Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமுஸ் ( Part : 05 )

| Jun 7, 2011

குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, சமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரி, உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ். 

அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது.அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ?இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு. 400 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக்க் கணித்துள்ளார் அந்த மனிதர்.  
நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் 'என்ற அடையாளத்துடன் நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்கு இவ்வளவு ஆற்றல், என்னென்ன சொல்லியிருக்கிறார், அவர்,இனி எதிர்காலத்தில் என்னென்ன நிகழப்போகிறது

இந்தியா- பாக் இடையே போர் வருமா?

ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.

2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.

இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.

வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ்.

இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.

போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.

மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.

இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.

இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.

இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.

---------------------------------------Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:
----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:
-------------------------------------------------
பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!
பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது!
இவற்றைக்காண்பதற்கான சுட்டி:
-----------------------------------------------

-------------------------------------------
படிப்பதற்கான புத்தகங்கள்:-----------------------------------------

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com