Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நெஞ்சை அள்ளும் சதுரகிரி , பொதிகை மலை வீடியோ காட்சிகள் !!

| Jun 23, 2011
நேற்று அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து நமது வாசகர் ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார். உத்தியோக விஷயமா , கௌஹாத்தி யிலே இருக்கிறார். குடும்பம் தஞ்சாவூர் லே இருக்குதாம். 

சார், உங்கள் வெப்சைட் நான் என்னைக்கு பார்த்தேனோ, அன்றைய தினத்திலிருந்து - தினம் ஒரு தடவையாவது பார்க்காம தூங்கறதே  இல்லை. உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இருந்தாலும் , முடிஞ்ச அளவுக்கு தினமும் போஸ்ட் அப்டேட் பண்ணுங்க. ஒருவேளை , வேலை காரணமா வீட்டுக்கு வரலைனா, wife கிட்டே பேசுறப்போ , இன்னைக்கு என்ன புதுசா தகவல் வந்து இருக்குனு கேட்பாராம். ஜோதிட பாடங்கள் தொடர்ந்து நடத்துங்க சார். உங்க பாடங்களைப் படிச்சிட்டு நான் , நிஜமாவே ஒரு சில பேருக்கு ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். நான் சொல்றதைப் பார்த்திட்டு , அவங்களுக்கு அவ்வளவு வியப்பு. நான் ஊருக்கு  வரும்போது உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கணும். ஜோதிடத்தில் எனக்கு இன்னும் நிறைய கற்றுக்கிடனும் னு எழுதி இருந்தார்.   ஜோக்ஸ் பகுதி படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறேன். மொத்தத்தில் உங்கள் இணைய தளம் ஒரு பொக்கிஷம். உங்கள் பணி தொடரவும், உங்களுக்கு ஆண்டவன் அருள் என்றும் கிடைக்கவும் , நான் மனமார பிரார்த்தனை செய்கிறேன்னு எழுதி இருந்தார். 
இதே எண்ணம், நம் வாசகர்களில் பலருக்கும் இருக்க கூடும். உங்கள் சகோதரன் போல் என்னைப் பாவிக்கும் இந்த அன்பும், பாசமும் என்றும் எனக்கு தொடர்ந்து இருந்தால் போதும். நான், எனக்கு பிடித்த , என்னைக் கவர்ந்த , நான் சிந்தித்து தெளிந்த ஒரு சில விஷயங்களையே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு பிடிக்கும், விஷயங்களில் பெரும்பாலானவை உங்களுக்கும் பிடித்து இருக்கும்போது இந்த அன்பு பிணைப்பு ஏற்படுகிறது.

சரி, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத , சதுரகிரி மலை யாத்திரை பற்றிய வீடியோ காட்சிகளின் தொகுப்பு - இரண்டை கீழே கொடுத்து இருக்கிறேன். புதிதாக சதுரகிரி மலை செல்லும் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி.
மூன்றாவதாக கீழே கொடுக்கப்பட்டுள வீடியோ - சுமார் அரை மணி நேரம் வரை ஓடக்கூடிய பொதிகை மலை பயணம் பற்றி. நம் நாட்டின், இயற்கை வளம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது இதைப் பார்க்கும்போது நிச்சயம் உணர்வீர்கள். ஓய்வு நேரத்தில் இதைக் கண்டிப்பாக பாருங்கள்.

குடும்பத்துடன் , குதூகலாமாக நீங்களும் ஒருமுறை இந்த பகுதிகளுக்கு சென்று வாருங்கள். இயற்கை , நிஜமாகவே கொஞ்சும் பிரதேசங்கள் இவை. உங்கள் மனதுக்கு புது உற்சாகம் பிறக்கும்.

சரி, அமாவாசை , பௌர்ணமி அல்லாத - அதாவது கூட்டம் அதிகம் இல்லாத நாட்களில் - இந்த ஜூலை மதத்திற்குள் ஒரு  சனி , ஞாயிறு  சதுரகிரி சென்று வரலாம் என்று நினைக்கிறேன்.

சனிக்கிழமை காலை தாணிப்பாறையில் இருந்து ஆரம்பித்து - இரவு மேலேயே தங்கிவிட்டு , ஞாயிறு மாலை திரும்ப தாணிப்பாறை வருவதுபோலே இருக்கும். நமது வாசகர்களில் யாராவது வர விருப்பம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு குழுவாக சென்று வரலாம். தேதி - நாம் அனைவரும் சேர்ந்து முடிவு செய்யலாம். என்ன சொல்கிறீர்கள் ?
3 comments:

sekar said...

All videos are very useful for the pilgrimage to sathrakiri

Bharathi said...

NANUM VARALAMNU IRUKEN, UNGA CONTACT NO ANPONGAL MY NO 9994700983

Bharathi said...

plz send your mobil no, my no 9994700983

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com