்களா?
நம்புங்கள்.சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு,என் தம்பி ஸ்ரீ நிவாசனுக்கு , திருமலையில் திருமணம் ஏற்பாடு செய்திருந்தோம்.திருமணத்திற்கு முதல் நாள் இரவு , நான்,என் மனைவி பானுமதி (அவர் இப்போது இறைவனிடத்தில்)என் இரு மகன்கள் (5 & 2 yrs old) அனைவரும் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு ,கோயில் பழைய மடப்பள்ளி வழியாக வந்து கொண்டு இருந்தோம்.அப்போது என் மனைவி " இப்போ சூடா இங்கே கிடைக்குமே ,எள் போட்ட பெரிய வடை - அது கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றார்.
நானும் கிண்டலாக," ஆமாம்.உனக்குன்னு special ஆக பெருமாள் வந்து , இந்தா வடை ன்னு கொடுப்பார்" என்று கேலி செய்தேன்.
 http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQzEGk5oQJv_vavI9GLqFH4vEgF3oBFNlivPkgGJlRgMn4vToMu6Q
அப்போ அந்த இடம் அவ்வளவாக வெளிச்சமாக இல்லாமல்,சற்று இருளாக இருந்தது. எங்களை தவிர யாரும் அருகில் இல்லை. மணி இரவு சுமார் ஒரு மணி இருக்கும். அப்போது ஒரு உயரமான படி மேல் நல்ல கருமை நிறத்தில்,தூய வெள்ளை உடை உடுத்திய ,நெற்றியில் பட்டை நாமத்தோடு,கோவில் பட்டர் ," ஹஹஹா" என மெதுவாக சிரித்தபடியே " என்ன , வடை வேணுமா?" என கேட்டார்.எனக்கு ஒரே படபடப்பு.

நாம் கேலி செய்து பேசியதை இவர் கேட்டு விட்டாரோ என எண்ணியபடி , அவரிடத்தில் சற்று பயத்துடன் சென்று," ஆம் சுவாமி. வடை இருந்தால் கொடுங்கள்" என்றேன்.அவரும் சிரித்தபடியே ," இருங்கள் வருகின்றேன்" என அருகில் இருந்த கதவினை திறந்து உள்ளே சென்று,பின் வெளியே வந்தார், கை நிறைய சுமார் பத்து சூடான வடைகளுடன். "சவாமி . எவ்வளவு ருபாய் தரவேண்டும், வடைகளுக்கு?" என பவ்யமாக கேட்டேன். அவர் சிரித்து கொண்டே ,"கொடுப்பதை கொடுங்கள் " என்றார் .

நானும் சட்டையில் கைவிட்டு,கையில் வந்த ருபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து விட்டு,பெருமாளின் தயவை வியந்தபடி ,நகர்ந்தேன். சற்று தொலைவில் எங்களை கண்ட என் சகோதரி " அண்ணா , எங்கே இந்நேரத்தில் உங்களுக்கு வடை கிடைத்தது?" என் கேட்க, நாங்களும் நடந்ததை சொன்னோம். அவளும் ஓடி சென்று , அங்கே பார்த்துவிட்டு , திரும்பி வந்து," அங்கே அப்படி படியோ, அறையோ... ஒன்னும் இல்லையே. யாரும் காணோம்." எனறாள். என் உடல் சிலிர்த்து சில்லிட்டு போனது.அப்போதுதான் உணர்ந்தோம் , எங்களுக்கு வடை கொடுத்தது சாட்சாத் வெங்கடேசப்பெருமாள் தான் என்று.

PN.குருமூர்த்தி -மதுரை.

==================================================

நான் திரும்ப திரும்ப சொல்ற விஷயம் இதுதான். ஆண்டவன் இருப்பது நிஜம். முழு நம்பிக்கையுடன் உங்கள் கடமைகளை செய்து வாருங்கள். உங்கள் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் விரைவில் நிறைவேறும்!!

