Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

2011 குருப் பெயர்ச்சி பலன்கள் - 08 .05 .2011 - மே மாதம் ( மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு )

| Apr 27, 2011
Gurup peyarchchi palankal 2011  ( May ,08 , 2011 ) :

இந்த வருட குருப் பெயர்ச்சி - இதோ வந்து விட்டது. பஞ்சாங்கப்படி - இந்த மே மாதம்   8 ஆம் தேதி (08 .05 .2011 )  மீன ராசியிலிருந்து , மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுமார் 14 மாதங்கள் அங்கு தங்கி - சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பார்வையிட விருக்கிறார். இந்த மூன்று ராசிகளுக்கும் , ராஜ யோகம் ஆரம்பிக்க விருக்கிறது.. இது நாள் வரை , சனியின் பார்வையில் இருந்ததால் முழுவதும் செயல்பட முடியாமல் , இருந்த சுப கிரகமான குரு பகவான் - சுமார் ஆறு மாதங்கள் , சனிப் பெயர்ச்சி நடக்கும் காலம் வரை , அள்ளி அள்ளி கொடுக்க விருக்கிறார் என்பது திண்ணம்.

பலன்கள் அபரிமிதமாக கிடைக்க , அனைத்து ராசிக்காரர்களும் - வியாழக் கிழமைகளில் - குரு பகவானை , முறைப்படி வழிபாடு செய்து வர , முறைகள் இந்த கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 
 http://mysteriesoccult.com/blog/wp-content/uploads/2009/06/Dakshinamurthy_guru.jpg

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள்ஜென்மராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார்.

விரய குருவை விட ஜென்ம குரு மோசமானவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், சில முக்கியமான விஷயங்களில் , நன்மைகள் நிறைய கிடைக்கும். . இதனால் உங்களுக்கு நல்ல காலம் தான்.

ஜென்மராசியில் உலாவும்போது புத்திர ஸ்தானம், களததிர ஸ்தானம், தந்தை ஸ்தானம் ஆகியவற்றை குருபகவான்புனிதப்படுத்துகிறார்.

இதனால் பெரும் லாபங்களை அடையப் போகிறீர்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமுயற்சிகள் இத்தனை காலம் இழுத்தடித்து வந்திருக்கும். இனி அந்த முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.திருமணம் தொடர்பாக நல்லதொரு விஷயம் நிச்சயம் நடக்கும்.

திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறையும் தரப் போகிறார் குரு பகவான். லாட்டரி போன்ற அதிர்ஷ்டத்துக்கும்இடமுள்ளது. குருவின் அருட் பார்வையால் தன லாபம் அடையப் போகிறீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம்உண்டு. கேட்டதைக் கொடுப்பார் குரு.

இதுவரை பணப் பஞ்சத்தால் விரக்தியின் எல்லைக்கே போன உங்களுக்கு இனி யோக காலம் தான்.

ஆனால், இந்த வருட இறுதியில்  உடல் நலம் பாதிக்கப்படலாம்.செய்யும் தொழிலில் ஏமாற்றங்களும் ஏற்படலாம். பணத் தட்டுப்பாடும் உருவாகும். ஆனால் ஒரு மூன்று மாதங்களில் , நிலைமைநல்லபடியாக மாறிவிடும். கவலை வேண்டாம்.
============================================

ரிஷபம் (கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

லாபஸ்தானஸ்தில் இருந்தவர் விரய ஸ்தானத்துக்கு போகிறார். இதனால் கவலையடைய வேண்டாம்.

ஆரம்பத்தில் பிரச்சனைகளைத் தந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் நினைத்ததை விட மிக எளிதாகபிரச்சனைகள தீரும். குருவின் இந்தப் பெயர்ச்சியால் 4,6,8ம் இடங்களைப் பார்க்கப் போகிறார். 4ம் இடம்மனையைக் குறிக்கிறது. எனவே வீடு கட்டும் நல்ல யோகம் உங்களுக்கு வந்திருக்கிறது. 8ம் இடத்தைப் பார்ப்பதுநீங்கள் ரொம்ப லக்கி என்பதைத் தான் காட்டுகிறது. நீங்கள் கேட்கும்போது பணம் கிடைக்கும்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது. திருமணம் உள்பட பலவிதமான நல்ல நிகழ்ச்சிகள் நடக்கப்போகின்றன. இதனால் செலவுகளையும் சமாளித்தாக வேண்டும். அதே நேரம் பண வரவும் அதிகரிப்பதால் மிகமகிழ்ச்சியாய் செலவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தப் போகிறீர்கள். கடன்களை வாங்குவீர்கள், உடனேஅதை அடைத்தும் காட்டுவீர்கள்.

நீண்ட நாட்களாய் நினைத்திருந்த புனித பயணம் கைகூடும். உங்களது மதிப்பு கூடும் கால கட்டம் ஆரம்பமாகிறது.

சிலருடன் மோத வேண்டிய நிலையும் உருவாகும். குருவை வணங்கினால் அந்தத்தொல்லைகளை அவரே நீக்குவார்.
==============================================

மிதுனம் (மிருகசீரிஷம் 2,3ம் பாதம் முடிய, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனிமேல் லாபஸ்தானமாகிய 11ம்இடத்துக்கு வருகிறார்.

உங்கள் ராசியில் 3,5,7ம் இடங்களை பார்க்கப் போகிறார். இதனால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்பொங்கும். குழந்தைகள் சாதனைகள் செய்வார்கள்.

இதனால் நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இந்தக் கால கட்டம் மிக அமோகமாக,அற்புதமாக இருக்கப் போகிறது.

ஜூலை முதலே பலவிதமான நல்ல திருப்பங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ஊதியஉயர்வு, செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை இருந்த நெருக்கடிகள் மறையும், வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்புகள் உருவாகும்,திருமண நிகழ்ச்சிகள், குழந்தைப் பேறு என வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன.

அலைகழிப்புகள், சிறிய தொல்லைகள் தொடர்ந்தாலும் அவற்றை இதுவரை இருந்தது மாதிரி இல்லாமல் மிகஈசியாக சமாளிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி குடியேறும்.

நீங்கள் கனவிலும் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். மிகச் சிறந்த கால கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். எந்தசந்தோஷத்திலும் இறைவனை மறக்க வேண்டாம்.
============================================================

கடகம் (புனப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இனிமேல் 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

10 இடத்தில் குரு வருவது உகந்தது அல்ல தான்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிற்சில பிரச்சனைகள் வரலாம் . தடைகளும் தாமதங்களும் எரிச்சலைத் தரலாம். இருக்கும் சில வசதிகளைப் பறிப்பார் குரு. கர்மஸ்தானத்தில் குரு இருப்பதால் பெற்றோருக்கு சிறிய பிரச்சனைகள் வந்து போகும்.

முதலீடுகளை யோசித்துச் செய்யவும். எந்த வேலையிலும் பலமுறை சிந்தித்து செயலில் இறங்கவும். உங்கள் ராசியில் 2,4,6 ஆகிய இடங்களைப் பார்க்கப்போகிறார் குரு பகவான்.

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் அடித்து பணத்தைக் கொட்ட வைக்கும். புதிய வாகனம்வாங்கவும் வாய்ப்புள்ளது. வீடு வாங்கும் அதிர்ஷ்டமும் உள்ளது. அதே நேரம் பணத்துக்காக கொஞ்சம் அலை கழிப்புகள், தடைகள், தாமதங்கள் ஏற்படும்.

டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை கொஞ்சம் ஜாக்கிரதை வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குருவை வணங்கி வரவும்.
=====================================================================

சிம்மம் (மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம் முடிய):
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 9ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார். எனவே, குரு உங்கள் வாழ்க்கையில் பல மிகப் பெரிய நல்ல மாறுதல்களைக் கொண்டு வரப் போகிறார்.

செல்வ வளம் கொட்டப் போகிறது. வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாகும். இதுவரை இருந்து வந்த பலவிதமான தடைகளும் காணாமல் போகப்போகின்றன. பல சந்தோஷமான தருணங்களில் மூழ்குவீர்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி தான். மிகப் பெரிய திட்டங்களைப் போட்டு அவற்றை மிக எளிதாக வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வீட்டில்ஒற்றுமை ஓங்கும். வீடு வாங்கும் வசதிகளும் தேடி வரும்.

செய்யும் வேலையில் பெரும் வெற்றிகளை அடைவீர்கள். ஊதிய உயர்வும், விரும்பிய இடமாற்றமும், உயர் பதவிகளும் தேடி வரும். பலவிதமானஅதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. குழந்தைகளின் திருமண முயற்சிகள், உயர் கல்வி முயற்சிகள் எந்தவிதமான தடையும் இல்லாமல் நிறைவேறும்.

ராஜயோகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். ஒளிமயமான வாழ்க்கை ஆரம்பமாகிறது. இறைவனை வணங்கிவெற்றிகரமான வாழ்க்கைக்காக நன்றி சொல்லுங்கள்.
=====================================================================

கன்னி (உத்திரம் 4ம் பாதம் முடிய, ஹஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் இனிமேல் எட்டாம் இடத்துக்கு மாறுகிறார்.

உச்சத்தில் குரு பகவான் இருக்கப் போவதால் கிரக தோஷம் உங்களுக்கு இல்லை. இதனால் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. டென்சன்களைத்தருவார், சில சுகங்களைக் குறைப்பார். ஆனால், ஏடாகூடாமாக ஏதும் செய்துவிட மாட்டார். இதனால் கவலை வேண்டாம்.

அதே நேரத்தில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் எந்தச் செயலையும் செய்வது நல்லது.

எடுத்த காரியங்கள் முதலில் தடைபட்டாலும் பின்னர் நீங்கள் நினைப்பதைவிட எளிதாக, வேகமாக முடிந்துவிடும். ஏகப்பட்ட செலவுகள் ஏற்படும்.ஆனால், இவை சுபச் செலவு தான் என்பதால் கவலை வேண்டாம். பணத் தட்டுப்பாடு இருக்காது, செலவோடு சேர்ந்து வரவும் அதிகமாக இருக்கும்.

வீடு, வாகன சேர்க்கைக்கும் பெண்களுக்கு நகைகள் சேர்க்கவும் வாய்ப்புகளும் வசதிகளும் உருவாகும். உங்கள் பெயரில் அசையா சொத்தை வைப்பதைவிடவீட்டில் பிறரது பெயரில் பதிவு செய்யுங்கள். அது உங்களிடம் தங்கியிருக்கும்.

குரு 2,4,12ம் இடங்களைப் பார்ப்பதால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வத்துக்கு குறையிருக்காது. தாய் வழியில் நன்மைகள் உண்டாகும்.

குழந்தைகளின் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். டிசம்பர்   வீட்டில் சிறியபிரச்சனைகள், உறவினர்களுடன் சண்டை வரலாம். அலுவலகத்திலும் திடீர் பிரச்சனைகள் வரலாம்.
================================================================================
துலாம் (சித்திரை 4ம் பாதம் முடிய, விசாகம் 3ம் பாதம் வரை):

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி 7ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.

கடந்த ஓராண்டாக 6ம் இடத்தில் இருந்த குருபகவான் பல துன்பங்களைத் தந்தார். வரவு குறைந்ததால் கடன்அதிகரித்து கரடுமுரடான வாழ்க்கையை அனுபவித்து வந்திருப்பீர்கள். நம்பிக்கைத் துரோகங்களால் வேதனைஅடைந்து வந்திருப்பீர்கள்.

இனி அந்தத் தொல்லைகளில் இருந்து தப்பிக்கப் போகிறீர்கள். குரு 7ம் இடத்துக்கு வருவதால் இனி அமர்களமான,அதிஷ்டகரமான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறீர்கள். செல்வந்தர்களின் உதவி கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையை முன்னேற்றமான பாதையில் குருபகவான் திசை திருப்பி விடப் போவதால் நினைத்தகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

வீட்டில் இருந்த குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற கணவன்- மனைவி இடையிலான உறவி சீர்படும். திருமணமுயற்சிகள் பலன் தரும்.

குழந்தைகளின் உயர் கல்வி முயற்சிகள் நினைத்தடி நடந்தேறும்.

மிகச் சாதகமான கால கட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். பல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. சொத்துக்கள்சேரும். வீடு கட்டும் முயற்சிகள் வெல்லும், பெண்கள் நகைகளைச் சேர்ப்பீர்கள்.

வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டமாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிசெய்தால் நிச்சயம் பலன் உண்டு.


மற்றபடி இந்த குருப் பெயர்ச்சியால் உங்களுக்கு ஆனந்தமான வாழ்வு காத்திருக்கிறது. இறைவனுக்கு நன்றிசொல்லி இந்த குருபெயர்ச்சியை வரவேற்று நலன் பெறுக.
===========================================================================================

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை):
இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி 6ம் இடத்தில் சஞ்சாரிக்கப் போகிறார்.5ம் இடத்தில் இருந்த குருவால் உங்கள் ராசிக்கு பலவிதமான பிரச்சனைகள் வந்திருக்கலாம்.

இது ரோகஸ்தானம் என்பதால் நோய்கள் தாக்கலாம் என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படும். ஆனால், தன் வீட்டைதானே குரு பார்க்கிறார். இது தோஷ நிவர்த்தியாகும். மேலும் இரண்டாம் இடத்தையும் அவர் பார்ப்பது உங்களுக்குதீமைகளைவிட நன்மைகளே அதிகம் உண்டாகும். நல்லதிலும் கெட்டது நடக்கும். கெட்டதிலும் நல்லது நடக்கும்.


வியாதிகள் நீங்கப் போகின்றன. பண வரவு அதிகரிப்பதால் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். குருஉங்கள் ராசியில் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். 10ம் இடத்தைப்பார்ப்பதால் தொழில் முயற்சிகள் வெல்லும், புதிய வேலைக்கு முயன்றால் வெற்றி கிடைப்பது நிச்சயம்.

பயணங்களும் வெற்றியைத் தரும். 12ம் இடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதே நேரத்தில்  வரவோடு சேர்ந்து செலவும் பலமடங்குஅதிகரிக்கும். பயணங்களில் தாமதங்களும், போன வேலை முடியாமலும் போகலாம்.

மற்றபடி பொதுவில் திருமண முயற்சிகள் வெல்லும். குழந்தைப் பேறு உண்டாகும். வேலை பார்ப்பவர்களுக்கு நல்லமுன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிலர் வெளியூர்களுக்கு அல்லதுஉள்ளூரிலேயே இடம் மாற வேண்டி வரலாம். அதுவும் நன்மைக்கே. வீடு, இடம் வாங்கும் யோகமும் இந்தராசிக்காரர்களுக்கு உருவாகும்.

ஆறாம் இடம் குருவுக்கு மிகவும் உகந்த இடமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், எதைச்செய்தாலும் மிகவும் யோசித்து, நிதானமாக செய்யவும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும்.

தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
================================================================================

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை):

இதுவரை 4ம் இடத்தில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு வருகிறார். அதிகமான நன்மைகள் உண்டாகப் போகின்றன. அங்கிருந்தபடி 9 மற்றும் 11ம்இடங்களைப் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு நல்லதொரு காலகட்டம் தொடங்குகிறது.

பிரமிக்கத்தக்க நல்ல மாறுதல்களுடன் கூடிய அற்புதமான திருப்பம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, புகழ் உயரும்.

எடுத்த காரியங்கள் வெல்லும். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். வீட்டில் லட்சுமி தாண்டவமாடும். இதுவரைஇருந்த தடுமாற்றங்கள் தவிடுபொடியாகும். நோய் நொடிகள் நீங்கும். இதுவரை இருந்த அலைகழிப்புகள்,தடங்கள் எல்லாம் விலகும்.

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தைகளின் உயர் கல்வி திட்டமிட்டபாதையில் செல்லும். வேலை வாய்ப்புக்காக குழந்தைகள் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டாகும்.

அதே நேரம் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சுமையும் கூடும். இருந்தாலும் யோகமான காலகட்டம்ஆரம்பிப்பதால் எல்லா பிரச்சனைகளையும் மிக எளிதாக சமாளித்து முன்னேறிவிடுவீர்கள்.

குருவை வணங்கி இந்த நல்ல காலத்தை அனுபவியுங்கள்.

========================================================================

மகரம் (உத்திராடம்  4ம் பாதம் , திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசியில் 3ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது நான்காமிடத்துக்குச் செல்கிறார். நான்காம் இடத்தால் மிகப் பெரிய நன்மைகள்தரப் போவதில்லை என்பது உண்மை. ஆனால், 3ம் இடத்தை விட 4ம் இடம் பரவாயில்லை.

அதிர்ஷ்டம் என்பது அளவோடு இருக்கும். சிலருக்கு அதிரடி மாற்றங்கள் வரும். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான நிலை தான்இருக்கும்.

பணம் வருவது மிகப் பெரிய அளவில் அதிகரிக்காது. ஓரளவுக்கு தன லாபம் வந்தாலும் செலவுகளும் கூடலாம்.

குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில பிரச்சனை ஏறபடுவதால் வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும்.


உத்தியோகஸ்தர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. இட மாற்றம், தொழில் மாற்றங்களை சந்திப்பீர்கள். நீடித்து வரும் நோய்களில் இருந்து விடுதலைகிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.

வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
===================================================================

கும்பம் (அவிட்டம் 4ம் பாதம் , சதயம், பூரட்டாதி 3ம் பாதம் முடிய):

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது மூன்றாம் இடத்துக்கு வருகிறார்.

இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. தனஸ்தான குரு கடைசி நேரத்திலாவது பணத்தைக் காட்டிவிடுவார். இதனால், பெரியஅளவில் நிதிப் பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறார் குரு பகவான்.

திருமணம் நடப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகப் போகின்றன. காதல் திருமணங்களுக்கும் இரு வீட்டாரும் அனுமதி தரும் நல்ல சூழ்நிலைகள் உருவாகும்.

11ம் இடமான லாபஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் சுக்கிரனின் ஆதிக்கத்தாலும் பணப் புழக்கம் அதிகரிப்பதோடு, சில அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும்இடமுண்டு. ஏகபபட்ட பிரயாணமும் உண்டாகும்.


இவ்வளவு இருந்தாலும் குருவின் இடப் பெயர்ச்சி மனதில் தைரியத்தை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகமும் உருவாகும். உல்லாசம், ஆடம்பரத்துக்கும்குறைவிருக்காது.

குருவுக்கு மூன்றாம் இடம் உகந்ததல்ல. ஆனாலும் அவர் ஒரு சுப கிரகம். எந்தவிதமான பெரும் தீங்குகளையும் தரவே மாட்டார். அவரை வணங்கிநலம் பெறுங்கள்.
================================================================================

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி):

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் இருந்தவரைஉங்களை முன்னாலும் போக விடாமல் பின்னுக்கும் வந்துவிடாமல் தடுமாற வைத்தார் குரு பகவான்.

இரண்டாவது இடத்துக்கு பிரவேசித்தன் மூலம் மிகப் பெரிய மாறுதல்களையும் தன லாபத்தையும் தரப் போகிறார் குரு பகவான். வருமானம் பெருகுவதுமட்டுமல்லாமல் பலவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரப் போகிறது.

தைரியமும் மன வலிமையும் பல மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட வெற்றி களைக் குவிப்பீர்கள். தடைபட்ட திருமணங்கள் கைகூடும். பொன்,பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

தொழில்ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்களே வியக்கும் அளவுக்கு நல்ல பல விஷயங்கள் நடந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இனி நல்ல காலம்தான். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குழந்தைகள் பிறப்பு போன்ற ஆனந்த சம்பவங்களுக்கு நிறையவே சான்ஸ் உள்ளது.

பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவற்றுக்கு நிறைய வாய்ப்புண்டு. உயர் கல்விக்கும் நல்ல வாய்ப்புள்ளது.


குரு வாழ்க, குருவே துணை
=============================================================================

குருப் பெயர்ச்சி - 2011

கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார். பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.

குருவின் ஸ்தலம்: ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான். இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இது ஒரு பரிகாரத் தலமாகும். இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை. குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது. இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.

தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள்.

குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது. பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.

பசும்பொன் வண்ணம் கொண்டவர். பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு. மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.

வழிபடும் முறை:

குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும். குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.

குரு பாமாலை:

குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள். அவரது பூரண அருள் கிடைக்கும்.

பாமாலை:

வானவர் கரசே வளம் தரும் குருவே

காணா இன்பம் காணவைப் பவனே

பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்

உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்

சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்

கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்

நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்

இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்

உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்

தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்

நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்

தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்

சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்

==================================================================

பிரபல ஜோதிடர் . திரு. முருகு . ராஜேந்திரன் அவர்கள் கணித்த - குருப் பெயர்ச்சி பலன்களை , ஒவ்வொரு ராசி நேயர்களும் - படிக்க  , இங்கே சொடுக்கவும் .


ஜோதிடம் தமிழில் பயில - பாடங்கள் ( To download Tamil Astro book option )

| Apr 25, 2011
நமது வாசக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழி ஜோதிடம் கற்றுக்கொள்ள ஏராளமான புத்தகங்கள் இப்போது கிடைக்கின்றன. இணையத்தில் தேடியபோது, அகஸ்மாத்தாக - இந்த தொகுப்பு கிடைத்தது.

நமது ஜோதிட பாடம் பயிலும் மாணவர்களுக்கு - மிக்க ஆர்வம் கொண்டு இருப்பவர்களுக்கு - இந்த குட்டி புத்தகம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் - உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  
http://www.ziddu.com/download/14737597/JOTHIDAMTAMIL.pdf.html

 அடிப்படை விதிகளை தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். இருந்த போதும், நமது ஜோதிட பாடங்கள் வழக்கம் போல வரும். 


நமது ஜோதிட பாடம் முழுவதும் படித்த மாணவர்களுக்கு , இன்னும் சற்று முன்னேறிச் செல்ல , மேலே கொடுக்கப்பட்டுள்ள  தகவல்கள்   பயன்படும்.  


நமது பாடங்களுக்கும், இதற்கும் சில முரண்பாடுகள் இருக்கலாம். இந்த பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கும் நீங்கள் எமது குழுவை தொடர்பு கொள்ளலாம். தொடர்ந்து , நமது பாடங்களையும் பயின்று வாருங்கள். இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும். 


வாசகர்களின், அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

பெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா? என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க..?

| Apr 22, 2011
அழகை விரும்பாத மனமே இல்லை. அதுவும் பெண்கள் அழகாய் இருத்தல், இன்னும் கூடுதல் அழகு. அந்த பெண்களும், தங்க நகைகள் ஜொலிக்க இருந்தா..? அப்படி பெண்களை அழகாய் மெருகூட்ட , தங்க நகைகள் உங்கள் வீட்டில் குவிய - ஒரு ஆன்மீக வழிகாட்டுதல் உண்டு என்றால்...!! அட , ஆமாங்க.அப்படியும் ஒரு வழி இருக்குதாம். எல்லாம், நேரம் தானுங்களாம்  .... அந்த குறிப்பிட்ட நாளில் முறைப்படி விரதம் இருந்து ,  பூஜை வழிபாடு செய்ய  நல்ல விதமா பொன்னும், பொருளும் சேருமாம், அழகும் , வசீகரமும் கூடுமாம்... 
பெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா? என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க..னு கேட்குறீங்களா? என்ன விஷயம் னு படிச்சுப் பாருங்க.. உங்களுக்கு இது ஒரு புதிய விஷயமா.. இல்லையானு பின்னூட்டம் இடுங்க..  
 
என் நண்பர் ஒருத்தர் இருந்தாரு.  அவரு , கொஞ்ச வருஷம் முன்னாலே , ஒரு பெண்ணை , சின்சியரா லவ் பண்ணிக்கிட்டு இருந்தாப்ல. ... அந்த பொண்ணு கொஞ்சம் பார்க்கிறதுக்கு சுமாராத்தான் இருக்கும்.  வீட்டுக்கும் அரசல்,  புரசலா விஷயம் தெரிய வந்துச்சு.. அவங்க பாட்டி , அந்த பையனைக் கூப்பிட்டுச்சு.. 
 
" ஏண்டா... நீ அந்த தேவியை காதலிக்கியாக்கும்" ... 
நம்ம ஆளு..." ஆமாம் பாட்டி " ..    

" அவ ஒன்னும் பார்க்கிறதுக்கு அவ்வளவு நல்ல இல்லையேப்பா.. போயும், போயும் இவ தானா கிடைச்சா..?

நம்ம ஆளு என்ன சொன்னான்னு நினைக்கிறீங்க ..?

பாட்டி , நீ உன் கண்ணிலே இருந்து இல்லே பார்க்கிறே..?  என் கண்ணிலே இருந்து பாரு.. அந்த பொண்ணு எவ்வளவு க்யூட் தெரியுமா? .....னு கேட்டான்.. பாட்டி, கப் சிப். ஒண்ணுமே வாயைவே திறக்கலை, அதுக்கு அப்புறம்.
நான், பக்கத்திலே தான் நின்னுக்கிட்டு இருந்தேன்.. பய புள்ளைக, காதல் வந்துச்சுனா, என்னமா யோசிக்குதுக பாருங்க.. !!
அந்த மாதிரி , அவங்க அவங்க பார்வைக்கு - அழகு வித்தியாசப்படும்.. அழகு , நிரந்தரமும் இல்லை.பொண்ணுக்கு அழகு மட்டுமே முக்கியமும் இல்லை.... அதையும், மனசிலே வைச்சுக்கோங்க... மதர் தெரசாவை விடவா , இந்த உலகத்திலே ஒரு பெண் இருந்துவிட முடியும்..?

சரி, விஷயத்துக்கு வருவோம்... 

