Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் (ஏப்ரல் 14 , 2011) - கர ஆண்டு

| Apr 7, 2011
கர ஆண்டு  பொதுப்பலன்களை இங்கே பிரசுரித்து இருக்கிறோம். 

 மே மாதத்தில் நடக்கவிருக்கும் குருப் பெயர்ச்சி பலன்கள் ( மே மாதம் - 2011 , மீனம் ராசியிலிருந்து  -  மேஷ  ராசிக்கு ) , மற்றும் ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் ( மிதுன - தனுசு ராசிகளிலிருந்து  விருச்சிக - ரிஷப ராசிகளுக்கு ), இரண்டையும் கணக்கில்  கொண்டும்,  மேலும் 2011 டிசம்பர் மாதத்தில் நடைபெற விருக்கும் சனிப் பெயர்ச்சி பலன்களை கணக்கில் கொண்டும், மேலும் நவ கிரகங்களின் கிரக இருப்பையும் - துல்லியமாக கணித்து -  12 ராசிகளுக்கும் உரிய தமிழ் புத்தாண்டுப் பலன்களையும்  அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வழிபாட்டு , பரிகார முறைகளையும் - இன்னும் சில தினங்களில் பிரசுரிக்கவுள்ளோம். பழுத்த அனுபவம் வாய்ந்த ,  நமது ஜோதிடர் திரு. கோபால கிருஷ்ணன் அவர்கள் -- இந்த காரியத்தில் , கடந்த சில தினங்களாக , முழு முனைப்பில் இறங்கி உள்ளார். அவருக்கு, எமது வாழ்த்துக்களும், நன்றிகளும் .

இன்னும் ஒரு சில தினங்கள் , வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.நமது வாசகர்கள் பார்வைக்காக , தினகரன் - பதிவு இட்ட கர ஆண்டு பொதுப்பலன்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கர வருடம், 14.4.2011 வியாழக்கிழமை காலை மணி 11.27க்கு சுக்ல பட்சத்தில் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில், நவாம்சத்தில் மீன லக்கினம், மிதுன ராசியில், கண்மம் நாமயோகம், பாலவம் நாம கரணம், அமிர்தயோகம் நேத்திரம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில், மூன்றாவது சாமத்தில், ஆந்தை நடை பயிலும் நேரத்தில், கேது தசையில், குரு புக்தி, சூரியன் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் பிறக்கிறது. 

கர வருஷத்திய பலன் வெண்பா:
‘கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்
உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்&நிறைமிகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்
பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.’
 
வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார். 

இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்களை விட, விதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகழடைவார்கள். மந்திரியாக குரு வருவதால் அரசியல் சூழ்நிலை பலவித வடிவங்களை எடுக்கும். எதிர் கருத்தும் பலத்து ஒலிக்கும். அர்க்காதிபதி, மேகாதிபதி மற்றும் சேனாதிபதியாக புதன் வருவதால் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். தனியார் பள்ளிகளுக்கும் அரசுக்குமிடையே நிலவி வரும் பனிப்போர் விலகும் என்றாலும், 20.12.2011 வரை வித்யாகாரகன் புதன் வீட்டில் சனி நீடிப்பதால் தனியார் பள்ளிகள் பாதிப்படையும். 

மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை அதிகரிக்கும். ஆனாலும், பாலியல் தடுமாற்றங்களும் பெருகும். சுதேசித் தொழில்கள் மீண்டும் வளரும். என்றாலும் சுய தொழில் தொடங்குவோர் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். சூறாவளிக் காற்றால் இயல்புக்கு அதிகமாக மழை கொட்டும். வெள்ளச் சேதம் அதிகரிக்கும். கந்தக பூமியும், பாலைவனமும் செழிக்கும். 

சேனாதிபதியாக புதன் வருவதாலும் 20.12.2011 வரை கன்னியில் சனி நீடிப்பதாலும் சீனா, இலங்கை நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்
இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும். நேபாளம், பாகிஸ்தான் மூலமாகவும் தீவிரவாதிகள் நுழைவார்கள். ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சூரியன் வருவதால் வெயிலின் சீற்றம் கடுமையாக இருக்கும்.

அயல்நாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப வேண்டி வரும். பெட்ரோல், டீசல் விலை உயரும். பிளாட்டினம் மற்றும் கனிம, கரிம வளப்பகுதி கண்டறியப்படும். தானியாதிபதியாக சுக்கிரன் வருவதால், மழையால் உணவுப் பொருட்கள் சேதமடையும். தானியக் களஞ்சியங்களில் தீ விபத்து உண்டாகும். அரிசி, சர்க்கரை விலை உயரும். அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் உண்டு. பூமி விலை உயரும். கட்டிடங்கள் விலை சற்றே குறையும். தங்கம் விலை உயரும். ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை குறையும். 

