Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

ஜோதிட சூட்சுமங்கள் : ஜோதிட பாடம் : 019 ( செவ்வாய் தோஷம் )

| Apr 16, 2011

வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஜோதிட பாடத்தில் செவ்வாய் தோஷம் பற்றி பார்க்க விருக்கிறோம்.


திருமணப் பொருத்தம் பார்க்கும்போது , கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் செவ்வாய் தோஷமும் ஒன்று. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி. 

செவ்வாய் ரத்த காரகன். யுத்த காரகன். எனவே பொருத்தம் பார்க்க விரும்புபவர்கள் செவ்வாய் இருக்கும் நிலையை சரியாக கணிக்க வேண்டி இருக்கிறது. செவ்வாய் நீசமாகவோ, பலமின்றியோ இருந்தால் ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். 

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான காம உணர்ச்சி இருக்கும் . தாம்பத்தியத்தில் தொடர்ந்து நாட்டம் இருக்கும். ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர்.


தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்க்கு மறுப்பு தெரிவிப்பார்.


ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று  விளையாட்டாக கூறினாலும், அதை  தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.


செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர்.  சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு. 


சில விதிவிலக்குகள் உள்ளன :
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால்  தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.


 மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
இதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு.

தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.

எனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது. 

சரி, இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளை காண்போம்.
அன்பர்களே , இது அனைத்தும் பொதுவான விதி முறைகள் தான். ஆனால், ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாகவும், குல தெய்வம் அருளும் , உங்களை பெற்றவர்களை, அல்லது புகுந்த வீட்டில் மாமனார் / மாமியாரை  பொறுப்பாக  கவனித்து நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியமும் இருந்தால், எந்த நாளும் உங்களுக்கு , ஒரு தீங்கும் ஏற்படாது. இது நான் ஆராய்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஜாதகங்களிலிருந்து , எனக்கு கிடைத்த அனுபவ முடிவு. 


இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் :
 

7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு.  ( யோகமா  ??  ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே ! )

7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது 7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ , இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ
7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
இரண்டாம் தாரம் உண்டா என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஸ்தானம் - பதினொன்றாம் வீடு தான். அந்த வீட்டின் நிலைமை, வீட்டு அதிபதியின் நிலைமை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விதவைப் பெண் :

 
7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை  பெற்றால் , சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில்  அவள் விதவையாவாள்.

மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால்  இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.

விவாகரத்து :

 
மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்

லக்கினாதிபதி,  7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும் , 
12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும், 

7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:
இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். ஆறாம் ஸ்தானம் கடன் , நோய் எதிரி. ஏழாம் வீடு களத்திரம் . இல்லையா?

அப்படிப்பட்ட ஏழாம் வீட்டிற்கு - ஆறாம் வீடு , பன்னிரெண்டாம் வீடாக , அதாவது விரய  ஸ்தானமாக வருகிறது. ஆறுக்கும், ஏழுக்கும் - ஜாதகத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள்.... உங்களுக்கே வியப்பாக இருக்கும்.  இப்படி இணைந்து இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை சண்டைக் கோழியாகத் தான் பெரும்பாலும் அமைகிறது. மோசமான தசா / புக்தி காலங்களில் அவர்கள் கோர்ட் படியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
===========================

சரி, இன்றைக்கு பாடம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முந்தைய பாடங்கள் சரி வர புரிந்து இருந்தால்  தான் வர விருக்கும் பாடங்கள் - உங்களுக்கு எளிதில் புரியும். ஏதாவது சந்தேகம் இருப்பின் , தொடர்பு கொள்ளுங்கள்.... வாசகர்கள் தொடர்ந்து அளிக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி... வந்தனம்.


மீண்டும் சிந்திப்போம்..

4 comments:

MANI said...

பாடம் நன்றாக உள்ளது நன்றி. செவ்வாய் தோஷம் விலக்கு பற்றி எழுதியவற்றில் சில ஐயங்கள் எழுகின்றன.

பொதுவாக செவ்வாய் ஒரு பாப கிரகம் நம் உடலில் வலிமையை குறிக்கும் கிரகம். அவர் பலம் பெற்று குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான ஸ்தானங்களில் (1,2,4,7,8,12) இருந்தால் அவர் இருக்கும் இடம் மற்றும் பார்க்கும் இடங்களாக மேற்கூறிய இடங்களே வருவதால் தோஷம் (பாதிப்பு) ஏற்படும் என்பதாம்.

2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து அது செவ்வாய் ஆட்சி, உச்சம், நீச வீடுகள் என்றால் தோஷம் இல்லை என்பது எப்படி சரியாகும்.

ஒரு வேளை நீசம் என்றால் செவ்வாய் பலம் குறைந்து தோஷமில்லாமல் போகலாம். மற்றபடி ஆட்சி, உச்சம் போன்றவை செவ்வாய்க்கு பலத்தை அளித்து தோஷத்தை தராதா.

லக்கினப்படி செவ்வாய் பாவ ஆதிபத்யம் பெற்று மேற்கண்ட இடங்களில் இருந்து வலிமை பெற்றால் மட்டும் கடுமையான செவ்வாய் தோஷம் ஏற்படும் என்பதே சரியாகும். செவ்வாய் தோஷம் குரு வலிமையாக நல்ல நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே நிவர்த்தியாகும். ஓரளவு பாதிப்புகள் குறையும் என்று சொல்லலாம்.

மற்றபடி செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் என்று நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதாமல் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் விளக்கி எழுதினால் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

Anonymous said...

sevvai vizhusika laknam 7 (risabam) sevvai+kethu

ithu thosamatra amaipa?

by


kaveri

Senthil said...

செவ்வாய் தோஷம் இருக்கும் ஒரு பெனுக்கு செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு ஆனுக்கும் திருமணம் செய்தல் அந்த ஆனின் ஊயிருக்கு பதிப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்கு உண்மை ?

Sathish Kumar said...

can we marry kalathira thosa girls? please advice me

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com