ஹனுமனை நேரில் தரிசனம் செய்தவர்! வியக்க வைக்கும் நிஜ சம்பவம்!!

| Jul 19, 2011
எடுத்த காரியம் எதுவும் நல்லவிதமாய் முடியவில்லையே.. இனி வாழ்வில் தோல்வி மட்டும் தானா? என்று எண்ணுபவர்களுக்கு - ஹனுமனை நினையுங்கள்.. ஹனுமனை மனதில் தியானியுங்கள்.. ! தினமும் காயத்ரி மந்திரத்தை ஒரு அரை மணி நேரமாவது ஜெபம் பண்ணுங்கள். செய்து விட்டு அன்றைய தின வேலைகளை ஆரம்பியுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் காயத்ரி ஜெபம் - உங்கள் வீட்டின் அத்தனை தோஷங்களையும்  நீக்கி, உங்களுக்கு மிகப் பெரிய உந்துதலை தந்து - உங்களை முன்னேற்றும்

ராமாயணம் நிஜமா? சேது பாலம் உண்மையா ? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் - இந்த நிகழ்ச்சி உங்கள் நம்பிக்கையை மென்மேலும் அதிகப்படுத்தி உங்களுக்கு இறை நம்பிக்கையை ஏற்படுத்தும் ...
இது ஒரு 100 சதவீதம் உண்மை நிகழ்ச்சி. நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம் ! படித்த பிறகு - உங்களுக்கு புரியும்.

என்னுடைய கம்பெனியில் டில்லியை சேர்ந்த நண்பர் - பெயர் தீபக் தோன்க்ரே சொன்ன உண்மை சம்பவம் இது. அவர், மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கொஞ்ச வருடங்கள் பணி புரிந்தவர்.  இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவருக்கு பொய் சொல்லித்தான் பொழைப்ப   நடத்தணும்ங்கிற அவசியம் இல்லை. முக்கியமா என்னை முட்டாளாக்கனும்கிற  அவசியம் இல்லை.

இது நடந்தது ஒரு இருபது வருஷம் முன்னாடி. அவரது நண்பர்கள் இருவர் (Mr. Goyal & Mr. Kapoor)  நேபாள் டூர் போயிருந்தாங்களாம். சொந்த கார்லேயே - டெல்லி லே இருந்து நேபாள் போயிருந்துருக்காங்க. இமாலயத்துலே பனி படர்ந்த மலை பிரதேசத்துலே ஒரு மத்தியான நேரம். செல் போன் அதிகம் புழக்கத்திலே இல்லாத காலம். கையிலே ஒரு நல்ல காமிரா மட்டும் இருந்து இருக்கு. 

நடந்து போறப்போ - கொஞ்ச நேரத்துலே ரெண்டு  பேரும் தனித்தனியா  பிரிஞ்சுட்டாங்க. அதுலே கோயல் ஒரு சின்ன  குகைக்குள்ளே போயிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து இருக்கார். ஒரு இடத்திலே சைலெண்டா உக்காந்துட்டாராம்  .  அங்கே , இங்கே தேடி - ஒருவழியா கபூர் இவரை தேடி கண்டுபிடிச்சு , ரெண்டு பேரும் நேபாள் லே - தங்கி இருந்த லாட்ஜ் க்கு திரும்பி இருக்கிறாங்க. ஆளு , ஆனா ஒரு மாதிரியாவே இருந்து இருக்கிறாரு. ஒரு வார்த்தை கூட பேசலை. முகத்தைப் பார்த்தாலே ஒரு மாற்றம் தெரிஞ்சு இருக்கு. அவர் வாய் திறந்து எதுவுமே பேசலையாம். ஏதோ ஒரு அதிர்ச்சிலே இருந்த மாதிரியே பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு இருந்து இருக்காரு..

சரி , நீ பின்னாலே படுத்து தூங்குனு சொல்லிட்டு - கபூர் கார் எடுத்து தானே ஓட்டி கோயல் வீட்டுலே இறக்கி விட்டுட்டு போய்ட்டாராம்.  இவர் வீட்டுக்கு வந்து , பூஜை ரூம் லே உக்கார்ந்தவர் தான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வெளியே வந்து, மனைவி , பசங்க தலையை ஆசீர்வாதம் பண்ற மாதிரி தடவி கொடுத்துட்டு -"ஜெய் ஸ்ரீ ராம்" னு மட்டும் சொல்லிட்டு , அவர் தூங்குற ரூமுக்கு போய் படுத்தவர் தான், 
 