இதோ , கிட்ட நெருங்கிடுச்சு... அட்சய திரிதியை.. இந்த நாள்லே , தங்கம் வாங்க கூட்டம் அலைமோதும் . ஒரு வேளை. நீங்க  தங்கம் வாங்க முடியலையா.. இப்போ இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைங்க.. கார்த்திகை மாசம் வரும் திரிதியை பேரு.. ரம்பா திரிதியை.. அதைப் பத்தி கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள் இப்போ நீங்க பார்க்கப் போறீங்க... 
http://www.deepikapadukone.co.in/image/obj3067geo444p8.jpg

எல்லாருக்கும் புதிய பொருட்கள் வாங்குகிற நாளாகவும், தானம் கொடுக்கும் நாளாகவும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் த்ரிதியை நாளாகிய அட்சய த்ரிதியைதான் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையாகப் பொன் வாங்கும் நாளும், பெண்களுக்கு அழகு கூடும் நாளும் ஒன்று நமது பண்டிகைகள் பட்டியலில் வருவது ஒரு சில பிரிவினருக்கே தெரிந்திருக்கிறது..

அதுதான் ரம்பா த்ரிதியை என்னும் பொன் வாங்கும் நாள். இதை நம் தமிழ் மண்ணில் தங்கத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது அவசியம்..
பொங்கல் விழாவுக்கு சூரியனையும், தீபாவளிக்கு நரகாசுர வதத்தையும் மூலமாக வைத்துள்ளதைப் போல ரம்பா த்ரிதியையின் சிறப்புக்கும் ஒரு மூலக்கதை உண்டு..

 
 
ஒரு சமயம் தேவலோகத்தில் இந்திர சபை கூடியிருந்தது. தேவர் தலைவன் இந்திரன் அரியணையை அலங்கரித்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆடிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு, தங்கள் ஆட்டமே சிறந்ததென்று பாராட்டப்படுமென்று கர்வத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். ராகம், தாளம், பல்லவி, சரணங்களுக்கேற்ப தங்கள் அபிநயங்களைச் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரம்பையின் தலையிலிருந்த நெற்றிச்சுட்டியும் பிறைப் பொட்டும் கழன்று கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்டு ஊர்வசியும் மேனகையும் கலகலவென்று சிரித்துவிட்டு, "பிறகு ஆட்டத்தைத் தொடர்வோம்' என்று சென்றுவிட்டனர். இதனால் அவமானப் பட்ட ரம்பை இந்திரனை ஒரு பார்வை பார்த்தாள். கண்கள் அவமானத்தால் கலங்கியது.

மறுநாள் இந்திரனைத் தனியே சந்தித்த ரம்பை, ""தேவர் தலைவா! எனக்கு ஏன் இந்த அவமானம்? அழகில் சிறந்தவள் ரம்பைதான் என்ற பெயர் பெற்ற நான், உன் அவையில் சிரம் தாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது பெயரும் அழகின் சிறப்பும் நிலைபெற ஒரு வழியைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று தலைவணங்கி நின்றாள்..

""தேவருலகின் முதல் அழகியே! உனது வேண்டுகோள் சரிதான். உங்கள் மூவரின் தேவையற்ற போட்டியில் வந்த வினைதான் இது. மூவருமே அழகில் சிறந்தவர்கள்தான். ஆடவருள் போட்டி வந்தால் அரசுகூட அதிருமென்பர் சான்றோர். பூவையருள் போட்டி வந்துவிட்டால் புவியும் அசைந் தாடுமாம்..

இந்திர சபை என்ன உங்களின் கலை பயிலும் கூடமா? அனந்தசேனன் என்ற தேவன் உங்களது தேவையற்ற போட்டி பற்றிக் கூறும்போது, கலைவாணியாக வீற்றுள்ள சக்தி தேவிதான் உனது சிரசிலிருந்த நெற்றியணியைக் கழற்றிவிட்டாள் என்றான்..

தாள விருத்தத்தை அபிநயிக்கும்போது மூன்று கட்டை பதங்களையும் தாண்டி ஐந்தாம் பதத்துக்குச் சென்று ஆடிவிட்டாய்! நல்ல வேளை, உனது ஆடைகளும் பொன்மணிகளும் சிதறாது போனதே என்று நினைத்துக் கொள்!'' என்றான் இந்திரன்..

""தேவேந்திரா! ஆட்டத்தின் விதிப்படி முப்பதங்களைத் தாண்டவில்லை என்பதே என்னுடைய பணிவான பதில். இந்த சம்பவத்திற்குப் பிராயச்சித்தம் கூறுங்கள்'' என்றாள் ரம்பை. ""ஐம்பதங்களைத் தாண்டிவிட்டாய் என்பதைக் கலையரசி வாணியை அழைத்துச் சொல்ல வைக்கட்டுமா? இல்லை, எம் உலக நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை விட்டுச் சொல்ல வைக்கட்டுமா?'' என்று கோபத்துடன் கேட்டான் இந்திரன்..

""தேவேந்திரா! இன்னும் என் மனதைப் புண்படுத்தும் படி செய்ய வேண்டாம். இதற்கான வழியை மட்டும் கூறுங்கள்'' என்று மன்றாடினாள் ரம்பை..
 http://kavya.50webs.com/images/kavya_madhavan.jpg


"பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். தேவலோக அழகியான உனக்கு சரியான ஒரு வழியைக் கூறுகிறேன். பூவுலகில் அன்னை பார்வதிதேவி கௌரியாக அவதாரம் எடுத்து ஓர் மகிழ மரத்தின் கீழ் தவம் செய்து கொண்டிருக்கிறாள். அழகன் முருகனை மடியில் வைத்தபடி அந்த அன்னை அனைவருக்கும் அருள் செய்கிறாள். கார்த்திகேயனை மடியில் வைத்துக்கொண்டிருப் பதால் கார்த்தியாயினி என்ற பெயர் அவளுக்கு வந்தது..

உனது அழகும் ஆபரணங் களும் பொன்னும் பொருளும் சேர்ந்திட அந்த தேவியை விரத மிருந்து பூஜை செய். அவளே உனக்குக் காட்சி தந்து பதிலும் சொல்வாள்'' என்றான் இந்திரன்..
கௌரியை பூஜித்த ரம்பை.

இந்திரனுடைய உபதேசத்தைக் கேட்ட ரம்பை, கார்த்திகை மாதத்தில் வரும் த்ரிதியைக்கு முதல் நாள், "திந்திரிணீ கௌரி விரதம்' இருந்து முறைப்படி பூஜை செய்தாள். "திந்திரிணீ' என்றால் மஞ்சள் நிற பதார்த்தங்களைக் குறிக்கும். அதாவது மங்களகரமான பொருட்களைக் குறிக்கும். பூஜையை முடித்து வணங்கிய ரம்பைக்கு, குழந்தை முருகனை மடியில் இருத்தியபடி கௌரி தேவி கார்த்தி யாயினியாகக் காட்சி தந்தாள். தங்கநிற மேனியளாக ஜொலித்த அன்னை ரம்பையைப் பார்த்து, ""உனது பக்தி மிகுந்த பூஜையில் மகிழ்ந்தோம். உனது அழகும் அணிகலன்களும் சேர்ந்திடவே இந்த பூஜையைச் செய்துள்ளாய். இன்று முதல் உனக்கு அழகும் பொன்னும் மிகும். "தேவருலக அழகி ரம்பையே'என்று அனைவரும் பாராட்டுவர். இன்று முதல் உன் பெயராலேயே ரம்பா த்ரிதியை என்று இந்த நாள் விளங் கட்டும்'' என்றாள். மேலும், ""இந்நாளில் வழிபடுவோர் அனைவருக்கும் பொன், பொருள் சேர்ந்து அழகும் முக வசீகரமும் ஏற்படும்'' என்றும் அருள் செய்தாள்..

சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண் களுக்கும் ஒரு வரப்பிரசாத நாளாக விளங்குவது ரம்பா த்ரிதியை நன்னாள். முதல் நாள் கௌரி தேவியைக் குறித்து விரதமிருந்து, மறுநாள் கலசத்தில் அம்பிகையை ஆவாகன பூஜை செய்து எழுந்தருளச் செய்தல் வேண்டும். வரலக்ஷ்மி விரதப் பூஜை செய்முறை போலவே கலசம் ஒன்றை வைத்து, வாசனைத் திரவியங்களோடு நீர் ஊற்ற வேண்டும். மூன்றுவகைப் பழங்க ளோடும், மஞ்சள் நிற அன்னத்தை (எலுமிச்சை சாதம், புளியோதரை) நிவேதனமாக வைத்துப் பூஜை தொடங் கலாம். மஞ்சள் கயிற்றில் மஞ்சள் நிற மலரைக் கட்டி வலக்கையில் ரட்சை யாகக் கட்டிக்கொண்டு, கலசத்திற்கு மேல் பொன் நகைகளைக் கவனமாகச் சாற்றி, முடிந்தால் தேவி முகம் செய்து அழகுபடுத்தலாம்..

