Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சிம்ம ராசியா உங்களுக்கு ? அவசியம் இதைப் படியுங்கள் ...!!!

| Jun 17, 2011

http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/african-lion-male_436_600x450.jpg

சமீபத்தில் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர் ஒருவரை சந்தித்தேன். கோபுரத்தில் இருக்க வேண்டிய ஒரு கலசம், குப்பை மேட்டில் தூக்கி எறியப்பட்டால் எப்படி இருக்கும்? அதைப் போல இருந்தது அவரது நிலமை. 

சும்மா சொல்லக் கூடாது. விதி அவரை தூக்கிப் பந்தாடி இருக்கிறது. அவரது திறமைக்கும், அறிவுக்கும் அவர் புகழின் உச்சியில் இருக்க வேண்டியவர். ஏனென்றால் அப்படி இருந்தவர் . ஒரு ஆறு வருடம் முன்பு வரை. ஆனால் இப்போது? சிங்கம் இளைத்து இருந்தால் , வலுவிழந்து இருந்தால் சுண்டெலி கூட அதன் மேல் ஏறி , இறங்கி விளையாடுமாம்.  அப்படி இருக்கிறது நிலமை இப்போது. வீட்டிலும் சரி , அலுவலகத்திலும் சரி --- உயரத்தில் இருந்து அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது . அவருக்கும், அவரைப்போலே இருக்கும் அத்துணை மனிதர்களுக்கும் இந்த கட்டுரை - ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாக அமையும். எப்படி ...? பார்ப்போம்.

கண்கலங்க அவர் என்னைப் பார்த்து, " குருஜி  ,  குரு பகவான் என்னைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார் , இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நீங்கள் அளித்த நம்பிக்கையில் தான் இன்னும் வண்டி ஓடுகிறது. ஆனால் , இது வரை இன்னும் நிலமை சரி ஆக வில்லை. எப்போதான் இதற்க்கு விடிவு?". அவருக்கு விரைவில் நலமும் , வளமும் பெற - அவருக்கு நான் அறிவுறுத்திய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். 

மகம் - ஜெகமாளும் என்கிற கூற்றுப்படி , மக நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர் அவர். மகம் , பூரம் , உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி நேயர்களுக்கு - ஏழரை சனி ,முடிந்தவரை  பந்தாடி விட்டு  - " எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் .... இவன் ரொம்ப நல்லவன்டானு " இப்போதான் இரக்கப்பட ஆரம்பித்து இருக்கிறார்.   எந்த வித கவலையும் இனிமேல் உங்களுக்கு கிடையாது. 

குடும்பம், வியாபாரம், அலுவலகம் என உங்களைப் பாடாய் படுத்தி மன நிம்மதியை குலைத்து , தூக்கமின்றி தவியாய் தவிக்க விட்ட நாட்கள் இனிமேல் இருக்காது. எவ்வளவுதான் நீங்கள் பணம் வைத்து இருந்தாலும், அத்தனையும் இழந்து , நம்பியவர்களில் ஒருவர் விடாமல் முதுகில் குத்து வாங்கி , கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அவமானம், தலைகுனிவு, நஷ்டம், தோல்வி , பெற்றோர் அல்லது மிகவும் வேண்டப்பட்டோர் , உயிரையே வைத்து இருந்தவர்களின் இழப்பு / பிரிவு என்று அவரவர் சக்திக்கேற்ப , அடிமேல் அடி வாங்கி இருப்பீர்கள் . ஒரு சிலர் தற்கொலை கூட பண்ணிக்கொள்ளலாமா என்று கூட என்னும் அளவுக்கு , தோல்வி , விரக்தி உச்சத்தில் இருந்து இருக்க கூடும். 
 
இந்த நிலமை அப்படியே தலை கீழாய் மாறும் இனி. சமீபத்தில் இதன் அறி குறிகள் ஏற்கனவே ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கும். கடவுள் நல்லவங்களை சோதிப்பான் . கைவிட மாட்டான்னு சொல்ற மாதிரி , அவனுக்கு தெரியும், இனி உங்களை குளிர வைப்பது எப்படி என்று. பழுக்க காய்ச்சிய இரும்பு மெல்ல மெல்ல குளிர வைத்த பிறகு, காலம் முழுவதும் வலுவுடன் உபயோகப்படுவது மாதிரி . இதை அனீலிங் என்று கூறுவார்கள் பொறியியல் துறையில் . அந்த இரும்பு அதற்கு பிறகு உடைவது கடினம். அதைப்போலே பக்குவம் உங்களுக்கு ஆண்டவன் கொடுத்து இருப்பதாக எண்ணி , தேற்றிக்கொள்ளுங்கள். இழப்பதற்கு இனிமேல் ஒன்றும் இல்லை என்ற நிலைமையில் இருந்து , இனி நீங்கள் நினைத்த எல்லாம் நிறைவேற்றப் போகிறீர்கள். 

