Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

முடிஞ்சா சிரிக்காம படிங்க பாக்கலாம்.. ( தமிழ் ஜோக்ஸ் )

| Apr 7, 2011

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்.

பாடகர் : அப்படியா?

ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.
 ===================================================================
டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.
===============================================================

ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

 ==============================================================
எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.

எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.

 ==============================================================
நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.

டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..

நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?

==============================================================
http://www.img.amazingonly.com/Hot/2011/Feb/25B/Bhavana_Cute_1.jpg

அடுத்து கீழே உள்ளது , நம்ம மதிப்பிற்குரிய தேவகோட்டை சுப்பையா சார் எழுதிருந்த ஜோக். முடிஞ்சா , சிரிக்காம படிங்க..... நீங்க எவ்வளவு தூரம் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியும் னு பார்க்கலாம்.  நல்ல அருமையான தமிழ் நடை.

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம்  சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,

இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,


முன்னாள் காதலன்.

 =========================================================

ஜோக்கையெல்லாம் படிச்சுட்டு , யாராவது சிரிக்காம இருந்து இருந்தா, தயவு செய்து கொஞ்சம் பின்னூட்டம்  இடுங்கள். ... ஒன்னும் இல்லை , உங்களையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் .. நாமளும் கொஞ்சம் Improve பண்ணிக்கலாம்னு தான். 

சிரிச்சாக் கூட , உங்களுக்கு புடிச்சு இருந்தா கூட ... பின்னூட்டம் இடலாம்..  காசா.. பணமா ? ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டீங்க..

15 comments:

vithyasagar said...

Super jokes

vithyasagar said...

nalla nagaisuvaigal(Bavana photo super) innum ungakitta neraya ethir parkiren.

perumal sundaram said...

super

kkssenbrothers said...

super...

Naaradhar said...

Good one

Naaradhar said...

Good one

Radha Mohan said...

Waste... Mokka.....

K V Kannan said...

I Like it Very much..... Super... That "காதலிக்கு ஓர் கடிதம்!" is Very Nice one.

MS KOTTI VASAN said...

'kaadhalikku oru kaditham' romba nallaa irunthathuppa...

சிவா said...

பெருசா சிரிப்பு வரலை சார்! ஏதோ ஒரு புன்முறுவல் மட்டுமே எட்டிப் பார்த்தது! So, உங்களை கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்!

ஹி..ஹி..ஹி... (சும்மா.. டமாஷ்)

நகைச்சுவைகள் அனைத்தும் சிவகாசிப் பட்டாசுகள்!

jai said...

I realy love this

jai said...

i realy love this

THIRUMAL said...

SUPERPPU

Arun said...

நான் சிரிக்கவே இல்லை! "காதல் கடிதத்தை" படிக்கும் வரை! சிரிப்பை அடக்க முடியவில்லை, கடிதத்தை படித்து முடித்த பிறகும்

Ravi Subramanian said...

கடிதம் சிரிப்பைப் படித்து சிரிக்காமல் இருந்தவர்கள் இருப்பின் ஆயிரம் வராகன் பொன் பரிசைக் தைரியமாக வழங்கலாம். அம்மாடி அருமையான ஆபாசமில்லாத சிரிப்பு. வாழ்க நீவிர், சிரிப்பும் சிந்தனையுடன் பல்லாண்டு. ரவி சுப்பிரமணியன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com