தன்னை ரம்பையாக எண்ணிக் கொண்டு மனதுக்குள், "ஸ்வாகதம் ஸ்வாகதம் ரம்பாதேவி' என்று ஆவாகனம் செய்து, தலையில் மலர் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி, தேவி ஆவாகனமும் செய்தபின் கௌரி அர்ச்சனையைச் செய்ய வேண்டும்.

வாழ்க்கையே ஒரு புதிர் விளையாட்டா ?

| Apr 21, 2011
ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.

ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.

இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.

நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.

இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
http://www3.telus.net/chessvancouver/images/chess.jpg
மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?
 
நன்றி :  என்.கணேசன்

கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை

|

எப்படி விதி என்ற ஒன்று , யாராலும் வரையறுக்கப்பட முடியவில்லையோ - அதேபோலே தான் - கடன் தொல்லையும். எப்பொழுது கடன் தீரும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், தவிக்கும் ஏராளமானோரை எனக்கு தெரியும். கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக்கொண்டு, முழி பிதுங்க - வாங்கிய அசலை விட ஐந்து மடங்கு வட்டி கட்டி , தப்பி வந்தவர்களை --- வந்த பிறகு அவர்கள் முகத்தில் தெரிந்த - sign of relief - மகிழ்ச்சி , விவரிக்க இயலாதது.

கடன் , அதன் முழு வீர்யம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் - அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.


தற்கொலை வரை முயன்று - அதன் வாயில் இருந்து மீண்டு கரை சேர்ந்தவர்களும் உண்டு. குடும்பம். மனைவி குழந்தைகள் என அனைவரையும் பிரித்து - அநாதை போன்ற அமைப்பையும் - இந்த கடன் ஏற்படுத்தி விடுகிறது.

என்னிடம்  - ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் - துளியும் தயங்காமல் நான்  பரிந்துரைப்பது - கனகதாரா ஸ்தோத்ரம்.

காலை ஐந்து மணிக்கு - குளித்து முடித்து - முழு நம்பிக்கையுடன் - இந்த ஸ்தோத்திரத்தை , பாராயணம் செய்தால் - 100 % சதவீதம் நீங்கள் கடனிலிருந்து தப்பலாம்.

இதை நான் மிகுந்த ஆய்வுக்குப் பின் - நான் நமது வாசகர்களிடம் பரிந்துரைக்கிறேன்.  எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம  முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி - நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். அது, உடற் பயிற்சி யாக இருந்தாலும் சரி,  படிப்பது , வித்தை பயில்வது போன்ற எந்த செயலாக இருந்தாலும் சரி.

இப்படிப் பட்ட சூழலில்  ,     நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது - உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மிக மிக அபூர்வ , அதிர்வு ஏற்படுத்தும்
அற்புத வழிமுறை இது.

நமது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள கனக தாரா ஸ்தோத்ரம் - முழு பாடலையும் பார்க்க "கிளிக்"கவும் ...  kanaka thaara Stothram
http://www.goddessgift.com/images/goddess-Lakshmi.jpg
சரியாக - 48 நாட்கள் இடை விடாமல் - இந்த கனக தாரா ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் - நீங்கள் உங்கள் கடன் அடைந்து , நிம்மதிப் பெருமூச்சு விடுவது உறுதி. அப்படி ஒரு மண்டலம் நீங்கள் செய்யும்போது , இடையில் வரும் வெள்ளிக் கிழமைகளில் , நீங்கள் மகா லட்சுமி பூஜையும் செய்வது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும். மகாலட்சுமி பூஜை செய்வது பற்றி , இணையத்தில் தேடும்போது - கீழே உள்ள விவரங்கள் கிடைத்தன. மிக சுலப வழியாக இருக்கவே , அதையும் கொடுத்துள்ளேன்.


வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:

குத்து விளக்கு ,  உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில் , பால் - ஒரு கிண்ணம் (சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  தண்ணீர் - ஒரு கிண்ணம் , குங்குமம் , சந்தனம்/மஞ்சள் ,
பெரிய தாம்பாளம், லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு  /  அல்லது  சிறிய மகா லக்ஷ்மி விக்ரகங்கள் 

சர்க்கரை பொங்கல்  , முளை கட்டிய கருப்பு கொண்டை  கடலை (சுண்டல் ) - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)

பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டை கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள். முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

பணத்தை மதித்து - நடந்தாலே அவர்களுக்கு - மகாலட்சுமியின்  பரிபூரண அருள் கிட்டும்.

உலகத்திலே பேசப்படுற எந்த மொழி உங்களுக்கு கத்துக்கணும்.. ? ரொம்ப ஈசி... அருமையான ஒரு இணைய தளம்...

| Apr 19, 2011
நமது வாசக அன்பர்களுக்கு வணக்கம். வேலைப்பளு , வெளியூர் பயணம் என்று கொஞ்சம் டைட் ஷெட்யூல்  . அதனால் வழக்கம்போல  பதிவுகள் இட தாமதம் . மன்னிக்கவும். இந்த வார இறுதியிலிருந்து மீண்டும் சூடு பிடிக்கும். 


எவ்வளவு பிஸி யாக இருந்தாலும், அண்ணாமலையாரின் அருளால் சித்ரா பௌர்ணமி - கிரிவலத்தில் கலந்து கொள்ள முடிந்தது. கட்டுக் கடங்காத கூட்டம். திருவண்ணாமலையே திமிலோகப்பட்டு விட்டது. 

குழந்தைகளையும், குடும்பத்தையும் கூட்டி வந்து - பேருந்து கிடைக்காமல் தவித்து நின்ற கூட்டத்தை காணும்போது, ஒவ்வொரு ஆலயத்திலும் கூட்டம் அலை மோதியதை பார்க்கும்போது - பௌர்ணமிக்கு செல்வதை விட, கூட்டம் குறைவாக இருக்கும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை செல்வதே நல்லது என்ற எண்ணம் தோன்றி விட்டது. அனேகமாக 20 லட்சம் பேர் வந்து இருக்க கூடும்.  அனேகமாக இந்த முறை வந்தவர்களில் , 10 க்கு 8 பேராவது இதே மாதிரி யோசித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்... Just too much to bear it . ....

நீங்க யாராவது வந்து இருந்தீங்களா?  
ஆனால், ஒரு சில அதிசய சம்பவங்கள் நடந்தன. அதை இன்னொரு பதிவில் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

இது, இணையத்தில் வேறு ஒரு மொழியில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட முனைந்தபோது , அகஸ்மாத்தாக கிடைத்த தளம். நல்ல சுவாரஸ்யம். அந்த தளம் பற்றிய தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.
உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது. உங்களுக்குரிய மொழியைத் தேர்வு  செய்து கற்கலாம். கற்ற மொழிக்கு ஏற்றவாறு பயிற்சிகள் செய்யலாம்.
அதே நேரம் நீங்கள் கற்ற மொழியை பேசிப்  பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். உங்களுக்கு வேறு மொழி தெரிந்தால் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம்.
விருப்பம் இருக்கும் அன்பர்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள்.
 

இந்த தளத்திலிருந்து நீங்கள் course material - டவுன்லோட் செய்து கொள்ளலாம்...  


நமது வாசகர் வட்டாரத்திலேயே, உலகின் மூலை முடுக்கு எல்லாம் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்...

ஏதாவது ஒரு மொழி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுவதை , முயற்சி செய்து பாருங்களேன்.. ஒரு ஆறு மாதம் முயற்சி செய்தால் , நிச்சயம் வெற்றி பெறலாம்.

ஜோதிட சூட்சுமங்கள் : ஜோதிட பாடம் : 019 ( செவ்வாய் தோஷம் )

| Apr 16, 2011

வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஜோதிட பாடத்தில் செவ்வாய் தோஷம் பற்றி பார்க்க விருக்கிறோம்.


திருமணப் பொருத்தம் பார்க்கும்போது , கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் செவ்வாய் தோஷமும் ஒன்று. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி. 

செவ்வாய் ரத்த காரகன். யுத்த காரகன். எனவே பொருத்தம் பார்க்க விரும்புபவர்கள் செவ்வாய் இருக்கும் நிலையை சரியாக கணிக்க வேண்டி இருக்கிறது. செவ்வாய் நீசமாகவோ, பலமின்றியோ இருந்தால் ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். 

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான காம உணர்ச்சி இருக்கும் . தாம்பத்தியத்தில் தொடர்ந்து நாட்டம் இருக்கும். ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர்.


தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்க்கு மறுப்பு தெரிவிப்பார்.


ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று  விளையாட்டாக கூறினாலும், அதை  தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.


செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர்.  சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு. 


சில விதிவிலக்குகள் உள்ளன :
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால்  தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.


 மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
இதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு.

தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.

எனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது. 

சரி, இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளை காண்போம்.
அன்பர்களே , இது அனைத்தும் பொதுவான விதி முறைகள் தான். ஆனால், ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாகவும், குல தெய்வம் அருளும் , உங்களை பெற்றவர்களை, அல்லது புகுந்த வீட்டில் மாமனார் / மாமியாரை  பொறுப்பாக  கவனித்து நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியமும் இருந்தால், எந்த நாளும் உங்களுக்கு , ஒரு தீங்கும் ஏற்படாது. இது நான் ஆராய்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஜாதகங்களிலிருந்து , எனக்கு கிடைத்த அனுபவ முடிவு. 


இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் :
 

7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு.  ( யோகமா  ??  ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே ! )

7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது 7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ , இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ
7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
இரண்டாம் தாரம் உண்டா என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஸ்தானம் - பதினொன்றாம் வீடு தான். அந்த வீட்டின் நிலைமை, வீட்டு அதிபதியின் நிலைமை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

விதவைப் பெண் :

 
7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை  பெற்றால் , சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில்  அவள் விதவையாவாள்.

மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால்  இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.

விவாகரத்து :

 
மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்

லக்கினாதிபதி,  7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும் , 
12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும், 

7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:
இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். ஆறாம் ஸ்தானம் கடன் , நோய் எதிரி. ஏழாம் வீடு களத்திரம் . இல்லையா?

அப்படிப்பட்ட ஏழாம் வீட்டிற்கு - ஆறாம் வீடு , பன்னிரெண்டாம் வீடாக , அதாவது விரய  ஸ்தானமாக வருகிறது. ஆறுக்கும், ஏழுக்கும் - ஜாதகத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள்.... உங்களுக்கே வியப்பாக இருக்கும்.  இப்படி இணைந்து இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை சண்டைக் கோழியாகத் தான் பெரும்பாலும் அமைகிறது. மோசமான தசா / புக்தி காலங்களில் அவர்கள் கோர்ட் படியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
===========================

சரி, இன்றைக்கு பாடம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முந்தைய பாடங்கள் சரி வர புரிந்து இருந்தால்  தான் வர விருக்கும் பாடங்கள் - உங்களுக்கு எளிதில் புரியும். ஏதாவது சந்தேகம் இருப்பின் , தொடர்பு கொள்ளுங்கள்.... வாசகர்கள் தொடர்ந்து அளிக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி... வந்தனம்.


மீண்டும் சிந்திப்போம்..

ராஜ ராஜ சோழன் செய்த - தோஷ நிவர்த்திக்கான " கோ பூஜை "

| Apr 11, 2011பசுவிற்குள் தேவர்களும், மூவர்களும் இருப்பதாக ஐதீகம். தேவலோகப் பசுவின் படத்தை எடுத்துப் பார்த்தால் அதில் வாலிற்குப் பின் லட்சுமி இருப்பது போல் இருக்கும். அதனால்தான் இன்றும் பசுவின் வால் பகுதியை தொட்டுக் கும்பிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.

பசு மாட்டின் குளம்பு முதல் கொம்பு வரை தேவர்களும், மூவர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கப் போனால், பசுவின் கோமியம் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. சாணமும் அவ்வாறுதான். பாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு உள்ளது.

மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது.
மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.

பிரம்மஹத்தி தோஷம்!

எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வன வேதங்கள் சொல்லி இருக்கிறது.

ராஜ ராஜ சோழன், சில பிராமணர்கள்  உளவாளிகளாக இருந்த காரணத்தால் அவர்களை தண்டித்தான். அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதற்கு பரிகாரமாக பொன்னால் பசு செய்து அதற்குள் நுழைந்து வெளியே வந்து அந்த பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் அவனது பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அதன்பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.
http://www.thebigtemple.com/images/emperor_rr.jpg
ராஜ ராஜ சோழன், எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அதுபோலத்தான் பரிகாரப் பூஜைகள் எல்லாம் பார்க்கப் போனால் தேவர்கள், மூவர்கள் பின்பற்றிய பூஜைகள் எல்லாம் ராஜ ராஜ சோழன் மூலமாகத்தான் உயிர்த்தெழுந்தது.
அப்போது கோ பூஜை என்பது மிக முக்கியத்துவம் பெற்று இருந்தது. தங்க பசுவின் வாய்ப் பகுதி வழியாக நுழைந்து வால் பகுதி வழியாக வெளியே வந்து அதனை தானமாகக் கொடுக்கும் பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் பல கோயில்களில் செய்துள்ளான்.

குறிப்பாக நண்டானூர் என்ற இடத்தில் இருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலில் (நண்டு சிவனை வழிபட்ட இடம்) இந்த பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் நிறைவேற்றியுள்ளான். அதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில இருந்து நீங்கியுள்ளான்.

ஆனால் சாதாரண மக்கள் இதுபோன்று பொன்னால் பசுவை செய்ய இயலாது என்பதற்காகத்தான் அகத்தீக் கீரையை பசுவிற்கு கொடுக்கிறார்கள். அகத்திக் கீரையைக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். எல்லா விதமான தோஷங்களும் கோ பூஜை செய்வதன் மூலமாக நீங்கி விடுகிறது.

கோ பூஜை என்பது, பொய் சொல்வதால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். உடலால் செய்யும் கொடுமையால் ஏற்படும் தோஷம், காம இச்சையைக் கட்டுப்படுத்தும் சக்தி அல்லது காமத்தால் அத்துமீறி செய்த பாவங்கள் போன்றவற்றை இந்த கோ பூஜை நீக்கும். அதனால்தான் கோ பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அதனால்தான் அரசன் இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தால் லாயத்தில் குதிரை கட்டி இருப்பது போன்று, துறவிகள் இருக்கும் மடத்திற்குள் நுழைந்தால் பசு இருக்கும் காட்சியும் காணப்படும்.

பொய் சொல்லாமல் இருக்க முடியாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொய் சொல்லலாம். அரசு ரகசியங்கள் போன்றவற்றை மறைப்பதற்காக பொய்களை சொல்கின்றனர். அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கும். குறிப்பாக உடலில் ஏற்படும் நோய்களை கோ பூஜை நீக்கும். மிகவும் குறிப்பிட்டு சொல்வதென்றால் மன உளைச்சல், ஒவ்வொமையால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை நீக்கும்.

மாடு தொழுவத்தை பெருக்கி, சாணம், கோமியம் குழைந்து இருப்பதை தோலில் பூசினாலே பல தோல் நோய்கள் தீர்கின்றன.

ரமண மகரிஷியை ஒருவர் பார்க்க வந்திருந்தார். அவருக்கு தோல் வியாதி. எங்கெங்கோ சென்றும் குணமாகவில்லை. அவர் பெரிய தொழில் அதிபர். அவர் பல்வேறு பாவ செயல்களையும், பலரை காயப்படுத்தியும் உள்ளார். அதனால்தான் இந்த தோல்வியாதி என்று கூறி அவரை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மண்டலம் பணியாற்றச் சொன்னார். மாட்டிற்கு புல் போடுவதில் இருந்து சாணத்தை சுத்தம் செய்வது வரை எல்லாமே செய்யச் சொன்னார். ஒரு மாட்டை மட்டும் கையிலேயே பிடித்துக் கொண்டு மேய்த்து வா என்று சொன்னார். அந்த 48 நாட்களுக்குள் அவரது தோல் வியாதி சரியாகிவிட்டது.

ஒரு தேயிலைத் தோட்ட முதலாளிக்கு தொழு நோய் வரத் துவங்கியது. அவர் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது, பிறன் மனை கவர்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு பரிகாரமாக, 5 பசுக்களை வாங்கி வீட்டில் பராமரித்து, அதில் இருந்து கறக்கும் பாலை ஏழை எளியவர்களுக்கு வழங்கு. மேலும் ஒரு காராம் பசு வாங்கி சிவன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பசுக்களை பராமரித்து, பசுவை தானமாகக் கொடுத்த பின்னர் தொழு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அழுகத் துவங்கிய விரல்கள் வளரத் துவங்கின. அதுபோன்ற ஆற்றல் பசுவிற்கு உண்டு.