கர ஆண்டின் மகர சங்கராந்தி தேவதையாக வணஜீ என்ற ராட்சசன், எருமைக்கிடா வாகனம் ஏறிவருவதால் உலகெங்கும் மக்களிடையே மரண பயம் உண்டாகும். சாலை விபத்துகள், விமான விபத்துகள் அதிகரிக்கும். பழிவாங்கும் குணமும், குறுக்கு வழியில் முன்னேறும் போக்கும் அதிகரிக்கும். உள்நாட்டுக் குழப்பம், உள்குத்து வேலைகள் பரவலாகக் காணப்படும். உலகில் புகழ்பெற்ற வியாபார மையங்கள், சுற்றுலா மையங்கள், அரண்
மனைகள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கும். வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் ஓரளவு செழிப்படைவார்கள். 

இந்த வருடம் முழுக்க சுக்கிரன் வக்கிரமடையாமல் காணப்படுவதால் சினிமா துறை சூடுபிடிக்கும். புதிய படங்கள் அதிகம் வெளியாகும். தொலைக்
காட்சிகள் அமைப்பில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்று போன படங்களும் வெளியாகும் என்றாலும், 21.11.2011 முதல் சனி பகவான் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமர்வதால் பெண் கலைஞர்களுக்கு சவாலான காலகட்டமாகும். விவாகரத்து சம்பவங்கள் அதிகரிக்கும். முன்னணி நடிகர்கள், போட்டி காரணமாக பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். புதுமுகங்கள் பிரபலமடைவார்கள். வியாபாரிகளையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்
படுத்த கடுமையான சட்டம் வரும்.  

18.4.2011 முதல் 16.7.2011 வரை மற்றும் 23.7.2011 முதல் 17.10.2011 வரையிலான காலகட்டங்களில் அரசியல் குழப்பங்கள், என்கவுன்ட்டர், இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். 15.6.2011 அன்று கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் மேஷம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய குறைவும், பண இழப்பும் ஏற்படும். 10.12.2011 அன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் தமிழறிஞர்கள், மூத்த பேராசிரியர்கள், கலைத்துறையினர் பாதிக்கப்படுவார்கள். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ரத்தம், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து நீங்கும்.
சிம்ம ராசியிலேயே செவ்வாய் 4.11.2011 முதல் 14.8.2012 முடிய நீடிப்பதால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெள்ளப் பெருக்கால் பூமி சுருங்கும். காவல் துறையில் களை எடுப்பு அதிகரிக்கும். 7.2.2012 முதல் 10.4.2012 வரை செவ்வாய் வக்ரமாவதால் நிலநடுக்கம் உண்டாகும். 

மின்வெட்டை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மின்சார கட்டணம் உயரும். காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிக்கும். அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்னை வெடிக்கும். மீனவர்கள் பாதிப்படைவர். 

7.9.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரமாவதால் வங்கிகள் தடுமாறும். வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும். கர ஆண்டு தொடக்கம் முதல் 10.6.2011 வரை மற்றும் 5.2.2012 முதல் கர வருடம் முடியும் வரை சனி வக்ரமாவதால் அரசியலில் குழப்பங்களும், சுரங்க விபத்துகளும் அதிகரிக்கும்.

பரிகாரம்: இந்த கர வருடத்தில் மனோகாரனாகிய சந்திரனை இரண்டு கிரகணங்கள் தாக்குவதாலும், ஆத்மகாரனாகிய சூரியனின் வீட்டில் செவ்வாய் 4.11.11 முதல் ஏறக்குறைய முக்கால் வருடம் சிம்மத்திலேயே நீடிப்பதாலும் மக்களிடையே மனோபீதியும், எதிர்மறை சிந்தனையும் நிலவும். 

இதிலிருந்து விடுபட, விக்னங்களை விரட்டும் விநாயகரை, வெற்றிலை மீது மஞ்சளால் பிடித்து வைத்து அறுகம்புல் சாற்றி வணங்குங்கள். பிரிந்துபோன சொந்தங்களிடம் மனம்விட்டுப் பேசி உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். விரோதப் போக்கு விலகும்.

ஏற்கனவே ஜோதிட பாடம் பயின்று வரும் , நமது வாசக அன்பர்கள் - மேலே கூறிய பலன்களை - அந்த குறிப்பிட்ட தினங்களில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப , என்ன காரணத்தால் - இந்த பலன்கள் கூறப்பட்டுள்ளன , என்பதை ஆராய்ந்துகொள்ளவும் மேற்கூறிய பொதுப்பலன்கள் - உதவியாக இருக்கும். 


1 comments:

Anonymous said...

You are doing a great service in the current era of mind control through digital meadia when our younger generation is slowly made to forget their roots. Your articles need to be etched on stone for the future generation. I think you should find ways to improve the number of vistors by linking your site to some of the popular websites..in tamil related to health and sprituality.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com