Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்

| Mar 22, 2011
 பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று , சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய  உள்மனசு துடிக்கும்.


சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது . 


எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.

அவரது சத்திரத்தில், நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும். 


பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள , சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து , போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.


சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. 


இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது..


நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால் , வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே ..!!


கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து , யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம். இல்லை இந்த கடமையை நிறைவேற்றக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.


முயன்று பாருங்களேன்!


1 comments:

your said...

1) அனாதைப் பிணங்களின் இறுதிக் காரியத்திற்கு உதவுவது அஸ்வமேத யாகத்திற்கு ஈடாக கருதப்படுகிறது. (யாகங்களில் அஸ்வமேத யாகத்திற்கு இருக்கும் சிறப்பை பற்றி ஆசிரியர் சற்று விரிவாக கூறினாள் அது பற்றி தெரியாதவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.).

2) நான் தினகரன்-ஆன்மீக மலரில் சில வாரங்களுக்கு பாலகுமாரன் அவர்கள் எழுதி வரும் தொடரை படித்து வருகிறேன். அன்னதானம் பற்றிய ஒரு கட்டுரையில், அவர் கூறியதை படித்த பிறகு அதன் மேன்மை குறித்து உணர்ந்துகொண்டேன். நடை முறை வாழ்வில் அதை செயல் படுத்தும் விதம் (என் சக்திகேற்ப) பற்றி சிந்தித்த வண்ணமிருந்தேன்.

நான் என் அலுவலகத்துக்கு அருகே ஒரு கையேந்தி பவனில் மதிய உணவு வாங்கி வந்து சாப்பிடுவது வழக்கம். ஒரு பாக்கெட் சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் எதுவாக இருந்தாலும் ரூ.12/- தான். இப்போது கடைக்காரரிடம் ரூ.10/- தனியாக கொடுத்துவிடுகிறானே. முதியோர்கள் உடல் ஊனமுற்றவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவு பொட்டலம் ஏதாவது கொடுக்குமாறு கூறியிருக்கிறேன். என் பட்ஜெட்டில் தற்போது தினசரி எக்ஸ்ட்ரா ரூ.10/- தான். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை. அவரவர் சக்திக்கேற்ப செய்து பாருங்கள்.

இதைக்கூட நான் இங்கு கூறுவதற்கு காரணம், இதை படித்துவிட்டு ஒரு நான்கு பேர் அந்த நல்ல காரியத்தை செய்யமாட்டர்களா என்ற எண்ணமே தவிர வேறொன்றுமில்லை.

இந்த வாழ்க்கையும் இந்த கணமும் இறைவன் எமக்கு அளித்த பிச்சை என்ற எண்ணம் எப்போதும் எமக்கு உண்டு.

- கோடியில் ஒருவன்

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com