காராம் பசு என்றால் அதன் காம்புகள் மிகச் சிறியதாக இருக்கும். மற்ற பசுக்களிடம் இருந்து இவை வேறுபடும். எல்லா புல்லையும் உண்ணாமல் தேர்ந்தெடுத்து சில புற்களை மட்டுமே உண்ணும். அதன் பால் அதிக சுவையுடையதாக இருக்கும். அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கும். அந்தப் பாலுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. பழைய சிவாலயங்களில் எல்லாம் பார்த்தால், ஓரிடத்தில் சிவலிங்கம் புதைந்து கிடந்தது. அந்த இடத்தில் காராம்பசு பால் சொரிந்தது. அதைப் பார்த்த மேய்ப்பவன் ஊரில் போய் சொல்ல அங்கு தோண்டிப் பார்த்தால் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது போன்ற இதிகாசங்கள் இருக்கும்.

தேவ ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் காராம்பசுவிற்கு உண்டு. தெய்வீக சக்தியை அறியும் ஆற்றல் படைத்ததால்தான் பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தெய்வீகத் தன்மை வாய்ந்த பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறந்த காரியம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

| Apr 9, 2011
ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம்  தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

http://www.yogiramsuratkumar.net/house/Portals/0/Gallery/380/Annamalai%20Songs/Annamalai-Temple.jpg

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது  கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின்  மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில்  உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை,  ஆன்மீக  ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி  ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம்  அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

குபேர பகவானை நேரில் பார்த்த உண்மை சம்பவம்----- திருவண்ணாமலை பேரதிசயம்

|
எது இறைவன்? எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது? எந்த சக்தி - இந்த பூமியை , ஒரு குறிப்பிட அச்சில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில், ஒரு குறிப்பிட்ட சாய்வான கோணத்தில் இயக்குகிறது? அந்தரத்தில் மிதக்கும் பூமி, தானும் சுற்றி , சூரியனையும் சுற்றி - ஒரு சரியான விசையில் இயங்க , எது காரணமாகிறது? அந்த சக்திக்கு பெயர் தான் கடவுளா?  கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா ? 

நம் இந்து மதம் சொல்வது போல ... இத்தனை கடவுள்கள் நிஜமாகவே உள்ளனரா ? சிவன் , பார்வதி, அவரின் அண்ணன் திருமால் , லட்சுமி, முருகன், கடவுள், நவகிரகங்கள்... சப்த கன்னிகள், இந்திரன், யமன் என்று எத்தனை தேவர்கள்... ஹம்ம்மா.. நிஜமாகவே இத்தனை பேர்கள் உள்ளனரா ? இத்தனை தெய்வங்களா?  அவர்களை தொழுது இறை நிலை அடைந்த சித்தர்கள் ...?
நமது இந்து மதமும் , புராணங்களும், வேதங்களும் சொல்லும் அனைத்தும் உண்மையா ?

சரி, இவை அனைத்தும் உண்மை இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். யாரை முட்டாளாக்க இத்தனை கோவில்கள்.. இத்தனை சிலைகள், அபிசேக , ஆராதனை?  எதற்கு ஜாதகம், மந்திரம், நேரம் , காலம் என்று இத்தனை கோட்பாடுகள், குழப்பங்கள்.. ?  

நல்லவர்களுக்கு தெய்வம் துணை நிற்கும். தீயவர்களை துவம்சம் செய்யும் என்பது எல்லாம் வெறும் புராணக்கதை களில் மட்டும்தானா? 
நடைமுறையில்..? சாராயம் காய்ச்சி  விற்றவர்கள், கள்ள நோட்டு அடித்தவர்கள் , கள்ளக் கடத்தல் செய்தவர்கள் தான், இன்றைக்கு கல்வித் தந்தைகள்.... மாண்புமிகுக்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். கட்டப் பஞ்சாயத்துதான் ஒரே நீதி முறை. லஞ்சம் ஒன்று தான் தேசிய மொழி. தனி மனிதன்... என்ன செய்வது என்றே தெரியாமல் இயங்குகிறான்.  வாரத்திற்கு ஆறு நாட்கள், நாளைக்கு 12 மணிநேரம் ஆபீஸ் வேலை... குழந்தைகள் என்ன சாப்பிட்டார்கள், என்ன படிக்கிறார்கள்.. ? ஒன்னும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதில், மனைவியும், வேலைக்கு செல்ல வேண்டிய சூழல். கூட்டு குடும்ப வாழ்க்கை , எப்போதோ சிதைந்து விட்டது ?

இப்போதைக்கு - பசங்க பெரிய ஆளா ஆகணும் .. நல்ல படிக்க வைக்கணும்...! கடனை அடைக்கணும்.. கந்து வட்டி அடையணும். கடன் இல்லாம கொஞ்ச நாளாவது , வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும். முடிஞ்சா ஒரு நல்ல வீடு, ஒரு நல்ல கார். ... அந்த சக்தி இல்லையா ...  புள்ளையை நல்லா படிக்க வை. அவன் நல்ல வீடு , வாங்குவான்.. நல்ல கார் வாங்குவான்..  இம்புட்டுக்குள்ளே  தான் வாழ்க்கை. நம்ம புள்ளைய நல்லா வைச்சு இருந்தா , வயசான பிறகு நம்மளை மதிக்கும்.  இல்லை, முதியோர் இல்லம், பரதேசி வாழ்க்கை தான்.

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம். தமிழ் நாட்டிலே சின்ன சின்ன ஊர்கள் லே கூட ... upper middle class family கள்ல , வளர்ற குழந்தைகளுக்கு  - தமிழ் படிக்கவே தெரிவது இல்லை. .. ரொம்ப சாதாரணமா சொல்றாங்க . CBSE சிலபஸ் சார். .  (ஹிந்தி படிக்க தெரியுது.. பிரெஞ்சு எல்லாம் கத்துக்கிறாங்க.) பாவம் குழந்தைங்க.. ஹிந்தி படிக்குது ... சுத்தமா மீனிங் தெரிவது இல்லை.. நிஜமா எங்கே போகுது  தமிழ் நாடு..?  நூத்தி பதினஞ்சு னு நம்பர் சொன்னா கூட.. தெரியலை. "அங்க்கிள், இங்கிலிஷ்லே நம்பரை சொல்லுங்க" னு கொஞ்சுதுங்க.. 

இதிலே, தினமும் குழந்தைகளை விஷ்ணு சகஸ்ரநாமமும், புருஷ சூக்தமும் படிக்க சொன்னா... ?  சான்ஸ் இருக்குனு நெனைக்கிறீங்க..? 
எப்படி பல தலைமுறைகளுக்கு முன்னே சமஸ்கிருதம் நமக்கு புரியலை வேண்டாம்னு சொன்னோமோ..அதே மாதிரி.. தமிழுக்கே இந்த நிலைமை இன்னைக்கு. .. 

இலக்கியமா..?  கொஞ்ச நாள் கழிச்சு சுஜாதா நாவல்கள் கூட படிக்கத் தெரியாத ஒரு தலைமுறை வரப்போகுது... எதுக்கு சொல்ல வர்றேன்னா.. ஒட்டு மொத்த சமுதாயமே ... ஒரு சில விஷயங்களை தூக்கி கடாசிட்டு , தேவை இல்லைன்னு நெனைக்கிற விஷயங்களை புறக்கணிச்சுட்டு -- எதையோ நோக்கி வேகமா ஓடிக்கிட்டு இருக்கு..! 

இருக்கிற பொல்லுஷன், டிராபிக் ஜாம், வியர்வை பொங்க, கூட்டத்திலே பிதுங்க பிதுங்க..  ஒரு பஸ் பயணம், ஆபீஸ் பிரஷர், வீட்டு பிரஷர் ... இது தான் சார் வாழ்க்கை..    

இதில் கடவுள் பற்றிய சிந்தனையாவது..? வழிபாடாவது..?  நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு ... அதை மதிக்கிறேன்.. அவ்வளவுதான் என்னாலே செய்ய முடியும். சக்கரம் போலே போய்கிட்டு இருக்கு சார்.. வாழ்க்கை..

(கடவுள் இல்லைன்னு சொல்லலை.. இருந்தா நல்லா இருக்கும் னு சொல்றேன்.. தசாவதாரம் படத்திலே கோவிந்த் கமல் கிளைமாக்ஸ்லே சொல்வாரே..! )

நான் நல்லவன்னா.. கடவுள் என்னைக் கஷ்டத்திலே காப்பாத்துவார்... ஆளை விடுங்க.. ...  இப்படித்தான்  10 க்கு  9 பேர். மீதி இருக்கிற ஒருத்தர் --- நம்பவா ? வேண்டாமா? ரகம்.

கடவுள், சாமி னு பேசுறப்போ, ஒரு சந்தோசம்  வருது. ஆச்சரியம் வருது. கடவுள் கிருபை, கடவுள் கிருபைன்னு சொல்லிக்கிட்டே யாராவது தெரிஞ்சவங்க பேசுறப்போ... அவன் பொய் சொல்றான்னு தெரிஞ்சும்... நாமளும் , கடவுளை கும்பிட்டுப் பார்ப்போம் னு வர்ற ரகம். 

