Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - (பாகம் - 01 )

| Jun 28, 2011
அப்பாடா ... ஒரு வழியாக இந்த தொடர் ஆரம்பித்து விட்டேன். . நாம் ஜோதிட பாடங்கள் ஆரம்பித்த வேளையில் , இதை அறிவித்து இருந்தோம். இடையில் சற்று வேலைப்பளு. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த கட்டுரைத் தொடர் , உங்களுக்கு ஒரு பெரிய வழிகாட்டியாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் அன்புத்தொல்லை அளித்த வாசகர்களுக்கு நன்றி. உங்களின் எதிர்பார்ப்பு , ஆவல்   இல்லையெனில், எனக்கும் எழுத ஆர்வம் பிறந்து இருக்காது. 

ஒரு வித்தியாசமான உலகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த விருக்கிறேன். கல்வி கரையில என்ற சொற்றொடருக்கு ஏற்ப - இணைய தளம் மூலம், பணம் சம்பாதிக்க சொல்லித் தருவது என்பது ஒரு சமுத்திரத்தில் நீச்சல் அடித்து , அடுத்த கரைக்கு செல்வதற்கு சமம் . ஆனால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் , ஒரு சின்ன அறிமுகம் செய்வது மட்டுமே என் நோக்கம். அதன்பின் அவரவர் திறமைக்கேற்ப உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ளலாம்.

நமது ஜோதிட பாடங்களும், இனிமேல் வாரத்திற்கு ஒரு பாடமாவது தொடர்ந்து வர இருக்கிறது. உங்கள் ஆதரவு வழக்கம் போல் , இந்த தொடர் கட்டுரைகளுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்... 
இனி நேரடியாக களத்திற்கு செல்வோம்.. !!!

===================================================

அப்பாடா போதுமடா சம்பாதிச்சது !! இனிமேல் பணமே வேண்டாம்னு யாரையும் நினைக்க விடாத , ஒரு அற்புதமான விஷயம் தான் பணம்.  உறவுகள் பலப்பட , குதூகலமடைய செய்வது பணம்.
நாம இன்னைக்கு ஆரம்பிக்கிற விஷயம் ஒரு சின்ன பொறி தான். அதை நல்லா  எரிய விட்டு நெருப்பாக்குறதுக்கு உங்க முயற்சி கண்டிப்பா இருக்கணும்.
இது வரை என்னோட அனுபவத்துலே நான் கற்றுத் தெளிந்த , அனுபவப் பூர்வமா உணர்ந்த விஷயங்களை , ஏன் ? நான் சம்பாதிச்சுக்கிட்டு வர்ற விஷயங்களை - உங்க கிட்டே பகிர்ந்துக்கப் போறேன். இணைய தளம் மட்டும் இல்லாம , வேற பயனுள்ள வழிகள்ளே , பகுதி நேரமாகவோ , முழு நேரமாகவோ சம்பாத்தியம் பண்ணக்கூடிய வழிகளை கொஞ்சம் கொஞ்சமா கற்றுக்கொடுக்கிறேன்.  

சந்தேகம் உங்களுக்கு எந்த இடத்தில் வந்தாலும், கூச்சப்படாம கேளுங்க. !

சரி , தேவையான அடிப்படை விஷயங்கள் - கொஞ்சம் ஆங்கில அறிவு. வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வித் இன்டர்நெட் கனெக்சன். உங்களுக்கு மாதா மாதம் ஒரு பெரிய தொகை வருவது உறுதி. இன்றைய தேதியில் - லட்சக்கணக்கில் - முழு நேரமாக இந்த தொழிலில் பெரிய பெரிய அறிவு ஜீவிகள் இறங்கி விட்டனர். 

ஆரம்ப கட்டுரைகள் உங்களில் அநேகம் பேருக்கு தெரிஞ்சு இருக்கலாம். ஆனா , போகப் போக வர விருக்கும் கட்டுரைகள் உங்களுக்கு சுவாரஸ்யமா , இன்ப அதிர்ச்சியா இருக்கும். 