  மறுநாள் , காலைலே கபூர் வீட்டுக்கு போன். "உங்க நண்பர் கோயல் இறந்துட்டாரு. இரவு , தூக்கத்திலேயே மாரடைப்பு. சீக்கிரம் வாங்க."
அலறி அடிச்சு , அவர் வீட்டுக்கு போய்ட்டு துக்கத்திலே கலந்துக் கிட்டு வந்துட்டாராம். ஏன்? எதற்கு? என்ன ஆச்சு.. ஒண்ணுமே யாருக்குமே புரியலை.. ரொம்ப நாள் கழிச்சு , அவர் காமிராவைப் பார்த்திட்டு அவர் பையன் பிலிம் டெவலப் பண்ணி , பிரிண்ட் போட்டு இருக்காரு. கடைசியா அதுலே எடுத்த போட்டோ--- பனி படர்ந்த பின்புலத்தில் , கண்களை திறந்தபடி , எதார்த்தமாக நின்ற ரூபத்தில் சாட்சாத் அந்த ஆஞ்சநேயன்.  பெருமானே!! நினைச்சாலே புல்லரிக்குது!

ஹனுமனும், அவரும் சந்திச்சப்போ - என்ன நடந்தது தெரியலை. படங்கள் எடுத்துக்கிட்டே போனப்போ, எதேச்சையா யாரோ ஒருவர் இருக்கிறாரேனு போட்டோ எடுத்து இருக்கலாம். ஆனா, எல்லாம் யூகம் தான். அந்த போட்டோ ஆதாரம் தவிர....

இதுலே முக்கியமா குறிப்பிடத்தக்க விஷயம் -  அந்த கோயல்  ஒரு தீவிர ராம பக்தர்.  அந்த குடும்பமே , அவருக்கு ஆஞ்சநேய தரிசனம் கிடைச்சு அவருக்கு முக்தி கிடைச்சதா நம்புறாங்க. அவங்க பசங்க ரெண்டு பேரும் I.A.S. அதிகாரிகள். நல்ல நிலைலே குடும்பம் இருக்கு. இன்னைக்கும் அதிகாரம், ஆணவம் இல்லாம , இறை கைங்கரியங்களுக்கு  நிறைய உதவி செய்றாங்க. அந்த குடும்பத்தோட எல்லா வளர்ச்சிக்கும், அவங்க அப்பாவோட ஆத்மாவும், அவரோட ஸ்ரீ ராம ஜெபமும் தான்னு திடமா நம்புறாங்க. இந்த விஷயமும் அவங்க குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் தெரியுமாம்.

அதனாலே , நான் சொல்ல வர்றது என்னனு கேட்டீங்கன்னா.. சிரஞ்சீவியாக இன்னும் அந்த ஹனுமான் இருக்கிறார். நீங்கள் மனமுருக வேண்டினால் , உங்களுக்கு வரும் தொல்லைகள் அனைத்தும் பறந்து போகும். எங்கெல்லாம் ராம காதை ஒலிக்கிறதோ , அங்கெல்லாம் நான் வருவேன் என்று கூறி இருக்கும் அந்த சிரஞ்சீவியை , மனத்தால் நினைத்து , உங்களால் முடிந்த வரை நல்ல காரியங்களை மட்டுமே செய்து வாருங்கள். அந்த ஹனுமனும் நிஜம், ராமாயணமும் நிஜம் என்கிற பட்சத்தில் - அந்த சிவமும் , சக்தியும் சர்வ நிஜம்.

மனிதனாக பிறந்தது - நம் கர்ம வினைக்கேற்ப நமது சுக துக்கங்களை அனுபவிக்கவே. மனதளவில் திருந்தி , இனிமேலாவது நம்மால் முடிந்த வரை புண்ணிய காரியங்களையே செய்து வாருங்கள். நமது பூர்வ ஜென்ம பாவங்கள் முழுவதுமாக குறைந்து , நமது சந்ததிக்கே அது பெரிய பலம் கொடுக்கும் !

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்கள் - உங்களுக்கு அந்த ஹனுமானின் பரிபூரண அருள் கிடைக்க உதவும்.

ஸ்ரீ ராம ஜெயம் !

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்

1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
————-
ப்ரார்த்தனா மந்த்ரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
————-
கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||
-————-
நமஸ்கார மந்த்ரம்
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||
—————-
ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!
——
ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
————
ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
————-
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்
-—————
ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
ஸ்ரீ ஹனுமத் கவசம்

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |
காயத்ரீச்சந்த: |
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
மாருதாத்மஜ இதி பீஜம் |
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
ஸ்ரீராமதூத இதி கீலகம் |
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||


வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.


ஸ்ரீஹநுமான் சாலீஸா
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||

================================================================


ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com