போன மாசம் , சதுரகிரி போய்ட்டு வந்தேன்.. அண்ணாமலை போய்ட்டு  வந்தேன்.. அடேங்கப்பா.. என்னா தரிசனம்?  என்னா கூட்டம்.. ? மலையை பார்க்கிறப்போ .. கண்ணிலே தண்ணி கட்டிக்கிடுச்சு... சிலிர்த்துப் போய்ட்டேன்.. ... அடுத்த தடவையும் போகணும்.. முடிஞ்சா நீயும் வா... ... 

எதுக்கு இத்தனை ... பந்தா? பில்ட் அப் ?  வர்ற கும்பல்லே --- முக்கால்வாசிப் பேர் எதுக்கு வர்றாங்கன்னே தெரியலை..? பொண்ணுங்களைப் பார்க்க வர்ற கூட்டம்... அப்படிப் போடு போடுன்னு மொபைல்லே சத்தமா பாட்டு வைச்சுக்கிட்டு ... சினிமா , சீரியல் கதை , பக்கத்து வீட்டு கதை... கிரிக்கெட் ... இதெல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு மகாலிங்க மலையும் , கிரிவல பாதையும்  தானா கெடைச்சது..?  இப்படி எல்லாம் பண்றதை விட - வீட்டுலே , நிம்மதியா இருக்கிறது , குழந்தை, குட்டிகூட டைம் செலவழிக்கிறது எவ்வளவோ நல்லது.. ... 

ஆகக் கூடி - வர்ற கும்பல்லே, நிஜமாவே நடந்து போகும் பாதை - கர்ப்ப கிருகத்துக்கு சமம் என்று எண்ணி , உண்மையான பய பக்தியுடன் சுற்றி வருபவர்கள் ... 1000 க்கு 10 பேர் தான் இருப்பாங்க.
====================================================================

கடவுளை நேர்ல பார்த்தாதான் நம்புவோம் னு சொன்னா தப்பே இல்லை. அந்த மாதிரி பார்த்தவங்க தான் , கடவுளை பார்த்த சித்தர்களை பார்த்தவங்க தான் -- இன்னைக்கு சதுரகிரி , அண்ணாமலை மாதிரி இடங்கள்லே இருக்கிற ரிஷிகள், முனிவர்கள். வழியிலே பிச்சை எடுக்கிற சாதாரண சாமியார்களை சொல்லலை.
இவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதையில்  இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன்  செல்வதை பார்த்து ,"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும  ஆசிர்வாதம் வாங்குங்க " என அடையாளம்  காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.

( குபேரன் அண்ணாமலை கிரிவலம் வருவது பற்றி , நமது முந்தைய பதிவுகளில் தேடிக்கொள்ளுங்கள்.. )

அப்படி அவர் குபேரனை அடையாளம் காட்ட , அருகில் இருந்த ஒரு சாதாரண பக்தர் , (ஹோட்டலில் இலை எடுத்துப் போட்டு , டேபிள் துடைப்பவர் ) குபேரன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, இன்று அந்த மனிதர் - திருவண்ணாமலையிலும், அருகில் இருக்கும் சில பெரிய ஊர்களிலும் - பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு அதிபதி.  இந்த மனிதரிடம், கடவுள் இல்லை சார். எல்லாம் பெரிய புரூடா னு சொன்னா.. நம்புவாரா..?  ( பட்டணத்து தம்பி, போங்க. போங்க.. உங்க வேலையை பாருங்க.. னு சிரிச்சுக்கிட்டே சொல்றார். அந்த இந்நாள் திருவண்ணாமலை   VIP ..... )

முழு நம்பிக்கை யுடன் கூடிய பக்தி - உங்களை கடவுளுக்கு வெகு அருகில் அழைத்து செல்லும். என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணம் ...

வராஹி அம்மனை நேரில் தரிசனம் செய்யும் ஒரு நண்பரை எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியும். குழப்பமான  / தீர்க்க முடியாத சில பிரச்னைகளுக்கு, அவருடன் பேசி , தீர்வு வாங்கி --- வராஹி அருளால் , நிம்மதி அடைந்து இருக்கிறேன்..

அருணகிரி நாதருக்கும், ராமலிங்க அடிகளுக்கும்,  பரஞ்சோதி ( சிறு தொண்டருக்கும் ) , ராமகிருஷ்ணருக்கும் கடவுள் தரிசனம் கிடைத்ததே..  அவர்கள் ஒன்றும் கற்கால மனிதர்கள் இல்லையே...


அதனாலே, கடவுள் இருக்கிறார் .... எல்லாம் நம்ம கையிலேதான் , நம்ம நம்பிக்கிலே தான் இருக்கு...... கஷ்டப்படுறப்போ, எங்கிருந்தோ .. உதவிக் கரம் நீளுதே.. அது கடவுள் தான் சார்... நமக்கு தான் தெரிய மாட்டேங்குது..
ரொம்ப சீக்கிரம்.... உங்களுக்கு ஒரு நல்ல தெய்வ அனுபவம் கிடைக்கும்,, உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால்...வெறுமனே என்ஜாய் பண்றது மட்டும் வாழ்க்கை இல்லை சார்.  கண்ணதாசனை விடவா, பட்டினத்தாரை விடவா.. செல்வத்தில் ,  போகங்களில் , நீங்க மூழ்கி இருந்திடப் போறீங்க... அவங்களே ... உதறி தள்ளலே .... .


மூன்று தினங்களுக்கு  முன், ஒரு அன்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் கிடைத்த போட்டோ. அருணாச்சலம் தான்..  பர்ட்டிக்குலரா , மலையில் ஒரு இடத்தில் --- வெள்ளையாக ஒரு புள்ளி தெரிவதைப் பாருங்கள்.. ... ஏன் ? எதற்கு இப்படி என்ற காரணம் தெரியவில்லை ?  நேரில் பார்த்தவருக்கு  மெய் சிலிர்க்குமா .. சிலிர்க்காதா..?  சதுரகிரி மலையிலும் , நட்சத்திரங்கள் அமாவாசை நள்ளிரவை ஒட்டி , திடீர் திடீரென்று மலையில் விழுவதை படம் பிடித்து உள்ளனர்..


இவை எல்லாம், மக்களை முட்டாளாக்க மட்டுமே .. என்று சொல்ல முடியாது.. நம்ப முடியாத  ஒரு அதிசயம்.. ... நம்புபவர்களுக்கு  இறைவன் இருப்பது உண்மை... நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, வெறும் காமிரா ட்ரிக்.

மகாலிங்கம் செல்லும்போது - ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் பாலிக்கும் பத்ரகாளி அம்மனையும் தரிசித்து , அவள் அருள் பெறுங்கள்... உங்கள் வாழ்வில் கண்டிப்பாக ஒரு நீண்ட நாள் வேதனை , உடனடியாக தீரும்..

அருகிலேயே  மடவார் வளாகம் என்னும் கோவில் உள்ளது. (வைத்திய நாத சுவாமி ஆலயம்.) ஸ்ரீ சக்கரம் அடியிலும், பிரகாரத்தில் லிங்கோத்பவருக்கு  அருகிலும், துர்க்கை அம்மனுக்கு எதிரேயும்... ஓரிரு நிமிடங்கள் நின்று பாருங்கள்... சக்தி அலையை பரி பூரணமாக உணர முடியும்... ( Literally , you can feel the vibration )

சதுரகிரி போகும்போது .... அண்ணாமலை போகும்போது ---  , ஸ்ரீ ருத்ரம் -- வாசிங்க..... கர்வம் தலைக்கு ஏறாம , வாசிங்க... எப்படி படிக்குறதுன்னு சிரமம் பார்க்காம கத்துக்கோங்க...மிகப் பெரிய புண்ணியம்.. மிகப் பெரிய ஆத்ம பலம்.   உங்கள் சந்ததிக்கே , ஒரு நல்ல வழி காட்டும்.... வரவிருக்கும் பிரச்னைகள்  .. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல் ஓடிவிடும்..

வாழ்க வளமுடன்!

சே .. இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? ( மனசே ரிலாக்ஸ் .. ப்ளீஸ் )

|

 -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? சுவாமி சுகபோதானந்தா பதில சொல்கிறார் (மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)
 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTXxJk6wGSIGedz-LBoT-kWEDj4wla5Qx1SV2hg5b-JrQFMvT_v
இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையேஇது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்கஅதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்முதலை சொல்வது மாதிரிஇதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனஅதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்லமுதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்தமுதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னதுபுரிந்ததாஇதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வரஅவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்திசிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com