Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்க , நெனைச்சது நடக்க, ஜெயிச்சது நிலைக்க - எளிய ஆன்மீக ஆலோசனை !

| Jun 13, 2011
 ஏழரை சனி, அஷ்டம  சனி - நடக்கும்போது , தலை குப்புற விழுந்த ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்படும். அதற்க்கு முந்தைய காலம் வரை , வெற்றி மேல் வெற்றி , அதனால் ஏற்பட்ட புகழ் போதை, கர்வம், ஆணவம் என்று இருக்கும் ஒருவரது ஆட்டத்திற்கு - டபுள் செக் - வைக்கும் நேரம் தான் , இந்த கால கட்டம்.


இப்போதைக்கு சிம்ம , கன்னி , துலா , கும்ப ராசிக்காரர்களும்  ..... இன்னும் ஆறே மாதங்களில் - மீன ராசிக்கரர்களும், விருச்சிக ராசி அன்பர்களும் - இந்த கட்டத்தை அனுபவிக்க இருக்கின்றனர். 
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1H9LmfR7jlrz2Ne2IspPsR1QHGrvyYFVUYbSZVaIYRz61nh1d
இந்த கால கட்டத்தில் நமக்கு என்ன செய்தால் , இதை தாங்கும் சக்தி வரும் தெரியுமா? திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகா புருஷர் சொன்ன பரிகார முறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப் போன்ற அரிய தகவல்கள் , நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப் படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ... ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனி பகவான் --- முழு அருள் கடாட்சம் வழங்கி , உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி. 
அப்படிப் பட்ட , ஒரு தேவ ரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்  மட்டற்ற மகிழ்ச்சி.......

 அவர் கூறிய வழி : 


தினமும் உலர் திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே  )  ஒரு கைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக் கூடிய  சக்தி இதற்கு உண்டு என்கிறார். 


இதை தவிர நாம் ஏற்கனவே கூறிய படி, வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படித்தாலும், சனிக் கிழமைகளில் விரதம் இருந்த படி எள் கலந்த தயிர் சாதம்  படித்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகம் பற்றி சில அபூர்வ தகவல்கள்:

அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல், பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது....
மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான்.. ஆனால் மெல்ல, மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது... !!

 காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா .... தெரியவில்லை!.. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் - மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி - காக்கை இனம்.  


குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங் களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை "கா...கா...' என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக் கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.

அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் "கா... கா...' என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வ தாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.


காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக் காக்கை, அண்டங் காக்கை என சில வகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.


எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப் படுகிறது.

தந்திரமான குணம் கொண்ட காக்கை மனிதர்களுக்கு சில அறிகுறிகளைத் தெரிவிப்ப தாகச் சொல்லப்படுகிறது. யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் உள்ள சுவரில் அமர்ந்து... "கா...கா...' என்று பலமுறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே,  காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்!

1 comments:

sasi kumar said...

a samll one use kanapathi trick thantham

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com