ஒரு குக்கிராமத்திலே பால் பண்ணை வைச்சு கோடி கோடியா சம்பதிச்சவ்ர்லே இருந்து  , இணைய தளம் , ஷேர் மார்க்கெட் , M L M இப்படி பல வகைகள்ளே - எப்படி பணம் பண்றதுன்னு பார்க்கப்போறோம். 
இன்டர்நெட் மூலமா கோடி கோடியா சம்பாதிக்கிறதா..? சுத்த டுபாக்கூர் சமாச்சாரம்பா னு நெனைக்கிறீங்களா..? என் கண் முன்னாலே சம்பாதிக்கறாங்க பாஸூ!!.... ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் ... சின்சியரா வேலை... மாசம் முடிஞ்சா டான்னு ஒரு ஒன்றரை லட்சத்துக்கு கூகுள்ளே இருந்து செக் வருது... பொழுது போக்குக்குனு  ஆரம்பிச்ச விஷயம், இப்போ வேலையை விட்டுட்டு full time ஆ வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டார். சரி, சொல்றேன் எப்படின்னு.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே ஒரு 10 / 15 பதிவுகளாவது , போட்டிடுவேன்னு நெனைக்கிறேன்...  படிச்சீங்கன்னா உங்களுக்கே புரியும்...!!

ரைட்.. ஜூட்...!!

சரி, நாம முதல்லே பார்க்க விருப்பது - வலைப்பூ. ஆங்கிலத்திலே Blogspot னு சொல்வாங்க. கூகுள் வழங்கும் ஒரு அற்புதமான வசதி இந்த வலைப்பூ.
நீங்கள் ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது ரொம்ப ரொம்ப சுலபம். அது எந்த துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். உங்களுக்கு தேவை முதன் முதலில் - ஒரு G -mail account . அல்லது கூகுள் அக்கௌன்ட்.

இன்னைக்கு இணையம் மூலம் சம்பாதிக்கும் ஒரு மிகப் பெரிய வழி இந்த blogger தான்.

உங்கள் G -மெயில் , username - password இருந்தாலே போதும். www .blogger .com  என்ற முகவரியில் நீங்கள் புதிதாக ஒரு வலைப்பூ பதிவு செய்யலாம் .  
உங்கள் தனித்திறமை எந்த துறையில் இருக்கிறது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள். 

மிக முக்கியமான விஷயம் - உங்கள் பதிவுகள் , நிறைய வாசகர்களுக்கு உதவும் வகையில் , அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகரிக்க , அதிகரிக்க - உங்கள் வலைப்பூவுக்கு மவுசு ஏற ஆரம்பிக்கும்.

நீங்கள் சம்பாதிப்பது என்று முடிவு கட்டிக்கொண்டால் - நீங்கள் ஆரம்பிக்கும் வலைப்பூ ஆங்கிலத்தில் இருப்பது நல்லது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருப்பது  ஒரு பெரிய பிளஸ். நிறைய வாசகர்களை இழுக்கும். தமிழ் லே இருந்தா??? தமிழ்லே இன்னும் Ads சப்போர்ட் கூகுள் கொடுக்க ஆரம்பிக்கலை. இல்லை, நீங்க ப்ளாக் ஏற்கனவே ஆரம்பிச்சு , நல்ல பேஜ் ரேங்க் இருந்தா - ads சப்போர்ட் கிடைக்கும். உடனடி பலன் வேணும்னா ... English தான் பெட்டெர். போக போக பார்க்கலாம்.

உங்கள் பதிவுகள் - புத்தம் புதியதாக , ஒரிஜினல் கன்டென்ட் ஆக இருந்தால் - கூகுள் செர்ச் என்ஜின் உடனே அதை index செய்து விடும்.  யாராவது கூகுளில் தேடும்போது உங்கள் வலைப்பூவை முதலில் காட்ட வேண்டுமானால் , உங்கள் படைப்பு மற்றவர்களின் படைப்புகளில் இருந்து வித்தியாசமாக , தனித்துவம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம். 

தொடர்ந்து நீங்கள் பதிவுகள் இட இட , வாசகர் வட்டம் பெருக பெருக - உங்கள் வலைப்பூவுக்கு ஒரு நல்ல ரேங்க் கிடைக்கும். உலக அளவில் இணைய தளங்களுக்கு traffic ரேங்க் வரிசை தெரிந்து கொள்ள - www .alexa .com என்ற தளம் உள்ளது .  உங்கள் வலைப்பூ ரேங்க் குறைய , குறைய வலைப்பூவின்  மதிப்பு கூடுகிறது. 

