Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

நாயக்கர் மாமா ! நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

| May 28, 2011
 அன்பே சிவம் படத்துலே கமல் சொல்வாரே. கஷ்டப்படுற ஜீவனைப் பார்த்து , இரக்கப்பட்டு , உன்னாலே அந்த கஷ்டத்தை போக்குறதுக்கு முடிஞ்சா, நீயும் கடவுள் தான்னு. " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ".... னு ஒரு மனதுக்கு இதமான மெலடி பாட்டு கேட்டு இருப்பீங்க.. இல்லையா? இதே கருத்து தான் சுவாமி விவேகானந்தரும் சொல்றார். நீங்களும் கடவுளாக முடியும்.

டார்வின் தியரி என்ன சொல்லுது ? மனித இனமே குரங்கிலிருந்து வந்தது. அப்படின்னு சொல்றார். சரி. Discovery சேனல் லே  " Evolution of Human being " னு பட்டையைக் கெளப்புற ப்ரோக்ராம் அடிக்கடி வருது. எந்த ஒரு இனமும்   " Survival of the fittest " தியரிப்படி தான் உருவாகுது. ஓரறிவுள்ள ஜீவ ராசி , எப்போ அந்த ஒட்டு மொத்த இனத்துக்கே ஒரு விஷயத்துலே அழிவு வருதுன்னு நெனைக்குதோ ,  அப்போ அடுத்த இனம் ஆரம்பிக்குது. மீன் , அடுத்து தவளை, பறவை, ஊர்வன, அடுத்து பாலூட்டிகள். அந்த பாலூட்டிகள்ளேயும்  , மனித இனம் ... ஆறறிவு கொண்டு , இருக்கும் ஜீவ ராசிகளிலேயே மகத்தான தன்மை கொண்டு இருக்குது. சிந்திக்கும் திறன் , அதைவைத்து முடிவெடுக்கும் திறன்.. 
பேசக் கூடிய திறன் . இப்படி, 
 சிங்கம், புலி கூட அதுக்குள்ளே communication வைச்சுக்கிடுதே. ஏன், செடி , கொடிகள் -- அதுக்குள்ளே எவ்வளவோ communication வைச்சுக்கிடுதே. ... இப்போ நான் சொல்ல வரும் விஷயம் என்னனு கேட்டா... இந்த எல்லா ஜீவ ராசிகளும் , இயற்கையை நல்ல விதமா , முழுவதுமா உணர்ந்து , அதற்கு ஏற்ப , தன்னை பாதுகாக்க என்ன செய்யணுமோ,, அதை செய்யுது... 
ஒரு பூகம்பமோ , அடை மழையோ  வருதுனா , இல்லை பெரிய இயற்கை பேரிடர் வருதுனா ... முதல்லே இந்த ஐந்தறிவு ஜீவ ராசிகள் , அதை டக்க் குனு உணர்ந்துக்கிடுது .... 

ஆனா மனிதனுக்கு...?  அந்த உணரும் திறன் இயற்கையிலேயே  ஒவ்வொரு ஜீவனுக்கும் இருந்தும், அதை உணராமல் , மெல்ல மெல்ல அந்த மூளை மழுங்க அடிச்சுடுது.   தேவையான விஷயங்கள் மட்டும் எடுத்துக்கிட்டு , இந்த இயற்கையை உணர்வது தேவை இல்லாத ஒரு விஷயமாக நம்ம ஒட்டு மொத்த இனமே நெனைச்சுக்கிட்டோம் போலே.

 சித்தர்கள் , பெரிய பெரிய மகான்கள் - இதை சர்வ சாதாரணமா உணர்ந்துக்கிடுறாங்க. ஒரு மனிதனை பார்த்ததுமே , அவனது பூர்வ ஜென்மங்களில் இருந்து , இப்போ நடக்குற விஷயம், எதிர்காலம் எல்லாம் - கண் முன்னாலே தெரியுது..  இதை எல்லோரும் செய்ய முடியாதா..? 

மனித இனம் அப்படின்னு ஒன்னு இருக்குதே.. இன்னும் சில கோடிக்கணக்கான வருஷத்துக்கு அப்புறம்.. அடுத்த இனம் ஒன்னு வரலாம் இல்லையா.. ? அதை ஏன் .. கடவுள் இனம் னு எடுத்துக்கக் கூடாது.. ? தேவர்கள் அப்படின்னு இப்போ நாம சொல்றமே.. அவங்களா இருக்கக் கூடாது ? .. ஒவ்வொரு மனிதனும் கடவுளா மாறனும். அடுத்த லெவெலுக்கு வரணும். எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் செய்ய வேண்டிய விஷயத்தை , ஒரு சிந்திக்க தெரிஞ்ச மனுஷனா , ஏன் இப்போ இருந்தே , நாமே செய்யக் கூடாது. கடவுளா மாறுவது இரண்டாம் பட்சம், முதல்லே ஒரு நல்ல மனுஷனா மாறுவோமே!

ஒருத்தர் வீட்டிலே நாய் வளர்க்கிறார் னு வைச்சுப்போம். அந்த நாய் நமக்கு விசுவாசமா இருக்கிற வரைக்கும், அவர் அந்த நாயை நல்ல விதமா கவனிச்சுக்கிடுவார் இல்லையா? உங்க கிட்டே ஒருத்தர் முழு விசுவாசமா, உங்களை நம்பி இருந்த இருந்தா . அவர் நன்றி , விசுவாசமா இருக்கிறவரைக்கும் - அவருக்கு தேவையான எல்லா விஷயமும் ,நீங்க பார்த்துக்கிடுவீங்களா , மாட்டீங்களா ? 

அந்த மாதிரி - ஒரு நன்றி , அர்ப்பணிப்பு உணர்வு -  நமக்கு , கை , கால் நல்ல படியா கொடுத்து - குறைந்த பட்சம் ஒரு மனுஷனா நம்மை படைச்ச இறைவன் மேலே நமக்கு இருக்கணும்.

அதே மாதிரி  , ஒரு விசுவாசம் , அர்ப்பணிப்பு - நமக்கு ஏன் நம்ம குடும்பத்துலே வர மாட்டேங்குது ? நமக்காக  எவ்வளவோ கஷ்ட , நஷ்டங்களை சமாளிச்ச, சுகங்களை தியாகம் பண்ணின நம்ம பெத்த அம்மா , அப்பா .. மனைவி  / கணவன் , ....  நம்ம வாழ்வதுக்கே ஒரு பிடிப்பு ஏற்படுத்தின நம்ம குழந்தைகள் , கஷ்டமான நேரத்திலே , நமக்கு கை கொடுத்த நண்பர்கள்.. இப்படி எல்லோர் மேலேயும் , உங்கள் அன்பு பொங்கி வழியட்டும்... பேசும்போது , ஒரு நேசத்துடன் பேசிப் பழகுங்கள்.. நமக்கு பிடிச்ச மாதிரி , அவங்க எல்லோரும் இருக்கணும்னா , நாம அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் இல்லையா.. 

