Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.

சித்தர்கள் - அஷ்டமாசித்துக்கள் - மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

| Mar 17, 2011

நமது இணைய தளத்தில் - சித்தர்களைப் பற்றிய , சில அபூர்வ தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. 

சித்தர்கள் யாரும் , மனிதர்கள் தம்மை நெருங்கி தொந்தரவு செய்வதை விரும்புவது இல்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் யோக நிஷ்டையில் இருப்பதால், அவர்கள் பணிக்கு இடையூறு நேராமல் - நாம் அவர்களை அணுகுவதே முக்கியம். 
 
 
 
அப்படி அணுகுவதால், அவர்கள் வழிகாட்டுதல் இருந்தால் - நாமும் , நமது அன்றாட தொல்லைகளில் இருந்து , எளிதாக கடையேறி - இறைவன் அடிகளை சரண் அடையலாம். வாழ்க்கையில் வெற்றி பெற்று , ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அவர்கள் அருள் நமக்கு வழி காட்டும்.

நாம் ஏற்கனவே அளித்த 108 சித்தர்கள் பட்டியல் படி , சித்தர்கள் ஆலயம், ஜீவ சமாதி - அவர்கள் உறைவிடம் இருக்கும் இடங்களில் - நாம் சென்று , தொழுது , மனமுருகி தியானித்து வேண்டினால் - அவர்களே தக்க ரூபத்தில் வந்து நமக்கு , நம் தகுதிக்கு ஏற்ப வழி காட்டுவர்.

நாம் சந்திக்க விரும்பும் சித்தர்களின் இஷ்ட மந்திரங்களைக் கூறி ஜெபிக்க -
உங்கள் பக்தி உண்மையெனில், அவர்கள் தரிசனம் கிட்டும்.

சரி, அவர்களை நேரில் சந்திப்பதனால் என்ன உங்களுக்கு ஏற்படும்? உங்கள் நோக்கம் என்ன? எதற்காக சந்திக்க விரும்புகிறீர்கள்? ஏதேனும் ஆதாயம் தேடுவது தானே மனித இயல்பு? உண்மையில் - ஆலயம் சென்று இறைவனை தொழுவது ஏன்?

உங்கள் இக வாழ்க்கைக்கு தேவையான , பொன், பொருள் , பெண் சுகம் ,  உங்கள் வாழ்வில் ஏற்பட்ட துரோகத்துக்கோ இல்லை அவமானத்துக்கோ  - எதிரிகளுக்கு தண்டனை , உங்கள் தேக சுகம் , நல்ல குழந்தை .. நிம்மதியான வாழ்க்கை ..மொத்தத்தில் துனபங்களில் இருந்து விடுதலை .இப்படி ஏதாவது ஒன்று.. இல்லையா ??

இதைத் தாண்டி - நாம் சிந்திக்க முடியுமா?

உலக நன்மை பற்றி நினைப்பீர்களா? நிச்சயமாக நான் நினைக்க மாட்டேன். உலகம் பற்றி நினைக்க நான் யார்? நம் செய்யும் காரியங்கள் அடுத்தவருக்கு , தீமை செய்யாமல் இருக்க வேண்டும். யாராவது துன்பப்பட்டால், என்னுடைய
சக்திக்கு உட்பட்டு , உதவ முடியும்.... அவ்வளவுதான் என்னால் முடிந்தது .. இல்லையா? ஏன் உங்களாலும் தான்..?

நீங்கள் அவர்களை சந்திப்பதால் , அவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் தொந்தரவு தான். நீங்களும் இதைப் போலேவே எதையாவது ஒன்று தானே கேட்பீர்கள்... வறுமையிலிருந்து விடுதலை , பதவிஉயர்வு, தொழில் முன்னேற்றம், ஆரோக்கியம், வசதி வாய்ப்பு - இல்லை கொஞ்சம் அதி மேதாவித் தனத்துடன், கடவுளை சந்திக்க , முக்தி அடைய..( அவர்களிடம் நம் பாச்சா பலிக்காது பாஸ்..) இப்படி எதையாவது தானே ?

ஆள் மனசுலே , சித்தர்கள் இருக்கிறாங்களாங்கிற சந்தேகம் இருக்குது போலே எல்லா மனுசனுக்கும்.. ஒருவேளை, அவங்களை பார்த்த பிறகு தான் , கடவுளை நம்புவோமா ? நம்புறதும், நம்பாததும், அவரவர் இஷ்டம். நான் நம்புறேன். .. சில விஷயங்களை உங்கள் கிட்டே , வெளிப்படையா பகிர்ந்துக்க முடியாததுக்கு மன்னிக்கவும்.. சித்தர்களுக்கு , கால ரகசிய கணக்கு - ரொம்ப தெளிவா தெரியுது. ஒருத்தர் முகம் பார்த்தே, அவரது - கடந்த காலம், ஏன், கடந்த ஜென்மங்கள் எல்லாமே - தெரிய வந்து விடுகிறது... எதிர் காலம்  நல்ல விதமா மாற அருள் செய்யிறாங்க. எல்லோரும், சொல்ற விஷயம் - நீ யார் னு   கண்டு பிடி, உனக்குள்ளே அமிழ்ந்து பார். உனக்கே எல்லாம் தெரியும்.