உதாரணத்திற்கு  ஒரு இணையதளத்திற்கு , அல்லது வலைப்பூவிற்கு ஒரு மாதத்தில் சுமார் 10 லட்சம்  பதிவுகள் பார்வையிடப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அந்த தளத்தின் உரிமையாளர் தோராயமாக ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு அஞ்சு லட்சம் சம்பாதிக்கலாம். எப்படி? நம்ப முடியலையா?

இதற்க்கு கூகுளே வசதி செய்து கொடுக்கிறது. அதற்குப் பெயர் "Adsense ". நீங்கள் adsense அக்கௌன்ட் வாங்க விண்ணப்பித்து , அதை உங்கள் பிளாக்கர் இல் இணைத்து விட்டால் போதும் . உங்கள் படைப்புகளுக்கு தகுந்த  advertisement தானாகவே வர ஆரம்பிக்கும். நீங்க எந்த வெப்சைட் பார்த்தாலும் Ads by Google னு போட்டு விளம்பரம் வந்தா..அது Adsense அக்கௌன்ட் தான். இதற்கென்று ஒரு மிகப் பெரிய குழுவே இரவும் , பகலும் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்கிறது. அந்த Advertisement ஐ  - படிக்க வரும் வாசகர்கள் க்ளிக் செய்தால் , அதற்க்கு தனி காசு.. இதில் உள்ள டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் எல்லாம் போக போக சொல்லித் தருகிறேன்.  Adsense போலவே , இன்னும் நிறைய Ads தரக்கூடிய நிறுவனங்கள்     இருக்கு.. ஆனா, சூப்பர் ஸ்டார் adsense தான். நம்பகத்தன்மை.. கிளிக் value ரெண்டும் ரொம்ப அதிகம்..!!

இது தவிர உங்கள் வலைப்பூவின் தரத்தைப் பொருத்து " பேஜ் ரேங்க்" தீர்மானிக்கப்படும் . நீங்கள் பேஜ் ரேங்க் - மூன்றோ , அதற்க்கு மேலோ வாங்கி விட்டால் - உங்களை பெரிய பெரிய விளம்பர நிறுவனங்களின்  ஏஜெண்டுகள் தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள். அதற்க்கு தனி காசு. நம்ம தினத்தந்திலே advt பண்ணுவதற்கு காசு வாங்குவாங்கள்ளே, அதை மாதிரி - உங்கள் வலைப்பூவுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு இவ்வளவுன்னு காசு வாங்கலாம். ஒரே காசு மழை தான்.கண்டிஷன் ஒண்ணுதான். நிறைய வாசகர்களை கவர்ந்து இழுக்கணும்  , உங்க படைப்புகள்.

அவ்வாறு இருக்கும் சில சூப்பர் டூப்பர் இணைய தளங்களை பார்க்க விருக்கிறோம், இனி வரவிருக்கும் கட்டுரைகளில். 
சரி, உங்களுக்கு சுவாரஸ்யமான தகவல் ஒன்று தரப்போகிறேன். கடந்த மார்ச் மாத நிலவரப்படி - பதிவர்களில் கோடி கோடியாக சம்பாதிக்கும் சிலரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் . இவர்கள் சம்பாதிக்கும் தொகை அமெரிக்கன் டாலர்களில் கொடுத்து இருக்கிறேன். டாலர் -  நம்ம ஊரு நிலவரப்படி சுமார் 44 ரூபாய். கணக்குப் பார்த்துக்  கொள்ளுங்கள். ஒரு மூன்று வருடம் நீங்களும் திட்டமிட்டு முயற்சி செய்தால் - இதில் பாதியை எட்டிப் பிடிக்கலாம். இவர்களின் alexa ரேங்க் எவ்வளவு என்று பாருங்கள். உங்களுக்கே புரியும்.

சிறு துளி .. பெரு வெள்ளம்.. !! இன்னும் சில கட்டுரைகளிலேயே உங்களுக்கு பெரிய நம்பிக்கை வந்துவிடும்.. அதற்க்கு நான் உத்திரவாதம்  .