நாயகன் படத்திலே நாயக்கர் மாமா , நீங்க நல்லவரா ? கெட்டவரா னு கேள்வி கேட்பானே ? அதே மாதிரி உங்களுக்கு நீங்களே , நல்லவனா ? கெட்டவனான்னு ஒரு சுய பரிசோதனை செஞ்சு பாருங்க. அந்த மாதிரி நல்ல மனுஷனை உருவாக்க , கீழே கொடுக்கப்பட்டுள வழிகள் உங்களுக்கு உதவியா இருக்கும் .   தர்ம சக்கரம் பழைய இதழ்லே கெடைச்சது. அப்படியே உங்களுக்காக :
http://www.extramirchi.com/wp-content/uploads/2009/08/Kamal_Hassan_in_Nayagan.jpg
1. ஒரு உத்தமமான ஆன்மீக குருவை அடைதல்.
2. அந்த குருவிடமிருந்து தீட்சை பெறுதல்.
3. குருவின் ஸேவையில் ஈடுபடுதல்.
4. குருவிடமிருந்து போதனைகளைப் பெற்று பக்திபரமான சேவையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்.
5. நமது பழைய ஆசார்யர்களின் சுவடுகளை பின்பற்றி குருவின் போதனைகளைப் பின் பற்றுதல்.
6. பரமாத்மாவை திருப்தி செய்ய எதையும் விட்டுக்கொடுத்தல், எதையும் ஏற்றுக் கொள்ளுதல்.
7. பக்திபரமான ஸேவை செய்வதற்கான வசதிகளுடன் இருந்து கொண்டு அதிகமானவற்றைக் குறைத்துக் கொள்ளுதல்.
8. விரதம் அனுஷ்டித்தல் (எண்ணங்கள், சொற்கள், செயல் ஆகியவற்றில் தீமையைத் தவிர்த்தல்).
9. பசுக்கள், ப்ராஹ்மணார்கள், வைஷ்ணவர்கள் மற்றும் ஆலமரம் போன்ற புனித மரங்களை வணங்குதல்.

10. புனித நாமங்கள் மற்றும் தேவதைகளுக்கு எதிராக தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
11. நாஸ்திகர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும்.
12. நிறைய சிஷ்யர்கள் வேண்டும் என்று விரும்பக் கூடாது.
13. பல புத்தகங்களை அரை குறையாகப் படித்து விட்டு படித்தவர்போல் நடித்து மற்றவர்களை தம் பால் திருப்பக் கூடாது. பக்திபரமான ஸேவைக்கு பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை படித்தாலே போதுமானது.
14. லாப, நஷ்டத்தால் கலக்கம் அடையக்கூடாது.
15. எந்தக் காரணத்திற்காகவும் கவலையில் மூழ்கிவிடக் கூடாது.
16. உப தேவதைகளை வணங்காவிட்டாலும், அவர்களை நிந்திக்கக் கூடாது. மற்ற மத புத்தகத்திலுள்ள விஷயங்களை பின்பற்றா விட்டாலும் அதிலுள்ள விஷய்ங்களை நிந்திக்கக் கூடாது.
17. கடவுளையோ, அவர் பக்தர்களையோ நிந்திப்பதில் ஈடுபடக்கூடாது.
18. ஆண் பெண் உறவு போன்ற வீணான விஷயங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக்கூடாது.
19. அனாவசியமாக எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது.
20. கடவுளின் புகழ் கேட்டல்.
21. அவர் புகழ் பாடுதல்.
22. அவரை தியானித்தல்.
23. கடவுளின் பாத கமலங்களை தியானம் செய்தல், மற்றும் அவருக்கும் அவர் பக்தர்களுக்கும் ஸேவை செய்தல்.
24. அவரை வணங்குதல்.
25. அவரை பிரார்த்தித்தல்.
26. தன்னை அவருடைய நிரந்தர ஸேவகனாக நினைத்தல்.
27. தன்னைக் கடவுளின் நண்பனாக நினைத்தல்.
28. அவருக்கே எல்லாவற்றையும் ஸமர்ப்பித்தல்.
29. தெய்வத்தின் முன் ஆடுதல்.
30. தெய்வத்தின் முன் பாடுதல்.
31. தன் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் அவரிடம் கூறுதல்.
32. அவர் முன் வணங்குதல்.
33. சரியான சமயத்தில் எழுந்து நின்று குருவிற்கும் கடவுளுக்கும் மரியாதை செலுத்துதல்.
34. கடவுள் மற்றும் குருவின் ஊர்வலத்தில் பங்கேற்றல்.
35. கடவுளின் புனித ஸ்தலங்களுக்கும், கோயில்களுக்கும் செல்லுதல்.
36. கோயிலை வலம்வருதல்.
37. சுலோகங்கள் கூறுதல்.
38. மனத்தில் கடவுள் பெயரை மெதுவாக உச்சரித்தல்.
39. பிரார்த்தனைக் கூட்டத்தில் கடவுள் பெயரை உரக்கக் கூறுதல்.
40. கடவுளுக்கு அர்ப்பித்தபின் அர்ப்பித்த ஊதுவத்தி மற்றும் மலர்களின் வாசனையை நுகர்தல்.
41. மீதியிருக்கும் பிரசாதத்தை உட்கொள்ளுதல்.
42. தினமும் மற்றும் விசேஷ உற்சவ காலத்திலும் ஆரத்தியில் பங்கேற்றல்.
43. தெய்வச் சிலையை ஒழுங்காகப் பராமரித்தல்.
44. தனக்கு மிகவும் விருப்பமானதை கடவுளுக்கு அர்ப்பித்தல்.
45. தெய்வத்தின் பெயர் மற்றும் உருவ தியானத்தால் சமயத்தைப் போக்குவது.
46. துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றுவது.
47. பக்தர்களுக்கு ஸேவை செய்தல்.
48. புனித ஸ்தலத்தில் வசிப்பது.
49. ஸ்ரீமத் பாகவதத்தின் விஷயங்களை ரசிப்பது.
50. பகவானுக்காக எந்த விதமான சவால்களையும் சமாளிப்பது.
51. எப்பொழுதும் கடவுளின் கருணைக்காக ஏங்குவது.
52. பக்தர்களுடன் பகவானின் அவதார ஜன்ம நட்சத்திரம் போன்ற நாட்களை கொண்டாடுவது.
53. பகவானைப் பூரணமாக சரணடைவது.
54. கார்த்திகை மாத விரதங்கள் போன்றவற்றை அனுஷ்டிப்பது.
55. உடலில் தார்மீக சின்னங்களை அணிந்து கொள்ளுதல்.
56. உடலில் கடவுளின் பெயர்களை குறித்துக் கொள்ளுதல்.
57. கடவுளுக்கு அணிவித்த மாலைகளை ஏற்றுக்கொள்ளுதல்.
58. சரணாமிருதத்தை உட்கொள்ளுதல்.
59. பக்தர்களை தொடர்பு கொள்ளுதல்.
60. கடவுளின் நாமத்தை உச்சரிப்பது.
61. ஸ்ரீமத் பாகவதத்தை சிரவணம் செய்தல்.
62. பவித்திர ஸ்தலத்தில் வசித்தல்
63. மற்றும் தெய்வத்தை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் வணங்குதல்.

======================================
அப்பாடி! எல்லாத்தையும் எழுதியாச்சு. மன சாட்சிக்கு விரோதமா இல்லாம , இதிலே எத்தனை விஷயங்கள் நம்மாலே கடை பிடிக்க முடியுமோ, முயற்சி பண்ணலாமே !

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? (ஜோதிட பாடம் : 020 )

| May 14, 2011
நமது வாசக அன்பர்கள் அனைவருக்கும், வணக்கம். வேலைப் பளு அதிகமான காரணத்தால், முன்பு போல் தினமும் கட்டுரைகள் பதிவிட இயலவில்லை. ஆனாலும், இனி வரும் நாட்களில் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி - தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கிறார். மக்கள் விரும்பும் வகையில் , தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு நல்லதொரு ஆட்சி அமைய வாழ்த்துவோம். 

சிம்ம ராசி நேயர்களுக்கு , மீண்டும் புத்துணர்வும், குதூகலமும் பொங்கும் நேரமிது. குருவின் பார்வை, ஏழரை சனி முடிவு என்று இனி வசந்தம் ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் , உங்களுக்கு கிடைத்த படிப்பினையை மறக்காது, நிதானமுடன் செயல்பட்டால் , ஒவ்வொரு சிம்ம ராசி நேயரும் , உங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்குவீர்கள். வாழ்த்துக்கள் !