எத்தனை  மனுஷ ஜென்ம வாழ்க்கை கடந்தாலும்,  முடிவுலே - இறைவனைத் தான் வந்து அடையணும். அதை , இப்போ இருந்தே , ஆரம்பிங்க. உங்க இல்லற வாழ்க்கை, அன்றாட கடமைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இறைவனை தொழ, இறை சிந்தனையுடன் இருக்க மனசை பக்குவப் படுத்துங்க.

நம்முடைய , பூர்வ ஜென்ம - பாவ , புண்ணிய கணக்கு தீரும் வரைக்கும், மனுஷ ஜென்மம் எடுத்துதான் ஆகணும். குடும்பம், குழந்தைகள்னு வந்த பிறகு - உதறி , போகவும் முடியாது.. உதறி போனா, அங்கே போன பிறகு, இங்கேயே நெனைப்பு சுத்திக்கிட்டு இருந்தா, அது இன்னும் மோசம் .  

சித்தர்கள் சர்வ சாதரணமாக , சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். இந்திர சௌந்தர்ராஜன் நாவல்கள் படிக்கும் வாசக அன்பர்களுக்கு , நிறையவே தகவல்கள் தெரிந்து இருக்கலாம். அந்த சித்து வேலைகளுக்கு - அஷ்டமா சித்து என்று பெயர். அப்படி என்ன என்ன ?  

அஷ்டமாசித்துக்கள்:

* அணிமா:


பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
* மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம்  காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

* லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
*கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
*பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
*பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
*ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
*வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

இவ்வளவு திறமை வளர்த்துக் கிட்டு - அவங்க உடலையும், மனசையும் சுத்தமா வைச்சுக்கிட்டு - கடவுளை நினைத்து , தியானம் பண்றாங்க. ... அவ்வளவு பரிசுத்தமான ஆன்ம சுகம் அடையும் போது தான்,  நம்முடைய ஆத்மா , நம்ம   பிறப்பின் நோக்கம் நமக்கு தெரிய வரும். .. ஆனால், அந்த நிலைமை அடைவதற்கு - பல ஜென்மம் எடுக்கணும் போலே.. கொஞ்சம் கொஞ்சமா .. அதற்க்கு மனசை பக்குவப் படுத்தி, முதல் அடி எடுத்து வைப்போம். இறை சிந்தனை வளர்த்துக் கொள்வோம்..

சதுரகிரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் இன்றும் சித்தர்கள் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் சந்திக்க முடியாது. உங்கள் விருப்பம் அறிந்து, உங்கள் புண்ணிய பலன்களுக்கு ஏற்ப, அவர்களே உங்களை சந்திக்க நேரில் வருவர். ... முயற்சி யுடையார் - கண்டிப்பாக ஒருநாள் இலக்கை அடைவர். !!

சரி, இன்னைக்கு ஒரு சூப்பெரான - ஒரு இணைய தளம் பார்த்தேன். உங்க கிட்டே , பகிர்ந்து கொள்ளலைனா தான் நமக்கு தூக்கம் வராதே. நம்ம தமிழ் நாட்டிலே இருக்கிற - கோவில்கள் , நேரடியா விசுவல்ஸ் பார்க்கலாம். இருந்த இடத்திலே இருந்தே தினமும், அருணாச்சலேஸ்வரர் கோவிலும், மீனாட்சி அம்மன் கோவிலும் பார்க்கலாம் னா எப்படி இருக்கு ?    மிஸ் பண்ணவே கூடாத இணைய தளம்... லிங்க் இதோ...

பேரு : 360 டிகிரி விர்ச்சுவல்  டூர்

http://www.view360.in/

எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு. கிட்டத் தட்ட , அந்த அந்த ஊர்களுக்கே போயிட்டு வந்த பீலிங் இருக்கும்.. பின்னாலே இன்னும் நல்லா டெவெலப் ஆகும். அந்த நண்பர்களுக்கும், அவரது டீமுக்கும் , எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.......

0 comments:

ShareThis

Do Join hands to make a bright and better world

Your comments and queries can be addressed to editor@livingextra.com

Disclaimer & Privacy Policy

Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to editor@livingextra.com