Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

விரைவில் தமிழ் ஈழம் மலர கூட்டுப் பிரார்த்தனை - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பணிவான விண்ணப்பம் !

| Jun 14, 2011
அன்புள்ள சகோதர , சகோதரிகளே ! அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Location_Tamil_Eelam_territorial_claim.png/200px-Location_Tamil_Eelam_territorial_claim.png 

தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக - அப்பாவி மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு. ஒரே காரணம் - மக்களை மனிதர்களாக நடத்து என்று  புலிகள் சுதந்திரம் கேட்டது , அதற்க்கு தமிழர்கள் ஆதரவாய் இருந்தது. அதற்க்கு அரசு தரப்பில் , ஆயிரம் சப்பைக் கட்டு காரணங்கள் கூறினாலும், அதில் எவ்வளவு நியாய தர்மங்கள் உள்ளது என்று ,  உலகில் வரலாறு தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும்...

மன சாட்சியே இல்லாத, ஒரு மிருகம் கூட இப்படி வேட்டையாடியிருக்குமா என்று தெரியாது.. காந்தி பிறந்த மண்ணில் உள்ள தமிழர்களாகிய நாம் மட்டும் என்ன செய்தோம்? TV யில் பார்த்து , புலம்பியதோடு - அனுதாபப்பட்டதோடு  சரி ..வேறு  என்ன  பண்ண முடியும்? நமக்கு என்ன வந்தது? நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கே அவசரம் ஆபத்து என்றால்.. முடிந்த அளவுக்கு தவிர்க்க பார்ப்பவர்களாயிற்றே நாம் !!.... என்ன பண்ணுவது மனிதனாக (?) பிறந்து விட்டோமே... !! தன்னலம் மட்டுமே போதும்.., யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன? ??  கேவலம் மிருக இனம் கூட தனது இனத்திற்கு ஆபத்து என்றால், செத்து மடியும் வரை , எதிரிகளை விடாது....நம்மில் எங்கே அந்த ஒற்றுமை இருக்கப் போகிறது? அதிலும் ஒரு கேவலமான அரசியல் கூத்து நடந்தது .. மகா கேவலம்..  தமிழன் தான் ராஜ தந்திரியாச்சே..!

யுத்த களத்தில் நடந்த வன்முறை , பச்சிளம் பிஞ்சுகளையும், கர்ப்பிணிகளையும் கதற கதற வைத்ததால் வந்த ஓலம்... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சொத்து , சுகம் எல்லாம் விட்டு விட்டு அகதிகளாய் , புலம் பெயர்ந்த நம் தமிழ் இனம் மீண்டும் மலர , அவர்கள் வாழ்வில் திரும்பவும்  ஒளி கிடைக்க , தியாகம் செய்த ஆத்மாக்கள் சாந்தி அடைய , தமிழ் ஈழம் விரைவில் கிடைக்க , நம்மால் இயன்ற ஒரு காரியம் செய்யலாம். 

"என்ன செய்ய சொல்றீங்க ? நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்? நாமளும், அவங்களைப் போல சண்டை போட முடியாது... யாரையாவது பார்த்தால் ஆறுதல் சொல்ல முடியும்.. எதாவது உதவி செய்ய முடியும்..அவ்வளவுதான்.!  என்ன செய்யனும் சொல்லுங்க ?" - இப்படித்தான் எங்கள் ஊரில் உள்ள ஒரு பெரியவர் ஒருவரை கேட்டேன். 

ரொம்ப வயதானவர். 70 வயசு இருக்கும். ஏற்கனவே ஒரு குக்கிராமம். கேபிள் டிவி எல்லா ஊருக்கும் வந்து விட்டதால் , ஏதோ கொஞ்சம் உலக விஷயங்கள் தெரிந்து இருக்கும் அவருக்கு , அவர் என்ன செய்து விட போகிறார்?  என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார். அவர் செய்யும் ஒரு காரியம் என்னை அதிர வைத்து விட்டது. ஒரு வீணையின் அதிர்வு , உடம்பு முழுவது ஓடி, கண்கள் குளமாகி விட்டன.  

அந்த வயதான பெரியவரே தனியொரு மனிதனாக இவ்வளவு செய்கிறார் என்றால் , ஒரு Hi -tech இளைஞன் , நாமும் ஏன் அவர் செய்யும் காரியத்தை பரவலாக செய்யக் கூடாது என்று தோன்றியதன் விளைவே இந்த கட்டுரை.

தினமும், இறைவனை வாங்கும்போது - ஒரு ஐந்து நிமிடம் , தனியே நமது ஈழத் தமிழர்களின் நலனுக்காக மனமுருக வேண்டுகிறார். கீழே கொடுக்கப் பட்டுள்ள , பதிகத்தை தினமும் பாடுகின்றார். இப்படி , ஒரு தன்னலம் இல்லாமல்   வேண்டும், ஒரே ஒரு ஆத்மா இருக்கும் வரைக்கும், தனி ஈழம் - ஒரு கனவு அல்ல , விரைவில் அது நடந்தே தீரும் என்று தோன்றியது.. !

இதே செயலை , நாமும் ஏன் குழுவாக செய்யக்கூடாது..? கூட்டுப் பிரார்த்தனைக்கு  மகத்தான சக்தி இருக்கிறது என்பதை சொல்ல தேவை இல்லை. நாடு, மதம் , ஜாதி என்ற பாகுபாடு இன்றி , தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள ஒவ்வொருவரும், உலகின் மூலை முடுக்கில் உள்ள தமிழுணர்வு உள்ள ஒவ்வொருவரும்  ... கரம் கோர்ப்போம்... நம் சகோதர , சகோதரிகள் வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரவும், என்றென்றும் தமிழினம் தலை நிமிர்ந்து
நிற்கவும் - நாளை 15.6.2011 புதன்கிழமை இந்திய நேரப்படி - இரவு 11 .55 மணியிலிருந்து 12 .00 மணி வரை - அனைவரும் இணைந்து , இந்த பதிகத்தைப் பாடலாம்.