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு  - இன்று திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது , என்று இரத்தின சுருக்கமாகப் பார்க்க விருக்கிறோம். 

பத்துப் பொருத்தம் பார்த்தும் -  சில மணங்கள் முறிந்து போய்விடுகின்றன . பொருத்தம் பார்க்காமல் மணந்தவர்கள்  கூட , மனம் ஒருமித்து வாழ்வதால் , வெற்றிகரமான தாம்பத்ய வாழ்வு வாழ்கின்றனர்.  பூர்வ புண்ணியம் பலமாக இருந்தால் , இறை அருள் என்றும் துணை நிற்கும். விதிப் படி நடக்கட்டும் என்று விட்டு விட்டால் , நல்லதோ , கெட்டதோ எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தானே.
வீட்டில் முதல் திருமணம் பொருத்தம் பார்க்காமல் செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் - மண முறிவு ஏற்பட்டு விட்டால், அடுத்த திருமணம் அவ்வாறு செய்ய துணிவு வராது. பொருத்தமில்லா ஜாதகமாக இருந்ததும் ஒரு காரணமோ? என்று நொந்து போகின்றனர்.

என் அனுபவத்தில், ஜாதகம் உண்மையோ , பொய்யோ - ஆனால் இவர் தான் மனைவி / கணவன் என்று அமைவது இருக்கிறதே , அது நிச்சயம் ஜென்மாந்திர தொடர்பு தான். திருமணம் ஆனா அன்பர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். அதே போல் , தான் குழந்தை பிறப்பும். கணவன் , மனைவி கையில் மட்டும் இல்லாத ஒரு விஷயம் . திருமணம் முடிந்து , உடனே / ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து இருந்தால் , அவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஒரு ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு பிறகு கரு உருவாகி இருந்தால், அவர்களுக்கு இது புரியும்.

சரி எதற்கு , இவ்வளவு பில்ட் அப் என்று  கேட்கிறீர்களா? நம் முன்னோர்கள், சித்த புருஷர்கள் கூறிய படி , ஜாதகப் பொருத்தம் பார்ப்பது - இதற்கு ஒரு பொருத்தமான அணுகுமுறை என்று தோன்றுகிறது. சரி, பாடத்தைப் பார்ப்போம்.

திருமணப் பொருத்தம் என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான  எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் .

விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிர்ஷ்டம்  ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு " ஜாதகப்  பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:

1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில்  இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில்  நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.

உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை  ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கத்தில் பார்க்கவும்)

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில்  ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

( இது எல்லாமே நமது பழைய பாடங்களில் கொடுத்துள்ளவை தான்.எந்த  நட்சத்திரத்திற்கு என்ன யோனி - என்று refer பண்ணுங்க.   )

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம்  முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.

யார் யாருக்கு நண்பர்கள்..? பழைய பாடம் --- again ..!!

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி :  ஆண் ராசி
மேஷம்  : சிம்மம் , விருச்சிகம்
ரிஷபம் :  கடகம், துலாம்
மிதுனம் :  கன்னி
கடகம் :  விருட்சிகம், தனுசு
சிம்மம் :  மகரம்
கன்னி :  ரிஷபம், மீனம்
துலாம் : மகரம்
விருச்சிகம் :  கடகம், கன்னி
தனுசு : மீனம்
மகரம்  : கும்பம்
கும்பம்  : மீனம்
மீனம்  : மகரம்

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய்  இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபி ரச்சு (உதரம்) :  கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம்,  மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்.

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோ ரச்சு: புருஷன் மரணம்
கண்ட ரச்சு: பெண் மரணம்
நாபி ரச்சு: புத்திர தோஷம்
ஊரு ரச்சு: பண நஷ்டம்
பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
==========================================================

இந்த பாடம், மேல்நிலைப் பாடம் தான் . நமது பழைய பாடங்களை படிக்காமல் இருப்பவர்களுக்கு , கொஞ்சம் கடினமாக இருக்கும். எனவே, பழைய பாடங்களை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

ஜோதிட பாடங்கள் பற்றிய முந்தைய கட்டுரைகளைப் படிக்க


ஜெட் வேகத்தில் பறந்த சித்தர் - மிக மிக அபூர்வமான வீடியோ காட்சி !

| May 7, 2011
கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்ற ஒரு அற்ப கேள்வியை மனதில் எழுப்பாமல் , கடவுளை முழு மனத்துடன் நம்பி, அவர் அருளால் ஏராளமான சித்து வேலைகளை செய்து , சித்தர்களாக ஆனவர்கள் பலர். 

 திருவண்ணாமலையிலும், சதுரகிரியிலும், சர்வ சாதரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு , சித்த தரிசனம். அப்படிப் பட்ட ஒரு அபூர்வ நிகழ்வு இது. 

திருவண்ணாமலையில் நடந்த ஒரு அதிசய சம்பவம் இது. TNEB ஐ சேர்ந்த ஒரு எலெக்ட்ரிசியன் ஒருவர் வியப்பில் ஆழ்ந்து அவரது மொபைல் போனில் படம் எடுத்து , ஜெயா டிவி யில்    ஒளி பரப்பான  சம்பவம் இது. கீழே உள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்து பாருங்கள். 

படம் பிடிப்பதை உணர்ந்ததும், ஜெட் வேகத்தில் பறந்து இருக்கிறார் இந்த சித்தர். இன்னும் சரியாக துல்லியமாக சித்தர் உருவம், இந்த இரண்டாவது லிங்கில் தெரிகிறது.


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ? - 2011 தேர்தல் முடிவுகள் பிரபல ஜோதிடரின் கணிப்பு

| May 6, 2011
2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ? என்று நமது இணைய தள குழுவை சேர்ந்த , நமது ஆஸ்தான ஜோதிடர் மதிப்பிற்குரிய கோபால கிருஷ்ணன் அவர்கள் , இப்போது முதல்வர் ரேசில் இருக்கும் - இரண்டு முக்கிய தலைவர்களை , அவர்கள் ஜாதகம் என கருதப்படும் ( ஆமாங்க - ஒரிஜினல் இதுதான்னு யாருக்கு தெரியும் ? ) ஜாதகங்களை முழுவதும் ஆராய்ந்து - இந்த முடிவுகளை கூறியுள்ளார்.

தேர்தல் முடிந்து - கிட்டத்தட்ட , ஒரு மாதம் கழித்து முடிவு வெளி வர இருக்கிறது. தேர்தல் கமிஷன் - மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு தான் ,  முடிவுகளை அறிவிக்க இருக்கிறது. இது சட்டப்படி கூறிய காரணம்.

ஆனால் , நமது நண்பர் கூறுவது என்ன என்று நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:

தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதிக்கு முன்பும், பின்பும் - இரண்டு பெரிய கிரகப் பெயர்ச்சி நடக்க விருக்கிறது. குரு மற்றும் , ராகு  - கேது பெயர்ச்சி.

தற்போதைய முதல் அமைச்சர் - கலைஞர் :  ராசி - ரிஷபம். வெளியில் - துளியும் தெய்வ நம்பிக்கை இருப்பதாக காட்டிக் கொள்ளாதவர். 
மிக அற்புதமான ஜாதகம் .
http://cdn1.beeffco.com/files/poll-images/normal/jayalalitha-jayaram_2234.jpg
இப்போது இன்னும்  இரண்டே நாட்களில்  ராசிக்கு பனிரெண்டில் - குரு வரவிருக்கிறார். விரய ஸ்தானம் . அங்கிருந்து , அவர் ரிஷபத்திற்கு 4 , 6 , 8 ஆம்
இடத்தை பார்க்க விருக்கிறார். அதே நேரத்தில் - ஜென்மத்திற்கும், 7 ஆம் வீட்டிலும் - ராகு , கேது வர விருக்கிறார்கள்.

