Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

என்னா வில்லத்தனம் ? - கொஞ்சம் சிரிங்க பாஸூ..

| Mar 22, 2011

தந்தைக்கு ஓர் மடல் !
****************

ஒரு தந்தை தன் டீன்ஏஜ் மகளின் அறைப்பக்கம் சென்றபோது, அறை மிக சுத்தமாகவும், பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதையும் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்து, அறையில் நுழைந்தவர், படுக்கையில்
தலையணையின் மேல் "என் அன்புள்ள அப்பாவுக்கு" என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தை கண்டு துணுக்குற்று, 'ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது' என்ற பயத்தில் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.

என் அன்புள்ள அப்பா,
மிகுந்த மன வருத்தத்துடன், இதை எழுதுகிறேன். நான் வீட்டை விட்டுப் போகிறேன். இப்படி சொல்லாமல் கொள்ளாமல், என் புதிய காதலன் சுரேஷுடன்  நான் ஓடிப் போவதற்குக் காரணம், உங்களுடனும்,
அம்மாவுடனும் ஓர் அனாவசிய சண்டையைத் தவிர்க்கவே. சுரேஷ் என் மேல் மிகுந்த ஆசை வைத்துள்ளார். எனக்கும் அவர் மேல் கொள்ளை ஆசை ! சுரேஷ் உடலெங்கும் துளையிட்டு ஆபரணங்கள் அணிந்தும், பச்சை குத்தியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் போல் உடை அணிந்தும் காணப்பட்டாலும் நீங்கள் அவரைச் சந்தித்தால், நிச்சயம் அவரை விரும்புவீர்கள் !!!

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், நான் கர்ப்பமாக இருக்கிறேன். சுரேஷ், நான் குழந்தை பெற்றுக் கொள்வதையும், நாங்கள் சேர்ந்து சந்தோஷமாய் வாழ்வதையும் மிகவும் எதிர்பார்க்கிறார். சுரேஷ¤க்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் (45 எல்லாம் இக்காலத்தில் ஒரு வயதா என்ன ?)  இருந்தாலும், அவர் ஏழையாக இருந்தாலும், எனக்குக் கவலையில்லை. தூய காதலுக்கு நடுவில் இவையெல்லாம் துச்சம் என்பது என் எண்ணம். நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் தானே ???

சுரேஷிடம் பல நல்ல இசை ஆல்பங்கள் உள்ளன. காட்டின் நடுவே, தனிமையான சூழலில், ஒரு அழகான  இடத்தில் அவர் வாழ்கிறார். சுரேஷுக்கு என்னைத் தவிர இன்னும் சில பெண்களுடன் தொடர்பு இருந்தாலும், அது குறித்து எனக்குக் கவலையில்லை. அவருக்குத் தெரிந்த விதத்தில், அவர் என்னிடம் விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! நான் நிறைய குழந்தைகள் அவருக்கு பெற்றுத் தர வேண்டும் என்பது அவர் ஆசை, என் கனவும் அதுவே.

மரிஜுவானா எவ்வளவு அற்புதமான விஷயம் என்பதை எனக்கு கற்றுத் தந்தவர் கமலேஷ் தான். கஞ்சா வழங்கும் பேருவகையை எனக்கு அறிமுகம் செய்தவரும் அவரே ! நாங்கள் தினமும் பிரார்த்தனை செய்வோம்,
எய்ட்ஸை குணப்படுத்த மருந்து சீக்கிரம் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்று, அது நடந்தால், சுரேஷின் உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக தேறும் அல்லவா ???

என்னைப் பற்றி கவலைப்பட்டு உங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இப்போது 15 வயது, நல்லது கெட்டதும், என்னை கவனித்துக் கொள்ளவும், எனக்குத் தெரியும் !!! ஒரு நாள் நாங்கள்
உங்களை சந்திக்க திரும்பி வருவோம், உங்கள் பேரக் குழந்தைகளைப் பார்க்க உங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன ?

உங்கள் அன்பு மகள்,

ப்ரியா
**********************************

கடிதத்தில் முடிவில், 'மறுபக்கம் பார்க்கவும்" என்று எழுதியிருந்ததைப் பார்த்த தந்தையார், இன்னும்
என்ன குண்டை தலையில் போடப் போகிறாளோ என்ற அதிர்ச்சியில், கைகள் நடுங்க, கடிதத்தைத்
திருப்பி வாசித்தார்.
.
.
.
.
.
.
பின் குறிப்பு: நான் மேலே எழுதிய எதுவும் உண்மையில்லை ! நான் பக்கத்து வீட்டில் இருக்கிறேன். என் மேசையின் நடு டிராயரில் இருக்கும் என் ரிப்போர்ட் கார்ட் மதிப்பெண்களை விடவும், வாழ்க்கையில் பல மோசமான விஷயங்கள் உள்ளன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்பினேன்.
கார்டில் கையெழுத்திட்டு விட்டு, நான் நம் வீட்டுக்கு வர எது பாதுகாப்பான சமயம் என்பதை தொலைபேசவும் ! ஐ லவ் யூ, அப்பா :)

=================================
நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார். கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். துணுக்குற்ற மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார். கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும், முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார். கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க கழிவிரக்கத்துடன் கூறினார் :)

===========================

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com