நாளை  இரவு 11.45 மணி முதல் நள்ளிரவு 1.40 வரையிலும் சந்திரகிரகணம் இருக்கிறது. கிரகண நேரத்தில் , நாம் ஜெபிக்கும் எந்த மந்திரமும் கோடி மடங்கு பலன்கள் தரும். உங்களுடைய , நியாயமான ஆசை , ஒரே ஒரு ஆசை ஒன்றை மனதில் வைத்து - " ஓம் சிவ சிவ ஓம் " என்ற மந்திரத்தை கிரகண நேரம் முழுவதும் ஜெபியுங்கள் / பிற மதத்தை சேர்ந்தவர்கள் உங்கள் இஷ்ட மந்திரத்தை ஜெபிக்கலாம். உங்கள் கோரிக்கையுடன் , தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற ஒரு பொது நல கோரிக்கையும் இருக்கட்டும். அதற்காக ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள்... நம்மைப் போன்ற லட்சக்கணக்கான , கோடிக்கணக்கான ஆத்மாக்களின் கோரிக்கை , நோக்கம் ஒன்றாக இருக்கும்போது , அந்த நியாமும் ஒரு மகத்தான நேரமாக இருக்கும்போது - அந்த ஆண்டவன் நமக்கு செவி சாய்ப்பது நிச்சயம். ஒரு மாபெரும் அதிசயம் விரைவில் நடப்பது நிச்சயம்.

மேலும் தொடர்ந்து , நமது  வழிபாட்டு நேரத்தில்  - ஒரு ஐந்து நிமிடம்  இந்த பதிகத்தை - அடுத்த 48 நாட்களுக்கு தொடர்ந்து பாடி வருவோம் !

நம்பிக்கையுடன் இருப்போம் ! நம்பிக்கையே வாழ்க்கை .. !

தமிழ் வளரட்டும், தமிழ் இனம் தலை நிமிரட்டும், தமிழ் ஈழம் விரைவில் மலரட்டும் ! 
=========================================================
 உங்களால் முடிந்தவரை , உலகம் முழுவதும் உள்ள உங்கள் நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இந்த தகவலை அனுப்புங்கள்... நாளை இரவு 11 .55 மணிக்கு , அனைவரும் மனமுருக இந்த பதிகம் பாடலாம்.. !!! இறையருள் என்றும் நம் துணை நிற்கட்டும் !!
 ==========================================================

பதிகம் : 
வளைந்தது வில்லு:;விளைந்தது பூசல்;
உளைந்தன முப்புரம்-உந்தீ பற!
ஒருங்கு உடன் வெந்தவாறு-உந்தீ பற!

ஈர் அம்பு கண்டிலம்,ஏகம்பர தம் கையில்;
ஓர் அம்பே முப்புரம்-உந்தீ பற!
ஒன்றும் பெருமிகை-உந்தீ பற!

தச்சு விடுத்தலும்,தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று-உந்தீ பற!
அழிந்தன முப்புரம்-உந்தீ பற!

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
இளமுலை பங்கன் என்று உந்தீ பற!

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி-உந்தீ பற!
உருத்திர நாதனுக்கு-உந்தீ பற!

ஆஆ திருமால்,அவிப்பாகம் கொண்டன்று,
சாவாது இருந்தான் என்று-உந்தீ பற!
சதுர்முகன் தாதை என்று-உந்தீ பற!

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று-உந்தீ பற!
கலங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே? ஏடி-உந்தீ பற!
பணை முலை பாகனுக்கு-உந்தீ பற!

புரந்தனார் ஒரு பூம் குயில் ஆகி,
மரம் தனில் ஏறினார்-உந்தீ பற!
வானவர் கோன் என்றே-உந்தீ பற!

வெம் சிவ வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி-உந்தீ பற!
தொடர்ந்த பிறப்பு அற-உந்தீ பற!

ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக்
கூட்டியவா பாடி-உந்தீ பற!
கொங்கை குலுங்க நின்று-உந்தீ பற!

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே,
கண்ணைப் பறித்தவாறு-உந்தீ பற!
கருக் கெட,நாம் எலாம்-உந்தீ பற!

நாமகள் நாசி; சிரம் பிரமன்,படச்
சோமன் முகம் நெரித்து-உந்தீ பற!
தொல்லை வினை கெட-உந்தீ பற!

நான்மறை யோனும்,அகத்திய மான்படப்
போம் வழிதேடுமாறு-உந்தீ பற!
புரந்தரன் வேள்வியில்-உந்தீ பற!

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி,நெரித்த ஆறு-உந்தீ பற!
மயங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!

தக்கனார்,அன்றே தலை இழந்தார்;தக்கன்
மக்களைச் சூழ நின்று-உந்தீ பற!
மடிந்தது வேள்வி என்று-உந்தீ பற!

பாலகனார்க்கு அன்று,பால் கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே-உந்தீ பற!
குமரன் தன் தாதைக்கே-உந்தீ பற!

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று-உந்தீ பற!
உகிரால் அரிந்தது என்று-உந்தீ பற!

தேரை நிறுத்தி,மலை எடுத்தான் சிரம்
ஈர் ஐந்தும் இற்ற ஆறு-உந்தீ பற!
இருபதும் இற்றது என்று-உந்தீ பற!

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று-உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று-உந்தீ பற!

========================================================

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com