ஆகவே , வர விருக்கும் - ஒன்றரை வருடங்களுக்கு - அமைப்பு சுமார் தான்.
இவரது சமீபத்திய ஜாதக குறைகளை , சரி செய்வதற்காக , ஒரு மிகப் பெரிய ஜோதிட ரீதியான காரியம் / பரிகார முறை , மிகச்சரியாக ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே செய்யப் பட்டு இருக்க வேண்டும். அதாவது , மிக யோகமுள்ள ஒருவரின் அருகாமை , இணைப்பு ஏற்படுவது போல. ... அந்த ரீதியில் அவருக்கு பலன் கூடுகிறது.... ஆனால் , இது ஒரு பரிகாரம் போல தான்.


சரி, இதே நேரத்தில் - முதல்வர் ஸ்தானத்தில் அமர வாய்ப்பு இருக்கும் , இன்னொரு தலைவர் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அமைப்பு எப்படி இருக்கிறது ? 
சிம்ம ராசி. ஏழரை சனி யின் இறுதிக் கட்டத்தில்,  கடுமையான காலம் கிட்டத்தட்ட முடிவடையும் நேரம். இப்போது நடை பெற விருக்கும்,  குருப் பெயர்ச்சி - அற்புதமான ஒரு காலமாக அமைய விருக்கிறது. மே மாதம் எட்டாம் தேதி முதல் , குரு பார்வை வந்து - அதே சமயம் ஏழரை சனி , இன்னும் ஐந்தே மாதங்களில் - ஏழரை சனி முடிந்து , இன்னும் ஒரு படி வாழ்வில் மேலேற வாய்ப்பு இருக்கிறது.

ஏழரை சனியின் இறுதிக் கட்டம், தேர்தல் முடிந்து , வெற்றி அவர் பக்கம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் ... குரு பார்வை வரும் வரை - அதற்குரிய பலன் கிடைக்க வில்லை. குருப் பெயர்ச்சி நடந்து - ஐந்தே தினங்களில் - அதற்க் குரிய பலன் உடனே தெரியவிருக்கிறது  என்கிற ரீதியில்
பார்த்தால் - தேர்தல்  முடிவுகள் , இவருக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று இருக்கிறது.

ஆக, மொத்தம் உள்ள தொகுதிகள் இத்தனை . இதில் இவ்வளவு இந்த கட்சிக்கு , இவ்வளவு இந்த கட்சிக்கு - என்று , கணிக்க இயலாவிட்டாலும்..... ஜாதக அமைப்பு படி , ஜெயலலிதா அவர்களுக்கு இனி வர விருக்கும் காலம் - ஒரு வசந்த காலமாக இருக்கப் போகிறது.

ஆனால், நமது இன்னொரு நண்பர் ( அருள் வாக்கு சொல்பவர் ) இன்னும் கொஞ்சம் மைக்ரோ லெவல் அனலிசிஸ் பண்ணிப் பார்த்தால், தமிழக அடுத்த முதல்வர் , யாரும் சற்றும் எதிர் பாராத ஒரு பெண்மணி. டிசம்பர் மாதம் வரை. அதன் பிறகு.... திரும்பவும் அந்த அரியணையில் ஜெயலலிதா அவர்கள் அமர வாய்ப்பு உண்டு , என்று தெரிகிறது. இப்படி பூடகமாக சொல்வதற்குப் பதில் , வெளிப்படையாக சொல்வதானால் - இப்போதைய முதல்வரின் மகள் கனிமொழி என்று கூறுகிறார். 

நம்பவே முடியாத ஒரு விஷயமாக இது தோன்றுகிறது... நடக்க விருக்கும் சி.பி.ஐ. விசாரணை , கொஞ்சம் அதிக கடுமையுடன் இருந்து - தி.மு.க. தேர்தலில் " narrow margin " இல் வெற்றி பெற்று - ஒட்டு மொத்த கட்சியும், ஒரு கவசம் போல செயல்பட்டு , அவரை முதல்வர் அரியணையிலே அமர்த்துவார்கள். அதன் பிறகு, கூட்டணியில் இருந்தவர்கள் காலை வார , மீண்டும் ஒரு தேர்தலும் - அதன் பிறகு ஜெய லலிதா அவர்கள், முதல்வர் அரியணையில் அமர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார். ஏழரை சனி, முடிந்த பிறகு தான் அவருக்கு , நல்ல அமைப்பு வருகிறது. . ஆனால் , இந்த ஐந்து மாதங்களில் - குரு பார்வையுடன், ஒட்டு மொத்த மக்களின் அபிமானம் அவருக்கு கிடைக்கும் என்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் - இரண்டாவது கூறிய விஷயம் , கொஞ்சம் ஓவர் ஆக இருப்பதாக தெரிகிறது.... இந்த நிலைமை நடந்தாலும், அவரது கட்சியில், அவரது குடும்பத்திலேயே யார் அவரை ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை.(இப்போதைய சூழலில் )

முதல் நிலைமைப் படி , ஜெய லலிதா அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுவதால், அவரே அரியணையில் அமரக்கூடும் என்று நினைக்கிறேன்...

பார்க்கலாம், இன்னும் ஒரு வாரம் தானே !! பொறுத்து இருந்து பார்ப்போம்...!திருமணம் ஆகாதவர்களுக்கு - பொருத்தமான வரன் விரைவில் அமைய சிறந்த மந்திரம்

| May 5, 2011

உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?
கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்குள்  ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.

ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி

யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி

பதிம் மே குருதே நமஹ.


நமது ஜோதிட பாடங்களில் ஏற்கனவே புனர் பூ பற்றி எழுதி இருந்தோம் , ஞாபகம் இருக்கிறதா ? இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு மேற்கூறிய வழிபாடு கை கொடுத்து இருக்கிறது.
 =======================================================

கல்யாணம் ஆனபிறகு, நேரத்திற்கு குழந்தைகள் பிறப்பதும் , இறைவன் விருப்பப் படிதானே. 

குழந்தைகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு பிறந்த குழந்தைகள் கையால் , முறையான இறுதி சடங்கு மரியாதை கிடைப்பதில்லை. ஜாதகத்தில் இந்த அமைப்பை எவ்வாறு கண்டு பிடிப்பது என்று பார்ப்போம் :

பெற்றோரின்
ஜாதகத்தில் பூர்வ புண்ணியாதிபதி (5க்கு உரியவர்), புத்திரக்காரகன் குரு ஆகிய இருவரும் 6ஆம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது 8, 12இல் மறைந்திருந்தாலோ அல்லது 8, 12க்கு உரியவரின் தசை நடைபெறும் காலத்தில் 6க்கு உரியவனின் புக்தி நடந்தாலோ பெற்ற பிள்ளைகளால், பெற்றோரின் சிதைக்கு தீ மூட்ட முடியாத நிலை ஏற்படும்.

ஒரு சில பெற்றோருக்கு பல பிள்ளைகள் இருந்தும், சிதைக்கு யாரும் தீ மூட்ட இயலாத சூழல் கூட ஏற்படும். எனவே, அதுபோன்ற கிரக அமைப்பு உள்ளவர்கள், பிள்ளைகளை தொலைதூர பயணம் செல்ல , வெளிமாநிலங்கள், அயல்நாடுகளில் தங்குவதை தவிர்ப்பது நல்லது. .

பிள்ளை இல்லாதவர்களுக்கு யார் கொள்ளி வைக்கலாம்?

பிள்ளை இல்லாதவர் யாரைக் குறிப்பிடுகிறாரோ  அந்த நபர்தான் சம்பந்தப்பட்டவருக்கு கொள்ளி வைக்க வேண்டும். ஒரு சிலர் தன்னுடைய சிதைக்கு நெருப்பு வைக்க வேண்டியது யார் என்று உயில் கூட எழுதி வைத்து விடுவார்கள். அதில் தவறொன்றும் இல்லை.