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தனது பார்வையை உங்கள் மேல் பதிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் இன்னும் எட்டு மாதங்களுக்குள் , உங்கள் இந்த கால கட்டத்தில் இழந்த செல்வம் அனைத்தும் உங்களுக்கு திரும்ப வரும். பிரிந்து போனவர்களை பற்றி நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர்கள் தினமும் இனிமேல் வாழ்நாள் முழுவதும், அவர்கள் செய்த தவறை எண்ணி மனம் வெதும்புவார்கள். அவர்கள் திரும்ப வருகிறார்களோ, இல்லையோ - உங்கள் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.அவர்கள் இனி , உங்களை நெருங்க முடியாத இடத்திற்கு புகழிலும், அந்தஸ்த்திலும்  உயரத்தில் செல்வது உறுதி. 

இந்த எட்டு மாதக் கணக்கு என்பது , இனி நான் சொல்லும் விஷயங்கள் கடைபிடிக்க இருப்பவர்களுக்கு. அதை செய்யாத சிம்ம ராசிக்காரர்களும் , கண்டிப்பாக முன்னுக்கு வருவது உறுதி. ஆனால் இன்னும் சற்று கால தாமதமாகும். மிகச் சரியாக , இந்த பொன்னான நேரத்தை பயன் படுத்திக் கொள்வது உங்கள் கைகளில். 

என்ன செய்ய வேண்டும் ஏற்றம் பெற ?

1 )  முதன் முதலில் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது - உங்கள் குல தெய்வ வழிபாடு. நீங்கள் பிறந்த நாள் (ஆங்கில பிறந்த தேதி அல்ல) -தமிழ் மாதம் ,  நட்சத்திர , திதி வரும் நாட்களில் , ஒவ்வொரு வருடமும், நீங்கள் குல தெய்வம் அருகில் ஒரு மணி நேரமாவது இருந்தே ஆக வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் , செல்ல இயலவில்லை என்றால் - உங்களைப் பெற்றவர்கள் இருந்தால் , அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள். இதற்குப் பின்புலமாக - ஒரு மிகப் பெரிய கால ரகசியம் உள்ளது. 

2 ) குல தெய்வ வழிபாடு முடிந்ததும் - நீங்கள் செய்ய வேண்டியது , எவ்வளவு விரைவில் முடியுமோ , அவ்வளவு விரைவில் - திருநள்ளாறு ஒருமுறை சென்று முறைப்படி சனி பகவானுக்கு பரிகாரம் செய்து கொள்ளவும். தினமும்  காலை உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு , காகத்திற்கு உணவு வைத்துப் பின் சாப்பிடவும். உங்கள் மூதாதையர்களின் ஆசி முழுவதும் கிடைக்கும். 


3 ) அதன் பிறகு - இப்போது உங்களுக்கு நடக்கும் தசை என்ன என்று பாருங்கள். பெரும்பாலானோருக்கு சந்திர தசை , செவ்வாய் தசை அல்லது ராகு தசை நடக்கும் . இந்த தசா அதிபதிகளின் ஸ்தலங்களுக்கு - ஒரு முறை சென்று வாருங்கள். ஏற்கனவே நம் கட்டுரைகளில் சந்திர தசை , ராகு தசை பற்றி - மிக விரிவாக கொடுத்து இருக்கிறோம். அந்த ஸ்தலங்களுக்குரிய தெய்வங்களுக்கு , முறைப்படி வழிபாடு , பரிகாரம் செய்து கொள்ளவும்.உங்கள் லக்கினம் எதுவென்று பார்த்து அந்த இலக்கின அதிபதியின் ஸ்தலத்துக்கும் சென்று , மனமுருகி வேண்டி வருவது அவசியம்.

4 ) அதன் பின், நீங்கள் பிறந்த நட்சத்திரம் எதுவென்று பார்த்து   , அது தேவதைகளாக மாற வழிபட்ட ஸ்தலங்கள் உள்ளன. இதையும், நமது பழைய கட்டுரை யில் கொடுத்துள்ளேன். இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். 

5 ) அதன் பிறகு, இனிமேல் வாழ்நாள் முழுவதும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் - விரதம் இருந்து , உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். அது , பௌர்ணமி யாக இருக்கலாம், அமாவாசையாக இருக்கலாம் . ஏகாதசி , கார்த்திகை, பிரதோஷம் - அல்லது நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் தினம் என்று ஏதாவதொரு தினமாக இருக்கலாம். 
உங்கள் பெற்ற , தாய் அல்லது தந்தை இறந்து இருந்தால் - அமாவாசை அன்று விரதம் இருந்து அவர்களை வழிபாடு செய்தல் நலம். 

விரதம் என்பது - உங்களை ஒரு நெறிபடுத்த , ஒரு ஒழுங்கைக் கொண்டு வர மட்டுமே. இஷ்டம் போல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து , அதன்பின் கிடைத்த ஒரு இழி நிலை திரும்ப வராமல் இருக்க மட்டுமே. அந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும் அருள் - உங்களுக்கு மிகப் பெரிய கவசமாக இனி அமையவிருக்கிறது.