1.Micheal Arringtor
Tech crunch எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார் .தொழில் நுட்ப பதிவுகளை இடுகிறார் .மாதம் 8,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .இப்போது இவர்தான் நம்பர் 1  பதிவர் .
2.Pete Cashmore
Mashable எனும் தளத்தை நடத்தி வருகிறார் .மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya
Perezhilton.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .உலகில் அதிகம் பேர் விரும்பும் தளங்களில் இதுவும் ஒன்று .மாதம்  2,00,000 டாலர் சம்பாதிக்கிறார் .
4.Timothysykes
timothysykes எனும் தளத்தை நடத்தி வருகிறார் .இவர் இது வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை இட்டுள்ளார்.மாதம் 1,80,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
5.Collis Taeed
Tutsplus.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .டிசைனிங் சம்மந்தமான பாடங்களை அதிகமாக பதிகிறார் .உலகின் மிகச்சிறந்த டுட்டோரியல் பிளாக் இதுதான் .மாதம் 1,20,000 டாலர் சம்பாதிக்கிறார் .நம்ம இலக்கு இந்த மாதிரி வரணும். இந்த வெப்சைட் லாம் கொஞ்சம் ஓபன் பண்ணிப் பாருங்க.... உங்களுக்கு என்ன தெரிஞ்சது சொல்லுங்க...!!!

ஓகே... அடுத்த கட்டுரையில் மீதி விஷயங்களைப் பார்ப்போம்.. எடுத்ததுமே... எல்லாம் தெரிஞ்சுக்க முடியாது.. பொறுமை வேணும்... எனக்கு ஒரு ரெண்டு வருஷம் ஆச்சுது.. விஷயங்கள் ஓரளவுக்கு பிடிபட.. ! இப்போ.. நாங்களும் பிஸ்தாதான்... ! கூடிய சீக்கிரம் நீங்களும் தான்.. கோடு போட்டா ரோடு போட்டுட மாட்டீங்களா என்ன..? .. ..

சரி, எந்திரன் படம் வந்துச்சு இல்லே.. படம் எடுத்தவர் , ரஜினி , ஷங்கர் இவங்க ரேஞ்சுக்கு - அந்த படத்தை வைச்சு , ஒரு கோடிக்கு மேல ஒருத்தர் சம்பாதிச்சார் இணையம் மூலமா... !! எப்படி? ரொம்ப நியாயமான வழியிலே தான்.. !! கொஞ்சம் மூளையை use பண்ணினார்.. கொஞ்சம் வேலை பார்த்தார்.. படம் ரிலீஸ்  பண்ணின நேரத்திலே... இவர் ஒரு BMW காரே வாங்கிட்டார்..
அப்படி என்ன செஞ்சார்? அடுத்த கட்டுரையிலே பார்ப்போம்..!...

இதுலே ஒரு மிகப்பெரிய அட்வான்டேஜ் என்ன தெரியுமா? " மாப்ளே! சொந்த பிசினஸ் லே இறங்கி 10 லட்ச ரூபாய் லாஸ்", னு சொல்ல வேண்டியதே வராது. உங்க முதல் அஞ்சு பைசா இல்லை.. உழைப்பு தான்... சறுக்கல், தோல்வி வந்தா.. அது நீங்க கத்துக்க வேண்டிய பாடம்..  அடுத்து அந்த தப்பு வராம careful லா  இருக்கணும்.. !!அவ்வளவுதான்..

12 comments:

Anonymous said...

the adsense is not accepting me for unsupported language problem how to over come most of the posts are in english

வேலு சுப்ரமணியன் said...

thankyou

kkssenbrothers said...

Super sir, continue.. Very useful for in our friends.

"ALL THE BEST"

sekar said...

Thank you for your kind information

sekar said...

Thank you

கோவிந்தராஜு.மா said...

அனைவருக்கும் புரியும் படி எழுதுகிறிர்கள் நான் ரொம்ப நாளாக தேடிய ஒன்னறு தொடரட்டும் உமது சேவை அனைவரும் ஆவலுடன் எனது நண்பர்களும் எதிபார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம் நன்றி

thileepan said...

நன்றிகள். தொடருங்கள்...

Papps said...

thanks bass.
iam welcome u r post

go thourgh

gopi_monster@yahoo.com, +919688525515

renu said...

thank you so much sir..i came across your site a month ago while searching for vaasthu info..then i started to visit regularly..am interested in learning 'jothidam' also but not yet started..i was in thought of creating a blog long ago, but, dint get proper info..now, after reading your guidelines, i ve created a blog! thank you so much for the informations you are sharing here, sir!

Prem said...

You re Very grate .very Useful Tamil Site.

Thank You

Tamil Web Hosting said...

நிச்சயம் இணையத்தில் வேலை தேடும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு.
____________________________________

புதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?

http://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.

Shafi Udeen said...

visit http://www.emoneyspace.com/shafi8466

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com