யாருடைய பெயரையும் இறந்தவர் குறிப்பிடாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் ரத்த சொந்தங்கள் (பெரியப்பா, சித்தப்பா மகன்) அவரது சிதைக்கு தீமூட்டலாம்.

=======================================================

நமது இணைய தளத்தின் வாசகர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள் . நம் வாழ்க்கை நம் கையில். இன்பமும் , துன்பமும் நாம் அனுபவித்தே தீர வேண்டும். நமது கர்ம வினையை கழிக்க அது ஒன்றே வழி. இறை வழிபாடும், பிரார்த்தனைகளும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். ஆண்டவனை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். ஆண்டவனே தூண் என்று நம்பி சும்மா இருப்பதும் மடத்தனம். இறைவன் உங்கள கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனபலம் அளிப்பார். உங்கள் கடமைகளை சரிவர செய்ய வழி காட்டுவார்.

பிறப்பும், இறப்பும் உங்கள் கைகளில் இல்லை. இடைப்பட்ட வாழ்க்கை மட்டுமே உங்கள் கைகளில். மற்றபடி ஆட்டம் நீங்கள் ஆடித்தான் ஆக வேண்டும். சந்தோசமாக ஆடுங்கள். வெற்றி , தோல்வி பொருட்படுத்தாமல் , உங்களால் முடிந்தவரை உற்சாகத்துடன் ஆடுங்கள்.....

பிறப்பையும், இறப்பையும், நல்ல முறையில் தீர்மானிப்பது அந்த இறைவன் . தீர்மானம் செய்ய உதவுவது நீங்கள் செய்யும் செயல்கள். .. அதையே கர்ம  வினைகள் என்று சொல்லுகிறோம்.   ஆகக் கூடி , மொத்த வாழ்க்கையும், நம் கையில் தான். நம் செயல்கள் தான். மனம் சொல்லும்படி வாழ்க்கை செல்கிறது. மனத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ள - உங்களுக்கு உங்கள் வழிபாடு கவசம் போல் பாதுகாக்கும்.

உங்களை விட உங்கள் நலனில் அக்கறை கொள்ள அந்த பரம்பொருள் இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அடுத்தவர் காலை வாராமல் , முன்னுக்கு வாருங்கள். இப்போது உங்களுக்கு, வாய்ப்பு இல்லை என்றாலும், உங்கள் முறையும் ஒரு நாள் வரும். பொறுமையுடன் காத்து இருங்கள் .

வெற்றி , தொட்டு விடும் தூரம் தான். முயற்சிகள் மேம்பட்டவையாக இருக்கட்டும். நம் இறுதி கட்டத்தில் , நம் வாழ்வின் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது , அதில் ஒரு நிறைவான் , பெருமிதம் மிக்க வாழ்வு , அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த ஒரு மன நிறைவு இருக்கட்டும்.

உங்கள் சந்ததியினர் உங்களை மனதார வாழ்த்த வேண்டும்...

நான் வெள்ளை யானையை பார்த்தேன்...!! ( தமிழ் ஜோக்ஸ் )

| May 4, 2011

ஒரு குளத்தில இருபது எறும்புங்க குளிச்சிட்டு இருந்தது. அப்போ அங்கே ஒரு யானை வந்தது. (எறும்புன்னதும் யானை அங்கே வந்தாகணுமே!)

யானை குளத்தில டைவ் அடிக்குது. ( இது கதை. யானை கூட டைவ் அடிக்கும். கண்டுக்கப்படாது!)

உடனே பத்தொன்பது எறும்பு கரையில விழுந்தது. ஒரு எறும்பு மட்டும் யானையின் தலை மேல விழுந்தது. ( அது எப்படின்னு கேட்கப்படாது)

அதைப்பார்த்த ஒரு எறும்பு கரையில இருந்து சொன்னது: "அவனை அப்படியே தண்ணியிலே போட்டு அமுக்கு மாப்பிளே!!"
( கான்பிடன்ஸ் மச்சி... கான்பிடன்ஸ்!!)
================================================================
நம்ம ஆளு ஒருத்தரை, அவங்க வீட்டுக்கார அம்மணி, எதுக்கெடுத்தாலும் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க... என்ன பண்றதுனா ரொம்ப நாளா யோசிச்சாரு..  அப்புறம் என்ன பண்ணினாருன்னு பாருங்க..!!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSAuvTuy-49g5KvSLd5iKOmtYfIvVsO2bfjZFvTBY8qWD9Fl20J&t=1
 ஒரு நாள்  அதிகாலை எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்துவிட்டு "வெள்ளை யானை , வெள்ளை யானை  ..!" என கத்தினான்.   சமையல் கட்டில் உள்ள மனைவியை அழைத்து  " பாரு.. பாரு ... தோட்டத்தில் வெள்ளை யானை  மேயுது..." என கூறினான். மனைவி ஓடிவந்து பார்த்துவிட்டு. " வெள்ளை யானையாவது ...  ஒண்ணாவது.... இப்போ எல்லாம் காலையிலேயே தண்ணிபோட ஆரம்பிச்சிட்டீங்களா ?" என முறைத்தாள். .

"சேச்சே... நிஜமாகவே பார்த்தேன்!"

"அது ஒரு புராணக்கற்பனை. அப்படி ஒரு மிருகம் உலகத்தில் நிஜமாகவே இருக்காது! நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!"
"இல்லை நான் பார்த்தேனே!"
"எப்படி பார்த்திருக்க முடியும்? உங்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?"

இப்படியே, வாக்குவாதம் தொடர்ந்தது.அடுத்த வாரம் முழுவதும், கணவன் இதை பற்றியே வரும் போகும் நண்பர்களிடமெல்லாம் பேசத்தொடங்கினான்.  மனைவிக்கு கெட்ட கோபம் வந்த‌து.

" நீங்க வெள்ளை யானை  புராணத்தை நிப்பாட்ட போறிங்களா இல்லையா? கடைசி முறையாக கேட்கிறேன்!"
"இல்லை நான் பார்த்தேனே எப்படி பொய் சொல்ல முடியும்?"
" அது... ஒரு...கற்பனை  மிருகம்ம்ம்ம்ம்..........."
" நான் பார்த்தே.........!" சொல்லி முடிப்பதற்குள் தலையை சாம்பார் கரண்டி   பதம் பார்த்தது.

நேரடியாக மனோ தத்துவ டாக்டரிடம் சென்ற மனைவி " என் கணவன் வெள்ளை யானையை  பார்த்தேன்  என்கிறார்..."
" மேடம் , வெள்ளை யானை  ஒரு கற்பனை மிருகம்" இது டாக்டர்.
"அந்த கருமத்தை தான் நானும் சொன்னேன். ஆனால்  அவர் "நான் பார்த்தேன்" என்று போற வாறவர்களிடம் எல்லாம் சொல்கிறார். அன்னைக்கு  ஒரு சின்னப்பையனிடம் சொல்லி இருக்கிறார். அவ‌ன் என்கிட்டே  வந்து " ஐயாவ கூட்டிட்டு போய் எதுக்கும் கோயிலில வீபூதி அடிச்சிடுங்க" என்கிறான்.

டாக்டர் யோசித்தார் .

" இந்தா பாருங்கம்மா உங்க கணவருக்கு சித்தப்பிரமை. இப்படியே விட்டா முத்தி போயிடும். நாளைக்கு நான் போலீசோட வர்றேன்  " எனக்கூறிவிட்டு, ஒரு தடிமமான மருத்துவ புத்தகத்தை புரட்டி. எங்கேயாவது யாராவது "வெள்ளையானையை பார்த்தேன் என்று  யாராவது  சொல்லியிருக்கிறார்களா என தேடினார். யாரும் இல்லை.... கூகுள் லேயும் தேடி பார்த்தார்.. ஒன்னும் பலனில்லை.