6 ) உங்கள் மாத வருமானத்தில் - ஒரு நாள் சம்பளத்தை , உங்கள் குல தெய்வ கோவிலுக்கு கொடுக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மாதா மாதமோ அல்லது மொத்தமாக வருடத்திற்கு ஒரு முறையோ கொடுங்கள். இது தவறாமல் செய்ய வேண்டிய வழக்கம். 

7 ) இந்த ஏழரை சனி நடந்த காலத்தில் - பெரும்பாலானோருக்கு -முறை தவறிய தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம். விதியின் மேல் பழி போட்டு, விபரீதங்களை விலைக்கு வாங்கிய நீங்கள் -  மறந்தும் , அதைப் போன்ற சாக்கடை சமாச்சாரங்களை தொடரவேண்டாம். ராஜ வாழ்க்கை வாழ வேண்டியவர் நீங்கள். நடந்த சம்பவங்கள் , நல்ல பாடம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். குடிப்பழக்கம், மாமிச உணவு உட்கொள்ளும் பழக்கம் இருப்பவர்கள் , எவ்வளவு சீக்கிரம் விடுகிறீர்களோ , அவ்வளவு நல்லது. 

8 )  திறமை இருக்கும் இடத்தில் கோபமும், அதிகாரமும் தூள் பறக்கும். அதனால் உங்களுக்கு கிடைத்த பலன்களை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள். புன்முறுவலும், சாந்தமும் - உங்களுக்கு எதிரிகளையும் நண்பர்களாக்கும்.

9 ) இந்த வருடம் கார்த்திகை தேய்பிறை காலத்தில் வரும் குபேர கிரிவலத்திற்கு - திருவண்ணாமலை சென்று வாருங்கள். விவரங்களுக்கு , நமது முந்தைய கட்டுரைகளை refer செய்யவும். உங்களால் முடிந்தவரை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள். பணம் நீங்கள் போதும் என்று சொல்லுமளவுக்கு வருவது நிச்சயம்.

10 ) உங்கள் ராசிக்கு அதிபதியாக சூரிய பகவான் வருவதால் , சூரிய உதயத்திற்கு முன் தூங்கி எழுந்து, குளித்து முடித்து - சூரியனை நீங்கள் வரவேற்பது அவசியம். அந்த அதிகாலை வேளையில் , உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் , உங்கள் புதிய பாதையை தீர்மானிக்கும். இயல்பிலேயே உங்கள் துறையில் சற்று கூடுதல் திறமையுடன் நீங்கள் இருப்பீர்கள் . ஆனால் அதே நேரத்தில் திட்டமிடாமல் , மெத்தனமும், சோம்பேறித்தனமும் உங்கள் கூடவே இருப்பதால் , கடைசி வரை எந்த செயலானாலும் இழுபறி ஏற்பட்டு , கடைசி நிமிடத்தில் முடிப்பீர்கள். இந்த ஒரு குணமும் மாற , உங்களுக்கு இந்த சூரிய நமஸ்காரம் வழிகாட்டும்.

மேற்கூறிய இந்த 10 முறைகளும், மற்ற ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். உங்கள் ராசி , லக்கினத்துக்கேற்ப - எந்த தெய்வத்தை வழிபடுவது என்பதில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

சிம்ம ராசிக்கார நேயர்களே, நீங்கள் விரைவில் உங்கள் இழந்த பெருமையை மீட்டு , புகழின் உச்சியில் இருக்கப் போவது உறுதி. உங்கள் பொன்னான வாழ்வு  நிலைத்திருக்க - அந்த நேரத்தில் மீண்டும் அகந்தை தலை தூக்காது, எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் நிலைக்கும்படி பணிவுடன் , பொறுமையுடன் , முடிவுகளை எடுங்கள்.

வாழ்க  வளமுடன் !

இந்த கட்டுரை சம்பந்தமாக , ஏதாவது தகவல்கள் மேலும் வேண்டுமெனில், தனியே மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். { editor @ livingextra .com  }

5 comments:

Anonymous said...

sir naanum simma raasi enga appavum simma raasi enga paatiyum simma raasi manasarinju naanga entha paavamum pannala aana naanga 7.5 varusama nonthutom , unga kaaturai padichen aaruthala iruku nanri , ore raasi irukuravanga ore veetula iruntha enna parikaram sollunga , unga contact num kodunga , ilana kelvi pathil aarampeenga , unga sevai hindu makkalauku thevai

THEIVAM said...

good very good thanks very thanks
good job please continue every day

Trans Technicals said...

Sir:

General question:

Does vedic astrology have explanation for natural disasters and accidents? It is affecting all irrespective of their rasis.

One example is a recent bus accident tragedy where 22 people were burnt dead.

This question is to just for learning purpose and I am not trying to downplay the power of astrology.

Sri said...

Dear sir,

You are very honest and straight i am also a simma rasi, i have been struggling in my life for the past 2 years . Your post give me some relief and new hope thnak you sir.

sridhar

majuran maju said...

100%உண்மை

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com