Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை

| Apr 21, 2011

எப்படி விதி என்ற ஒன்று , யாராலும் வரையறுக்கப்பட முடியவில்லையோ - அதேபோலே தான் - கடன் தொல்லையும். எப்பொழுது கடன் தீரும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், தவிக்கும் ஏராளமானோரை எனக்கு தெரியும். கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக்கொண்டு, முழி பிதுங்க - வாங்கிய அசலை விட ஐந்து மடங்கு வட்டி கட்டி , தப்பி வந்தவர்களை --- வந்த பிறகு அவர்கள் முகத்தில் தெரிந்த - sign of relief - மகிழ்ச்சி , விவரிக்க இயலாதது.

கடன் , அதன் முழு வீர்யம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் - அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.


தற்கொலை வரை முயன்று - அதன் வாயில் இருந்து மீண்டு கரை சேர்ந்தவர்களும் உண்டு. குடும்பம். மனைவி குழந்தைகள் என அனைவரையும் பிரித்து - அநாதை போன்ற அமைப்பையும் - இந்த கடன் ஏற்படுத்தி விடுகிறது.

என்னிடம்  - ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் - துளியும் தயங்காமல் நான்  பரிந்துரைப்பது - கனகதாரா ஸ்தோத்ரம்.

காலை ஐந்து மணிக்கு - குளித்து முடித்து - முழு நம்பிக்கையுடன் - இந்த ஸ்தோத்திரத்தை , பாராயணம் செய்தால் - 100 % சதவீதம் நீங்கள் கடனிலிருந்து தப்பலாம்.

இதை நான் மிகுந்த ஆய்வுக்குப் பின் - நான் நமது வாசகர்களிடம் பரிந்துரைக்கிறேன்.  எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம  முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி - நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். அது, உடற் பயிற்சி யாக இருந்தாலும் சரி,  படிப்பது , வித்தை பயில்வது போன்ற எந்த செயலாக இருந்தாலும் சரி.

இப்படிப் பட்ட சூழலில்  ,     நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது - உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மிக மிக அபூர்வ , அதிர்வு ஏற்படுத்தும்
அற்புத வழிமுறை இது.

நமது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள கனக தாரா ஸ்தோத்ரம் - முழு பாடலையும் பார்க்க "கிளிக்"கவும் ...  kanaka thaara Stothram
http://www.goddessgift.com/images/goddess-Lakshmi.jpg
சரியாக - 48 நாட்கள் இடை விடாமல் - இந்த கனக தாரா ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் - நீங்கள் உங்கள் கடன் அடைந்து , நிம்மதிப் பெருமூச்சு விடுவது உறுதி. அப்படி ஒரு மண்டலம் நீங்கள் செய்யும்போது , இடையில் வரும் வெள்ளிக் கிழமைகளில் , நீங்கள் மகா லட்சுமி பூஜையும் செய்வது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும். மகாலட்சுமி பூஜை செய்வது பற்றி , இணையத்தில் தேடும்போது - கீழே உள்ள விவரங்கள் கிடைத்தன. மிக சுலப வழியாக இருக்கவே , அதையும் கொடுத்துள்ளேன்.


வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:

குத்து விளக்கு ,  உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில் , பால் - ஒரு கிண்ணம் (சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  தண்ணீர் - ஒரு கிண்ணம் , குங்குமம் , சந்தனம்/மஞ்சள் ,
பெரிய தாம்பாளம், லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு  /  அல்லது  சிறிய மகா லக்ஷ்மி விக்ரகங்கள் 

சர்க்கரை பொங்கல்  , முளை கட்டிய கருப்பு கொண்டை  கடலை (சுண்டல் ) - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)

பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டை கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள். முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

பணத்தை மதித்து - நடந்தாலே அவர்களுக்கு - மகாலட்சுமியின்  பரிபூரண அருள் கிட்டும்.

3 comments:

K. S. Prakasam said...

பணத்தை மதித்து - நடந்தாலே அவர்களுக்கு - மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிட்டும்

Read more: http://www.livingextra.com/2011/04/blog-post_21.html#ixzz3oiTmYjrL

பணத்தை மதித்து - நடந்தல் என்றால் என்ன?
செலவு செய்யாமல் இருப்பதா?

Mahesh said...

Really very nice information, I would like to subscribe to the daily news letters from your site and also want to know has a very use full information on goddess laxmi

Mahesh said...

Its very informative when am in trouble I used to worship gods and goddess and One day I worshipped Goddess laxmi by chanting mahalakshmi stotram which changed my entire life and removed all my egos.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com