மறு நாள் காலை, போலீஸ்  ஜீப் வெளியே நிக்க. டாக்டர் வீட்டினுள் நுழைந்து கணவனிடம் பேச்சுக்கொடுத்தார்.
" என்ன சார், இப்படி இருக்கீங்க"
"என‌க்கென்ன! எனக்கென்ன குறைச்சல்... நல்லாத்தானே இருக்கேன்..."
" நீங்க வெள்ளை யானையை பார்த்தீர்கள் என்று சொல்றீங்களாமே...? உங்க மனைவி சொன்னாங்க ..."
"வெள்ளை யானையா ?... நான் ... பார்த்தேனா...  என்ன சொல்றீங்க .. டாக்டர்!"
"ஆமா, ஆமா,  உங்க மனைவி அப்ப‌டித்தான் சொன்னாங்க .."
"டாக்டர் ! வெள்ளை யானை  என்பது ஒரு கற்பனை மிருகம். அதை எப்படி பார்க்கமுடியும்?!!"
"அப்ப நீங்கள் பார்த்ததா  இவங்க‌ சொன்னது...?"
"அவ இப்படித்தான். கொஞ்சம் கிறுக்கு..." என்றவாறே ஒரு விரலால் தலையில் சுற்றிக்காட்டினார்.

சொன்னது தான் தாமதம் " என்னையா சொன்னே ...?" என்றவாறே பால் காய்ச்சும் பானையை கணவனுக்கு நேரே வீசி எறிந்தாள் மனைவி.
"இது தான் .. இதே தான் டாக்டர்  தினமும்"
தொடர்ச்சியாக மனைவி தனது ஆத்திரத்தை அடக்கமுடியாமல் பொருட்களை வீசிக்கொண்டிருந்தாள்.

இனி சொல்ல வேண்டுமா...

"பேஷ‌ன்ட் கட்டுப்பாட்டை மீறீட்டார். உடனே எடுத்துச்செல்லுங்கள்." இது டாக்டரின்  கட்டளை. மனைவி கை,கால்களுக்கு கட்டுப்போடப்பட்ட நிலையில் வேனில்  ஏற்ற‌ப்பட்டார் ....

எப்பூடி..? கொஞ்சம் அடக்கி வாசிங்க.. அம்மணிகளா...!!

சண்டை, சச்சரவு நீங்கி , கருத்து ஒருமித்த தம்பதிகளை உருவாக்கும் - அற்புத வழிபாடு !

|
குடும்பத்தில் சண்டை , சச்சரவு இல்லை என்றால், வாழ்க்கையே "சப்" என்று போவதுபோல் தோன்றும் , என்று ஒரு சிலர் கூறுவதை கேள்விப் பட்டு இருப்பீர்கள். இதெல்லாம் ரொம்ப தெனாவட்டு என்று , இன்னொரு சாரர் மனதுக்குள்ளேயே பொறுமுவர். எதை எடுத்தாலும் சண்டை என்று அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும். நின்னாலும் குற்றம், உக்கார்ந்தாலும் குற்றம் னு சொன்னா , என்ன தான் செய்யறது ?

ஏன் , எதுக்கு, என்ன நடக்குது னே தெரியாம ... சின்ன சண்டையா ஆரம்பிக்கிற விஷயம், பூதாகரமா ஆகி, திரும்ப ஒன்னு சேரவே முடியாம , விவாக ரத்து வரைக்கும் சில பிரச்னைகள் நடப்பதும் உண்டு. 

அந்த மாதிரி , எந்த காலத்திலும் உங்கள் குடும்பத்தில் நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, கணவன் - மனைவி இடையே , அற்புதமான புரிதல் ஏற்பட்டு , ஒற்றுமை மேலோங்க, தம்பதிகள் மட்டும் இல்லை - குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிலவ , பிரிந்த தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்க, உங்கள் வாழ்வில் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போகாமல் இருக்க, தொலைந்த பொருட்கள் மீண்டும் விரைவில் கிடைக்க - என , அற்புத பலன்களை அளிக்கும், ஒரு ஒப்பற்ற வழிபாட்டைப் பற்றியும், விரத முறைகளை பற்றியும் , இப்போது பார்க்க விருக்கிறோம். அந்த வழிபாடு தான் : ஸ்ரீ தத்தாத்ரேய வழிபாடு.

கலியில் மக்கள் உய்ய வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம ஸ்வரூபமே. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு, ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. மார்க்கண்டேயனைப் போல, ஹனுமனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி.

அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் போற்றி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரக் கூட்டமாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந் தவர் அனசூயா தேவி. "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்' என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்தினி கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று இருவரையும் வணங்கினராம். மேலும் அனசூயா தேவி சீதாதேவிக்கு பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஒருமுறை மும்மூர்த்திகளும் அனசூயா தேவியின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவளுக்கு மிகவும் கடினமான ஒரு சோதனையை ஏற்படுத்த, அனசூயா தன் கற்பின் வலிமையால் மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டதாகவும், பின்னர் மும்மூர்த்திகளின் தேவியர்கள் வேண்டுகோளுக் கிணங்க அவள் அவர்களை மன்னித்ததாகவும் புராணங் கள் குறிப்பிடுகின்றன. அனசூயா தேவி அந்த தெய்வீகக் குழந்தைகளை ஒன்று சேர்த்து எடுக்கவே, மூன்று முகங்கள், ஆறு கரங்களோடு தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் படங்களில் பார்க்க முடியும்.  கார்த்த 

யாயாதி ராஜ வம்சத்தில் வந்த கார்த்தவீர்யார்ஜுனன் தத்தரது சிஷ்யர்களுள் ஒருவன். இவனது குல-குரு கர்க்க மஹரிஷியின் மூலம் தத்தாத்ரேயரைப் பற்றி அறிந்து அவரை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெறுகிறான். வரங்களை அளித்து அவனுக்கு தர்மோபதேசமும் செய்விக்கிறார் தத்தாத்ரேயர். இந்த கார்த்தவீர்யார்ஜுனனே பின்னாளில் பரசுராமனால் அழிக்கப்படுபவர். இன்றும் களவு போன பொருட்கள் கிடைக்க கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் என்ற மந்திரத்தை ஜபம் செய்வர். இந்த மந்திரத்தின் ரிஷி தத்தாத்ரேயரே. தத்தாத்ரேயருக்கு ஆத்ம ஞானமாக விளங்குபவள் அன்னை திரிபுரசுந்தரியே. அவளே தத்தாத்ரேயரின் மூன்று முகங்களாக விளங்குகிறாள். தத்தாத்ரேயர் தான் குருவாக இருந்து பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவர்.


பரபிரம்ம வஸ்துவே மும்மூர்த்திகளாக அருள் புரிகிறது என்பது வேதாந்த சித்தாந்தம். மூன்றாகத் தோன்றிய ஒன்றே ஞான வைராக்கிய சம்பன்னரான ஸ்ரீ தத்தாத்ரேயர். அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாய வஸ்த்ரம் போன்றவை கிடையாது.


தமிழகத்தில் சேந்தமங்கலத்தில் சுயம்பிர்காச அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தரைப் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டிருக்கிறார், இன்று அந்த இடமே, தத்தகிரி குகாலயம் என்று வழங்கப்படுகிறது. இங்கே விமர்சையாக தத்த வழிபாடு நடக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த ஸ்வாமிகள் புவனேஸ்வரி அதிஷ்ட்டானத்திலும், ஸ்கந்தகிரி (சேலம் அருகே) தத்தருக்கு சன்னதி அமைத்திருக்கிறார். இதேபோல செங்காலிபுரத்தில் ராமானந்த பிரம்மேந்திரர் என்னும் யதி, ஸ்ரீ தத்தருக்கு ஆலயம் அமைத்து இருக்கிறார். 

