Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

உலகத்திலே பேசப்படுற எந்த மொழி உங்களுக்கு கத்துக்கணும்.. ? ரொம்ப ஈசி... அருமையான ஒரு இணைய தளம்...

| Apr 19, 2011
நமது வாசக அன்பர்களுக்கு வணக்கம். வேலைப்பளு , வெளியூர் பயணம் என்று கொஞ்சம் டைட் ஷெட்யூல்  . அதனால் வழக்கம்போல  பதிவுகள் இட தாமதம் . மன்னிக்கவும். இந்த வார இறுதியிலிருந்து மீண்டும் சூடு பிடிக்கும். 


எவ்வளவு பிஸி யாக இருந்தாலும், அண்ணாமலையாரின் அருளால் சித்ரா பௌர்ணமி - கிரிவலத்தில் கலந்து கொள்ள முடிந்தது. கட்டுக் கடங்காத கூட்டம். திருவண்ணாமலையே திமிலோகப்பட்டு விட்டது. 

குழந்தைகளையும், குடும்பத்தையும் கூட்டி வந்து - பேருந்து கிடைக்காமல் தவித்து நின்ற கூட்டத்தை காணும்போது, ஒவ்வொரு ஆலயத்திலும் கூட்டம் அலை மோதியதை பார்க்கும்போது - பௌர்ணமிக்கு செல்வதை விட, கூட்டம் குறைவாக இருக்கும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை செல்வதே நல்லது என்ற எண்ணம் தோன்றி விட்டது. அனேகமாக 20 லட்சம் பேர் வந்து இருக்க கூடும்.  அனேகமாக இந்த முறை வந்தவர்களில் , 10 க்கு 8 பேராவது இதே மாதிரி யோசித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்... Just too much to bear it . ....

நீங்க யாராவது வந்து இருந்தீங்களா?  
ஆனால், ஒரு சில அதிசய சம்பவங்கள் நடந்தன. அதை இன்னொரு பதிவில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

இது, இணையத்தில் வேறு ஒரு மொழியில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட முனைந்தபோது , அகஸ்மாத்தாக கிடைத்த தளம். நல்ல சுவாரஸ்யம். அந்த தளம் பற்றிய தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.
உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது. உங்களுக்குரிய மொழியைத் தேர்வு  செய்து கற்கலாம். கற்ற மொழிக்கு ஏற்றவாறு பயிற்சிகள் செய்யலாம்.
அதே நேரம் நீங்கள் கற்ற மொழியை பேசிப்  பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். உங்களுக்கு வேறு மொழி தெரிந்தால் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம்.
விருப்பம் இருக்கும் அன்பர்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள்.
 

இந்த தளத்திலிருந்து நீங்கள் course material - டவுன்லோட் செய்து கொள்ளலாம்...  


நமது வாசகர் வட்டாரத்திலேயே, உலகின் மூலை முடுக்கு எல்லாம் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்...

ஏதாவது ஒரு மொழி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுவதை , முயற்சி செய்து பாருங்களேன்.. ஒரு ஆறு மாதம் முயற்சி செய்தால் , நிச்சயம் வெற்றி பெறலாம்.

3 comments:

THEIVAM said...

கிரிவலம் பத்தி ஒரு கட்டுரை எழுதினா உபயோகமா இருக்கும், எப்ப போகலாம் குடும்பத்தோட குழந்தைகளை கூட்டிக்கிட்டு கும்பல் இல்லாதப்ப போகலாமா இல்ல பெளர்ணமிக்கு மட்டும்தான் போகனுமா மத்த நாட்கள் போனா பலன் இருக்குமா தெளிவா ஒரு கட்டுரை போட்டா உபயோகமா இருக்கும்

thiru said...

எவ்வளவு பிஸி யாக இருந்தாலும், அண்ணாமலையாரின் அருளால் சித்ரா பௌர்ணமி - கிரிவலத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

-- சித்ரா பௌர்ணமி அன்றைக்கு கிரிவலம் வந்தால்தான் அண்ணாமலையாரின் அருள் நமக்கு இருக்கிறது என்று எண்ணும் மக்கள் அதிகம் பேர் இருப்பதால் தான் அவ்வளவு கூட்டம்.

பௌர்ணமிக்கு செல்வதை விட, கூட்டம் குறைவாக இருக்கும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை செல்வதே நல்லது என்ற எண்ணம் தோன்றி விட்டது

-- என்னைப் பொறுத்தவரை கூடிய மட்டும் தனிமையில், அல்லது கூட்டம் குறைவான கோயிலில் ஏற்படும் மன நிறைவு இத்தகைய விழாக் கூட்டங்களில் கிடைப்பதில்லை

Gobinat said...

அடியேனும் கிரிவலம் வந்தவர்களில்
ஒருவன், உண்மையிலேயே
மிக அதிகமான கூட்டம் தான். இருந்தாலும் அண்ணாமலையருடைய கருணை இன்றி ஓரணுவும்
அசையாது என்றும் இவ்வள்ளவு மனிதர்களை ஈர்க்கும் சக்தி அந்த ஈசனுடையதே என்ற எண்ணம் எழுந்தது. மாத சிவராத்திரியில் சென்றால் நிம்மதியான தரிசனம் கிடைக்கின்றது.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com