நக்ஷத்திரமாலிகா என்ற ஸ்லோகங்களில் இவர் பதினாரு இடங்களில் இருந்தக் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி, கோதாவரிக்கு வடக்கே சிம்ம பர்வதத்தில் ஜனித்து, மாயாபுரியில் நித்திரை செய்து, கங்கையில் ஸ்னானமும், கந்தர்வ பட்டணத்தில் தியானமும், குரு-க்ஷேத்திரத்தில் ஆசமனமும், கர்நாடகத்தில் காலை-சந்தியும், கோலாபுரத்தில் பிக்ஷையும், பாஞ்சாலத்தில் உணவும், தூங்காதீரத்தில் பானமும், பத்ரியில் புராண சிரவணமும், ரைவத பர்வதத்தில் இளைப்பாறுதலும், மேற்குக் கடற்கரையில் சாயரக்ஷை சந்தியும் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தத்தர் நிர்குண உபாசகர்களுக்கு ஸத்குருவாகவும், யோகிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார். இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. 

கோரக்ஷாத்யை: முய ஸுசிஷ்யை: பரிவீதம்
கோ-விப்ராணாம் போஷணஸக்தம் கருணாப்திம்
கோ-லக்ஷ்மீ சாம்புஜப கிரிஜா ஸகரூபம்
தத்தாத்ரேய ஸ்ரீபாத பத்மம் ப்ரணதோஸ்மி.

ஆந்திர மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தத்தாத்ரேயர் ஆலயங்கள் உள்ளன. இவர் அனக தத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். இருவரும் இணைபிரியாத தம்பதிகள் ஆவர்.  

இந்த அனகாதேவியைக் குறித்த அனகதத்தா விரதத்தினை அனுஷ்டிப்பதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆண்டில் ஒருமுறை மட்டும் இதைச் செய்யலாம்.

அனகலட்சுமி என்ற லட்சுமி தேவியின் அம்சமாகவும்; சிவபெருமானின் அம்சமாக நெற்றியில் மூன்றாவது கண், ஜடை, ருத்திராட்சங்கள் அணிந் தும் அனகாதேவி காணப் படுகிறாள். இரு புறங் களிலும் சங்கு, சக்கரம் உள்ளன. மேலும் சிரசில் சந்திரன், கங்கையைச் சூடியுள்ளாள். வலக்கை அபயம் காட்ட, இடக்கரம் திரிசூலம் ஏந்தியுள் ளது. வலது கால் மடக்கி இடக்காலை தொங்க விட்டு ஆதிசேஷன்மீது அமர்ந்துள்ளாள். பூவின்மீது வைத்துள்ள அவளது இடது பாதத்தின்கீழ் சிறிய நந்தி விக்ரகம் காட்டப் பட்டுள்ளது. இந்த அனகாதேவி மகாலட்சுமி மற்றும் மும்மூர்த்திகளின் அம்சமாகவும் வழி படப்படுகிறாள். ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரத்தில் கீழ்க்கண்ட 32-ஆவது நாமம் ஸ்ரீ அனகா தேவியைக் குறிக்கிறது.

"அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

மேலும்,

""யோனி முத்ரா, த்ரிகண்டேசி
த்ரிகுணாம்பா, த்ரிகோணகா' அனகா,
அத்புதசாரித்ரா, வாஞ்சிதார்த்த ப்ரதாயினி'

என்ற 180-ஆவது லலிதா ஸஹஸ்ரநாம சுலோகத் திலும் ஸ்ரீ அனகாதேவியைப்  பற்றிய குறிப்பு உள்ளது. 987-ஆவது நாமமான அனகா என்ற சொல்லுக்கு பாபம், துக்கம் யாதொன்றும் அணுகாதவள்' என்பதே பொருள்.


அனகாதேவியைக் குறித்த விரதம் தத்த அனகலட்சுமி விரதம் என்றும்; அனகாஷ்டமி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் துவக்கி வைத்தவர் ஸ்ரீபாத வல்லப சுவாமிகள் ஆவார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை (கிருஷ்ண பட்ச) அஷ்டமி நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீ அனகா தேவி பூஜை செய்வது சிறப் பானது. அல்லது ஓராண்டில் மாக (மாசி) மாதம் தேய் பிறை அஷ்டமி நாளன்று செய்யலாம். தம்பதியராக இந்தப் பூஜை செய்வது சிறந்தது. இந்த பூஜையைச் செய்வதன் மூலம் மணப் பேறு, மகப்பேறு, செல்வம், குடும்ப அமைதி, மனநலம், உடல்நலம் கிட்டும் என்று கூறப்படுகிறது. விரத நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.

இந்த விரத பூஜை செய்ய நான்கு கால்கள் கொண்ட ஒரு சிறிய பீடத்தின்மீது கிழக்கு நோக்கி பச்சரிசி நிரப்பப்பட்ட கலசம் வைத்து அலங்கரித்து, பூஜைக்குரிய பொருட்களை சேகரித்துக் கொண்டு பூஜையைத் துவக்க வேண்டும். கலசத்தின்மீது தரையில் சிறிது பச்சரிசி பரப்பி, விநாயகர், தத்தர், மகாலட்சுமி சிலைகள் அல்லது படங்களை வைத்து ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பூஜை, கலச பூஜை, ஆவாஹனம் (ஸ்ரீ அனக லட்சுமி சகித ஸ்ரீ அனக தத்தாய நமஹ- ப்ரம்ம விஷ்ணு மஹேஸ்வர  சும்பன் த்ரிகுணாத்மக நமோஸ்துதே), குங்கும அர்ச்சனை செய்து தத்தாத்ரேயர், அனகா தேவி கதையைப் படிக்க வேண்டும்.

தத்த அனகலட்சுமி தேவி பூஜை செய்ய இயலாதவர்கள் தேவியைக் குறித்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி மனதார வழிபடலாம்.


"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'  

கண் முன்னே நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள் .(வீடியோ காட்சி ) . திகிலில் உறைந்து கிடக்கும் ஆந்திர மக்கள் !!

| May 3, 2011
சன் T .V . யில் நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான - இந்த நிகழ்ச்சி , கொஞ்சம் பரபரப்புக்கும், சுவாரஸ்யத்திற்க்கும் குறைவில்லாத சம்பவம். வேறு கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா ? என்று விஞ்ஞானிகள் உலகமே ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி செய்து கொண்டு  இருக்கும்போது, இந்த சம்பவம் , இன்னும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.  சன் TV யில், பார்க்காதவர்களுக்கு , இந்த you tube லிங்க் : 
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2011 மே மாதம் முதல் 2012 நவம்பர் வரை

|
வரும்  மே மாதம் 16 ஆம் நாள் -  நவ கிரகங்களில் , அதிக வலிமை வாய்ந்த கிரகங்களாக கருதப்படும் - ராகு , கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு பகவான் - தனுசு ராசியிலிருந்து - விருச்சிகத்திற்கும், கேது பகவான் - மிதுன ராசியில் இருந்து - ரிஷபத்திற்கும் , பெயர்ச்சி ஆகிறார்கள். 

நமது ஜோதிட வாசகர்கள் அனைவரும் , தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். ராசி பலன்களை , மேலோட்டமாக படித்து விட்டு எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள். நாள் இதழ்களிலும், இணையத்திலும், வரும் பலன்கள் அனைத்தும் - பொதுப்பலன்களே. 

 இது வரை , ஜென்ம ராகு , கேது இருந்த ராசிகளான - மிதுன , தனுசு ராசிக் காரர்களுக்கு - இது ஒரு பெரிய தலை வலி நீங்கிய -மன நிறைவை தரும். ஆனால், ரிஷப , விருச்சிக ராசிகளுக்கு - தலை குடைச்சல் ஆரம்பம் ஆகும். ஏற்கனவே சனி பார்வையிலும் விருச்சிக ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். 

பொதுவாக , 1 - 5 - 9 வீடுகளில் உள்ள கிரகங்களுக்கு - நன்மை பயக்க வைக்கும் இயல்பு இருந்தாலும், இந்த இரண்டு  கிரகங்களும், அள்ளிக் கொடுத்து , பின்பு  தலையை தட்டுவதில் - தயை , தாட்சண்யம் பார்க்காத கிரகங்கள் . எனவே , நாம் அடக்க ஒடுக்கமாக , முறைப்படி வழிபாடு செய்து வந்தால் - ராகு , ராஜ யோகம் அளிப்பார். நமது முந்தைய கட்டுரைகளில் - ராகு பகவான் இயல்புகள் பற்றி நீங்கள் படித்து உணர்ந்து இருப்பீர்கள். 

முதலில் , இவர்கள் இந்த வீடுகளில் இருந்தால் - நல்லது தானா ?  என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. பணம் அள்ளிக் கொடுத்தால் மட்டும் போதுமா ..? குணம்..?! இவர்கள் இருக்கும் வீடுகளுக்கு சேதாரம் அதிகம்  தான்.

கடகம் ,  விருச்சிகம் , மீனம் ராசிக் காரர்கள் - இந்த ஒன்றரை வருட வாய்ப்பை முறைப்படி பயன் படுத்தினால் - நீங்கள் - கோடீஸ்வரராவது திண்ணம். ஆட்டம் , போட்டு - துள்ளல் கூட இருந்தால் - மிக உயரத்தில் இருந்து கீழே விழ வாய்ப்பு அதிகம். 

அதனால் , ராகு - கேது உங்கள் ராசிக்கு இருக்கும் இடங்களைப் பொறுத்து -  ஜனன ஜாதகத்தில் - இரண்டு கிரகங்களும் அமர்ந்து இருக்கும் நிலை அறிந்து - பலன்கள் , எப்படி இருக்கும் என்று உணர்ந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரை படித்து முடிக்கும்போது , நமது ஜோதிட வாசகர்கள் - நீங்களே பலன் சொல்லக் கூடிய அளவுக்கு - உங்களுக்கு தேவையான தகவல்கள் , இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு , சந்தேகம் எனில் - கேட்டுக் கொள்ளுங்கள்..

விருச்சிக, ரிஷப ராசிக் காரர்களும் , பிறக்கும் போது - யார் , யாருக்கெல்லாம் - ஜனன ஜாதகத்தில் - ராகு , கேது - ரிஷப , விருச்சிகத்தில் அமரப் பெற்றவர்கள் அனைவரும் - முறைப்படி வழிபாடு செய்வது அவசியம்.

ராகு கால துர்கை வழிபாடும், விநாயகர் வழிபாடும் - உங்களை அவமான , அசிங்கங்களிலிருந்து கவசம் போல் பாது காக்கும். 

மொத்தத்தில் - இந்த ராகு , கேது பெயர்ச்சி - ஆறு ராசிக் காரர்களுக்கு - 
ஏதோ ஒரு விதத்தில் - பாதிப்பு ஏற்படுத்தும். வளர்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்வது - உங்கள் வழிபாடு மட்டுமே  . இல்லையேல்,  இப்போது இருக்கும்  நிலையை விட கொஞ்சம் மேலேறி - சறுக்க  வாய்ப்பு அதிகம். 
ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் - இந்த ஆறு ராசிகளும் - இந்த பெயர்ச்சியால் - சலனப் படும் ராசிகள். மீதி ஆறு ராசிக் காரர்களும், பெரிய அளவில் - மாற்றம் ஏற்படாது. இந்த பெயர்ச்சியால்  அலட்டிக் கொள்ள தேவை இல்லை .

சரி, இப்போது நமது வாசகர்கள் அனைவருக்கும் - ராகு, கேது பற்றிய மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுத்துள்ளோம்.

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள்.

இது விதி . ஆனால் என் அனுபவத்தில் - கேது ,  ராகு , செவ்வாய் , சனி , குரு , சூரியன், சுக்கிரன் , புதன், சந்திரன் ---- என்ற வரிசையிலே கிரகங்கள் - பலன் அளிப்பதை நான் உணர்கிறேன். தீய பலன்கள் அளிப்பதில் , இதுதான் வரிசை என்பது எனது அபிப்பிராயம். அதாவது கேது தசை இருப்பதிலேயே கொடுமையாக இருக்கிறது.. அதன் பின் ராகு .. பின் செவ்வாய்.. இப்படி... 
அதே நேரத்தில் - இவை நல்ல நிலைமையில் , அள்ளிக் கொடுக்கும் நிலையில் இருந்தால் ... பலன்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன.

ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.  

சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.

மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். 

ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். அதேசமயம் 6-ல் ராகுவோ கேதுவோ வந்தால், 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்பதால் அவற்றைக் கெடுக்கும். அதாவது எதிரி, விவகாரம், வைத்தியச் செலவு, கடன் ஆகியவற்றைக் கெடுப்பார். அதனால் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். 

எனவே ராகு- கேதுவுக்கு 3, 6, 8, 11, 12-ஆம் இடங்கள் நற்பலன்களைத் தரக்கூடிய இடங்கள் என்றும்; மற்ற இடங்கள் அனுகூலம் இல்லை என்றும் கூறலாம். ராகுவும் கேதுவும் தாம் நின்ற ராசியில் இருந்து 3-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். பொதுவாக எல்லா கிரகங்களும் 7-ஆம் ராசியை (180- ஆவது டிகிரி) பார்க்கும். குருவுக்கு 5, 9-ஆம் பார்வையும் சனிக்கு 3, 10-ஆம் பார்வையும் செவ்வாய்க்கு 4, 8-ஆம் பார்வையும் விசேஷப் பார்வை என்பது போல, ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 11-ஆம் பார்வை விசேஷப் பார்வை.

ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. 

கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.

புராணத்தில் ராகு- கேது

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.

பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.

துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.

இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.

ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை

கிரகத்தன்மை ராகு கேது

1. நிறம் கருப்பு சிவப்பு

2. குணம் குரூரம் குரூரம்

3. மலர் மந்தாரை செவ்வல்லி

4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்

5. சமித்து அறுகு தர்ப்பை

6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி

7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,

சித்திரகுப்தன், விநாயகர்

8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்

9. திசை தென்மேற்கு வடமேற்கு

10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்

11. வாகனம் ஆடு சிங்கம்

12. தானியம் உளுந்து கொள்ளு

13. உலோகம் கருங்கல் துருக்கல்

14. காலம் ராகுகாலம் எமகண்டம்

15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை

16. பிணி பித்தம் பித்தம்

17. சுவை புளிப்பு புளிப்பு

18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்

19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,

செவ்வாய் செவ்வாய்

20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு

21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)

22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்

23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம் சதயம்

24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்

25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா

26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது

27. உருவம் அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,

பாம்பு உடல் அசுர உடல்

ஸ்தோத்திரங்கள்

ராகு ஸ்தோத்திரம்

அர்த்தகாயம் மஹாவீர்யம்

சந்த்ராதித்ய விமர்தனம்

ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம் யஹம்

ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்


ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்

போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப்

பாகு சேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற

ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!கேது ஸ்தோத்திரம்

பலாச புஸ்ப ஸங்காசம்

தாரகா கிரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராத் மகம்

கோரம் தம் கேதும் ப்ரணமாம் யஹம்
 


கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத்


கேது துதி

பொன்னையன் உரத்திற் கொண்டோன் புலவர் தம் பொருட்டால் ஆழி

தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற

பின்னை நின் கரவாலுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்

என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே!

 

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com